நான்காம் வருட படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது என்னும் நிலையில் சுற்றுலா செல்வது என முடிவு செய்யப்பட்டது..
பெங்களூரில் இருந்து மைசூர் சென்றுவிட்டு அங்கிருந்து வயநாடு செல்வதாக முடிவு செய்தனர். ஆறு நாட்கள் சுற்றுலா என்று கூறியிருந்தனர் மாணவ மாணவிகள் அனைவரும் வரவேண்டும் என்று சொல்லி இருந்ததால் அனைவரும் வீட்டில் அனுமதி வாங்கி அதற்கான பணத்தையும் கட்டி தயாராகிவிட்டனர். மாணவர்களுக்கு என தனி வேன் ஒன்றும் மாணவிகளுக்கென தனி வேன் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.., மாணவிகளுக்கு பாதுகாப்பாக இரண்டு மூன்று பேராசிரியர்களும்., ஆண்களுக்கான இரண்டு மூன்று பேராசிரியர்களும் ஒன்றாக கிளம்பினர். அப்போது தற்செயலாக ஒரு பேராசிரியருக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்படவும், நிரஞ்சனை சென்று வருமாறு அனுப்பி வைத்தார். எனவே அனைவரும் சேர்ந்து சுற்றுலா கிளம்பினார்.
மைசூரில் சுற்றி பார்த்துவிட்டு பேலஸ்., பூங்கா என அனைத்தும் பார்த்துவிட்டு அவர்கள் வயநாடு கிளம்புவதற்கு மதியத்திற்கு மேல் தாண்டிவிட்டது. பெங்களூரில் இருந்து வயநாடு செல்வதற்கு மொத்த பயண நேரமே 6 மணி நேரம் தான். இவர்கள் காலையில் பெங்களூரில் இருந்து கிளம்பி இருந்தனர் பதினோரு மணி அளவில் மைசூர் வந்துவிட்டு அங்கு சுற்றி பார்த்துவிட்டு மதிய உணவை முடித்துக்கொண்டு அதன்பிறகு வயநாடு கிளம்ப தயாராகினர்.
வயநாடு வந்து சேரும் போது மாலையாகி இருந்ததால் இருட்டத் தொடங்கி இருந்தது., வேறு எங்கும் சுற்றிப் பார்க்கப் போகவில்லை, மறுநாள் காலை செல்லலாம் என்று அனைவரும் அவரவர் அறையில் அடைந்து கொண்டனர். பெண்களுக்கென தனி பகுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கு தனி தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இவளோடு தோழிகளோடு சேர்ந்து இங்கு அரட்டை அடித்துக் கொண்டிருக்க., அவள் எல்லாவிதத்திலும் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல்.., அவளுக்கு அந்த மும்பை மாடல் கம்பெனியில் டிரஸ் டிசைனர் வேலை கிடைத்து விடுமோ., என்ற கடுப்போடு இவளைப் பிடிக்காத இருவர் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். அது தெரியாமல் இவள் ஏக சந்தோஷத்தோடு இங்கு தன் நெருங்கிய தோழி மீனா உடன் விளையாடிக் கொண்டிருந்தாள்…,
“வயநாடு கிளைமேட் செமயா இருக்குடி., எங்க பார்த்தாலும் அவ்வளவு அழகா இருக்கு., என்ன அழகு வர்ற வழி எல்லாம் பச்சை பசேல்னு இருக்கு.., அங்கங்கே சரியான பள்ளத்தாக்கை வர்ற வழியெல்லாம் பார்த்தேன்”.,
“நானே டயர்ட் ஆகி கண்ணமுடி தூங்கிட்டு வரேன்.., நீ என்ன ன்னா ஜன்னல் வெளியே எட்டிப் பார்த்துட்டு ஐயோ இந்த பக்கம் பள்ளத்தாக்கு., அந்த பக்கம் பால்ஸ் ன்னு நீ கத்துற கத்துல., டிரைவர் பயந்து போய் வண்டியை உள்ளே விடாமல் இருந்தாறே ன்னு அதுவரைக்கும் சந்தோஷப்படு”..
“பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இருந்துச்சு ன்னு சொன்னா… ரொம்ப தான் குறை சொல்லுற.., ஆனா இந்த பள்ளத்துக்குள் வீடெல்லாம் இருக்கேடி நான் பார்த்தேனே”..
“இங்கெல்லாம் மலைப்பிரதேசம் அங்கங்க மலைக்கு மேல தான் வீடு கட்டி வைத்திருப்பார்கள்., மலைக்கு மேல தான் ரோடு இருக்கு சோ ரோட்டில் இருந்து எட்டிப்பார்த்த கீழ வீடு தெரியத்தான் செய்யும்., இந்த இடம் பாதுகாப்பான இடம் கிடையாது ரொம்ப ரிஸ்க்கான பிளேஸ் தான்., என்ன ஒரே மரமும் ,செடியும், கொடியும் இருக்கு இங்கெல்லாம் எவ்வளவு பூச்சி., பொட்டு கிடைக்குமோ நீ வேற பாத்து நல்லா இருக்கு., இது நல்லா இருக்கு., நீ எங்கே இறங்கி பூச்சி ட்ட கடி வாங்கிறாதே”…
“பூச்சியா என்ன பூச்சி இருக்கும்”
“நாளைக்கு காலைல போகும் போது விசாரிப்போம்”
“ஏய் நீ பயங்காட்டுரியா என்னைய”
“ஆமா நீ சின்ன பாப்பா பத்தியா.. உன்னை நான் பயன் காட்டுறதுக்கு”
“மீனு நெஜமாத்தான் சொல்றியா இங்கெல்லாம் இருக்குமா.. என்ன மாதிரி பூச்சி இருக்கும்., ஐயோ எனக்கு பூச்சி பார்த்தாலே பயம் டி அருவருப்பா இருக்கும்.. அப்புறம் எப்படி இந்த மக்கள் அந்த பூச்சி இருக்குற இடத்தில் எல்லாம் போய் வீடுகட்டி இருக்காங்க”..
“லூசா நீ, இங்க எப்பவும் மழை பெய்து கொண்டே இருக்கும்., மழை பெய்யும் போது ஈரத்திற்கு இடத்தில் எல்லா புச்சியும் வரத்தான் செய்யும்.., வண்டுல இருந்து எல்லாம் வரும்.. நீ நல்லா யோசிச்சு பாரு, நம்ம ஊருல லேசா மழை பெய்தாலே கொசு கூட ., அந்த பூச்சி , இந்த பூச்சி எல்லாம் வருதா இல்லையா, அது மாதிரி தான் இங்கேயும், இது கேரளா., தமிழ்நாடு இல்ல, நம்ம தமிழ்நாட்டில் இப்படி வருதோ இல்லையோ., பெங்களூரில் எத்தனை தடவை பார்த்து இருக்கோம்., அங்கேயும் மழை பெய்யும் போது இருக்குறத விட அதிகமாய் மழை பெய்யுது அப்படித்தான் இருக்கும்.., உடனே பயந்துக்காத”…,
“மீனு நாளைக்கு என் பக்கத்திலே இரு.., என் கூட இரு.., எங்கேயும் விட்டுட்டு போயிடாத”..,
“லூசு ஒழுங்கா இருடி பயந்துகிட்டே இருக்காதே.., சும்மா வாய் பேச்சு மட்டும் தான்., என்ன பூச்சி பாத்தா பயம் அப்படின்னு சொல்லி ஓடிப்போய் ஒதுங்கிகோ.., சரியா உன்னை எல்லாம் பிடிச்சு கொண்டு காட்டுக்குள் விட்டுட்டு வரவேண்டிய அப்போதுதான் தெரியும்”..,
