யோகிக்கு, அவரச வேலை.. அதாவது முன்ஜாமீன் என யாரோ ஒருவருக்கு டாக்குமென்ட் ரெடி செய்யும் வேலையில் அந்த இரவு அவனுக்கு நகர்ந்தது. அது தொடர்பான அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.. அதனால், வேறு யோசனையே இல்லாமல்.. இருந்துவிட்டான் யோகி.
மிர்த்திக்கு, தம்பியிடம் அந்த இரவில் ஏன் சொல்லுவானே என அமைதியாக யோசித்தாள். பெரிதாக யோகியை நினைத்து கவலைப்படவில்லை.. இதெல்லாம் அவளுக்கு பழக்கம்தானே. எனவே, அதற்கென இருக்கும் ரெண்டல் ஆப்.. டவுன்லோட் செய்து வீடு தேட தொடங்கினாள்.
நாளைக்கு மதியம் பெர்மிஷன் போட்டுவிட்டு இங்கெல்லாம் போய் பார்க்கணும் என எண்ணிக் கொண்டாள். தம்பியிடம் என்னவென சொல்லுவது.. அப்பாக்கு சொல்லனுமா திட்டுவாரா.. என குழப்பம். இரவு தாமதமாகத்தான் உறங்கினாள்.
விடிந்ததும் யோகி நீதிமன்றம் செல்லும் வேலையில் இருந்தான். போனை கவனித்து பார்க்கவில்லை. அந்த முன்ஜாமீன் வாங்கிவிட்டுதான் வெளியே வந்தான். தங்களின் அலுவலகம் வந்து.. நம்பி சர்’ரிடம் அப்டேட் செய்துவிட்டுதான் யோகிக்கு மூச்சே சரியாக விட முடிந்தது.
யோகி துரை இருவரும் சேர்ந்துதான். வெளியே வந்தனர்.. அந்த நேரத்தில் போன் எடுத்து பார்த்தான்.. அப்போதுதான் லட்டுவின் அழைப்பை பார்த்தான்.
யோகி, ஒன்றுக்கு நான்குமுறை பார்த்தான், மிஸ்டு கால் எனதான் இருந்தது.. முகத்தில் பரபரப்பும் புன்னகையும் ஒருங்கே எழுந்தது. உடனே அவளுக்கு திரும்ப அழைத்தான்.
மிர்த்திக்கா அலுவலகத்திலிருந்து அப்போதுதான் கிளம்பினாள்.. தனது தோழியோடு. ம்.. எப்படி தேடுவது கால் டாக்ஸியோ பஸ்சில் போவது சரிவராது. எனவே, இத்தனைநாள் பழகிய நட்பான வித்யாவோடு அவளின் டூ வீலர் எடுத்துக் கொண்டு கிளம்பினர் இருவரும்.
இப்போது குடியிருக்கும் வீட்டின் அருகிலேயே தேட தொடங்கினர். அந்த நேரத்தில்தான் யோகி அழைத்தான் மிர்த்தியை. மிர்த்தி, அப்போதுதான் ஒரு வீட்டினை பார்த்துவிட்டு வந்திருந்தாள்.. அடுத்த வீட்டினை பார்க்க.. வண்டியில் ஏறி அமர, யோகியின் அழைப்பு அவளை வந்து சேர்ந்தது.
மிர்த்திக்கு, உள்ளே குபுக்கென ஏதொ பொங்குகிறது.. வெளியே காட்ட முடியவில்லை அவளால். அவனின் அழைப்பை பொருட்படுத்தாமல்.. வண்டியில் ஏறி அமர முயன்றாள்.. கண்ணீரில் அவள் புட்ரெஸ்டில் கால் வைக்க.. சற்று ஸ்லிப் ஆகியது. முயன்று நேராக அமர்ந்தாள்.. மீண்டும் அழைப்பு வந்தது. சைலெண்டில் போட்டுவிட்டு.. அடுத்த இடம் கிளம்பினர் இருவரும்.
தூரம் அதிகமாக இருந்ததால்.. பயணமும் அதிக நேரம் இருந்தது. யோகி மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருக்க.. அவனின் நம்பரினை பிளாக் செய்து விட்டு வேலையை பார்த்தாள், பெண்.
