நான் தான் ‘அசந்து தூங்குகிறாள்…. வேண்டாம்!!!’ என்றேன்…..”
என்று தடுக்க
உதிதா கூறியது காதில் விழுந்த போதும் தன்னை அடக்கிக் கொள்ள முடியாது
தேமி தேமி அழுதபடி தன் அறைக்குள் ஓடி மறைந்திருந்தாள் மைத்ரேயி ……
பின் ஒரு வழியாக கண்ணீர் வற்றி சுயநினைவிற்கு திரும்பியவளுக்கு
” அனைவரும் என்ன நினைத்திருப்பார்கள்????????” என்னும் கேள்வி உரைக்க
உடனே கீழே இறங்கி சென்று
“சாரி !!!!!” என்றாள் பொதுவாக……
உடனே ஆதிரன் “பூரி!!!!!!!!!” என்றான் யசோதா கொண்டு வந்த தின்பண்டத்தை பார்த்தவாறு……
அதில் அனைவரும் சிரித்துவிட ஏன் மைத்ரேயிக்குமே சற்று இலகுவாக தான் இருந்தது…….
பிரணிதா மைத்ரேயின் அருகில் சென்று அவள் கரம் பிடித்து
“எனக்கு மட்டுமில்லை இந்த வீட்டில் அனைவருக்குமே விதுவை பிரணாவிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை….. ஆனால் அது முன்பு!!!!!
இப்போது கதையே வேறு !!!!!!
எப்போது பிரணாவ் உன் கழுத்தில் தாலி கட்டினானோ அந்த நிமிடத்தில் இருந்து உன்னையும் சோட்டுவையும் எங்களுக்கு பிரித்துப் பார்க்க தோன்றியதில்லை !!!!!
நீ ரொம்பவும் சிரமங்களை பார்த்து விட்டாய்…… அதற்கும் சேர்த்து நன்றாக வாழ தான் போகிறாய்……
ஆனால் அது உடனே நடந்து விடாமல் சில கால அவகாசம் பிடிக்கிறது…….
அவ்வளவுதான்!!!!!!
உன் உதிஅண்ணியை போல் என்னையும் நீ ஏற்றுக்கொள்வாயா ???????” என்றதும் மைத்ரேயிக்கு பேச்சே எழவில்லை…….
அனைவரும் இப்படி ஒன்றுகூடி பாசத்தால் கட்டிப் போட்டால் தான் எப்படி வெளியேறுவது????????? தடுமாறியவள்
பிரணிதாவிடம் சிநேகிதமாய் புன்னகைக்க முயன்றாள்…..
பிறகு இரவு உணவு வேளை வரை உதிதாவுடன் பேசியபடி செலவழித்தவள் மகனுக்கு தூக்கம் வரவும் தூக்கிக் கொண்டு மாடி ஏறலானாள் …..
அரை மணி நேரமாக கண்களை கசக்கி கொண்டு சொக்கி விழுந்தவனை தூங்க வைக்க முயல
சோட்டுவோ சற்று சிரமப்பட்டு மீண்டும் எழுந்து அமர்ந்து அவள் முடியை பிடித்து விளையாட ஆரம்பிக்கவும்
” விடுடா போக்கிரி பையா!!!!!” என்று அதட்டினாள்.
உடனே தாய் சொல் கேட்டவனாக அவள் முடியை விட்டு விட்டு வேறு பொருளைத் தேடியவனை கண்டு
“உனக்கும் என்னை பிடிக்காமல் போய்விட்டதா சோட்டு?????????” என்று சற்றே அழுகுரலில் கேட்க
சரியாக அச்சமயம் மாடி ஏறிய பிரணாவ் மனைவியின் பேச்சில் துணுக்குற்று வெளியே நின்று கொண்டான்…..
காலையிலிருந்து ஒரு லட்சம் முறையாவது பூஸ்ட் குடித்ததைப் போல்
மைந்தனின் “அப்பா !!!!!!!!!!” எனும் அழைப்பு மனதில் படம் எடுத்து பிரணாவை உற்சாகப்படுத்தியது…….
