தன் மகனிடம் பிரணாவ் உருகியதை கேட்டதும் மைத்ரேயிக்கு அவள் கொண்ட கோபம் அனைத்தும் வற்றி போக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்……
எப்போதும் ஏதோ முக்கிய தேவையின்றி அவளாக பிரணாவிடம் பேசியதே இல்லை…..
கணவன் அவ்வபோது பேசுவதை அவளையும் மீறி ரசித்து விட்ட போதிலும் அதனை வெளிகாட்டி கொள்ளாமல் கவனமாக தவிர்த்தும் விடுவாள்…….
இப்படியாக சென்ற உறவினில் மைத்ரேயி கணவன் சோட்டுவிடம் பேசியதை கேட்டு
“இவனுக்கு வேறு ஏதாவது பிரச்சனை
இருக்க கூடுமோ????”
என்ற கேள்வியையும் சுமந்து அவனை தொந்தரவு செய்யாமல் விலகி நின்றால்,
அவளது எண்ணங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக
அடுத்து வந்த இரு வாரங்களும் பிரணாவ் அவளிடம் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்!!!!!!
மனைவியிடம் ஒதுங்கி போனான் எனலாம்………
இத்தனைக்கும் ….. தன் மாமியாரிடம் இதுவரை ஒரு வார்த்தை பேசாத போதும்
கணவன் சொன்ன சொல்லை மீற முடியாது தன் மகனை அவரிடம் விட்டுவிட்டு தான் மருத்துவமனைக்கு செல்கிறாள் மைத்ரேயி …..
அப்படி இருந்தும் அவளிடம் பிரணாவ் சகஜமாக உரையாட வில்லை!!!!!
தன்னிடம் மட்டும் ஏன் இந்த திடீர் ஒதுக்கம்???????
என்று அவளுக்கு சந்தேகம் அளிக்காத வகையில் அமைந்தது அவனது தோற்றம்!!!!!!!
ட்ரிம் செய்யப்படாமல் காடுபோல் வளர்ந்த தாடியுடனும்
கண்களில் எப்போதும் குடிகொண்டிருக்கும் குறும்பை வெளிக்காட்ட விரும்பாது
மகனிடம் மட்டும் பெயருக்கு எதையோ பேசிவிட்டு செல்பவனை கண்டவளுக்கு மனதை பிசைய தான் செய்தது…..
திருமணமான இத்தனை நாட்களில் பிரணாவை இப்படி பார்த்ததில்லையே!!!!!!
அன்று மூன்றாவது முறையாக ஒலித்த
கைபேசி அழைப்பை எடுத்து
அதனை ஏற்காத வண்ணம் சைலன்ட்டில் போட்டு விட்டு தன் கவனத்தைத் திருப்ப முயன்ற பிரணாவை பார்த்து நின்ற மைத்ரேயி
இதற்கு மேல் முடியாது என்பது போல் அவன் அருகில் சென்று அமர்ந்து
” என்ன ஆச்சு??????????” என்றாள் கணவனின் முகத்தை பார்த்தவாறு…
பக்கத்தில் கேட்ட சத்தத்தில் தலை நிமிர்த்தி மனைவியைப் பார்த்த போதும்
அவள் கேள்வி புரியாததை போல் “என்ன என்ன ஆச்சு????????” என்றவனிடம்
” யார் போன் பண்ணினார்கள்????? ஏன் கட் பண்ணி கொண்டே இருக்கிறாய்!!!!!!????”
என்று அவள் கேட்ட போது பிரணாவின் போன் இம்முறையும்
‘கிழக்கே பார்த்தேன் விடியலாய் வந்தாய் அன்புத்தோழி !!!!!!” என்ற பாடலுடன் இசைத்தது…..
தாமதிக்காமல் அதனை எடுத்து மீண்டும் சைலன்ட்டில் போட்டவன்
“ஃபிரண்ட்!!!!!!!!!!” என்றான் திரையில் ஒலித்த பெயரை மனைவியிடத்தில் காண்பித்தபடி….
” ஹசீனா…….”
பெயரை சத்தமாக வாசித்தவள்
” ஏன் பேச மாட்டேன்கிறாய்??????
ஏதும் சண்டையா???????” என்றாள்.
‘இல்லை’ என்பது போல் தலையாட்டியவனிடம்
“அப்புறம் என்ன தான் பிரச்சனை?????
