உள்ளங்கவர் கள்வனே(2)-36 4172 ஹசீனா பிரணாவிடம் அவன் திருமணத்தை பற்றி குறிப்பிட்டதும் தான் அவனுக்கு மனைவி மகனை உடன் அழைத்து வந்ததே நியாபகத்திற்கு உதித்தது…. இப்படியா நடந்து கொள்வேன்????? பல மாதங்களாக சண்டையிட்டிருந்த உயிர் தோழியை காணவும் விரைந்து அவளிடம் கதைத்ததெல்லாம் நியாயமே!!!! அதற்காக தான் அழைத்து வந்தவர்களை அதிலும் அவர்களுக்கு முற்றிலும் புதிதான இவ்விடத்தில் தனியே அப்படியே விட்டுவிட்டு வந்தது பெரும் தப்பு என்று உணர அவசரமாக மேடையிலிருந்தபடியே தன் பார்வையை அங்கும் இங்குமாக திருப்பி அவர்களை தேடலானான் பிரணாவ்…… அப்போது இடதுபுறமாக ஓர் ஓரத்தில் பிரணாவையே பார்த்தபடி மகனோடு நின்ற மனைவியை கண்டு கொண்டதும் சற்றே இலகுவாக ” மேலே வா!!!!!!!!!!!” என்றபடி சைகை செய்து இருந்தான். ” ஆமாம் யாருடா அந்த இந்தியன் பார்பி?????? உங்கள் வீட்டில் அன்று பத்திரிக்கை வைக்க வரும் போதும் பார்த்தேன்!!!!” என்று மைத்ரேயியை பார்த்து விட்ட ஹசீனா தன் நண்பன் பிரணாவிடம் சந்தேகம் கேட்டவும் “எப்படி சூப்பராக இருக்கிறாள் அல்லவா???????? என் பொண்டாட்டி தான்!!!!!!!” தன் இரு கண்களையும் சிமிட்டி சிரித்தான் பிரணாவ்….. “என்ன விளையாடுகிறாயா?????? விட்டால் அந்த பார்பி பொண்ணு கையில் இருக்கும் குழந்தையும் உன்னுடையது என்று சொல்வாய் போல????????” என்று ஹசீனா கேட்டு முடித்த போது மைத்ரேயி சோட்டுவுடன் அவர்களை நெருங்கி இருக்க மனைவியின் கையிலிருந்த மகனை வாங்கி “அண்டவுட்டெட்லி என் பையன் தான்!!!!!!!!” என்று தன் தோழியிடம் கூறினான் பிரணாவ் ……. மேலும் ” இந்த மக்கு அத்தைக்கு ஒன்றுமே தெரியவில்லை…… நான் யார் என்று நீயே சொல்லுடா சோட்டு” என்றதும் தாமதிக்காமல் “அப்பா!!!!!!!!!” என்று தன் பொக்கை வாயை காட்டி இருந்தான் மைந்தன்……. முகமெங்கும் பெருமிதம் பொங்கி வழிய ” இப்போது நம்புகிறாயா????????” என்ற பிரணாவ் அஃப்னானிடம் “சாரி மச்சி ….. கொஞ்சம் ஹர்ரி பர்ரியில் எங்கள் திருமணம் நடந்தேறியது….. அதனால் இன்வைட் பண்ண முடியவில்லை!!!!!” என்று விளக்கம் கூறினான்….. உடனே “நமக்குள் என்ன மச்சி சாரி எல்லாம்?????” என்றதோடு ” ஹலோ சிஸ்டர்!!!!!” என்றபடி மைத்ரேயியிடம் சிரித்தபடி கூறினான் அஃப்னான்…. பின் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராத தன் மனைவி ஹசீனாவை அஃப்னான் உலுக்க அதில் நடப்பு உலகை எட்டிய ஹசீனா அவசரமாக பிரணாவை தாண்டிச்சென்று மைத்ரேயியிடம் “பார்பி டால் மாதிரியே இருக்கிறாய்!!!!” என்று கூற பதிலுக்கு மைத்ரேயியும் “யூ லுக் கார்ஜியஸ் !!!!!” என்று கூறினாள்…. ” வா மச்சி நாம் அந்தப் பக்கம் போய் விடலாம் !!!! இனியும் இங்கே