“ஐயோ மீனு தயவுசெய்து விளையாட்டு கூட இப்படி எல்லாம் சொல்லாத.., என்னால இந்த மாதிரி பிளேஸ் அ பார்க்கத்தான் முடியும் இருக்க சொன்னா இருக்கிறதெல்லாம் கஷ்டம்.., எங்க ஊர்லயும் வயலெல்லாம் உண்டு. ஆனால் அது வேற மரம் செடி கொடி தோட்டம், அதெல்லாம் உண்டு அதெல்லாம் பாக்குறதுக்கு நல்லா இருக்கும்., இருக்குறதுக்கும் நல்லா இருக்கும்., ஆனா இது பார்த்தாலே காடு மாதிரி இருக்கே., எங்க இருக்குனு கூட தெரியாது கீழே இறங்கின மேலே ஏறத் தெரியாது, அப்படி ல்லா இருக்கு”..,
“தெரியுது இல்ல, அதுக்கு தான் சொன்னேன்., சும்மா அது அழகா இருக்குது., இது அழகா இருக்குன்னு எங்கேயும் பிரிஞ்சு எல்லாம் போயிறாதே எங்க கூடவே இரு சரியா”…
அவள் பாவம் போல தலையாட்டி கொண்டிருப்பதைப் பார்த்த மீனுவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.., “லூசு நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்புறீயேடி, மகிமா என்ன மகி நீனு இப்படி இருக்க.., யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பியிருக்க நீனு.., நல்லா இருக்கும்., ஜாலியா இருக்கணும், என்ஜாய் பண்ணிட்டு போகனும்., இங்கெல்லாம் ரொம்ப பாதுகாப்பா தான் இருக்கும்., இங்குள்ள பெரிய டூரிஸ்ட் பிளேஸ் ன்னு பேர் வைத்துவிட்டு பாதுகாப்பு இல்லாமல் எதுவும் இருக்குமா.., அதனால தைரியமா இரு சரியா., ஆனா உண்மைதான் காடு மாதிரி இருக்கும் இடங்களில் உள்ள வீடு கட்டி இருக்காங்க ன்னா., அவங்களோட வாழ்வாதாரம் அதுதான் அந்த காட்டுக்குள்ள தான் அவங்களுக்கான வேலை ., வருமானம் எல்லாம் இருக்கு அதனால அப்படி இருக்காங்க” என்று மீனு சிரித்துக்கொண்டே சொல்லவும்..
“உன்னை கொல்ல போறேன் டி., எனக்கு பூச்சி வண்டு ன்னா பயம் ன்னு சொல்லிட்டு., அதை காட்டி ஏதோ சொல்லி என்ன பயம் காட்டுற ன்னு”..
“பின்ன என்னடி வேன்ல வரும்போது மனுஷிய கொஞ்ச நேரம் தூங்க விட்டாயா.., லொட, லொட ன்னு பேசிட்டே வர்ற., அது இப்படி இருக்கு., இது இப்படி இருக்கு., அது நல்லா இருக்கு., இது நல்லா இருக்கு., ன்னு.., என்னடா கொஞ்ச நேரம் தூங்க முடியலன ன்னு,தோணுச்சி., நீ தூங்கும்போது உன் காதுக்குள் வந்து அப்படி பேசினா உனக்கு எரிச்சலா இருக்கும் இல்லை., அப்படித்தானே எனக்கும் இருக்கும்”..,
“அடிப்பாவி உன் தூக்கத்தை கெடுத்ததுக்காக…, இப்போம் தூங்க முடியாம என்ன பயங்காட்டி வச்சிருக்கே…, உன்னை என்ன செய்யலாம்”
“ஒன்னும் செய்ய வேண்டாம் போய் தூங்கு போ., நல்லா தூங்கு காலையில பாப்போம்., அங்க பாரு நம்ம கூட இருந்த ரெண்டு பேரும் இழுத்து முடி தூங்கிட்டா.., தூங்குடி பேசிக்கிட்டே இருக்கிற எப்ப பாரு ஹாஸ்டல் ரூமிலும்., உன்னோட இதே தொல்லைதான் இப்பவும் உன்னோட இதே பிரச்சினை தான் பேசாத.., எப்ப டி நீ பேசாம இருப்ப., வாயை மூட மாட்டியா”..
