Advertisement

பொற்செழியனின் மனம் எல்லாம் எங்கோ பறக்க, அதை தரையிரக்கும் வண்ணம் நங்கை,

“அப்புறம், உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும்”

என்று ஒரு பாவமும் இல்லாமல், கதை கேட்கும் குரலில் அவன் நிறுத்தியதில் இருந்து எடுத்து கொடுக்க, அவளை அறிந்த அவளவனோ தொடர்ந்து,

“ஒரு மாச குழந்தையாக இருக்கும் போது என்னை ஆசிரமம் வாசலில் விட்டுட்டு போயிட்டாங்களாம், வளர்ந்தது எல்லாம் அங்க தான், ஒரு ட்ரஸ்ட் மூலாமா படிச்சி தான், அங்க ஜாப்கு வந்தேன்”

என்று சொல்ல, ஏற்கனவே அறிந்தது தான் என்றாலும் தன்னவனின் வாய் வார்த்தையாக கேட்கும் போது, நெஞ்சம் கனக்க தான் செய்தது நங்கைக்கு.

சற்று முன்பு தன்னை தொட கூடாது என்று கூறிய அவளே, இப்போது அவனை நெருங்கி ஆதரவாக அவனின் கையை பிடித்து கொள்ள, மயக்கம் புன்னகை ஒன்றை சிந்திய அவளவனோ தொடர்ந்து,

“எனக்கு ஏனோ அதோட திருப்தியாக தோணலை, அதனால் சிவில் சர்வீஸ் எக்ஸாம்கு படிச்சி கிட்டு இருந்தேன், ஒன் இயர் பிரிப்பேர் பண்ணி எழுதி பர்ஸ்ட் டைம் பாஸ் ஆகல, ரொம்ப சோகத்துல கேண்டீன் வந்தேன், அப்போ தான் நீ உன் பிரின்ட் கிட்ட பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன்”

என்று சொன்னவன், அன்று அவள் நட்சத்திரம் பற்றி சொன்னதை சொல்லி,

“சோகத்தை ஷேர் பண்ண யாருமே இல்லாத எனக்காகவே அதை நீ எனக்கே சொன்ன மாதிரி இருந்தது, அன்னைக்கு நீ சொன்னதுக்கு அப்புறம் பீச்ல போய் உட்கார்ந்து, ரொம்ப நேரம் ஸ்டார்ஸ் கிட்ட தான் பேசிக்கிட்டு இருந்தேன், மனசு ரொம்ப ரிலாஸ்க் ஆன பீல்”

என்று அன்றைய நாளின் நினைவில் சொன்னவன், புன்சிரிப்புடன்,

“அப்புறம் அடிக்கடி உன்னை பார்த்தேன், உன்னை பார்க்கவே அங்க வருவேன், எப்போ எப்படின்னு எல்லாம் எனக்கு தெரில, ஆனா ஒரு கட்டத்துல உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்”

என்று சொல்ல, அவனை வியப்புடன் நங்கை பார்க்க, அவனோ வாடா புன்னகையுடன் தொடர்ந்து,

“எனக்கு உன்னோட அப்பா, அம்மா, மாறனை எல்லாம் அப்போவே தெரியும், உன் கூட வெளிய வரும் போது பார்த்து இருக்கேன்”

என்றவன் உடல் இறுக, அதை அவனின் கைகளிலும் தெரிய, நங்கை அவனை கவலையாக பார்க்க, அவளின் கண்களை தவிர்த்த பொற்செழியன்,

“உனக்கு தோணி இருக்கும், லவ் பண்ண நான் ஏன் உன்கிட்ட வந்து ப்ரோப்போஸ் பண்ணலனு”

என்றவனின் கண்கள் எங்கோ நிலைக்க, இதுவரை நங்கை கேட்டேயிராத வலி மிகுந்த குரலில்,

“அன்னைக்கு நீ உன்னோட பேமிலியோட பீச் வந்து இருந்த, உன்னை பார்த்த ஆர்வத்துல நான் உங்க கிட்ட வரும் போது, உன்னோட அப்பா உன்னோட கல்யாணத்தை பத்தி பேசிக்கிட்டு இருந்தாரு”

என்று சொல்லி, ஒரு இடைவெளி விட்டவன்,

“உன்னை ஆளும், பேரும் இருக்கிற பெரிய குடும்பத்துல கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னாரு, அனாதையா இருந்ததுக்காக நான் வருத்தபட்ட முதல் நாள் அது தான்”

என்று சொல்ல, நங்கைக்கு தங்களின் திருமணம் முடிந்த அன்று, ‘உன் அப்பா என்னை மருமகனாக ஏற்று கொள்வாரா’ என்று கேட்ட பொற்செழியனின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டான.

