தன் தோழியின் காதல் கதையை சுவாரஸ்யமாக கேட்டு கொண்டிருந்த மனைவியை பார்த்து புன்னகைத்த பிரணாவ் தொடர்ந்தான் …..
அன்று டி.எம் வகுப்பை விட்டு வெளியேறிய ஹசீனா
என்ன பண்ணுகிறாள்???
என்று அவள் பின்னோடு வந்த பிரணாவ்
பார்க்க
அதே கர்சீஃப்பை தான் மீண்டும் திருப்பி திருப்பிப் பார்த்து கொண்டே நின்றிருந்தாள்…..
“அந்த பிளாக் அண்ட் வைட் கர்ச்சீஃபை எத்தனை தடவை திருப்பினாலும்
அது கலர்ஃபுல்லாக மாறிவிடாது!!!!!!!”
என்ற நண்பனின் குரல் அருகில் கேட்டு தூக்கி வாரி போட்டது ஹசீனாவிற்கு….
பிறகு ” ச்சு நீ தானா???
பயந்தே போய்விட்டேன்…. ஆமாம் நீ எப்போது பிரணாவ் கிளாசை விட்டு வெளியே வந்தாய்???????” என்று அவள் கேட்க
“அடிப்பாவி!! கிளாஸில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அப்படி என்ன தான் இந்த கர்ச்சீஃபில் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிறாய்???????” பட்டென்று அதை வாங்கினான் பிரணாவ்….
” அதை கொடு பிரணாவ்…… இல்லாவிட்டால் எனக்கு கெட்ட கோவம் வரும்!!!!” ஹசீனா கத்த
“உனக்கு என்று தான் நல்ல கோபம்
வந்திருக்கிறது????? நீ என்ன செய்தாலும் சரி இதை மட்டும் நான் கொடுப்பதாக இல்லை!!!!!!” அவளை மேலும் கோபப்படுத்தியிருந்தான் பிரணாவ்…
ஆனால் அதற்கு
உடனே ஹசீனா அழுக ஆரம்பித்து விட்டாள்……
” அட என்னடா இது வம்பா போச்சு?????
இந்தா ஹசீ உன் கர்ச்சீப்பை முதலில் பிடி…..
இதிலேயே உன் கண்ணையும் கூட துடைத்துக் கொள்!!!!!” என்று பிரணாவ் அவசரமாக அதனை அவள் முன் நீட்ட
“வேண்டாம் பிரணாவ் …..
எனக்கு இதை வாங்குவது சரியா இல்லை தவறா என்று தெரியவில்லை!!!!!
வீட்டிற்கு தெரிந்தால் என் தோலை உரித்து விடுவார்கள்…..
அதிலும் சின்னண்ணன் காலையிலேயே
அம்மாவிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது
‘உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்….. ஏன் அம்மாவிடம் கண்டதை பேசிக் கொண்டிருக்கிறாய்??????
முதலில் காலேஜுக்கு கிளம்பு!!!!!’
என்று மிரட்டல் தொனியில் சொன்னதை கேட்டதுமே எனக்கு பயம் வந்துவிட்டது!!!!!!
நான் இப்போது என்ன பண்ணட்டும் பிரணாவ்??????
நீயே சொல்!!!!!”
தோழி கூறியதை கேட்டவன்
“நீ என்ன பண்ணுவாய் என்று எனக்கு தெரியாது….
ஆனால் இப்படியே முக்கியமான விசயத்தை மட்டும் தவிர்த்து
கதை ஓட்டிக் கொண்டிருந்தாயெனில் நான்
கடுப்பில் உன்னை கொன்றாலும் கொன்றுவிடுவேன்!!!!!”
எரிச்சலாக கூற
” நான் சீரியஸாக பேசுகிறேன் பிரணாவ்…..
இன்று வீட்டிற்குள் வந்த ஒரு புதியவன் என் மேல் நன்றாக மோதி விட்டான்….
இங்கே பாரு!!!!
புடைத்துக் கூட விட்டது !!!!”
நெற்றியில் ஏற்பட்ட வீக்கத்தை சுட்டிக்காட்டிய ஹசீனா தொடர்ந்தாள் ….
“எனக்கு செம கோபம்!!!
‘ கண்ணை என்ன பொடனியிலா வைத்திருக்கிறாய் ???????’
திட்டிக்கொண்டே அவனை பார்த்தேனா
அவன்… அவன்……..”
” என்ன பண்ணினான் என்று சொல்லித் தொலை!!!!!!” தோழியிடம் பொறுமையின்றி கத்தினான் பிரணாவ்….
” அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தானா???
என் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தானா???
என் கண்ணு பட்டாம்பூச்சி மாதிரி அடித்துக் கொண்டதோடு
அதே பட்டாம்பூச்சிகள் என் வயிற்றினுள்ளும் பறக்க ஆரம்பித்தது!!!!!!