“ஏன்டி இப்படி எல்லாம் கேட்கிற என்றால் சோகத்தோடு” …, மீண்டும் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே “நான் தான் தூங்கும் போது பேசுறதே இல்ல., இல்ல. எப்ப பாத்தாலும் பேசுறேன் பேசுறேன் ன்னு சொல்ற”…
“அடிப்பாவி அது ஒன்னு தாண்டி குறைச்சல் தூங்கும் போதும் பேசு ஆள பாரு., போய் தூங்கு போ என்று அவள் பக்கத்தில் படுத்து இருந்தவள்., அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொள்ளவும்., இவளும் சிரித்துக் கொண்டே போர்வையை இழுத்து மூடி தூங்க தொடங்கினாள்.
ஏனோ தோழிகளிடம் பேசும் போது மட்டும் தான் அவளால் மனம் விட்டு சிரிப்பது போல அவளுக்கு ஒரு எண்ணம். வீட்டில் ஏற்கனவே அத்தை மகனை கட்டி வைக்கவா இல்லை., வெளியிலிருந்து மாப்பிள்ளை வருபவர்களுக்கு யாருக்காவது கட்டி வைக்கவா, என்ற பேச்சு அடிபட்டு கொண்டிருப்பதால் தான் ஆசைப்படும் வேலைக்கு போக முடியாது என்ற பயத்தோடு இருந்தாள்..,
முதலில் எல்லாம் அவளுக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே கிடையாது. அதன் பிறகு போகப்போக வீட்டுக்கு போகும் போதெல்லாம் ஏற்படும் திருமண பேச்சு., அங்கு இருக்கும் குடும்ப சூழ்நிலை., அவளுக்கு திருப்திகரமாக இல்லை., அத்தை மகனை கல்யாணம் செய்தால் அவனோடு வாழ்வது என்பது நினைக்க முடியாத ஒரு விஷயம்., வெளியில் உள்ளவரை திருமணம் செய்தால் அது எப்படி இருக்குமோ என்ற எண்ணம்., தன் படிப்பிற்கு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவளுக்கு முதல்முறையாக கேம்பஸ் இன்டர்வியூ பாம்பே கம்பெனியில்., கல்லூரியில் தனி ஒருத்தியாக தேர்வானது அவளுக்கு எந்த அளவிற்கு பெருமை தந்ததோ., அந்த பெருமையை நீடிக்க செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதனாலேயே வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசையும் வந்தது…
மறுநாள் காலை அனைவரும் குளித்து கிளம்பி உணவருந்த செல்லும்போதுதான் மாணவர்களும் வந்து சேர்ந்தனர். வகுப்பில் இருப்பது போல கேலியும் கிண்டலுமாக அனைவரும் சேர்ந்து உணவருந்தி விட்டு சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கு செல்லத் தொடங்கினார்கள்.,
சில இடங்களை பார்த்து விட்டு மதிய உணவிற்கு முடித்துக் கொண்டு., அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது தான் அவர்களை சுற்றிக் காட்ட அவர்களுக்களோடு வந்த கைடு ஒருவர் அப் பள்ளத்தாக்கை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்..,
இப்பொழுது மழை பெய்து கொண்டிருப்பதால் இது வழுக்கு பகுதியாக இருக்கும் என்றும்., இதன் கீழ் பகுதியில் ஒரு மலை கிராமம் இருக்கிறது. அங்கு மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடி இனத்தவர் இருக்கிறார்கள் என்றும்., அவர்கள் யாரும் வெளிப்பகுதி அவ்வளவாக வருவதில்லை. அவர்களுடைய கைத்தொழில்கள் வெளி விற்பனைக்கு இங்கு அதிகமாக வரும்., அவர்கள் செய்யும் பொருட்கள் தரமானதாகவும் அழகாகவும் இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அவர்கள் செய்யும் பொருட்கள் அனைத்தும் மரத்தால் செய்யப்படும் பொருள்கள் என்றும்., அது மிகவும் அழகானதாக இருக்கும் என்றும்., அவற்றைக் கொண்டுவந்து விற்பதற்கு அக் கிராமத்திலிருந்து ஒருவரோ அல்லது இருவரோ வேறு பாதையில் சுற்றி கொண்டு வருவார்கள்., என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு போக வேண்டுமென்றால் அந்த கிராமத்து தலைவரிடம் அனுமதி பெறாமல் போக முடியாது., ஏனெனில் அவர்கள் வேறு எவரையும் உள்ளே அனுமதிப்பது கிடையாது., அவர்கள் விற்கும் பொருள் எப்படி இருக்கும் என்று ஒரு கல்லூரி பேராசிரியை ஒருவர் கேட்க., அது விற்கும் இடத்தில் வேண்டுமென்றால் நாளை கூட்டிக்கொண்டு போய் காட்டலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்..