இருந்தோமென்றால் நம் காதில் ரத்தம் வருமளவிற்கு இரண்டு பேரும் மாற்றி மாற்றி புகழ்ந்து கொள்வார்கள்!!!” என்று பிரணாவ் தன் மனைவியையும் தோழியையும் கலாய்க்க “இவனை எப்படித் தான் சமாளிக்கிறாயோ??????” மைத்ரேயியிடம் கேட்ட ஹசீனா ” நீ முதலில் கீழே இறங்கி போ” என்றாள் பிரணாவிடம்…. உடனே ” சரி வா நாம போகலாம்!!!!” என்றபடி மைத்ரேயியையும் பிரணாவ் அழைத்துக் கொண்டு கீழே இறங்க முற்பட்ட ” அவளை எங்கே இழுத்துக் கொண்டு போகிறாய்???? நீ போ!!!!! நான் கொஞ்ச நேரம் பேசிவிட்டு தான் உன் பார்பி டாலை அனுப்புவேன்!!!!” என்றாள் ஹசீனா … “அதெல்லாம் நீ வீட்டிற்கு வந்து பொறுமையாக பேசிக் கொள்!!!! அடுத்தடுத்து கெஸ்ட்ஸ் வருவார்கள்….. நாங்கள் கிளம்புகிறோம் !!!!!” பிரணாவ் கூறகேட்டு “சரி அப்போது நான் நாளைக்கு பேசுகிறேன்…….” என்ற ஹசீனா நியாபகம் வந்தவளாய் ” ஏன் உதிக்கா, அம்மா, யசோம்மா யாரையும் கூட்டி வரவில்லையா?????????” என்றாள் …. “அது பான்ட்ஸ் கடைக்காரன் அவனது எல்லா டப்பாவும் காணாமல் போனதும் போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்தானா??!!! அதை நியூஸ் சேனலில் வேறு ஒளிபரப்பினார்களா????? அந்த டப்பா எல்லாம் எங்கே போனது என்று மட்டும் தான் என் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன்…… அவர்களெல்லாம் உஷாராகி விட்டார்கள்!!!! ஆனால் நான் தான் என் பொண்டாட்டி புள்ளையோடு இப்படி மாட்டிக்கொண்டேன்!!!!!” என்றபடி தோழியை வார “அடேய்!!!!!” என்று ஹசீனா கத்துவதற்குள் ” நாம் எஸ்கேப் ஆகி விடலாம் ….. வாடி பஜாரி!!!!” என்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு கீழே இறங்கி இருந்தான் பிரணாவ்…….. “மச்சி சாப்பிட்டு விட்டு போங்க !!!!” அஃப்னான் குரல் கொடுக்கவும் ” பாய்வீட்டு பிரியாணிக்காக தானே மச்சி வந்ததே!!!!” என்று கீழே நின்றபடி கூறிய பிரணாவை “அஸ்ஸலாமு அலைக்கும் !!!!” என்று ஹசீனாவின் தந்தை வரவேற்றார்… “வ்வலைக்கும் சலாம் !!” என்ற பிரணாவ் தன் மனைவியையும் மகனையும் மறுக்காமல் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்…… பிரணாவின் கையிலிருந்த சோட்டுவை அதிசயமாய் பார்த்தபோதும் அவர் மேற்கொண்டு எதையும் சங்கடமாக கேட்டிராது “ஏன் பிரணாவ் கல்யாணத்திற்கு வரவில்லை??????” என்றார். ” அது கொஞ்சம் முக்கியமான வேலை இருந்தது !!!!! ” என்றவன் அதே பதிலை!!!!! கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவரிடம் கூறியபடி டைனிங் டேபிளை அடைந்திருந்தான்…… அப்படி ஓயாமல் ஒரே வாக்கியத்தை அத்தனை பேரின் விசாரணைக்கும் திருப்பி படித்தவனை சற்றே ஆச்சரியமாய் பார்த்து வந்தாள் அவனின் மனைவி…. மனைவியின் பார்வையை உணர்ந்து அவளிடம் திரும்பிய