சொன்னால் தானே தெரியும்!!!!” விடாது கேட்டாள் அவனவள்…..
” ஏன் சொன்னால் நீ சரி பண்ணிக் கொடுக்க போகிறாயா???????”
” என்னால் முடிந்தால் கண்டிப்பாக செய்வேன் !!!!!!!!”
அவள் அவ்வளவு உறுதியாகச் சொன்னது அவன் மனதுக்கு இதமளிக்க
” எதுவென்றாலும் செய்வாயா??????”
என்றான் ஒருவித ஆவலுடன்….
” ம்ம்ம் ப்ராமிஸ்!!!!! நீ இப்படி உம்மென்று என்று மட்டும் இருக்காதே……
நன்றாகவே இல்லை!!!!!!”
” என்ன திடீரென்று??????”
“திடீரென்று என்ன ??????” அவன் கேட்பது அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை….
” இல்லை!!!!! திடீரென்று இப்படி எனக்காக எதுவென்றாலும் செய்கிறேன் என்கிறாய்??????? ஏனாம்?????”
” ஏனென்றால் நீ என்னுடைய………”
கண்கள் மின்ன நெருங்கியவனைக் கண்டதும் பேச்சு அப்படியே அவளுக்கு நின்று போனதில்
” சொல்லுடி பஜாரி!!!!
உன்னுடைய??????????”
” என்னுடைய …. பையனின் அப்பா!!!!!
நீ சோகமாக இப்படி உம்மென்று என்று இருந்தால் அவனும் சோகமாக இருக்கிறது போல் எனக்கு ஒரு ஃபீல்…. அதனால் கேட்டேன்….. போதுமா ????????”
“ஹோ!!!!!!!!! அவ்வளவு தானா???????” என்றவனுக்கு அவனுள் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரண பொருளை கண்டறிய முடியவில்லை ….. அவனும் முற்படவில்லை…..
” சரி சொல்லு என்ன பிரச்சனை??????” மைத்ரேயி வற்புறுத்த தன்னை இரு வாரங்களாக குடையும் வருத்தத்தை பகிர வாய் திறந்தான் பிரணாவ்…..
“யுகி மாம்ஸ்-க்கு நான்கைந்து முறை கால்
பண்ணி விட்டேன்……. எடுக்க மாட்டேன் என்கிறார் !!!!!!!”
“நீ அவர் பொண்டாட்டியுடன் பேசாமல் வீம்பாக இருக்கிறாயல்லவா?????? அந்த கோபமாக இருக்கும்!!!!!”
” இல்லை அதற்கெல்லாம் மாம்ஸ் ஒன்றும் சொல்லவில்லை….. சொல்லவும் மாட்டார்!!!!
இது பப்புவை நான் தூங்கவில்லை என்ற கோபமாக இருக்கும்” வருத்தம் மேலோங்க கூறியவனை காண அவளுக்கு பாவமாக இருந்தது ….
எதற்கு இன்னும் அவனையே வருத்தி கொள்ளும் இந்த வீண் பிடிவாதத்தை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும்????????!!!!!!!! என்று எண்ணிய போதும் அவனை சமாதான படுத்த முயன்றாள் மனைவி….
“நான் வேண்டுமானால் யுகி அண்ணனிடம் பேசவா??????”
” இல்லை வேண்டாம்!!!!” அவசரமாக மறுத்தவனிடம்
” ஏன் பிரணாவ்?????
நீயும் பேச மாட்டாய்!!!! நானும் பேசக்கூடாது!!!!
அப்புறம் என்னதான் செய்வதாம்???????”
என்று கேட்கும்போது ஹஸீனா மீண்டும் பிரணாவை அழைத்தாள் …..
“உன் கோபத்திற்கு உன் ஃபிரண்டு என்ன பண்ணினார்கள்?????? எடுத்து பேசு!!!!”
” இல்லை வேண்டாம்…. பேசினால் இன்று மாலை கண்டிப்பாக அவள் ரிசப்ஷனிற்கு போக வேண்டி வரும் !!!”
“போயிட்டு வா!!! உனக்கும் ஒரு சேஞ்ச்
ஆக இருக்கும்….. அங்கு உன் ஃபிரண்ட்ஸை பார்த்தால் கொஞ்சம் நன்றாக கூட ஃபீல் பண்ணுவாய்!!!!!”
