நான் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி, பின்னாடி ஒரு மாதிரி நடந்துக்கலை… நீயும் உன் குடும்பமும் தான் அப்படி நடந்துகிட்டீங்க. என்னைப் பத்தி என் வீட்டை பத்தி தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ண. உனக்கு இங்க இருக்கிறதை விட… உங்க வீட்ல இருக்கிறது தான் பிடிச்சது, சரி போன்னு விட்டுட்டேன்.”

உன் பின்னாடி வரணும்னு மட்டும் நினைக்கிறியே… உனக்காக நான் வரணும்னு நினைக்கிற அளவுக்கு முதல்ல நீ என்ன பண்ணி இருக்க?”

உன் அன்பை எனக்குப் புரிய வச்சிருக்கியா?”

உன் நடத்தையோ, உன் செயலோ எதோ ஒன்னு உன்னை இழந்திடக் கூடாதுன்னு என்னை நினைக்க வச்சிருக்கணும் இல்ல… எனக்கு அப்படி எதுவும் இல்லை.”

நான் யாதவியைப் பார்க்கலைனா… இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிச்சே இருக்க மாட்டேன்.”

நான் பார்த்ததும் அவளைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கலை… ஆனா கல்யாணம் பண்ணிகிட்டா அவளைத்தான் பண்ணிக்கனும்னு தோணிச்சு.”

அவளுக்காக என்ன வேணா பண்ணலாம். ஆனா அவளை மட்டும் இழந்திடக் கூடாது தோனுச்சு…”

அப்படி ஒரு முடிவு எடுத்ததுக்காக நான் சந்தோஷ படுறேன். எங்களுக்குள்ள சண்டையோ… பிரச்சனையோ இல்லாம இல்ல… இருந்தாலும், எங்களுக்கு ஒருத்தர் மீது ஒருத்தருக்கு அன்பு இருக்கு, நம்பிக்கை இருக்கு, மரியாதையும் இருக்கு. அது போதும் எங்க வாழ்க்கைக்கு.”

லிங்கா தெளிவாகச் சொல்லிவிட்டான், விவகாரத்துக்குக் காரணம் நான் அல்ல… நீதான் என்று. அதோடு உன்னை தேடி வரும் அளவுக்கு, நீ என்னில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் புரிய வைத்தான்.

யானை தன் தலையில் தானே மண்ணைவாரிப் போட்டுக் கொண்டது போல… ஐஸ்வர்யா அவளாகத்தான் அவள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டாள்.

லிங்கா சொன்னது போல… இப்போது ஐஸ்வர்யாவுக்குத்தான் மன வருத்தம், வலி எல்லாம்.

லிங்கா பேசி முடித்து விட்டு நேரத்தை பார்த்தவன், இன்னும் ஏன் யாதவி வரவில்லை என்று நினைத்து பார்க்க… யாதவி சற்று தள்ளி நின்றிருந்தாள். இவன்தான் பேசும் மும்முரத்தில் அவளைக் கவனிக்கவில்லை. அவளைப் பார்த்ததும் அவளிடம் சென்றவன், “அப்பவே வந்திட்டியா? கூப்பிட்டிருக்கலாம் இல்ல…” என்றதும்,

நீங்க பேசிட்டு இருந்தீங்க, அதுதான் வெயிட் பண்ணேன்.” என்றவள், டாக்டரை பார்க்க போகலாமா என்று கேட்க… லிங்கா ஐஸ்வர்யாவை மறந்து யாதவியுடன் சென்று விட்டான்.

அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்துக் கொண்டு ஐஸ்வர்யா நிற்க… அவள் அம்மா வந்தவர், என்ன என்று விசாரிக்க…

என் மேலத்தான் தப்பாம். எல்லாம் உங்களால.” என அவள் சொல்ல…

நீ உன் புருஷனோட தான் இருப்பேன்னு சொல்லி இருந்தா… நாங்க என்ன சொல்லி இருக்கப் போறோம். நீதான் அங்க போய் இருக்க அழுவ… அதனால உனக்கு அங்க பிடிக்கலைன்னு நினைச்சோம்.”

எனக்குத் தான் அப்ப புரியலை… நீங்க எடுத்து சொல்லி இருக்கலாம் இல்ல…” என்றாள் ஐஸ்வர்யா.

