அவர்கள் வீட்டு மற்ற மருமகள்களும் அதையே சொல்ல, பாட்டியோ சரிகாவின் அம்மாவை தன் வாய்க்கு வந்தபடி நல்ல வார்த்தைகளாக உபயோகித்து பேசினார்,
சரிகாவின் அம்மாவிற்கு அத்தனை பேர் முன்னாடியும் தன்னை பேசியது கொஞ்சம் தலைகுனிவாக இருப்பதாக நினைத்தார்.
அதேநேரம் அங்கு மணமகன் வீட்டில் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க கல்லூரி முடிந்து தன்னை ரெஃபிரேஸ் செய்து கொண்டு வந்தவள்., நிச்சயதார்த்தத்தை பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்க., பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
பின்பு அவர்கள் அனைவரும் நிச்சயதார்த்தன்று அதிகாலையில் இங்கிருந்து மதுரைக்கு கிளம்புவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்,
இவள் பரீட்சை முடித்து இங்கிருந்து 3 மணி விமானத்தில் கிளம்புவதாகவும், 5 மணிக்குள் மதுரை வந்து அங்கிருந்து நேராக கோயிலுக்கு வந்து சேர்வதாகவும் பேசிக்கொண்டிருந்தனர்.
இவள் தான் “நான் வந்து கொள்வேன்., நீங்க யாரும் இதுக்காக ஏர்போர்ட் க்கு அலைய வேண்டாம்”, என்று சொன்னாள்.
பாட்டி தான் “நகையெல்லாம் போட்டுட்டு பிளைட்ல வருவியா”, என்று கேட்டார்.
“நான் என்ன கல்யாண வீட்டுக்கு வர்ற மாதிரி எல்லாத்தையும் அள்ளி போடவா போறேன்., ஒரே ஒரு மாலை போட்டு நீட்டா சாரி கட்டி., இங்க இருந்தே கிளம்பி வாரேன்”, என்று சொன்னவள்., “அங்க வந்து தான் மல்லிகை பூ வாங்கணும்”, என்று சொல்லவும்.,
“மல்லிகை பூனா அது மதுரை தான் பாட்டி”, என்று சொன்னாள்.
அவள் அம்மாவோ, “மல்லிகைப்பூக்கு பிராண்ட் அம்பாசிடர் இவதான் ன்னு சொன்னமாதிரி இல்ல, மதுரைக்கு மல்லிகை பூ ன்னு பாட்டு பாடுறா”, என்றார்.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க., அங்க இருக்க பூ வாசமே தனி., அவங்க பூ கட்டுற அழகே தனி”, என்று சொல்லவும்.,
“சரி சரி நீ வா., நாங்க வாங்கி வைக்கிறோம்”, என்று சொன்னார்கள்.
“நீங்க வாங்கி வைக்க வேண்டாம், நான் வரும் போது வாங்கி வச்சிட்டு தான் வருவேன்”, என்று சொன்னாள்.
பாட்டி தான், “எப்பா இவ இருக்காளே”, என்று சொல்லிவிட்டு,
“அது எப்படி ன்னு, எனக்கு இப்ப வரைக்கும் ஒரு சந்தேகம்”, என்று பாட்டி ஆரம்பிக்க.,
“ப்ளீஸ் பாட்டி ஆரம்பிச்சிடாதீங்க, என்ன சொல்லுவீங்க, சேலை கட்டுற, பூ வைக்கிற, கொஞ்சம் கூட பாக்குறதுக்கு மாடன் லுக்கே இல்ல., இதை தானே சொல்ல போறீங்க., இருந்துட்டு போறேன் விடுங்க., எனக்கு இது பிடிச்சிருக்கு., நான் இப்படி இருக்கிறேனா இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்களேன்., இப்படித்தான் எல்லாரும் இருப்பாங்க”, என்று சொல்லவும்.
“அப்படிலாம் இல்ல, எல்லாரும் போட்டோவுக்கு தான் அப்படி இருக்காங்க., நீயும் அப்படி இருன்னு சொன்னா கேட்டியா”, என்று சொன்னார்.
“பாட்டி நீங்க ஓவர் மாடர்னா போறீங்க, சரி இல்ல பாத்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு,
“சரி கரெக்டா பிளைட்ல கிளம்பி நான் வந்துருவேன் நீங்க உங்க வேலைய பாருங்க”, என்று சொல்லி விட்டு தன் அறைக்கு செல்ல எழுந்து நின்றாள்.
அண்ணனோ, “நீ தனியா வருவியா, நான் வேணா ஏர்போர்ட் கூப்பிட வரவா”, என்று கேட்டான்.
“நீ கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா உன் வேலையை மட்டும் பாரு., உனக்கு வரப்போற அண்ணியை சைட் அடிக்கிற வேலையை மட்டும் பாரு., என்னை பத்தி நானே பாத்துக்கிடுவேன்., நான் தனியா தான் வரணும்”, என்று சொன்னாள்.
“ஏன்”, என்று கேட்டான்.
“தனியாக வரும்போது யாரையாவது பார்த்தேனா”, என்று தொடங்கவும்.,
“ஏம்மா போதும், உன் டயலாக் ஆரம்பிச்சுராத, விடு நாங்க பார்த்துக்கிறோம்”, என்று சொல்லி அனைவரும் ஒன்று போல சொல்லவும்.