இந்நாள் வரை தான் வாழ்வில் அனுபவித்திராத புதுவித சந்தோஷத்தை அடைந்துவிட்டதாக எண்ணியவனுக்கு
இதற்கு மேல் ஒன்றுமே இல்லைடா!!!!!!
என்று ஆணித்தரமாக தோன்றியது…
தன் ரத்தத்தில் ஒரு குழந்தை பிறந்திருந்து
அது தன்னை “அப்பா!!!!!!!!” என்று கூப்பிட்டிருக்கும் போதும் மகிழ்ச்சியாக உணர்ந்து இருப்பான் தான்…….
ஆனால் இப்படி எந்தவித சொந்தமும் இல்லாமல் ஏற்பட்ட திடீர் உறவில் பந்தம் கொண்டாடுவதை நினைத்து அவனால் பூரிப்படையாமல் இருக்க முடியவில்லை…..
.
இதுதான் கடவுள் போட்ட முடிச்சா?????
மைத்ரேயியை தான் கல்யாணம் செய்து கொள்வதற்காகவே தன் மீது உயிராக இருக்க முன்பே அவதரித்த உயிர்நாடியா??????
அப்படிப்பட்ட மகனை உடனே பார்க்க வேண்டும் எனும் ஆவலை சற்று சிரமப்பட்டு அடக்கி தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான் பிரணாவ் ……
அப்படி ஆசையாக வந்தவனுக்கு மனைவியின் இச்சொல் புரியாத புதிராய் போக
அடுத்து அவள் சொல்லப் போகும் மொழிகளுக்காக காத்திருந்தான் …
” சொல்லுடா சோட்டு பையா!!!!!!
உனக்கும் உன் அம்மாவை பிடிக்கவில்லையா????????
உன்னிடம் எத்தனை முறை கேட்டிருப்பேன்????!!!!!
சொல்லிக் கொடுத்து இருப்பேன்????!!!!!!
அம்மா!!!!!!! என்று ஒருமுறையாவது கூப்பிட சொல்லி !!!!!!
ஆனால் எதையுமே சொல்லி தராத போதும்
எப்படிடா அப்பா!!!!!!!! என்றாய்????????
ஏனடா உன் அப்பாவை உனக்கு அவ்வளவு பிடிக்கிறது???????
ஒரு வேளை அவர் மட்டும் வந்து நமக்கு ஒரு வாழ்வளிக்காது போயிருந்தால்
நம் வாழ்க்கையே அந்த அயோக்கியனின் கையில் சிக்கி இருண்டு போயிருக்கும் என்பதை அறிந்தாயோ????????
ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்
சாவைப் பற்றிய எண்ணம் என்னுள் உதித்ததில்லையே சோட்டு!!!!!
என்று உன்னை !!!!! இந்த முகத்தை கண்டேனோ!!!!!!! அன்றிலிருந்து தானேடா வாழ்வின் மீது ஒரு பிடிப்பு வந்தது ……
உன்னை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று தானேடா என் எல்லா கனவுகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இப்போது இங்கு எல்லோருக்கும் பாரமாக உட்கார்ந்திருக்கிறேன்……..
ஆனால் உனக்கு!!!!!! இப்போது எங்கிருந்தோ வந்த உன் அப்பா தான் பெரிதாக தெரிகிறார்!!!!!! அப்படித்தானே???????????”
உணர்ச்சி பொங்க பேசியவளின் விழியோரம் கசிந்தோட
அன்னையின் முகத்தைப் பற்றி அவள்
கன்னத்தில் ” அவ்வா!!!!!!!!” என்று முத்தம் பதித்து கொஞ்சியவனின் செய்கையில்
” உனக்கு உன் உதிக்கா என்றால் அவ்வளவு இஷ்டமோ???????
