கடந்து செல் காதலுடன்! 51 2 9742 “நான் இங்க இருந்தா சரிப்பட்டு வர மாட்டேன். தள்ளி இருக்கிறது தான் என்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு நல்லது” என்றான் சர்வாச்சார்யா. “டேய் தம்பி. அதுக்காக கண்காணாத தூரத்துக்கா போறது? இங்கேயே இருந்து இவங்களை சமாளிச்சு“ “ஊட்டிக்கு நீங்க எதுக்கு போனீங்க?” என்று அவரை அப்படியே லாக் செய்தான் கேடிப்பையன். குருமூர்த்தி பதில் சொல்ல முடியாமல் முழித்தாலும், மனதுக்குள் அதிகமே வருத்தம் கொண்டார். “எல்லா நேரமும் என்னை நான் நிரூபிச்சுக்கிட்டு, போராடிகிட்டு இருக்க முடியாது. என் குடும்பத்தோட நான் அமைதியா, சந்தோஷமா வாழணும்” என்றான் சர்வாச்சார்யா நிதானமாக. இவன் என்னை போலத்தான்! ஆம் நான்தான் இவன்! அவரும் இத்தகைய மனஉளைச்சலை, கடினமான முடிவை உறுதியாக கடந்து வந்தவர் தானே! “சரி. போலாம்” என்றார் குருமூர்த்தி. “எங்களை மட்டும் போக சொல்வீங்கன்னு பார்த்தேன்” என்றான் சர்வாச்சார்யா வம்பாக. “உன்கிட்ட என் பொண்ணை தனியா விடுறதா இல்லை” என்றார் மாமனாரும் இடக்காக. முடிவு எடுப்பது தான் கடினம். முடிவான பின் எல்லாம் ஜெட் வேகம். தொழிலில் அவன் எடுத்த முடிவை நடைமுறை படுத்தியவன், சுஹா, கார்த்திக் திருமணத்தையும் முடித்து விட்டான். ம்ஹூம் இல்லை கார்த்திக் முடிக்க வைத்தான். ‘என்னை தாண்டி நீ லண்டன் போடா!’ என்று நாயகன் முன் நீட்டி படுக்காதது மட்டும் தான் குறை. “சுஹா நீ சொல்லு. இப்போ இவனை கட்டிக்கிறியா இல்லை, இரண்டு வருஷம் போகட்டுமா?” என்று தங்கையிடம் கேட்டான் அண்ணன்காரன். சுஹா வெட்கப்பட்டு அமைதி காக்க, “வெட்க படுற நேரமாடி இது. இப்போவே பண்ணி வைக்க சொல்லி அவன்கிட்ட சொல்லுடி” என்ற கார்த்திக் நொந்தே விட்டான். அதன் பின்னே சுஹா சொல்லி, அவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. “எனக்கு ஒரே கண்டிஷன் மட்டும் தான். கொஞ்ச நாள் நீங்க எங்களோட லண்டனுக்கு வந்து இருக்கணும்” என்றான் சர்வாச்சார்யா. சூழ்நிலை சரியில்லை. தங்கையை தனியே விட்டு செல்ல முடியாது. தீரஜ் வழக்கு நீண்டு கொண்டே செல்ல, வசுந்தராவிற்கு மகளுடன் தங்க முடியா நிலை. சிவப்பிரகாசம் மனைவிக்காக அடிக்கடி வந்து செல்வார் தான். ஆனாலும் சுஹா எங்களோட இருக்கட்டும் என்ற சர்வா முடிவை வீட்டினரும் ஒருமாதிரி ஏற்று கொண்டார்கள். அதன் பின் என்ன குடும்பத்துடன் சர்வாச்சார்யா லண்டனுக்கு பறந்துவிட்டான். அத்தைகள் உடன் வந்து சிறிது நாள் இருந்தார்கள். வசுந்தராவும் மகனுடன் இருந்துவிட்டு, அவர்களுடன் கிளம்பி சென்றார். அத்தைகள் மகிழ்ச்சியாக தான் சென்றார்கள். காரணம் குருமூர்த்தி! ‘நாங்க வேண்டாம். ஆனா குருமூர்த்தி மட்டும் கூட வேணும்‘ என்ற அவர்களின் பொறுமல், குருமூர்த்தி தனியே வீடு எடுத்து தங்கியதில் கொஞ்சம் அடங்கி போனது. பிடிவாதக்காரனின் பிடிவாதம் இந்த முறை குருமூர்த்தியின் முன் எடுபடவில்லை. எப்போது அவருக்கான வீடு பார்த்தார் என்று தெரியாது. லண்டன் வந்த போது அவருக்கு வீடு இருந்தது. சம்யுக்தாவிற்கு