அதோடு அவன் சொன்ன வார்த்தை வேறு இதயத்தை வலிக்க செய்ய, தான் பற்றி இருந்த அவனின் கைகளில் அழுத்தத்தை கூட்ட, ஒட்ட வைத்த புன்னகையுடன் அவளை திரும்பி பார்த்த பொற்செழியன்,

“என் கிட்ட பேரு மட்டும் தான் இருந்தது, ஆளுங்க இல்லை. உங்க அப்பாவோட எதிர்பார்ப்பு தெரிஞ்சதும் என்னால, உன்கிட்ட நெருங்க முடியல, அதேநேரம் எனக்கு ட்ரைனிங் லெட்டர் வரவும், கிளம்பி போய்ட்டேன்”

என்று சொல்ல, அவனின் அன்றைய வலியை உணருபவள் போல, நங்கை ஆதரவாக அவனின் தோள் சாய, தொடர்ந்த பொற்செழியன்,

“ட்ரைனிங் முடிஞ்சதும் போஸ்டிங்கும் நார்த்லையே போட்டுடாங்க, இங்க வர தைரியம் எனக்கு இல்லை, அவசியமும் வரல, இப்போ இந்த கேஸ்க்காக தான் ஐஞ்சு வருஷம் கழிச்சி திரும்பி சென்னை வந்தேன்”

என்றவன் தன் கையோடு பிணைருந்த தன்னவளின் கையில் சிறு முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு தொடர்ந்து,

“எப்படியும் உனக்கு கல்யாணம் ஆகி இருக்கும், அட்லீஸ்ட் நீ சந்தோஷமா இருக்குறதையாவது பார்க்கணும்னு நினைச்சி தான் உன்னை தேடி கண்டு பிடிச்சேன், ஆனா அதுக்குள்ள என்னென்னமோ ஆகி இருந்தது”

என்று அவர்களின் பெற்றோர் மரணத்தை சொல்லாமல் விட்டவன், தொடர்ந்து,

“அதுக்கு அப்புறம் உன்னை விட முடியும்னு எனக்கு தோணலை, உனக்காக தான் இந்த வீட்டுக்கு குடி வந்தேன், அப்புறம் நடந்தது எல்லாம் தான் உனக்கே தெரியுமே”

என்றவன் இறைஞ்சும் குரலில்,

“உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணனும் எல்லாம் நான் நினைக்கல கண்ணம்மா, நிஜமா நம்பு, எங்க நான் போலீஸ்னு தெரிஞ்சா நீ வேண்டான் சொல்லிடுவியோனு தான் பயந்தேன்”

என்றவன் கண்களில் வலி மிக அவளை பார்த்து,

“ஏற்கனவே ஐஞ்சு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன், மறுபடியும் உன்னை விட்டுட்டு, என்னால அப்படி யோசிக்க கூட முடியல, அதனால் சொல்லல, ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு கண்ணம்மா”

என்று உணர்ந்து மன்னிப்பு கேட்க, வாழ்ந்த நாட்கள் கொஞ்சமெனும், அவனின் காதலை அணுவனுவாக உணர்ந்தவள் என்பதால், அவனின் காதலை உணர்ந்து,

“ஹ்ம்ம் விடுங்க, இது முழுக்க உங்க தப்பு இல்லையே”

என்று சொல்ல, தான் கேட்டதை நம்ப முடியாமல் பொற்செழியன் ஆச்சர்யமாகி,

“நிஜமாவா கண்ணம்மா, நிஜமாவே என்னை மன்னிச்சிட்டியா”

என்று ஆர்ப்பரிக்க, அவனை வழக்கமான தன் நிதானத்துடன் பார்த்த நங்கை,

“ஆமா நான் கேட்டு நீங்க பொய் சொல்லி இருந்தா உங்க மேல கோப படுறதுல ஒரு அர்த்தம் இருக்கு, நானா ஒரு முடிவு பண்ணிட்டு, உங்க மேல கோவப்படுறதுல என்ன நியாயம் இருக்கு”