மேடையில் தன் மனம் கவர்ந்த மணாளனை கரம் கோர்த்த திருப்தியை முகத்தில் பிரதிபலித்து
பியூட்டிஷியனின் கைவண்ணத்தில் கூடிய எழிலையும் கோர்த்து
பௌர்ணமி நிலவிற்கு போட்டியிட்டு நின்ற ஹசீனா
தன் நண்பன் பிரணாவின் வருகையை கண்டு கொண்டு சற்றே புத்துணர்ச்சி பெற்றவள் போல்
தன்னவனின் காதினில் கிசுகிசுத்தாள்..
” அஃபி அங்கு பார் ….. யார் வருகிறான் என்று!!!!!!”
என்று கூறும்போதே பிரணவின் அருகில் குழந்தையோடு வந்தவளை ஆராய்ந்தபடி நின்றிருந்தாள் ஹசீனா…
நண்பன் மேடைக்கு ஏறவும்
“யாரோ விவிஐபி எல்லாம் வந்திருக்கிறார்கள் அஃபி!!!!!
பேசாமல் அங்கு மத்திய அமைச்சருக்காக போடப்பட்ட சேரை பெரிய அண்ணனிடம் சொல்லி சாருக்கு கொடுக்க கேட்டு பார்ப்போமா????? “என்று ஹசீனா கூறவும்
நீ சொன்னதை பற்றி எனக்கு என்ன வந்தது????? என்பது போல்
“என்னை என் மச்சி அழைத்திருந்தான்
அது தான் ஓடி வந்தேன்!!!!!!” என்று தோழியிடம் முறுக்கினான் பிரணாவ்….
கூடவே
“என் ஆழ்ந்த அனுதாபங்கள் மச்சி!!!!” என்று மணாளன் அஃப்னானை கட்டி தழுவி தன் வாழ்த்துக்களை பிரணாவ் தெரிவிக்க
அவனும் சிரித்தபடி ” தேங்க்ஸ்டா மச்சி!!!!” என்று பிரணாவை கட்டிக்கொண்டான்…
இதனை கண்ட ஹசீனா கோபத்தில்
“போங்கடா இரண்டு பேரும் அந்தப் பக்கம்!!!!! உங்க 2 பேர் கூடவும் நான் டூ!!!!”
திருப்பிக் கொண்டு நின்றாள்.
உடனே ” நானும் டூ!!!!!!!” என்று தன் தோள்களைக் குலுக்கியபடி நகர்ந்த
பிரணாவிடம்
“அடேய் மச்சி!!!!!! உன் ஃபிரண்டை சமாதானப்படுத்தி விட்டு போடா….. நிக்காவிற்கு நீ வரவில்லை என்று அன்றிலிருந்தே இப்படியே தான் உம்மென்று இருக்கிறாள்!!!!!!! பிறகு என் பாடு தான் சிரமம்!!!” என்ற அஃப்னான் பிரணாவை தடுத்திருந்தான்…..
” பார்த்தால் அப்படி தெரியவில்லையே!!!!!
உன் கலருக்கு மேட்ச் ஆக வேண்டுமென்று ஒரு டப்பா பான்ட்ஸ் பவுடரையும் முகத்தில் அப்பிக் கொண்டல்லவா நிற்கிறாள்!!!!!!!
இவளைப் போய் என்ன சொல்லி நான் சமாதானம் படுத்துவேன்??????”
பிரணாவ் தோழியை வம்பிழுக்க
இது மணமேடை!!! தான் மணப்பெண்!!!
என்பதையெல்லாம் மறந்து பிரணாவிற்கு 2 அடி வழங்கியிருந்தாள் ஹசீனா …..
தோழி அடித்து ஓய்ந்ததும்
“உனக்கு கோபம் போய்விட்டதா இப்போது????? ” என்று பிரணாவ் கேட்டதற்கு
” என் கைதான் போச்சு!!!!!! நான் இன்னும் டூ தான்…..
நீ என் கல்யாணத்திற்கு வராதது போல்
நானும் உன் கல்யாணத்திற்கு வராமல் இருந்து கொள்வேன் பார்!!!!” என்று ஹசீனா கூறவும் பிரணவிற்கு பொறை ஏறியது….
தோழியை பார்த்துவிட்டதும் மனைவி மகனை மறந்து மேடையேறி இருந்த பிரணாவ் அவர்களை தன் கருவிழிகளை