அவளை பிடிக்காத இரு பெண்கள் அவள் போகும் இடம்., வரும் இடமெல்லாம், நோட்டமிட்டு கொண்டு., அவள் பின்னே செல்வதை ஏற்கனவே நிரஞ்சன் கவனித்திருந்தான், ஆனால் வகுப்பில் பெண்கள் சேர்ந்து போகிறார்கள், என்றே நினைத்து இருந்தான், அதே நேரத்தில் தற்செயலாக அவர்கள் வகுப்புத் தோழன் ஒருவனும் பார்த்துவிட்டு., “இந்த பிள்ளைகளுக்கு ஏற்கனவே மகிமா வை பிடிக்காது., ஆனால் எதுக்கு மகிமா போற இடத்துக்கே பின்னாடி போய்ட்டு இருக்குதுங்க” என்று சொல்லவும்..,
அதை கவனித்த நிரஞ்சன் அதன் பிறகு அப்பெண்களை மட்டும் கவனிக்கத் தொடங்கினான்., அப்போது மாணவனிடம் கேட்டான்., “மகி ய பொண்ணுங்களுக்கு பிடிக்காதா” என்று கேட்டான்.,
“ஆமா சார் மகி ய அந்த பெண்களுக்கு பிடிக்காது., நீங்க அவளை திட்டுறது பார்க்கும் போது அந்த பொண்ணுகளுக்கு பயங்கர ஹாப்பியா இருக்கும்.., அதே மாதிரி அந்த பிரைஸ் வாங்குனா இல்ல.., அவ ஏதாவது செஞ்சுட்டா அப்படின்னா., இது இரண்டுக்கும் பயங்கர கோவம் வரும், ஏன் என்றே தெரியாது சார் அவளைக் கண்ட பஸ்ட் ல இருந்தே இரண்டுக்கும் பிடிக்காது., கிளாஸ் எல்லாம் நார்மலா பேசினால் கூட இதுங்க ரெண்டும் பேசாது” என்று சொல்லவும்..,
“அப்புறம் ஏண்டா அவ பின்னாடி போறாங்க” என்று கேட்கும் போது..,
“தெரியல சார் நாங்களும் காலையிலிருந்து நோட் பண்ணிட்டு தான் இருக்கிறோம்., இந்த ரெண்டு பொண்ணுங்க அவ பின்னாடி தான் போறாங்க” என்று சொல்லவும்
நிரஞ்சனுக்கும் மனதில் ஏதோ தவறாக தோன்றவும்., “டேய் இருடா” என்று சொல்லி விட்டு வேகமாக அவள் நின்ற இடம் நோக்கி சென்றான். அதேநேரத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கை அனைவரும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதை பார்ப்பதற்கு மீனு பயந்து போய் தள்ளி நிற்க., அவள் கையில் அவளுடைய செல்போன் கையில் வைத்திருந்த பேக் அனைத்தையும் கொடுத்து விட்டு., அவள் போய் நின்று பார்க்கவும், அப்பெண்கள் அவளை தள்ளவும் சரியாக இருந்தது.
