உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் மகன் எழாத வண்ணம் கட்டிலை தள்ள முயற்சிக்க
” என்ன பண்ணுகிறாய் பிரணாவ்???
விடு நானே வருகிறேன் …. ” என்று மகனை தள்ளி படுக்க வைத்து விட்டு கணவன் அருகில் வந்தாள் மைத்ரேயி …..
” உனக்கு என்னிடம் பயமாக இருந்தால் தைரியமாக சொல்லிவிடுடி பஜாரி ….
ஆனால் இப்படி என்னைவிட்டு ஓட நான் விடமாட்டேன்!!!!” என்றவனையே பார்த்தவளிடம்
” பயமா இருக்கிறதா ????” என்றான்
மீண்டும் …. அவளுக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் அவனை அப்படி கேட்க தூண்டியது …..
ஆனால் ” இல்லை ” என்பது போல் மறுப்பாக தலையசைத்தவளிடம்
” அப்படியென்றால் இப்போது நனைவோமா???????” என்றான் கிசுகிசுப்பாக….
ஆசை இருந்த போதும் ஏதோ ஒன்று மைத்ரேயியை தடை செய்யவும்
“இன்றேவா?????” என்று இழுக்க
” ஏன்டி பஜாரி ??? விளம்பரத்தில் வரும் அந்த த்ரீ டேஸா????” என்றான் சோகமாக …..
” ஹாஹா!!!” சத்தமாக சிரித்தவள்
” இல்லை பிரணாவ்…. ” என்று கூறவும்
” அப்புறமும் என்னடி பஜாரி??? ” என்று கேட்டவனுக்கு உரிய பதில்
இல்லாதததால் எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் மைத்ரேயி….
அவளது தயக்கம் புரிந்து
” நானே நமக்குள் இப்போதிற்கு இதெல்லாம் வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்….
ஆனால் அது நேற்று வரை….
இன்று என் ஹார்மோன்ஸ் எக்குத்தப்பாக பஜாரி பஜாரி என்று உன் பெயரை சொல்லி குதிக்கிறது …
உனக்கு இன்று ஒரு நைட் தான் டைம்….
நாளைக்கு நைட் நீயாக வந்து அத்தானுக்கு முத்தம் கொடுத்து உன் சம்மதத்தை தெரிவிக்கிறாய்……
இல்லையெனில் தெரிவிக்க வைக்க படுவாய் !!!
என்னை வில்லனாக மாற்றிவிடாதேடி பஜாரி !!!!” என்றவனின் மூக்கை பிடித்து இம்முறை இவள் ஆட்டிவிட்டு
” என்ன செய்தாலும் நீ தான் என் ஹீரோ பிரணாவ்!!!!” என்றவள் அவன் தோள்வளைவை தலையணையாக்கி படுத்து கொண்டாள் …..
“நல்லா டயலாக் மட்டும் பேசுடி பஜாரி !!!!” என்று திருப்பிய போதும் மீண்டும் அவள் நெற்றியில் முத்தமிட்டு ” குட் நைட் !!!!” என்றுவிட்டே தூங்க ஆரம்பித்தான் பிரணாவ்….
காலை ஏழு மணி அளவில் எழுந்தவன் தன் கை வளைவில் ஒரு குட்டி கை படர்ந்திருக்க கண்டு தன் மகனுக்கு ஒரு முத்தமிட்டு “குட் மார்னிங்டா மவனே!!! இன்றாவது எழுந்ததும் அப்பாவிடம் வந்துவிடுடா ” என்று கூறிவிட்டு மனைவியை தேட
அவளோ டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்து தலை வாரி கொண்டிருந்தாள்….
” கிளம்பிவிட்டாயாடி பஜாரி????”
கணவனின் கேள்வியில் திரும்பி பார்த்தவள்
” மெத்தை நனைந்தாலும் பரவாயில்லை என்று ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றிவிடலாமா என்று யோசித்து கொண்டிருந்தேன் !!!!
பரவாயில்லை நீயே எழுந்துவிட்டாய் ” என்றாள் அவனை எழுப்பி பார்த்து ஓய்ந்திருந்தவளாக….
மனைவியின் பேச்சினை காதில் வாங்கி கொள்ளாதவன்
” அன்று ஹசீனா ரிஷப்ஷனுக்கு போட்டது போல் எதையாவது உடுத்தி கொள்ளலாம் அல்லவா???? இப்படி நம் வீட்டு விசேஷத்திற்கு குர்தாவோடு சென்றால் நன்றாக இருக்குமா???????”
என்று கேட்கவும்
அதிகாலை வேளையில் அவளது மொட்டிதழ்கள் விரிய கண்டவன்
” காலையிலேயே டெம்ப்ட் பண்ணாதேடி
பஜாரி…. அப்புறம் நமது ஃபர்ஸ்ட் நைட்
ஃபர்ஸ்ட் டே-வாகவே மாறிவிடும் ” எனவும்
உதடுகளை அவசரமாக ஒட்டி கொண்டவள் ” இப்போது என்ன சொன்னாய் ?????” என்றாள்….