எனக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை!!!!
அப்போது என் அப்பா சத்தம் கேட்கவும் பக்கத்தில் இருந்த அறைக்குள் போய் ஒளிந்து கொண்டேன்…..
கொஞ்ச நேரத்திலேயே அவன் அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் பெரிய சண்டை …..
ஏதோ லேண்ட் பிரச்சனை போல !!!!
அப்போது அவன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து யாரிடமோ பேசும் போது இந்த கர்ச்சீஃப் கீழே விழுந்துவிட்டது….. அதை அவன் கவனிக்கவில்லை !!!!
அவன் கிளம்பி சென்றதும் நான் போய் அதை சுட்டு விட்டேன்…..
அம்மாவிடம் மெதுவாக போய் அவனை பற்றி துருவி துருவி கேட்டேனா????
சொந்தம் தான்!!!!! முதலில் ஒன்றாக தான் இருந்தோம்……
பணம் சேர சேர பகையும் சேரவும் அவர்கள் பிரிந்து விட்டார்கள்…..
அந்த பையன் பெயர் அஃப்னான்…..
சின்ன வயதில் உன் அண்ணன்களுடன்
விளையாடுவான் !!! உன்னை தூக்கி கூட வைத்து கொள்வான்….
அவர்கள் இப்போது சாலிகிராமத்தில் இருப்பதாக கேள்வி பட்டேன்…..”
மகளின் மனதை அறியாதவரோ கள்ளங்கபட மின்றி அவர் அறிந்தது அனைத்தையும் ஹசீனா விடத்தில் ஒப்புவித்தார்……
அப்போது தான் அவள் இரண்டாவது அண்ணன்
தங்கை சேகரிக்கும் அநாவசிய விவரங்களை பார்த்து திட்டி விட்டு போனான்……
இப்போது நண்பனின் கையில் உள்ள அதே கர்ச்சீஃபை சுட்டிக்காட்டி ” எனக்கு நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது….
அதேசமயம் நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை!!!!
அவன் எதற்காக அப்படி என்னை பார்த்தான் ????
என்னை போலவே அவனுக்கும் ஃபீல் ஆனதா?????? என்று எல்லாம் தெரியாமல் மண்டையே வெடித்துவிடும் போல் இருக்கு!!!!!!”
என்று மூச்சு விடாமல் முக்கால் மணி நேரம் கதை பேசியவளிடம்
எதுவும் சொல்லாமல் தன் பாட்டிற்கு விறுவிறுப்பாக திரும்பி நடந்து சென்றான் பிரணாவ் ……
“அடேய் இங்கு ஒருத்தி இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்கிறாளே????
ஒன்று, “இது தப்பு ஹசீ!!!!!
நமக்கு சரிபட்டு வராது….. அவன் நல்லவனா என்று கூட தெரியவில்லை?????” என்று அட்வைஸ் பண்ணனும்
இல்லை……..
” விடு ஹசீ பார்த்துக் கொள்ளலாம்…..
அவனை இன்னொரு முறை சந்தித்தால் விவரம் மட்டும் கேட்டு வை!!!!
நான் பேசுறேன்…..” என்று தோழனாக தோள் கொடுத்திருக்க வேண்டும்…..
இது இரண்டுமே இல்லாமல் ‘ எப்படியோ போ!!!’ என்று விட்டுவிட்டு சென்றவனை அன்று முழுவதும் திட்டிவிட்டு
வீடு திரும்ப ஆயத்தமானவளின் முன் தன் எஃப் இஜட்டை நிறுத்தினான் பிரணாவ்…..
நண்பனின் பின்னால் இருந்து இறங்கியவன் அவள் காலையில் சந்தித்த அஃப்னான்!!!!!
கண்முன் நடப்பதை நம்பமுடியாமல்
ஹசீனா அதிர்ந்து விழிக்க
” உனக்காக தான் தேடி பிடித்து இழுத்துட்டு வந்திருக்கிறேன்……
எதுவென்றாலும் ஒரு மீட்டர் சோஸியல் டிஸ்டன்ஸ் விட்டு நின்று பேசிக் கொள்ளுங்கள்…..” என்ற பிரணாவ்
தோழியின் காதருகில் குனிந்து
” அந்த பக்கமும் கிரீன் சிக்னல் தான் போல!!!! உன் பெயரை சொன்னவுடன் என் பைக்கில் ஏறி விட்டான்…..
அப்புறம் இன்னொரு விசயம் பையனை பற்றி மூளை முடுக்கெல்லாம் விசாரித்து விட்டேன்…. அக்மார்க் தங்கம்!!!! தயங்காம பேசு…..
ஓகேவா???????” என்றபடி அவ்விடம் விட்டு நகர்ந்தான்…..
ஆனால்
“எங்கேடா போகிறாய்?????