பிரணாப் “உன் புருஷனை சைட் படிக்கிறாயா???????” என்று கேட்க “ஆமாம் ஆமாம் அடிக்கலாம்!!!!! என்று தான் நானும் பார்க்கிறேன்…” என்றபடி மைத்ரேயி தன் கையை உயர்த்தினாள்….. “இது பப்ளிக் பிளேஸ்டி பஜாரி….. உன் பாக்ஸிங்கை நம் பெட்ரூமில் வைத்துக்கொள்ளலாம்!!!!!” என்று கூறி அவள் கையை பிரணாவ் கீழே இறக்கி விட இவன் என்ன பேசினாலும் சிவந்து தொலைக்கும் கன்னங்களை மறைக்க வழி தெரியாமல் முறைத்தாள் அவன் பஜாரி….. “ஏன் ஆங்கிரி பேர்ட் ?????? உன் அத்தான் மீது இப்போது என்ன கோபம்?????” அவனது சகஜமான பேச்சும்…. மீண்டும் அத்தான் என்கிறான்???? அந்த அழைப்பும்!!!! அவளும் பல வித உணர்வினை தோற்றுவித்த போதும் அவனிடம் எதிர்மறையாக பேசினாள்…. ” ஆமாம் யார் பிரணாவ் இந்த அத்தான்??????” ” எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்???? அம்மாவையும் யசோம்மாவையும் அத்தை என்று கூப்பிட சொல்லி!!!!! அப்படி அவர்களை கூப்பிட்டு இருந்தால் இந்நேரம் அவர்கள் பையன் தான் உனக்கு அத்தான் என்று புரிந்திருக்கும் !!!!!!” கணவன் கூறிய விளக்கத்தை கேட்டு சிரித்தவள் இப்படியே நாள் பூராவும் பேசிக் கொண்டு போனால் தன் கன்னங்களின் இயல்பான நிறத்தையே மாற்றி விடுவான் போலவே!!!!! என்று அறிந்திருந்தவள் ” இவங்க…. இந்த கல்யாண பொண்ணு… ஹசீனா!!! ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்டா?????? அவர்கள் ஹஸ்பெண்டையும் தெரிந்து வைத்திருக்கிறாய்!!!!! அது மட்டுமில்லாமல் மொத்த மண்டபமும் உன்னை விசாரிக்கிறார்கள் !!!!!” என்று பேச்சை மாற்றினாள் மைத்ரேயி…… ” ஹசீ என் காலேஜ் ஃபிரண்ட் ….. நிறைய முறை அவள் வீட்டிற்கு சென்றிருக்கிறேன்!!! அதனால் வீட்டில் உள்ளவர்களும் பழக்கம்…… ” என்று அவன் முடிப்பதற்குள் “அப்போது மாப்பிள்ளை????? ஒருவேளை லவ் மேரேஜா?????? இவர்கள் லவ் பற்றி உனக்கு ஏற்கனவே தெரியுமா??????” என்று அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கினாள் மைத்ரேயி ஒருவித ஆர்வம் மேலோங்க….. ” இவர்கள் லவ்வை ஒன்று சேர்த்ததே உன் அத்தான் தான்!!!!!” காலரை தூக்கிவிட்டு கூறிய பிரணவை கண்டவளுக்கு ஹசீனாவின் காதல் கதையையும் அதை இவன் எப்படி சேர்த்து வைத்திருப்பான்???? என்று தெரிந்து கொள்ளும் ஆசையும் துளிர்விட்டது!!!! ” சோட்டுவிற்கு கொண்டு வந்த பாலைக் கொடுத்து விட்டு நாம் போய் சாப்பிடலாமா ????” டைனிங் டேபிளை நோட்டமிட்டாறு கேட்டவனிடம் ” அதெல்லாம் முடியாது…. சோட்டுவிற்கு சத்துமாவு கஞ்சி குடித்துவிட்டு தான் வந்தேன்….. போகும்போது பால் கொடுத்துக் கொள்ளலாம் !!!!! இப்போது எனக்கு நீ கதை சொல்லு!! அப்போது தான் நான் உன்னை சாப்பிடவே அனுப்புவேன்…..” சிறுபிள்ளையாய் மாறி