என்றவள், பின் கண்டிப்பான குரலில்,

“ஆனா இதான் உங்களுக்கு பஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங், இதுக்கு அப்புறம் என் கிட்ட எதையும் மறைக்க கூடாது, பொய் சொல்ல கூடாது”

என்று சொல்ல, நன்றாகவே தலையாட்டி வைத்தான் பொற்செழியன்.  சிறிது நேரம் அமைதியாக இருந்த நங்கை, திடிரென,

“ஆமா உங்க சேலரி எவ்ளோ”

என்று முறைப்புடன் கேட்க, மயக்கும் புன்னகை ஒன்றை சிந்திய பொற்செழியன், அவளின் காதில் அவனின் சம்பளத்தை சொல்ல, அதை கேட்டு நங்கை ‘ஆ’ வென வாயை பிளந்தாள்.

கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் வைத்து அவளின் வாயை மூடியவன்,

“இப்போ சொன்னது ஸ்டார்டிங்ல வாங்குனது, இப்போ இதை விட கொஞ்சம் அதிகம்,, நான் சொன்ன அமவுண்ட் பைவ் இயருக்கு எவ்ளோ வரும்னு கணக்கு பண்ணிக்கோ, அதான் என்னோட சேவிங்ஸ்”

என்று சொல்ல, வந்த தொகையை பார்த்து திகைத்த நங்கை,

“நீங்க செலவே பண்ண மாட்டிங்களா, மொத்தமா சேவிங்ஸ் சொல்றீங்க”

என்று தன் மலைப்பில் இருந்து வெளி வந்து கேட்க, பொற்செழியனோ,

“செலவு ரொம்ப மினிமம் அமவுண்ட் தான், அது போக ஆசிரமத்தில் இரண்டு பசங்க செலவை நான் ஏத்துகிட்டு இருக்கேன், இன்னும் பண்றேன் சொன்னதுக்கு ஐயா தான் இதுவே போதும்னு சொல்லிட்டாரு”

என்று சொல்ல, நங்கை அமைதியாக கேட்டு கொண்டாள். இப்போது பொற்செழியன்,

“ஆமா நான் வரும் போது லேப்டாப்ல என்னமோ பார்த்துகிட்டு இருந்த இல்ல, என்ன பார்த்த”

என நங்கை பெருமை மிகுந்த குரலில்,

“உங்களை பத்தின ஓல்டு நியூஸ் தான் படிச்சிகிட்டு இருந்தேன், நார்த் அஹ ஒரு கலக்கு கலக்கி இருக்கீங்க போல”

என்று சொல்லி தோளில் தட்ட, அது நேற்று அடிப்பட்ட இடம் என்பதால் பொற்செழியன் வலியில்,

“ஆஆஆஆ”

என்று அலறிவிட, பதறிய நங்கை வேகமாக அவனின் சட்டையை கலைந்து பார்த்தவள், கண்கள் கலங்க,

“என்னதிது, எப்படி ஆச்சி”

என்று விசாரிக்க, பொற்செழியனோ இயல்பாக,

“ஒரு மூணு பேரு என்னை பாலோ பண்ணாங்க, அதான் அன்னைக்கு உன்னையும் மாறனையும் முன்னாடி அனுப்பி வச்சிட்டு, அவங்களை பிடிக்க போன அப்போ அடி பட்டுடுச்சி”

என்று சாதாரணமாக சொல்ல, அன்று அவன் வீட்டிற்கு வராததும், அடுத்த நாள் தன் கேள்விகளை தவிர்க்க உறங்கியதும் நினைவு வந்தது நங்கைக்கு.

அவனின் காயத்தை வருடி விட்டவள்,

“அப்புறம் அவங்களை பிடிச்சிங்களா இல்லையா”

என்று கேட்க, பொற்செழியன் பெருமையாக,

“போனது யாரு நான் இல்லை, பிடிச்சு இன்னைக்கு தான் அவங்க மேல கேஸ் கொடுத்துட்டு வந்து இருக்கேன்”

என்று சொல்ல, நங்கையோ,

“இனிமே ஜாக்கிரதையா இருங்க, இப்போ நீங்க தனி ஆளு இல்ல, உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு”

என்று பொறுமையாக சொன்னவள் அவனின் காதை பிடித்து திருகி,

“சொன்னது புரிஞ்சுதா இல்லையா”

என்று திருக, அவளிடம் இருந்து தப்பிக்க பொற்செழியன் ஓட, நங்கை துரத்த வீடெங்கும் அவர்களின் சிரிப்பு சத்தம் மட்டும் இன்னிசையாய் எதிரொலித்தது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு…….