நம் வக்கீலுக்கோ பொறுமை இல்லை.. உணவு உண்டு கொண்டே, அவளை போனில் அழைத்துக் கொண்டே இருந்தான். ஒருகட்டத்தில் அவளுக்கு அழைப்பு செல்லாமல் போக.. கை கழுவிக் கொண்டு.. அப்படியே கிளம்பினான் அவள் வீட்டிற்கு.
யோகி, முன்பே அவளின் வீட்டிற்கு வந்துவிட்டான்.. அவள் இல்லை எனவும் இங்கே ‘ஏதும் பிரச்சனையா’ என அறிய, கீழே செக்யூரிட்டியிடம் பெதுவாக விசாரித்தான்.. ஜெகன் போன் எடுக்கலை.. என எதோ கேட்க.. அவரும் சொல்லினார்.. ‘ஜெகன் வெளிநாடு போயிருக்கார் ஒருமாசம்.. அவங்க அக்கா மட்டும்தான் தனியா இருக்காங்க.. வேலைக்கு போயிருக்காங்க’ என சொல்லிவிட்டார்.
யோகி அவள் 6 மணிக்கு மேல்தான் வருவாள்.. என எண்ணி, பிறகு வருவோம் என வெளியே கிளம்பினான்.
வித்யாவும் மிர்த்தியும் மாலை ஐந்து மணிவரை சுற்றினார், ஐந்து வீடுகள் பார்த்து வந்திருந்தனர். மிர்த்திக்கா வீட்டிற்குதான் வந்திருந்தனர் இப்போது.
மிர்த்திக்கு, ஏதும் ஒத்துவரும் போல தெரியவில்லை.. தனிவீடு.. கொஞ்சம் தூரம் அதிகம்.. மழை வந்தால் தண்ணீர் நிற்கும் என பல பிரச்சனை இருப்பதாக தோன்ற.. மிர்த்தியின் முகம் வாடித்தான் போனது.
மிர்த்திக்கா, வாடிய முகத்தோடு அமர்ந்தாள்.
வித்யா “இரு மிர்த்தி.. இன்னும் டைம் இருக்கு கண்டிப்பா கிடைச்சிடும்.. அந்த அப்பார்ட்மென்ட்டில் இருந்தாலும் இருக்கும்.. அதெல்லாம் ஆப்ல வராது.. நாளைக்கு போய் பார்க்கலாம்.. என்ன லக்சுலெரியா இருக்கும். நோ டென்ஷன்” என்றாள்.
மிர்த்திக்காவும் புன்னகைத்தாள் “சாரி வித்யா, டீ போடவா..” என எழுந்தாள்.
இருவரும் கிட்சென் சென்றனர்.. பேச்சுகள் சென்றது.. தம்பி எப்போது வருவான்.. அவனிடம் சொல்லிடு.. என் வீட்டுகாறார் ஹெல்ப் பண்ணுவார்.. கேட்டு பார்க்கலாம்.. என பேச்சுகள் சென்றது.
இருவரும் டீ குடித்து.. கொறித்து முடித்து.. வித்யா கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அந்தநேரம் சரியாக அழைப்பு மணி ஒலித்தது. மிர்த்திக்கா யாரென லென்ஸ் வழியாக பார்த்துவிட்டு.. இரண்டு நிமிடம் அப்படியே நின்றாள். சட்டென ‘அப்பாடா’ என ஆசுவாசம் அவளையும் அறியாமல் வரத்தான் செய்தது. ஆனால், கோவம் வந்து உடனே ஒட்டிக் கொண்டது.
வித்யா “என்ன ஹௌஸ் ஒனர்ரா..” என்றாள்.
மிர்த்திக்கா “இல்ல இல்ல..” என இறுகிய முகத்தோட கதவினை திறந்தாள்.
யோகி போர்மல் வைட் ஷர்ட்டுடன்.. தலையை கோதிக் கொண்டே உள்ளே வந்தான். ஆசுவாகமாக வந்தவன்.. யாரோ இருப்பதை பார்த்ததும் முகம்.. சட்டென அன்னிய தன்மையை தத்தெடுத்துக் கொண்டது. மிர்த்தியையும் வித்யாவை மாறி மாறி பார்த்தான்.