அடம்பிடித்தவளிடம் ” இப்போது தான்டி பஜாரி உன் வயதிற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டருக்கிறாய்!!!!” என்று சிரித்த பிரணாவ் “அங்கு வைட் அண்ட் வைட்டில் ஒருவன் நிற்கிறான் பார் ….. அவன் தான் ஃபர்ஸ்ட் வில்லன்…. ச்சி அண்ணன்!!!!!!!” என்று கூறும்போதே அந்த வெள்ளை வேட்டிக்காரன் பிரணாவை பார்த்துவிட “வா பிரணாவ்…. கல்யாணத்தன்று உன்னை பார்க்க முடியவில்லை???” என்றான் அவர்களை நெருங்கிய படி…. ” அது நீங்கள் பிசியாக இருந்திருப்பீர்கள் அண்ணா …. அது தான் என்னைப் பார்த்திருக்க மாட்டீர்கள்!!!!” என்று பிரணாவ் கூறும் சமயத்தில் அந்த வேட்டிக்காரனின் போன் அடிக்கவும் ” ஆமாம் ஆமாம் பிரணாவ் …. சரி இப்போதாவது பார்த்தேனே !!!!!” என்று கூறிவிட்டு தன் போனை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்திருந்தான்….. அவன் சென்ற பிறகு பிரணாவ் தன் மனைவியிடம் “இவன் தான் இந்த தொகுதி எம்எல்ஏ!!! எனி டைம் பிஸி பார்ட்டி ……” என்று கூறியதோடு “ஹசீனா லவ் மேட்டர் தெரிந்ததும் அவன் பெல்ட்டை பிய்த்து விட்டான் பாவம்!!!! என்று சோகமாக கூறினான். “ஏன்??????” புரியாமல் கேட்டாள் அவன் பஜாரி…. ” லோக்கலில் பத்து ரூபாய்க்கு நான்கு பெல்ட் வாங்கி இருப்பான் போல!!!! அதுதான் அடித்தவுடன் பிய்ந்திருக்கும்!!!!!!” யோசனை படர்ந்த முக பாவனையில் சீரியஸாக பிரணாவ் கூற “அப்படியென்றால் ஹசீனா அடி வாங்கினார்களா??????” என்றாள் அவனவள் சற்றே அதிர்ச்சி அடைந்து !!!! “அடி வாங்கியவளே இவ்வளவு ஷாக் ஆகி இருக்க மாட்டாள் …. பி கூல்டி பஜாரி” என்ற பிரணாவிடம் “ஒழுங்காக சொல்லு பிரணாவ் ….. ஹசீனா வீட்டில் யாரும் இவர்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லையா?????? அப்புறம் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்??????’ என்று பரபரத்தாள் மைத்ரேயி. அப்போது பாக்கெட்டில் இருந்த தன் கைக்குட்டையை எடுத்து பிரணாவிடம் தாம் இவ்வளவு ஆவலாக கேட்கிறோம் இவன் பாட்டிற்கு கண்டு கொள்ளாமல் இருக்கிறானே !!! என்று சிறு எரிச்சலுடன் “இப்போது இந்த கர்ச்சீஃபை எடுத்து உன் முகத்தை துடைத்துக் கொண்டால் நாலு பொண்ணு திரும்பி பார்க்க போகிறதா??????” என்றாள் நக்கலாக. ” உன் அத்தான் வந்து நின்றாலே போதும் மொத்த கேர்ள்ஸ் கண்ணும் இங்கு தான் சுத்தும்!!!!” என்றவன் ” டெமோ காட்டவா ?????” என்றுவிட்டு ” டைனிங் டேபிளில் செகண்ட் ரோவில் உட்கார்ந்திருக்கிற ப்ளூ சுடிதார் !!! அப்புறம்…. மேடையில் அஃப்னான் பக்கத்தில் நிற்கும் ரெட் கவுன்!!! அப்புறம்…. வரவேற்பில் பின்னால் சேர் போட்டு உட்கார்ந்திருக்கும் பச்சை சாரி!!! அப்புறம்….” அவன் அடையாளம் கூறியவர்களை