சிரித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றவளுக்கு “என்ன எதிர்பார்க்கிறோம் நாம” என்று அவளை அவளே கேட்டுக்கொண்டாள்.
ஒரு பெருமூச்சோடு “நான் எப்படி எதிர்பார்க்கிறேன்னு எனக்கே தெரியலையே” என்று கண்ணாடி முன்பு நின்று தன் பிம்பத்தை பார்த்து கேட்டவள்,”ம்ம் ம்ம் புரியவே இல்லை, என்ன எதிர்பார்க்கிறோம், எப்படி எதிர்பார்க்கிறோம்., தனக்கு வரப்போறவன் எப்படி இருக்கனும் என்ற எந்த எண்ணமும் துளியும் வரமாட்டேன் ன்றதே., ஒருவேளை ஹார்மோன் ஏதும் டிஃபெக்ட்டா இருக்குமோ”, என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்,
“எதுக்கும் கூகுள்ல செக் பண்ணிடுவோமா”, என்று யோசிக்க பின்பு, ‘நோ நோ நோ நோ, டாக்டர் மாதிரி யோசி., உங்க பாட்டி மாதிரி யோசிக்காத’, என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு படுத்து கண்ணை மூடியவள்.,
“கனவிலாவது வாயேண்டா., உன்னை ஒரு முறை பார்த்துக் கொள்கிறேன்”, என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.
“யார் என்றே தெரியாது, எங்கேயோ இருக்கிறாய், எப்படி இருப்பாயோ, ஒருமுறை கண் முன் வா”, என்று சொல்லி தனக்கு தானே சிரித்துக்கொண்டவள்.,
‘காதல் வருமா அதுவும் எனக்கா’, என்று நினைத்து சிரித்துக் கொண்டே நிம்மதியான தூக்கத்தை தொடர்ந்தாள்.
நிச்சயதார்த்த அன்று காலை வீட்டினர் கிளம்பும் போது தூக்க கலக்கத்தோடு எழுந்து வந்தவள் சோபாவில் அமர்ந்து அவர்கள் அனைவரும் கிளம்புவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாட்டி தான், “உனக்கு புது சேரி வாங்கி இருக்கு இல்ல., அதுல ஒன்னு எடுத்து கட்டு., எல்லாத்துக்கும் பிளவுஸ் தைச்சு வச்சிருக்கேன்”, என்று சொன்னார்.
அவரை திரும்பிப் பார்த்தவள், “பாட்டி சூப்பரா வருவேன் சரியா., நானே செலக்ட் செய்து வச்சிருக்கேன் நிறைய சாரி., அதுல எதைக் கட்டுறது ன்னு குழம்பி போய் இருக்கேன்., முதல்ல எக்ஸாம்க்கு போயிட்டு வரேன்., அதுக்கு அப்புறமா வீட்டுக்கு வந்து அழகா கிளம்பி சூப்பரா வந்து இறங்குவேன் சரியா., அப்படி இறங்கும் போது பார்த்துட்டு சொல்லணும்., இப்ப எதுவும் சொல்லக்கூடாது”, என்று சொன்னாள்.
“நீங்க அங்க உங்க வேலைய பாருங்க., நான் அப்பப்போ உங்களுக்கு போன் பண்ணி அப்டேட் பண்றேன்”, என்று சொல்லவும் அவர்களும் கிளம்பி செல்ல தயாராக இருந்தனர்.
அவள் அண்ணன் தான் அருகே வந்து, ” பார்த்து வரணும்”, என்று சொல்லவும்,
“அதெல்லாம் வந்துருவேன்., நீ போய் உன்னோட வருங்கால வொய்ப் மட்டும் பாரு போ”, என்று சொல்லி அனுப்பினாள்.
அவளை திரும்பி பார்த்தவனுக்கு ‘இவளுக்கு எப்படி தான் மாப்பிள்ளை வேண்டும் ன்னு விரும்புகிறாள் என்றே தெரியவில்லையே”, என்று யோசித்துக் கொண்டே காரில் ஏறினான்.
குடும்பமாக நிச்சயதார்த்த நிகழ்வுக்கு செல்வதால் டிரைவர் வைத்துக் கொண்டே காரை கிளப்பினர்.
இவளோ அவர்களை அனுப்பிவிட்டு, கதவை பூட்டி மீண்டும் தன் உறக்கத்தை சற்று நேரம் தொடர்ந்தவள்., பின்பு எழுந்து கிளம்பி தன் பரீட்சைக்காக கிளம்பி சென்றாள்.
பரீட்சை முடிந்து வந்தவள் சொன்னது போலவே நாலைந்து சேலையை வைத்து புரட்டி புரட்டி பார்த்தாள்.
பின்பு அடர் பச்சை நிறத்தில் சிவப்பு நிற சிறிய பார்டராக இருந்த அந்த கைத்தறி பட்டு சேலையை தன் மேல் வைத்து பார்த்தவளுக்கு., ஏனோ அதை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
கட்டி முடித்து தன்னை ஒரு முறை திரும்பி பார்க்க., ஏனோ அழகாக இருப்பதாகவே தோன்றியது.