மிர்த்திக்கா இரு நொடிகள் அவனை தவிக்கவிட்டுதான் பேசினாள்.. “வாங்க யோகி” என்றாள் அமைதியான குரலில்.
மிர்த்திக்கா, வித்யாவை பார்த்து “யோகேஷ்வர்.. திருச்சி” என்றாள்.
வித்யா மனதிற்குள் ‘அடிபாவி… இங்கதான் இருக்காங்களா.. சொல்லவேயில்ல..’ என நினைத்துக் கொண்டு, “ஹலோ, நான் வித்யா.. மிர்த்திக் கூட வொர்க் பண்றேன்” என்றாள்.
யோகி சோபாவில் அமர்ந்தான்.
வித்யா “சர் இங்கதான் இருக்காங்களா.. சொல்லவேயில்லை” என்றாள் தன் எண்ணத்தை மறைக்காமல்.
யோகி இப்போது குறுகுறுவென மிர்த்தியை பார்த்தான்.. மிர்த்தி இப்போது திணறினாள்.. “அதெல்லாம் அப்புறம் பேசலாம்..” என வித்யாவை பார்த்து சொல்லிவிட்டு, மிர்த்தி “என்ன யோகி” என்றாள் யோகியை பார்த்து.
யோகி முதலில் பேசுவதா வேண்டாமா என யோசித்து.. நான்கு மூச்சுக்குள் எடுத்துக் கொண்டு யோசித்தான். பின் நிதானமாக “உனக்கு போன் செய்தேன் எடுக்கலை நீ.. அதான் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என்றான்.
மிர்த்திக்கு கோவமாக வந்தது ‘என்னமோ கூப்பிடும் தூரத்தில் இவன் இருப்பது போலவும்.. நான் தினமும் பேசுவது போலவும் என்ன சொல்றான் பாரு..’ என கோவம்தான் வந்தது. மிர்த்திகாவின் அமைதியையும்.. அவளின் இறுகிய முகம் பார்த்த வித்யா.. “நான் கிளம்புகிறேன் மிர்த்தி” என்றாள் எழுந்துக் கொண்டு.
மிர்த்திக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை “ம்..” என்றாள்.
வித்யா, யோகியிடமும் விடைபெற்று கிளம்பினாள்.
யோகி அவள் கதவை சாற்றி வரும் வரை காத்திருந்தான்.
அவள் வந்ததும் “நைட் கூப்பிட்டிருந்தியா.. ஜெகன் எங்க வெளிநாடு போயிட்டானா” என அடுக்கடுக்காக கேட்டான்.
மிர்த்திக்கா “ஆமாம்” என்றாள்.
யோகி “தனியாகவா இருக்க” என்றான்.
மிர்த்திக்கு கோவமோ கோவம்.. ‘எப்படி வித்யா எதிரே இவன் வந்து நிற்கலாம்.. இவர் என்னமோ என்னை அப்படியே பார்ப்பது போல எப்படி இயல்பாக பேசுகிறான்.. என்னை மறந்து இத்தனை வருஷம்.. ஒன்றுமேயில்லை என இருந்தவன்தானே.. இப்போ எதோ வந்து நின்னு.. போன் செய்தேன்.. எடுக்கலை, அதான் நேரில் வந்தேன்னு சொல்றான்.. எவ்வளோ நல்லவன்.. ஐயோ இவனை ஏன் நான் உள்ளே கூப்பிடனும்.. அனுப்ப வேண்டியதுதானே.. நான் சரியில்லை.. அப்போதிலிருந்து.. இப்போது வரை நான் சரியில்லை.. அனுப்பி வை அவனை..’ எங்கோ ஆரம்பித்த உணர்வுகள்.. இங்கே வந்து நின்றது.
மிர்த்திக்கா “என்னவாக இருந்தால் என்ன.. தெரியாமல் நம்பர் மாறி கால் செய்துட்டேன்.. அதுக்காவா வந்தீங்க.. கிளம்புங்க” என்றாள்.