இப்போது ஒருவரையொருவர் குற்றம் சொல்லி என்ன ஆகப் போகிறது? அவள் இழந்த வாழ்க்கை இழந்தது தான். ஆனால் இப்படியே ஐஸ்வர்யா யோசித்துக் கொண்டிருந்தால்… கடைசி வரை அவள் மனதில் அமைதி என்பது இருக்கவே இருக்காது.

மருத்துவர் எல்லாம் நார்மலாக இருப்பதாகச் சொல்ல.. லிங்காவும் யாதவியும் வெளியே வந்தனர். இன்னும் ஐஸ்வர்யாவும் அவள் அம்மாவும் இருக்க… லிங்கா அவர்களை யாதவிக்கு அறிமுகம் செய்தான்.

அவர்கள் பேசியதில் யாதவி எதையெல்லாம் கேட்டாள் என அவனுக்குத் தெரியாது.

இப்போ எத்தனை மாசம்?” என ஐஸ்வர்யாவின் அம்மா கேட்க…

யாதவி ஆறு மாதம்.” என்றாள்.

சரி நாங்க கிளம்புறோம்.” என லிங்கா விடைபெற…

ஒரு நிமிஷம்.” என்ற யாதவி ஐஸ்வர்யாவைப் பார்த்து, “ஐஸ்வர்யா, முன்னாடி என்ன நடந்திருந்தாலும் அது முடிஞ்சு போனது. அதையே நினைக்காம, இப்போ இருக்கிற வாழ்க்கையை எப்படிச் சந்தோஷமா வாழலாம் பாருங்க. இப்பவும் லேட் இல்லை. உங்க வாழ்க்கையை நல்லபடியா வாழுறது உங்க கையில தான் இருக்கு.” என்றவள், லிங்காவைப் பார்த்து போகலாமா என்று கேட்க… லிங்காவும் அதைத்தான் ஐஸ்வர்யாவுக்கு சொல்ல நினைத்திருந்தான். அதை யாதவியே சொல்லிவிட்டாள்.

அவன் முன்னே நடக்க… யாதவி அவனுடன் இணைந்து நடந்தவள், அவள் கைகளை அவனுடன் கோர்த்துக் கொண்டு, அவன் மீது சாய்த்தபடி நடக்க…

என்ன ஆச்சு எதுவும் பண்ணுதா?” என லிங்கா பதட்டமாக…

இல்லை சும்மா.” என்றாள். லிங்காவும் அவள் தோளை சுற்றி அணைத்தபடி, அவளை அழைத்துச் சென்றான்.

இப்போ அவரு என் புருஷன்.” என யாதவி ஐஸ்வர்யாவுக்கு உணர்த்தி விட்டுத்தான் சென்றாள்.

யாதவியை அலுவலகத்தில் விட்டு லிங்கா கிளம்பி விட்டான். அப்போது எதையும் பேச நேரமும் இல்லை. மாலை மனைவி மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். சிவகாமி தெரிந்தவர் வீட்டு விஷேசத்திற்குச் சென்றதால்.. வீட்டில் இல்லை. இரவுதான் வருவார்.

லிங்கா அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு, அவன் வேலையைப் பார்க்க அலுவலக அறைக்குச் சென்றுவிட்டான்.

இரவு உணவு நேரத்தில் தான் மேலே வந்தான். அன்று இரவு உணவு யாதவி சமைத்திருக்க… மூவரும் உட்கார்ந்து உண்டனர்.

லிங்காவுக்கு நேரம் சரி இல்லை போல… வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்… “டேய் உங்க அம்மா சமையல் நல்லா இருக்கா… இல்லை எங்க அம்மா சமையல் நல்லா இருக்கா?” என்று சந்தோஷிடம் கேட்க…

அவன் பாத்தி மம்மம்.” என்றான். அதற்கே யாதவி இருவரையும் முறைத்தாள். அதோடு சும்மா இருந்தால் பரவாயில்லை. சந்தோஷ் வேண்டுமென்றே, “உவ்வே…” என வாயில் வைத்திருந்த உணவை துப்புவதைப் போலச் செய்ய…. யாதவி கொதித்துப் போனாள்.

டேய், நீ எதுக்கு டா இப்படி ஓவர் பெர்பார்மன்ஸ் பண்ணி உங்க அம்மாகிட்ட என்னை அடி வாங்க வைக்கப் பார்க்கிற?” என்ற லிங்கா, “இவன் பண்றதுக்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லை.” என அவன் பதற…சந்தோஷ் வேண்டுமென்றே மீண்டும் அப்படிச் செய்ய…

மகனைப் பார்த்து, “அடி பிச்சிடுவேன் ஒழுங்கா சாப்பிடு.” என்று லிங்கா சொல்ல.. சந்தோஷ் விளையாட்டைக் கைவிட்டு உண்ண ஆரம்பித்தான்.

