தன் கையில் திணிக்கப்பட்ட பத்திரத்தை பார்த்திராதவள்
” அப்புறம் படிக்கிறேன் பிரணாவ் அத்தான்….
இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது!!!”
என்றபடி அடுப்படியை நோக்கி தன் அடிகளை எடுத்து வைத்திருந்தாள்….
பிரணாவை மருத்துவமனையில் கட்டிகொண்டு ‘அத்தான்’ என்று கூப்பிட்டிருந்தவள்
அதன் பின் உரையாடும் போதெல்லாம் அவன் ஆசைபட்ட பிரத்யேக அழைப்பை தவறாமல் உயபோகப்படுத்தினாள் …..
ஆனால் அதை ரசித்து ஏற்று கொள்ளும்
மனநிலையில் பிரணாவ் தான் இல்லை….
மைத்ரேயியின் பத்தாயிரம் வார்த்தைகளுக்கு வெறும் தலையசைப்பு அல்லது அத்திபூத்தாற்போல் ஓரிரண்டு மொழிகள்!!!
கணவனுக்கு சோட்டுவின் பிறப்பை பற்றி மறைத்ததால் உண்டான கோபம் இன்னும் மறையவில்லை போலும் என்று எண்ணியிருந்தவளுக்கு அவனது தலையசைப்பே தித்திக்க தான் செய்தது….
அப்படி பேசிராதவன் திடுதிப்பென ஒரு பேப்பரை நீட்டுகிறான் என்றால் அது கண்டிப்பாக ஏதோ முக்கியமானதாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு கனவிலும் அது விவாகரத்திற்கான பத்திரம் என்பது தெரியாது…
வீட்டிற்கு அழைத்தவனை வரவேற்றுவிட்டு படிக்கலாம் என்று நகர்ந்தவளிடம்
” இதை படித்து பார்த்தாயெனில் அந்த கிட்சனிற்குள் போக வேண்டிய அவசியமே இருக்காது!!!!”
” மாத்தேமாத்தே அசோபாட்டி!!!!” என்று மறுப்பாக தலையசைத்தபடி உறவாடிய மகனின் புதிய பாஷைகளில் லயித்தவள் தன் அத்தைகளோடு கணவனின் வருகைக்காக காத்திருந்து நேரத்தை போக்கலானாள்…..
மும்பையிலிருந்து நேராக யுகனின் வீட்டை அடைந்தவன்
அங்கு தனது பஜாரி இல்லாது போனதும் ஏற்பட்ட ஏமாற்றத்தினை மறைத்து
தனது வீட்டிற்கு பகானியை செலுத்தினான்….
மகனுக்கு சாதம் ஊட்டி முடித்தவள் அவனை தூங்க வைக்க மாடி ஏற
தங்கள் அறையை பார்த்து அப்படியே மலைத்து போய் அவளது அத்தானை வசியம் செய்யும் செவ்விதழ்களை சற்றே அகல விரித்தபடி நின்றாள் …