எனக்கு பயமாக இருக்கிறது!!!!!!
நீயும் என்னோடு இரேன் ” என்று
நண்பனையும் அன்று அஃப்னானுடன் பேசுவதற்கு தயங்கி தன்னோடு பிடித்து வைத்துக் கொண்டவள் தான்
அடுத்து வந்த ஒரே வாரத்திலேயே அவர்களுக்குள் இருந்த இடைவெளி வெகுவாய் குறைந்து
“நாம் பேசும்போது கொஞ்சம் கூட டீசென்ஸியே இல்லாமல் நிக்கிறான் பாரு!!!! இவன் யார் அஃபி !!!!”
என்று பிரணாவை பார்த்து போலியாகவும் கேட்டிருந்தாள்….
நான்கு வருட கல்லூரி படிப்பை முடித்ததும் ஹசீனாவிற்கு அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க
அப்போது அஃப்னான் பற்றியும் தங்கள் காதல் பற்றியும் தந்தையிடம் கூறினாள்…….
அவள் இரு அண்ணகளிடமிருந்தும் பயங்கர எதிர்ப்பு !!!!
” என்னால் இங்கு இருக்கவே முடியவில்லை பிரணாவ் ……
அஃப்னான் வீட்டில் எல்லோருக்கும் எங்கள் திருமணத்தில் மன பூரண சம்மதம்!!!!!
இங்குதான் என்னை கொடுமைப் படுத்துகிறார்கள்!!!!!” போன் பண்ணி நண்பனிடம் ஹசீனா அழ
” வீடு என்றால் அப்படித்தான் ஹசீ!!!!
அதற்கு பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் தூக்கி எறிந்துவிட்டு பேசுவாயா???????
நாளைக்கு உனக்கு ஏதாவது ஒன்று என்றால் உன் ரத்தத்திற்கு முன் அவர்கள் இதயம் தான் துடிக்கும்!!!!!!!!!!
‘சாப்பிட மாட்டேன்’ என்று அடம்பிடி…..
உங்கள் வீட்டில் உனக்கு கொடுக்கும் செல்லத்திற்கு கண்டிப்பாக சீக்கிரம் ஏற்றுக் கொள்வார்கள்!!!! ” என்றான் பிரணாவ் …..
“ஆமாமாம் செல்லம் கொடுக்கிறார்கள்!!!!
அதை நீ பார்த்தாய் ???!!!!!
பெரியண்ணன் பெல்டிலேயே சாத்திவிட்டான்…..
ஆல்சோ என்னால் சாப்பிடாமல் எல்லாம் இருக்க முடியாதுபா”
“அடியே சாப்பிடாத மாதிரி நடிக்கவாவது செய் !!!!
உங்கள் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தாவது சாப்பாடு பொட்டலத்தை
உன் கையில் திணிப்பது என் பொறுப்பு!!!!!”
என்று வாக்களித்தவன் சொல் படி ஆறு மாதங்கள் ஓடியிருக்க
மகள் இப்படியே சாப்பிடாமல் ஒழுங்காக பேசாமல் ஜீவனின்றி இருப்பதைப் பார்த்து அவள் வீட்டினர்
உடனே அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் கண்டிப்பாக மாறிவிடுவாள் என்று எண்ணி
அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை பிடித்து திருமணத்திற்கு நாள் குறித்தனர்!!!
உடனே அஃப்னானை அழைத்த ஹசீனா “என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டி போய்விடு !!!! ப்ளீஸ் ….. ” என்று அழ துவங்க
தாங்க மாட்டாத அஃப்னானோ தன் தோழி ஒருத்தியின் உதவியோடு ஹசீனாவை வீட்டை விட்டு வெளியே கூட்டி வந்திருந்தான் …….
“என்னை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா அஃபி ???????” என்று அழுதவவளிடம்
” இத்தனை நாட்கள் உன் வாப்பா சம்மதத்திற்காகத் தானே வெயிட் பண்ணினோம் !!!
இப்போது என்ன ?????
இரு நான் பிரணாவை கூப்பிடுகிறேன்….
அவன் வரட்டும்!!!!!
எதுவானாலும் பிறகு பேசிக் கொள்ளலாம்…..”
என்று பிரணாவை அஃப்னான் அழைக்க முயல
” பிரணாவ் வேண்டாம் ….
அவன் வந்தால் குடும்பம் !! குடும்பம்!! என்று நச்சரிக்க ஆரம்பித்து விடுவான்….
நாம் இப்போதே கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் அஃபி…. அவனுக்கு தெரிய
வேண்டாம்…. நான் எங்கள் வீட்டிற்கு சென்றால் கண்டிப்பாக இப்போது பார்த்திருக்கும் மாப்பிள்ளையோடு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்!!!!
யாரோ ஒருவனை கட்டுவதற்கு நான் செத்து போவதே மேல் !!!!!!”