இது தெரிந்து இருக்கிறது. இவள் என்னிடம் சொல்லவில்லை! மனைவியிடம் முகம் தூக்கி கொண்டு திரிகிறான் மலைமாடு. எம்பையர் முழுதும் குணா பொறுப்பு. கற்பகம் பாட்டி நாட்டை விட்டு வர மாட்டேன் என்று குணாவுடன் தங்கிவிட்டார். மாசிலாமணி தான் குருமூர்த்தியை விட்டு இருக்க மாட்டாரே! இருவரும் ஒன்றாக இருப்பதில் சம்யுக்தாவிற்கு நிம்மதி! முதல் சில நாட்கள் புதிய இடத்தில் பழகுவதற்கு சிரமப்பட்டார் குருமூர்த்தி. பின் சகஜமாகி விட்டார். மகிழ்ச்சியாகி விட்டார் மனிதர்! இங்கு அவரை ஜட்ஜ் செய்ய யாருமே இல்லை. அவரின் அடையாளத்தை கேள்வி கேட்கவும் யாருமில்லை. மனிதர் சுதந்திர பறவையாக சுற்றி கொண்டிருக்கிறார். இன்று இரவு கூட நிகழ்ச்சி ஒன்றுக்காக செல்கிறார்கள். “சார்” என்று ராகவ் விஷயத்தை சொல்லவும், மருமகன் கொதித்து விட்டான். “நைட் நான் வீட்டுக்கு வரேன்” என்று வேண்டுமென போன் செய்து சொல்ல, “வா. ஆனா நாங்க இருக்க மாட்டோம்” என்றார் குருமூர்த்தி. “இருக்கணும். இல்லை உங்களை அவ்வளவு தான் பார்த்துக்கோங்க” என்று இவன் மிரட்ட, ஆள் போன் வைத்தாகிவிட்டது. “உன் அப்பாக்கு என்ன இளமை திரும்புதாடி? ஆட்டமா ஆடிட்டு இருக்கார்” என்று சம்யுக்தாவிற்கு அழைத்து நாயகன் சத்தமிட, “கண்ணு வைக்காதீங்க, என் அப்பா இப்போதான் சந்தோஷமா இருக்கார்” என்றாள் சம்யுக்தா. “கண்ணு வைக்கிறேனா? ஏய் அவர் எங்க போறார்ன்னு தெரியுமாடி?” “என்கிட்ட சொல்லிட்டு தான் போறார்“ “அவ்வா என்னை மட்டும் விட மாட்டேங்கிற?” “அப்பா கிளம்ப நேரமாச்சு. அவருக்கு டின்னர் ரெடி பண்ணனும். பை” சர்வாச்சார்யா எனும் நல்லவனை சீண்டி விட்டுவிட்டார்கள். “ராகவ்” என்றான். பிறகென்ன நாயகன் வீட்டிற்கு சென்ற நேரம், குருமூர்த்தி வீட்டில் தான் இருந்தார். தந்தையும், மகளும் ஆளுக்கொரு பக்கம் முகம் தூக்கி வைத்து கொண்டிருந்தார்கள். கண்டுகொள்ளாமல் குளித்து உணவுண்ண அமர, சம்யுக்தா உர்ரென பரிமாற, மாமனார் கடுகடுவென தண்ணீர் நிரப்பி வைத்தார். அவனுக்கான கவனிப்பில் குறைவில்லை. ஆனால் கோவம், கோவம் தான். சிவப்பிரகாசம் தாயகம் சென்றிருக்க, அப்பாம்மாவிடம் வீடியோ காலில் ஜாலியாக பேசினான் நல்லவன். சுஹா, கார்த்திக்குடன் பேசும் நேரம், குடும்பத்தினருடனும் பேசி கொண்டான். அவனின் உதவியாளருக்கு அழைத்து அன்றய நாளிற்கான முடிவுரைகளை கேட்டறிந்தான். குணாவிற்கு அழைத்து தொழில் சார்ந்த சில அறிவுரைகளை வழங்கினான். கற்பகம் பாட்டியிடம் உடலை பார்த்துக்கொள்ள சொன்னான். ஏன் இங்குள்ள மாசிலாமணியிடம் கூட, ஏதோ பேசினான். ஆனால் தந்தை, மகளிடம் மட்டும் பேசவில்லை. நாமதானே கோவமா இருக்கணும், இவனுக்கு என்னவாம்? “க்கும்” என்றார் குருமூர்த்தி. “இனிமேல் ராகவ் மூலமா என்னை கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணாத. அப்புறம் அவனை பந்தாடிடுவேன்” என்றார் மனிதர். “அப்படியா? அவனை வர சொல்லவா?” என்று கேட்டான் மருமகன். “மணிகிட்ட முதல்ல அவன் ஜெயிக்கட்டும்” என்று மாமனார் கெத்தாக சொல்ல, “ஜெயிச்சுட்டா நீங்க