அவர்கள் சொன்னவுடன் மறுபேச்சின்றி
வந்து தாலி கட்டினாய்!!!!” என்றாள் ……
இப்படி திடுதிப்பென தமக்கையை பற்றி கேட்டவளை நிமிர்ந்து பார்த்த பிரணாவ்
சோட்டுவுடன் விளையாடியபடியே
ரொம்ப ரொம்ப என்பது போல் புருவத்தை மட்டும் உயர்த்தி பதில் கூறினான் .
“அப்புறம் எப்படி அவர்களிடம் பேசாமல் இருக்கிறாய்????” விடாமல் தொடர்ந்தவளிடம்
தெரியலையே??!! என்பது போல் உதட்டை பிதுக்க
அதில் கோபமடைந்த மைத்ரேயி
“வாயில் என்ன கொழுக்கட்டையாடா வைத்திருக்காய்?????” என்று அதட்டினாள்.
“நேற்று தானே யுகி மாம்ஸ் புருஷனிடம் மரியாதையாக நடந்து கொள் என்று சொல்லி கொடுத்தார்…..
மறுபடியும் இப்படி பேசினால்
ஹாஸ்பிட்டலில் செய்யவிருந்ததை செய்து விடுவேன்……..
அங்கு என்னிடமிருந்து உன்னை காப்பாற்ற அண்ணன் முறையில் மாம்ஸ் இருந்தார்கள்…… இது நம்ம பெட்ரூம்!!!! ” என்றதும் தன் கன்னங்களை மூடி இரு அடி தள்ளி உட்கார்ந்தவள்
“என்னை உன் தலையில் கட்டி வைத்துவிட்டார்கள் என்று தானே உதிஅண்ணி மீது உனக்கு கோபம்…….
ஆனால் என்னிடம் நல்லா தானே பேசுகிறாய்??!!
அப்புறம் ஏன் அவர்களிடம் பேச மாட்டேன்கிறாய்????
எவ்வளவு ஃபீல் பண்ணுகிறார்கள் தெரியுமா?? நீயும் தானே கஷ்டபடுகிறாய்…. ” வருத்தத்துடன் மொழிந்தாள்.
“கரெக்ட் நானும் தான்
கஷ்டப்படுகிறேன்…. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது… அதுவும் உன்னால் மட்டுமே செய்யகூடிய ஒன்று … ஆனால் அதை நீ…….”
ஒருவேளை பிரிவை பற்றி அவனே பேச போகிறானோ????
உதிதா தனக்கு செய்திருப்பதோ இன்றியமையாதது!!! அவளுக்காக தான் என்ன செய்தாலும் தகும் என்றெண்ணியவள்
“என் தலையை அடமானம் வைத்தாலாவாது செய்துவிடுவேன்…. சொல்லு நான் என்ன பண்ணனும் என்று….” தீர்க்கமாக உரைக்க
“அவ்வளவு கஷ்டபட வேண்டாம்……. உதிக்கா மாதிரியே ஒரு பாப்பாவை பெற்று கொடு போதும்……
அந்த பாப்பாவிடம் பேசிபேசி என் கஷ்டத்தை போக்கி கொள்கிறேன்….
என்னடா சோட்டு பையா உனக்கு ஓகே
வா????? மகனையும் கூட்டு சேர்த்து அதிமுக்கியமாய் வினவியவனை பார்த்தவளது ரோஜா மொட்டுகள் அதிர்ச்சியில் மலர்ந்து விரிந்தன……..
அதை கண்டவனோ ‘இவள் இன்று தன்னை வில்லனாக்காமல் விடமாட்டாள் போலவே’ தன்னுள் உரைத்தபடி
“என்ன விளையாடுகிறாயா?????” என்று சீறினாள் அதிர்வில் இருந்து வெளிவந்த படி .
“நான் மட்டும் எப்படிடி பஜாரி விளையாட முடியும்??????? அதான் உன்னையும் அப்படியே சேர்த்து கொண்டு…………..”