காரின் முன் இருக்கையில் கோவமே உருவாக அமர்ந்திருந்த நங்கை,

“இன்னும் எதை எல்லாம் என் கிட்ட மறைச்சி இருக்கீங்க, எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்”

என்று கேட்க, பொற்செழியனோ அவளை பாவமாக பார்த்து வைத்தான். ஆனால் நங்கையோ அதற்கு எல்லாம் அசராமல்,

“அன்னைக்கு போலீஸ்னு மறைச்சி என்ன கல்யாணம் பண்ணிங்க, மாறன் போலீஸ் ஆக அசைப்படுறதையும் கடைசி நேரத்துல சொல்லி, அதையும் இதையும் பேசி என்னை சம்மதிக்க வச்சீங்க, அதே மாதிரி இதுவும் உங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே, சொல்லுங்க”

என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததை எல்லாம் தோண்டி எடுத்து, பொற்செழியனை காய்ச்சி எடுத்து படி வந்தாள் அவனின் கண்ணம்மா.

ஆனால் இதற்கு எல்லாம் காரணமான இளஞ்செழியனோ, நங்கையின் மடியில் சுகமாக உறங்கி கொண்டிருந்தான்.

நடந்தது இது தான்.

நங்கை, பொற்செழியன் இவர்களின் புதல்வன் இளஞ்செழியன் படிக்கும் பள்ளியில் ஆண்டு விழா.

அதில் மாறுவேட போட்டி நடக்க, இவர்களின் வாண்டு, அவன் போட போகும் வேடத்தை பற்றி இருவரிடமும் உரைக்க வில்லை.

பொற்செழியன் எப்போதுமே, தன் மனைவி, மகன் சம்பந்தப்பட்ட எதையும் தவற விட மாட்டான். அதன்படி அவனும் நங்கையுடன் சரியான நேரத்திற்கு விழாவிற்கு வந்து விட்டான்.

அவர்கள் தங்களின் குட்டி கண்ணனின் மாறுவேடத்தை காண ஆவலாக இருக்க, அந்த வாண்டுவோ, காவல்துறை உடையில் வந்து நிற்க, நங்கை காளி அவதாரம் எடுத்து விட்டாள்.

அவளின் ஆருயிர் கணவன் காவல்துறை.

அவளை பாசத்துடன் அண்ணி, அண்ணி என்று அழைக்கும் வெற்றியும், தமிழும் காவல்துறை.

உடன்பிறவா விட்டாலும், தங்கை என்று அன்பு பாராட்டும் அண்ணன் விஜய் காவல்துறை.

உடன் பிறந்த நன்மாறனும் தேர்வில் வெற்றி பெற்று, இப்போது காவல்துறை பயிற்சிக்காக சென்று இருக்கிறான்.

போதாதற்கு இப்போது அவளின் மகனும், அவர்களின் வழியை தொடர, அவள் கடுப்பாகி விட்டாள்.

பொற்செழியனும் அமைதியே உருவாக வண்டி ஓட்டி கொண்டிருந்தான். இந்நேரத்தில் எதிர்த்து பேசுவது ள், பேராபத்து என்பது அவன் அனுபவத்தில் கண்ட பாடம்.

அவர்களின் வீடு வந்ததும் நங்கையிடம் இருந்து தன் மகனை தூக்கி கொள்ள, நங்கை இறங்கி உள்ளே செல்ல, பொற்செழியனின் கைப்பேசி அழைத்தது.

உறங்கும் மகனின் உறக்கம் கலையாமல் தோளில் வாகாக படுக்க வைத்தவன், அழைப்பு ஏற்று,

“சொல்லுடா”

என அந்த பக்கம் இருந்த விஜய்யோ விழுந்து, விழுந்து சிரித்து இவனை கடுப்பேற்றி விட்டு,

“என்ன மச்சான் அடி பலமோ, என் தங்கச்சி ருத்ர தாண்டவம் ஆடினதா நியூஸ் வந்துச்சே எனக்கு”

என்று இவனை கலாய்க்க, பொற்செழியனோ அசராமல்,

“ஆன்வல் டேக்கு போன எனக்கே இந்த அடின்னா, வேலை இருக்குன்னு வரதா உன்னோட நிலைமையை யோசிச்சி பார்த்தேன்டா”

என்று உறங்கும் மகனுக்கு தொந்தரவு தராமல் மெதுவான குரலில் பொற்செழியன் பேசினான்.

