“என்ன மிஸ்டர் குமரன்? நான் அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கலைன்னா நான் என்ன தான் பண்றது?” என்ற மருத்துவரின் குரல் வெளியே கேட்க,
“எனக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டாத்தான் தூக்கமே வருது டாக்டர். இந்த ஒரு தடவை ரெபர் பண்ணுங்க. நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும், தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர். தூக்கம் வர்ற மாதிரி பீல் பண்றேன். பட் கண்ணை மூடுனா வந்த தூக்கம் எங்க தான் போகும்னே தெரியலை” என்றான் குமரன்.
“ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டு தூங்குறது அட்வைசபில் இல்லைன்னு உனக்கு தெரியாதா? இதனால ஹெல்த் இஷ்யூஸ் வர சான்சஸ் இருக்கு. பெட்டர் நீங்க யோகா ட்ரை பண்ணுங்களேன்” என்றார்.
“எல்லாமே ட்ரை பண்ணிட்டேன் டாக்டர். இந்த ஒரு டைம் பிரிஸ்கிரீப்ஷன் குடுங்க. நெக்ஸ்ட் இந்த இஷ்யூஸ் வராம இருக்க ட்ரை பண்றேன்” என்றான்.
“இப்படித்தான் லாஸ்ட் டைம் சொன்னிங்க? ஒரு பொறுப்பான வேலையில இருக்கீங்க. உங்க ஹெல்த்தை நீங்க தான் சரியா வச்சுக்கணும்” என்று கூறிக் கொண்டே அவனுக்குரிய பிரிஷ்கிரிப்ஷனை எழுதி நீட்டினார்.
“தேங்க் யு டாக்டர்” என்றபடி வெளியே வந்தவன், அப்போது தான் அங்கு அமர்ந்திருந்த நதியை கவனித்தான்.
‘என்னாச்சு இவளுக்கு? பீவர் ஓவர் ஆகிடுச்சா?’ என்று எண்ணியவன் அவளை கண்டு கொள்ளாதவன் போல் நகர, அவளும் அதை எதிர்பார்க்கவில்லை என்பதைப் போல் உள்ளே எழுந்து சென்றாள்.
அவள் உள்ளே சென்றவுடன் வேகமாய் திரும்பி வந்தவன்,
“நர்ஸ், இப்போ உள்ள போனாங்களே அவங்களுக்கு என்ன பிராப்ளம்?” என்றான். குரல் கொஞ்சம் தவிப்பாய் வெளி வந்தது.
“பீவர் தான் சார். பிளட் டெஸ்ட் எடுத்துட்டு போறாங்க” என்றார் அந்த நர்ஸ்.
அவள் அமர்ந்திருந்த அதே இருக்கையில் இப்போது அவனும் அமர, அந்த நர்ஸ் அவனை அதிசயமாய் பார்த்து வைத்தார்.
“வைரல் பீவர் தான். ஆனா டெம்பரேச்சர் ஹையா தான் இருக்கு. இன்ஜெக்ஷன் போடுறேன். டூ டேய்ஸ் நல்லா ரெஸ்ட் எடுங்க. நாளைக்கும் பீவர் குறையலைன்னா, கண்டிப்பா ஹாஸ்பிட்டல் வந்துடுங்க” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, அவளின் யோசனையோ வெளியே சென்ற குமரன் மீது தான் இருந்தது.
“ஹெலோ.. உங்களைத்தான்” என்று அவர் மீண்டும் அழைக்க,
“ஆங் டாக்டர்” என்றாள் நிஜத்திற்கு வந்தவளாய்.
“இன்ஜெக்ஷன் போடணும்” என்றார்.
“இப்பத்தான் பிளட் டெஸ்ட் எடுக்க, ஊசியைக் குத்தி எடுத்தாங்க. அதுக்கே உயிர் போய் உயிர் வந்திடுச்சு. மறுபடியுமா?’ என்று எண்ணியவள்,
“இன்ஜெக்ஷன் எல்லாம் வேண்டாம் டாக்டர். நீங்க டேப்லட் மட்டும் குடுங்க போதும்” என்றாள் பாவமாய்.
“இங்க நான் டாக்டரா இல்லை நீங்க டாக்டரா?” என்றார் கடுப்புடன்.
வேறு வழியின்றி அவள் தலையை ஆட்ட, அவர் அவளுக்கு அந்த ஊசியை போட்டு முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது அவருக்கு.
“என் சர்வீஸ்ல நிஜமா உங்களை மாதிரி ஒரு பேஷண்ட்டை பார்த்ததில்லைமா” என்று அவர் மூச்சு விட, வெளியே லேசு பாசாய் கேட்டுக் கொண்டிருந்த குமரனின் முகத்தில் சிரிப்பு வந்திருந்தது. அவள் என்ன பாடு படுத்துவாள் என்று தான் அவனுக்குத் தெரியுமே.