அதே நேரத்தில் வேகமாக ஓடி வந்து அவள் கையை பிடித்து தூக்க முயற்சி செய்யும் போதே., அவள் வழுக்கிக் கொண்டு கீழே செல்ல அனைவரும் சத்தம் போட்டனர்… தள்ளிவிட்ட பெண்களை மாணவிகளும் பேராசிரியர்களும் சூழ்ந்து கொண்டு திட்ட தொடங்கினாலும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்தவர் “விட்ருங்க.., தூக்குறது கஷ்டம்., வழுக்கிக் கீழே போய்., கீழே இருந்து யாராவது காப்பாற்றி கொண்டு வந்தால் தான் உண்டு., நீங்க சரியா பேலன்ஸ் பண்ணி பிடிக்கலன்னா உங்களையும் சேர்த்து உள்ளே இழுக்கும்., அந்த இடம் பயங்கரமாக வழுக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்..,
நிரஞ்சனோ அவரிடம் “அதுக்காக அவளை விட எல்லாம் முடியாது” என்று சத்தம் போட்டுவிட்டு., “வேற ஏதாவது வழியிருக்கா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே., அவனுடைய காலும் கீழே வழுக்கத் தொடங்கியது.., அப்போது மாணவர்கள் இருவர் நிரஞ்சனை இழுத்து பிடித்துக் கொள்ள., அவளை தூக்கும் முயற்சியில் இருக்கும் போது மகிமாவிற்கு கீழே கால் ஊன்ற கூட வழி இல்லாத அளவிற்கு மழைத் தண்ணீர் பட்டு அவ்விடம் மோசமாக இருந்தது., சகதியுமாக இருந்தாலும், நல்ல வேளை அவ்விடங்களில் பாறைகள் இல்லாததால் அவளுக்கு எந்த அடியும் படாமல் சிறு சிறு சிராய்ப்புகளோடு தான் நின்று கொண்டிருந்தாள்., அவளால் அருகில் இருந்த செடியை கையால் அழுத்திப் பிடிக்க முடியவில்லை., காலை ஊன்ற முடியாத சூழ்நிலையில் நிரஞ்சனை பார்த்து “கையை விடுங்க., வேண்டாம். எனக்கு கால் ஊன்றி நிற்க வழி இல்ல., என்னால இங்க பேலன்ஸ் பண்ண முடியலை விட்ருங்க”., என்று சொல்லும்போதே நிரஞ்சன் மாணவர்கள் இழுத்துப் பிடித்திருந்த கையை உதறிக்கொண்டு அவளின் இரண்டு கையையும் சேர்த்து பிடித்து தூக்க முயற்சி செய்யும் போதே இருவரும் சேர்ந்து வழுகி உருள தொடங்கினர்.
அவனுடைய செல்போன் மட்டுமே அவனுடைய பேன்ட் பாக்கெட்டில் முன்பக்கமாக வைத்திருந்தான்., மற்றபடி அவனது உடைமைகளும் மாணவர்களிடம் இருந்தது. அவள் கையில் எதுவும் அவளுடைய பொருட்கள் இல்லை., இருவரும் சேர்ந்து உருளும் போது ஒருவரை ஒருவர் அணைத்து பிடித்தபடியே உருண்டு சென்றனர்.
அந்தநேரத்தில் உருளும் போது தன்னைக் காப்பாற்ற வந்தவன் என்ற எண்ணத்தோடு அவன் மேல் அடி படாத வண்ணம் கையை வைத்து அவன் தலையில் எந்தவித அடியும் படாதபடி அவள் பிடித்துக்கொள்ள., அவள் கைகளில் ஆங்காங்கே கல் குத்தியும்., வழியிலிருந்த செடிகளின் வேர்களில் நீட்டியிருந்த கட்டைகள் குத்தியும் அவள் கையிலும் காயம் ஏற்பட்டது.., அதே நேரம் அவள் தலைப்பகுதியில் அடிக்க வந்த ஒரு கட்டையை விளக்க போய் அவனது கையிலும் அடிபட்டது..