அவன் மட்டுமா? உங்க பெர்பார்மன்ஸ் கூடத்தான் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். விவகாரத்துக்கு முன்னாடி ஐஸ்வர்யா வந்திருந்தா…நீங்க ஐஸ்வர்யாவோட சேர்ந்து குடும்பம் நடத்தி இருப்பீங்க. அதுதான சார் சொல்ல வந்தது.” என யாதவி இடக்காகக் கேட்க…

ஐயோ… இவ இதெல்லாம் வேற கேட்டாளா என நினைத்தவன்,

அவளைப் பிடிக்குதோ பிடிக்கலையோ… கட்டினதுக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருப்பேன் சொன்னேன். அதுல என்ன தப்பு? அப்போ நீ என் வாழ்க்கையில இல்லை யாதவி. உன்னை எனக்கு யாருன்னே தெரியாது. நல்லா யோசிச்சு பாரு.” என்றதும், யாதவி எதோ கோபமாக் சொல்ல வர…

ப்ளீஸ் யாதவி, கோபமா இருக்கிற நேரத்தில் வார்த்தையை விட்டுடாத… நான் எந்த அர்த்தத்தில சொன்னேன்னு உனக்குப் புரியும். அந்த நேரத்தில் நீ இருந்தாலும், நீ எனக்கு அதுதான் சொல்லி இருப்ப.”

நான் அது மட்டும் தான் சொன்னேனா… உன்னைப் பத்தி சொன்னது எதுவும் மனசுல பதியலையா… நீ எனக்காக இங்க வந்ததா தான் நான் நினைக்கிறேன்.” என்றதும், யாதவியும் அமைதியாக உண்ண ஆரம்பித்தாள். உண்டு முடித்து எல்லாம் எடுத்து வைத்துக் கட்டிலில் வந்து உட்கார்ந்தனர்.

அவன் சொன்னது போல யோசித்துப் பார்க்க… பிரிவு என்று சொன்ன பிறகாவது ஐஸ்வர்யா யோசித்திருக்கலாம் என்று தோன்றியது. சேர்ந்து வாழ அவள் எந்த முயற்சியும் செய்யவில்லை… இப்போது இவனைக் குறை சொல்ல மட்டும் வந்துவிட்டாள் என நினைத்தவள், கணவனைப் பார்க்க… அவன் கோபமா என்று கேட்க… இல்லையென்று தலையசைத்தாள்.

அவள் புரிந்துகொள்வாள் என லிங்காவுக்கும் தெரியும்.

நீ ஐஸ்வர்யாவுக்குச் சொன்னது தான் நமக்கும். முன்னாடி நடந்தது முடிஞ்சு போனது. இப்போ எனக்கு நீ மட்டும் தான். என் மனசுல உன்னைத் தவிர யாரும் இல்லை.” என்றவன்,

நீ என்னோட யாதவி.” என்று காதலாகச் சொல்ல…

முன்னாடி அவன் சொன்னது எல்லாம் புரியவில்லை. இது மட்டும் சந்தோஷுக்கு புரிய… “ஹான்… என்னோட அம்மா.” என எழுந்து வந்து அவன் யாதவியின் மடியில் உட்கார…

எப்பப்பாரு என்னோட போட்டிக்கு வர்றதே வேலையா போச்சு… இரு உனக்குப் போட்டிக்கு ஒன்னு ரெடி பண்ணி இருக்கேன். வந்ததும் ரெண்டு பேரும் நல்லா அடிச்சிக்கோங்க.” என்று சின்னப் பிள்ளையுடன் கணவன் மல்லுக்கு நிற்பதை பார்த்து சிரித்த யாதவி, மடியில் இருந்த மகனை ஆசையாக முத்தமிட்டாள்.

உன்னோட அம்மாவா?” என லிங்கா சந்தோஷிடம் கேட்க… அவன் ஆமாம் என்று சொல்ல…

சரி உனக்குத்தான் முதல்ல.” என்றவன், “அப்பாவுக்கு ஒரு முத்தம் கொடு.” என்றதும் சந்தோஷும் அவன் கன்னித்தில் முத்தமிட்டான்.