அவன் எதையோ கூற போகுமுன் சுதாரித்து ” இப்போது என்றால் இப்போது இல்லை ….. விசேஷம் பற்றி !!!!!” என்று அவசரமாக மாற்றி கூறவும்
சிரித்தவன் ” ஏன் உனக்கு தெரியாதா ????
உதிக்கா சொல்லியிருப்பாளே ???
மாம்ஸும் கூட பேசி இருப்பாரே ????” என்று சரியாக கணித்தவனிடத்தில்
” தேவகி அம்மாவும், அப்பாவும் கூட அழைத்து விட்டார்கள் !!!!” என்றாள்….
“ஓ!!! ” என்றவனின் வருத்தம் அவளை வாட்ட
” அழைத்தவர்கள் எல்லோரும் பிரணாவை கூட்டிவா மா !!!!” என்று ஒரே ஒரு டயலாக்கை தான் திருப்பி திருப்பி படித்தனர் என்று கூறவும்
” மாம்ஸ் மட்டும் அப்படி சொல்லியிருக்க மாட்டார்!!!!” என்றான் உறுதியாக….
” சோட்டுவை நம் வீட்டில் யாராவது தூக்காவிட்டால் உனக்கு கோபம் வருமா வராதா ????? ” என்றவள்
சரியாகி விடும் பிரணாவ் !!!” கணவனுக்கு ஆதரவாக பேசவும் தவறவில்லை ….
“சரிடி பஜாரி …. நீ போய் வேறு டிரெஸ் போட்டு வா…. “
பிரணாவ் சொன்னது அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை ….
” ஏன்???? நாம் அங்கு போகிறோமா?????”
கண்கள் மின்ன கேட்டவளை இப்போது புரியாமல் பார்ப்பது அவன் முறை
ஆயிற்று….
” பின்னே !!!! இத்தனை பேர் கூப்பிட்டிருக்கிறார்கள் ?????”
” நீ தான் அழுத்தகார அத்தா……” என்று சொல்ல வந்தவள் அப்படியே அன்றைய கணக்கின்படி இரண்டாவது முறையாக தன் வாயினை பொத்த
” இப்போது சொல்ல வந்ததை அப்படியே சொல்லுடி பஜாரி… ப்ளீஸ் … நான் எதுவும் செய்ய மாட்டேன் … ப்ராமிஸ்!!!!!” எழுந்து வந்து பரபரத்தான் அவள் அத்தான்….
” அது…. அது… நீ தான் அழுத்தக்காரன் ஆயிற்றே!!!! எப்படியும் நீ கிளம்ப மாட்டாய் ….. நீ இல்லாமல் நான் மட்டும் எப்படி போக முடியும் என்று டியூட்டிக்கு கிளம்பி விட்டேன்…. அதிலும் இன்று வீட்டில் எல்லோரும் ஃபங்ஷனுக்கு செல்வதால் சோட்டுவை ‘டே கேர்’ல் விடலாம் என்று கூட யோசித்து வைத்தேன்” பேசி சென்றவளின்
கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தவன்
“என் பப்புமா -வின் பெயர் சூட்டும் விழாடி பஜாரி…. நானில்லாமல் எப்படி??????”
என்றுவிட்டு நான் குளித்து விட்டு வருவதற்குள் டிரெஸ் சேஞ் பண்ணிவிடு…
இல்லாவிட்டால் நீ சொல்லாமல் விட்டதை கேட்காமல் இங்கிருந்து புறப்படமாட்டேன்!!!” கண்ணடித்து விட்டு பாத்ரூமிற்குள் நுழைய
” சோட்டு பையா எழுந்திருங்க…. நாம் இப்போது எங்கு போக போகிறோம் தெரியுமா ?????
உங்கள் அத்தை மகளை பார்க்க !!!! ” என்றபடி மகனை எழுப்பி விட்டவள்
மகனை கிளப்பி தயார் செய்து ஒரு இளஞ்சிவப்பு நிற புடவையை எடுத்து கொண்டு உதிதாவின் அறைக்குள் சென்றாள் ….
கணவன் அன்றே கேட்டான் என்று யூ டியூப் பார்த்து புடவை கட்ட கற்று கொண்டவள்
அவன் புடவையில் தன்னை பார்த்ததும் எப்படி உணர்வான்???
என்ன சொல்வான்???
ஏது செய்வான்???
இப்படி பலவிதமான எண்ணங்களுடன் பூரித்து போனவளாக அவன் முன்னே சென்று நின்றவளுக்கு
ஏற்பட்ட அதிர்ச்சியில் கண் காது மூக்கு வாய் எல்லாமே சேர்ந்து அகல விரிந்தன…..
திருமணத்தன்று கூட ஜீன்ஸ் சகிதமாக வந்து தாலி கட்டியவனை வேட்டியில் காணவும் பிரமித்து நின்றவளின் முக பாவனையை ரசித்தவன்
” உனக்கு தான் புடவை கட்ட தெரியாது அல்லவா ???? பாருடி பஜாரி இப்படி கட்டி