யோகி “ஓ.. நம்பர் மாறி எனக்கு கால் வருகிற அளவுக்கு நான் வந்துட்டேன்.. ம்.. நல்லாவேயில்ல, கேட்க்கும் போதே சகிக்கல. சொல்லு எதுக்கு நைட் கூப்பிட்ட.. ஏதாவது பிரச்சனையா மிர்த்தி.. அப்புறமா சண்டை போட்டுக்கலாம்.. என்னாச்சு” என்றான் நிதானமான குரலில்.. அவள்தான் பொறுமையை சொல்லி தந்திருந்தாளே அந்த பொறுமையை பற்றிக் கொண்டு கேட்டான்.
மிர்த்தி “ஒண்ணுமில்ல.. நீங்க கிளம்புங்க.. இப்படி வராதீங்கன்னு சொல்லியிருக்கேன், வித்யா என்ன நினைப்பா.. எதோ உரிமையா வந்து நிக்குறீங்க.. கிளம்புங்க முதலில்” என்றாள் கோவத்தின் சாயலில் குரல் கீச்சிட்டது.
யோகி புரிந்து போனது.. அவளின் பிரெண்ட் முன்னாடி வந்துட்டேன்னு கோவம் என புரிந்தது, ஆனாலும் பிரச்சனை அதுவல்லவே.. “எனக்கும் கத்த தெரியும் மிர்த்தி.. ஜெகன் ஊரில் இல்லை.. அக்கம் பக்கம் ஏதாவது பிரச்சனையா.. முதலில் அதை சொல்லு..” என்றான்.
மிர்த்திக்கா “ஒண்ணுமே இல்லைங்க.. தெரியாமல் வந்துடுச்சி.. கிளம்புங்க” என்றாள் வார்த்தை மாறாமல் நிதானமான குரலில்.
யோகி உடைந்து போனான்.. நெற்றியை நீவிக் கொண்டான்.. என்னமோ அவனின் மனம் எதோ சரியில்லை என சொல்லுகிறது அவனிடம்.. “ஏன் டா.. என்னை இப்படி படுத்தற.. என்னை தேடியிருக்க.. எனக்கு பீல் ஆகுது. உன் முகமே சரியில்லை.. அவனும் ஊரில் இல்லை.. பிரெண்ட்ன்னு அவங்க வேற இருக்காங்க.. என்ன ஆச்சு, க்கும்.. மிர்த்தி..” என்றான் குரல் கரகரக்க.
மிர்த்திக்கா அமைதியானாள்.. அவனின் குரல் அவளை தடுமாற வைத்தக் கொண்டிருந்தது.
யோகி “இங்க பாரு.. அப்புறம் நாம சண்டை போட்டுக்கலாம்” என தொடங்க..
மிர்த்திக்கா “நான் சண்டை போடுறேனா” என்றாள் ஒருமாதிரி குரலில்..
யோகி “இல்ல இல்ல.. நீ டென்ஷனா இருக்க, ஜாப் ஏதாவது பிரச்சனையா.. ஜெகன் வெளிநாடு போனது உன் அப்பாக்கு தெரியுமா.. எப்படி உன்னை தனியாக விட்டார்..” என சொல்லிக் கொண்டு அவளின் அருகில் வந்தான்.. மிர்த்திக்காவிற்கு தடதடத்து.
யோகி “அமைதியாக இருக்காத.. இத்தனை வருஷம் அமைதியா இருந்தது போதாதா.. என்னை பாரு மிர்த்தி” என்றான்.மிர்த்திக்காவின் எதிரே வந்து நின்று.
நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள் பெண்.. யோகியின் கண்களை அவளின் பார்வை ஆழமாக தீண்டியது.. அவளின் இரு கருவிழிகளும் இரு கண்களின் நேர்கோட்டில் நிற்க.. அவளின் சிந்தனையும் உணர்வுகளும் அதன் வழியே அவனை தீண்டியது. இரண்டு நொடிகளுக்கு மேல்.. அந்த ஆழ்ந்த பார்வையை க்ரகிக்க முடியவில்லை அவனால்.. “மிர்த்தி அப்படி பார்க்காதடி..” என அவளின் கைகளை தொட வர..