முகத்தை சுழித்தபடி, ஊசி போட்ட இடத்தை தேய்த்து விட்டுக் கொண்டு வந்தவளைப் பார்த்தவன், தன் சிரிப்பை அப்படியே மறைத்தான். சட்டென்று எழுந்து தூரமாய் சென்று நின்று கொண்டான்.
மாத்திரைகளை வாங்கிக் கொண்டு சோர்வுடன் வந்தவளை அப்போது தான் பார்ப்பவனைப் போல் பார்த்தவன்,
“ம்ம்.. பொழுது போகலை. அதான், சுத்திப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்று கடுப்புடன் கூறியவள், வெளியே சென்று ஆட்டோவை அழைக்க,
“தாசில்தார் மேடம் ஆட்டோல போகலாமா? உங்க ஆபீஸ் கார் இருக்குமே?” என்றான்.
“நான் என் சொந்த விஷயமா வந்தேன்” என்றாள்.
“வாங்க மேடம் நான் டிராப் பண்றேன்” என்றான் வெகு பவ்யமாய்.
“நிறைய பேரை டிராப் பண்ணியிருக்கிங்க போல?” என்றாள் அந்த சோர்விலும்.
அவளின் பேச்சு அவனுக்கு கோபத்தைத் தூண்டினாலும், அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
“என்ன சார் பேச்சையே காணோம்?” என்றாள்.
“நான் நிறைய பேரை டிராப் பண்ணியிருக்கேன்னா, உங்களை நிறைய பேர் பிக்கப் பண்ணியிருப்பாங்க போல?” என்றான் அவனும்.
“வார்த்தையை பார்த்து பேசுங்க இன்ஸ்பெக்டர்” என்றாள் கோபமாய்.
“அது உங்களுக்கும் பொருந்தும் மேடம். வாயும், வார்த்தையும் இருக்குதுன்னு உங்க இஷ்ட்டத்துக்கு பேசினா, பதிலும் என் இஷட்டத்துக்குத் தான் வரும்” என்றான் கடுமையான முகத்துடன்.
அவளுக்கு மலுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.
‘குமரா கண்ட்ரோல் யுவர் செல்ப்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், புல்லட்டை ஸ்டார்ட் செய்து அவள் முன் உறும விட்டுக் கொண்டு நின்றான்.
“வந்து ஏறுங்க மேடம்” என்றான்.
“யார் சார் நீங்க? உங்க வேலையை பார்த்துட்டு போங்க?” என்றாள் கோபமாய்.
“வந்து ஏற முடியுமா முடியாதா?” என்றான். அவனுடைய கோபம் அவள் அறிந்ததே.
“யாருன்னு தெரியாதவங்களோட எல்லாம் நான் நம்பி போறதில்லை” என்றாள் வெடுக்கென்று.
“சொன்னாக் கேளு நதி, உனக்கு இப்போ உடம்பு சரியில்லை. பேசாம வந்து ஏறு. நான் டிராப் பண்றேன்” என்றான் மீண்டும் பொறுமையாய்.
“இந்த ரெண்டு வருஷமா இருக்கேனா செத்தேனான்னு கூட கவலைப்படாத உங்களுக்கு, இப்ப என்ன திடீர் கரிசனம்? பார்த்த உடனே பழைய பாசம் வந்து ஓட்டிகிட்ட மாதிரி நடிக்கிறிங்க?” என்றாள்.
“நான் செத்து ரெண்டரை வருஷமாச்சு. செத்தவனை இன்னும் எத்தனை தடவை தான் சாகடிப்ப?” என்றவனின் குரலில் இருந்தது என்ன மாதிரியான உணர்வு??
“சாரி” என்றவள்,
“ஆனா, எனக்குப் போகத் தெரியும். நீங்க கிளம்புங்க” என்றவள் அவனை சட்டை செய்யாமல் கிளம்ப எத்தனிக்க,
“ஏறுடி” என்று கோபமாய் கத்தியவன்,
“இப்ப மட்டும் நீ ஏறலை, நேரா வண்டியை கொண்டு போய் எதுலையாவது விட்டு மோதிட்டு ஒரேடியாய் போய் சேர்ந்துடுவேன்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் பின்னால் ஏறி அமர்ந்திருந்தாள் தீராநதி.
அவ்வளவு தான், அவளின் அருகாமை அவனின் அனைத்து உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. கண்மூடி ஒருமுறை நிதானித்தவன்,