ஆனால் அவன் சொன்ன தோரணையே, விஜய் படப்போகும் பாட்டை நினைத்து சிரிப்பதை அப்பட்டமாக காட்ட, அதில் கடுப்பான விஜய்,

“உனக்கு போய் போன் பண்ண பாரு என்ன சொல்லணும், போடாங்”

என்று திட்டிவிட்டு அழைப்பை துண்டித்து விட, சிரிப்புடன் வீட்டின் உள்ளே நுழைந்தான் பொற்செழியன்.

அன்றைய இரவின் தனினையில், தான் காதல் கண்ணம்மாவை தன் கை வளைவில் வைத்திருந்த பொற்செழியன்,

“அவன் சின்ன பையன், அவனுக்கு என்ன தெரியும், எதுக்கு என் கண்ணம்மாக்கு இவ்ளோ கோவம்”

என்று கொஞ்ச, நங்கையோ,

“ஏற்கனவே நீங்க வேலைக்கு போய்ட்டு வர வரைக்கும் பக், பக்னு இருக்கு, இதுல அவனும் போலீஸ் ஆனா என்னால யோசிக்க கூட முடில”

என்று சளிப்பு போலவே சொல்ல, வெளியில் தைரியமாக காட்டி கொண்டாலும், தினமும் இவன் வீடு திரும்பியதும், அவனை கண்களால் வருடி, அவனின் நலத்தை உறுதி செய்ததும், அவளில் நிறையும் நிம்மதியை அவன் அறிந்தது தானே.

எனவே ஆதுரத்துடன் அவளின் தலையை தன் தோளில் சாய்த்து கொண்டவன், விளையாட்டு போலவே,

“ஆனாலும் நாலு வயசு பையன் பேன்சி ட்ரெஸ் காம்படிஷன்ல போலீஸ் அஹ ட்ரெஸ் போட்டதுக்கு, நீ இவ்ளோ பீல் பண்றது ரொம்ப ஓவர்”

என்று சொல்ல, அவனின் கையை தட்டுவிட்டு அவனை கண்களால் நங்கை எரிக்க, பொற்செழியனோ,

“நான் என்ன சொல்ல வந்தேன்னா, பெரியவனாகும் போது தான், அவனுக்கு என்ன தேவைன்னு அவனுக்கே தெரியும், இப்போ நடந்ததை வச்சி எல்லாம் வருத்தபட்டு உடம்பை கெடுத்துக்காத கண்ணம்மா”

என்று சொல்ல, நங்கைக்கும் நிதர்சனம் புரிந்து தான் இருந்தது. நாளை வளர்ந்து அவளுடைய மகன் காவல்துறை தான் என்று தேர்ந்தெடுத்தால், இவளால் நிட்சயம் மறுக்க முடியாது.

ஆனால் ஒரு மனைவியாக, தாயாக அவளின் பயத்தையும் அவளால் தள்ளி வைக்க முடியவில்லை. நங்கை பெருமூச்சு விட, தன் அணைப்பை இறுக்கிய பொற்செழியன்,

“நாம ஏன் இப்படி பண்ண கூடாது, பேசாம நாம ஒரு பெண் குழந்தை பெத்துக்கலாம், உன்னோட குரூப்ல ஒரு ஆள் சேரும் இல்ல”

என்று கள்ளனாக சிரிப்பை அடக்கி பேச, நங்கையோ அவனுக்கு ஏற்ற கள்ளியாக,

“ஆண் பிள்ளை தான் அம்மாக்கு சப்போர்ட் பண்ணம்னு சொல்லுவாங்க, அதுவே இங்க அப்பா பின்னாடி சுத்தி கிட்டு இருக்கு, இதுல எப்பவுமே அப்பா பக்கம் பேசுற பெண் குழந்தை வந்து எனக்கு சப்போர்ட் பண்ண போகுதா, போய் வேலையை பாருங்க”

என்று அவள் மிஞ்ச, பொற்செழியன் அவளை கொஞ்ச, அது கணவன், மனைவிக்கான பிரேத்யேகமான போர்க்களம்.

அதில் யார், யாரிடமும் தோற்றாலும், வெல்ல போவது என்னவோ அவர்கள் காதல். இன்று போல என்றும் அவர்கள், மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ வாழ்த்தி விடை பெறுவோம் மக்களே.

                                **சுபம்**

Advertisement