நோட்டமிட்ட மைத்ரேயிக்கு அனைவரும் பிரணாவை தான் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது…… அதில் லேசாக கடுப்பானவள் “என்ன அப்புறம் ???? போதும் போதும்!!!! இவள்களெல்லாம் யார் ???? ” என்றாள் நுனி மூக்கு சிவந்தபடி!!!! “உன் அத்தானுடைய ஃபேன்ஸ்டி பஜாரி!!!!” அவன் அப்படி கூறி சிரித்து வேறு கூறவும் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது…. ” நீயும் உன் ஃபேன்ஸும் மாற்றி மாற்றி சைட் அடித்துக் கொள்ளுங்கள்!!! நாங்கள் கிளம்புகிறோம்… வாடா சோட்டு !!!!” மகனை தூக்க நீட்டிய மனைவியின் கரங்களை பற்றியவன் ‘இந்த குட்டி பஜாரிக்கு கோபத்தை பாருடா!!!! ஆனால் இவர்கள் எல்லாரையும் பார்க்கும்போது வரும் ஒரு லேசான கிக் கூட இவளிடத்தில் வந்து தொலைக்க மாட்டேன்கிறதே என் கண்ணிற்கு !!!! ஸ்கூல் பொண்ணாகவே தான்டி பஜாரி என் கண்ணிற்கு தெரிகிறாய் !!!! நீ எப்போது பெரிய பிள்ளையாகி??? நான் எப்போது அடுத்த வேலையை ??????????????? அதற்குள் நான் கிழவன் ஆக போவது கன்ஃபார்ம் போலவே!!!!!’ ஜாக்கிரதையாக அவளுக்கு எட்டாத வண்ணம் தன்னுள் புலம்பி பெரு மூச்சு ஒன்றை விடுத்து மனைவியை ஒரு சேரில் அமர வைத்தான் பிரணாவ்…. ” இந்தக் கர்ச்சீஃப்பை எதற்கு தெரியுமா எடுத்தேன்????? மேடையில் அங்கு நிற்கிறாளே….. அவளுக்கு கிப்ட் கொடுக்கத்தான்!!!” ” என்ன காமெடி பண்ணுகிறாயா ?????? ஒரு கர்ச்சீஃபை போய் யாராவது கிஃப்ட் கொடுப்பார்களா???????” ” கொடுப்பார்கள் கொடுப்பார்கள்…. இந்த கர்ச்சீஃபை கொடுப்பார்கள்!!!!!! என்ற பிரணாவ் தன் தோழியின் காதல் கதையை சுருக்கமாக தன் மனைவியிடத்தில் கூற ஆரம்பித்தான் … ” ஒரு நாள் எங்கள் டைனமிக் மிஷினரி கிளாஸில் இதே கர்ச்சீஃபை மறைத்து மறைத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஹசீனா….. டி.எம் மேம் கொஞ்சம்… இல்லையில்லை ரொம்பவே ஸ்ட்ரிக்ட் … ‘ஹசீனா கெட் அவுட் !!!!!’ என்று அவர் கத்த நான் உடனே எழுந்து நின்று ” மேம் எனக்கு ஒரு டவுட் !!!!!!” என்றேனா?????? அடுத்த நிமிடமே எங்கள் டி.எம் மேம் எனக்கு ஒரு ‘ கெட் அவுட்’டை பரிசாக வழங்கவும் நானும் அவர்கள் கிளாசை விட்டு வெளியேறி விட்டேன்!!!!” அவனது கதையை சிரித்தபடியே கேட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் ” இந்த இடத்தில் ‘அப்படி என்ன டவுட் அத்தான் கேட்டீர்கள்????? ‘என்று நீ கேட்கணும்டி பஜாரி “ மாட்டேன் !!!! என்பது போல் தலையை ஆட்டிய மைத்ரேயி “நீ எதையாவது தேவையில்லாத ஆணியை தான் புடுங்கியிருப்பாய்!! எனக்கு அது வேண்டாம்…. நீ கதையை மட்டும் கண்டின்யூ பண்ணு!!!!!” என்று கூறி நல்ல வசதியாக சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.