என்கூட மோதணும்” என்று மாமனாரை மைதானத்திற்கு அழைத்தான் மருமகன். “ஏங்க என்ன இது?” சம்யுக்தா அவனை கண்டிக்க, “குருவை மிஞ்சின சிஷ்யனை பார்க்க வேண்டாமா?” என்று கேட்டான் நாயகன். “ஒன்னும் தேவையில்லை” சம்யுக்தா சொல்ல, “நான் வெளியேவே போகலை. சந்தோஷமா தூங்க போ” குருமூர்த்தி முசுடு முகத்துடன் அறைக்கு சென்றுவிட்டார். சர்வாச்சார்யா இன்றும் மாமனார் வீட்டிலே தங்கிவிட்டான். “என் அப்பாவை நீங்க எப்படி கண்ட்ரோல் பண்ணலாம்?” சம்யுக்தா அறைக்கு வந்ததும் கணவனிடம் சண்டைக்கு நின்றாள். “என்னை நீ கண்ட்ரோல் பண்றது இல்லையா என்ன?” அவன் எப்போதும் வேறு வழியில் வந்தான். “நோ, நீங்க அப்பா பத்தி மட்டும் தான் பேசணும்” கண்டிப்பாக சொன்னாள் சம்யுக்தா. “ஏண்டி இங்க வந்தும் சண்டை, அடிதடி, பயிற்சி தானா?” “இங்க இருக்கிற கலைகளை அப்பா கத்துக்க நினைக்கிறார் அதுல என்ன தப்பு?” “என்னை மட்டும் விட மாட்டேங்கிற?” “முரட்டு பையனை நான் தாங்க வேண்டாமா?” “ஹேய்” உல்லாசமாகி விட்டான் இளங்காளை. மனைவியை கட்டிலில் சரித்து, ஆள் மேல் பாய்ந்தாகி விட்டது. “அப்படியாடி படுத்துறேன்? இப்போதான் அடியெடுத்து வைச்சிருக்கோம். அதுக்குள்ள உன் குட்டி இடுப்பு முரண்டு பண்ணுது?” “இன்னும் நாம பண்ணாதது ஏதாவது இருக்கா என்ன?” “இருக்கே!” என்று லிஸ்ட் வாசித்தான் கெட்டப்பையன். “அய்யே ச்சீ” சம்யுக்தா மொத்தமாக சிவந்து போனவள், நாயகன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டாள். “இந்த ஊர் ஸ்டைல்டி இதெல்லாம். அந்தந்த இடத்துக்கு தகுந்த மாதிரி நாமும் மாறிக்க வேண்டாமா?” “இதுல கூடவா?” “உங்க அப்பா மட்டும் இந்த ஊர் கலையை கத்துக்கலாம், நான் கத்துக்க கூடாதா?” “மலைமாடு எதுக்கு எதை பேசுற நீ?” சம்யுக்தா அவனை நெஞ்சிலே கடித்து வைத்தாள். கல்நெஞ்சுக்கு வலிக்குமா என்ன? “பல் வலிக்க போகுதுடி” என்று அதற்கு வைத்தியம் பார்த்தான் கெட்டப்பையன். “என்ன சொல்லுது என் குட்டி இடுப்பு” என்று உடமைப்பட்ட இடத்திற்கு பயணமானான் கணவன். “அதுக்கு ரெஸ்ட் வேணுமாம்” என்று நாயகனின் உச்சி முடியை பற்றி இழுத்தாள் சம்யுக்தா. “வேலை பார்க்க பார்க்க தான் வலுவாகும்டி. வீக்கா இருக்கு. ஸ்ட்ராங் ஆக்கணும்” என்றவன் பூப்போன்ற உதடுகளை வைத்து தான் வலு சேர்க்கிறான். “ஸ்ஸ்” என்ற சம்யுக்தாவின் முனகல் நிமிடத்துக்கு நிமிடம் கூடுகிறது. நாயகனுக்கு இதுவும் போதவில்லையோ என்னமோ? கையில் ஸ்வீட்டுடன் நின்றான் கேடி. “அயோ முடியாது. முடியவே முடியாது” என்று சம்யுக்தா எழுந்து ஓட முடியாமல் போர்வைக்குள் அடைந்து கொள்ள, காற்றை போல் காளை போர்வைக்குள் பாய்ந்து விட்டான். “ஆஹ். போ. போதும். நோ, இல்லை. விடுடா தடியா” என்று சத்தமில்லா அலறல்கள் அறையை நிறைத்தது. இருவரும் போர்வையை விட்டு வெளியே வந்த நேரம் முழுதும் வேர்த்து போயிருந்தார்கள். சம்யுக்தா மூச்சை சீராக்கவே சில நிமிடங்கள் எடுத்து கொள்ள, “ஹேய் இங்க ஸ்வீட் அப்படியே இருக்குடி” என்று திரும்ப ஆரம்பித்துவிட்டான் கெட்டப்பையன். ம்ஹ்ம். வாழ்றான்யா!