என்றபடி அவன் கண்ணடித்து
நிறுத்தியது தான் தாமதம்
நாணம் எனும் மொழியில் ஆனா ஆவன்னாவை கூட அறிந்திராதவள்
திடீரென அம்மொழியில் முனைவர் பட்டம் வென்றுவிட்டதை போல் சிவந்து ஜொலிக்க
தன் முகப்பொலிவை எதிர் அமர்ந்தவன் பார்த்து விடக்கூடாது என்று அவசரமாக எழுந்து திரும்பி கொள்ள
“உன் ஆத்தாகாரி என்னை அடிப்பதற்கு எதையோ தேடுகிறாள் என்று நினைக்கிறேன் …… வாடா மகனே நாம் எஸ்கேப் ஆகி விடலாம் !!!!!!” என்று சோட்டுவை தூக்கி கொண்டே வெளியே ஓடி விட்டிருந்தான் பிரணாவ்………
இப்படி ஒரு மாத காலமும் மனைவியிடம்
சிறுசிறு திண்டல் மொழிகளுடன் மின்னல் வேகத்தில் பயணித்திருந்த பிரணாவ் தன்
உதிக்காவுடனான உறவு பாலத்தில் ஆமை அளவிற்குகூட பேச்சு வார்த்தையை நகர்த்த முன்வரவில்லை…
உதிதாவை வாரம் ஒரு முறை யுகன் வந்து பார்த்து விட்டுச் சென்றான்……
தேவகியும் கார்த்திகேயனும் கூட இருமுறை மருமகளை நலம் விசாரித்து விட்டு சென்றனர் …..
அன்று
” டியூ டேட் தாண்டியும் இவளுக்கு ஏன் இன்னும் வலி வரவில்லை????????”
‘பிரசவ வலி வந்தால் உடனே மருத்துவமனைக்கு கூட்டி வாருங்கள்’ என்று டாக்டர் கூறி ஒரு வாரமாகியும் உதிதாவிற்கு வலி அறிகுறியே இல்லாது போனதால்
யசோதா புலம்ப
” எல்லோருக்கும் ஒரே மாதிரி சொல்ல முடியாது….. தாயும் சேயும் நலம் எனும் பட்சத்தில் இன்னும் ஒரு வாரம் கூட நாம் காத்திருக்கலாம்….. பயப்படாதீர்கள்!!!!!!” என்றாள் மைத்ரேயி .
பிரணாவ் தான் சில சமயம் கோபப்படுவான் …….
இப்படி மைத்ரேயி தன் அம்மாவையும் யசோம்மாவையும் யாரோ போல் விளிப்பதை கண்டு!!!!!!!
“உன் ஆத்தாகாரியை பாட்டிகளை முறையாக ‘அத்தை!!!’ என்று சொல்லி பேச சொல்லுடா மகனே”
சோட்டுவிடம் கூறுவதை போல் மனைவியிடம் எடுத்துரைப்பான்……..
ஆனால் யசோதா ” விடு பிரணாவ்….. இப்போது தான் அவளே என்னிடம் பேச ஆரம்பித்திருக்கிறாள் ….. அதையும் எதாவது சொல்லி கெடுத்து விடாதே!!!!!!”
என்று மகனை தான் அதட்டுவார்…..
அவரது அன்றைய கவலையே வேறு!!!!!!
“நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு டாக்டர்ஸ் ஸ்ட்ரைக் என்று அறிவித்திருக்கிறார்களே!!!!!
அந்த சமயம் வலி வந்துவிட்டால்??????
அது தான் எனக்கு பயமாக இருக்கிறது!!!!!”
“ஒரு வாரம் எல்லாம் ஸ்ட்ரைக் நீடிக்காது……
மேக்ஸிமம் 2 நாட்கள்!!!!
அப்போதும் எப்பவும் மருத்துவமனையில் எமர்ஜென்சிக்கு ஒரு கைனி இருப்பார்கள்.. …..
தைரியம் ஊட்டுவதே ஒரு டாக்டர் என்பதால் யசோதாவின் மனம் லேசாகிவிட்டது…..
ஆனால் அன்றிரவு நடக்கபோவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தால் அப்படி எளிதாக அடுப்படிக்குள் சென்று அடுத்த வேலையை கவனித்திருக்க மாட்டாரோ??????!!!!!!!!!!!