எங்கு சொன்னபடி உண்மையிலேயே தூக்கி விடுவானோ என்று அஞ்சியவள் ” தள்ளு தள்ளு நானே வருகிறேன்!!!!” என்றபடி காரை விட்டு இறங்கினாள் …
வீட்டினுள் “யசோம்மா!!!!! யசோம்மா!!!!!”
கூவியபடி பிரணாவ் செல்லவும்
அதில் அரக்கபரக்க தன் அறையை விட்டு வெளியே வந்தார் யசோதா…..
” இந்தா பிடி யசோம்மா ……. இனி தினமும் உன் பேரனை மேய்க்கும் ட்யூட்டி உன்னுடையது தான்…..
யாரும் இவனை உன்னிடம் இருந்து வாங்க முடியாது!!!!!” தன் பின்னால் நின்றவளைத் திரும்பி பார்த்து அழுத்தமாக கூறினான் பிரணாவ் ……
எதுவும் புரியாமல் யசோதா அப்படியே நிற்க
” என் பையனை வாங்க மாட்டாயா யசோம்மா????” மகன் கேட்கவும் அவசரமாக தன் கைகளை நீட்டியிருந்தார்.
ஆனால் பிரணாவின் மகனோ யசோதாவிடம் போக மறுக்க
அவர் அவசரமாக ஓடிச்சென்று ஷோகேசில் இருந்த சில பொம்மைகளை எடுத்து காண்பிக்கவும்
அதில் கவனத்தை பதித்து உடனே யசோதாவிடம் தாவியிருந்தான் ………
அன்னை காஞ்சனையையும் அழைத்து மகனை அவர் கையில் சேர்ப்பிக்க பிரணாவிற்கு ஆசை தான் !!!!!
ஆனால் அவர் இருக்கும் மனநிலைக்கு இப்போது சோட்டுவை வாங்குவது சந்தேகம் தான்!!!!!
ஒருவேளை திருப்பிக் கொண்டு
சென்றுவிட்டால் பிறகு அனைவருக்கும் சங்கடம் ஆகிவிடும்……
அதிலும் என் உத்தம பத்தினியோ மறுபடியும் பட்டினி கிடக்க போய்விடுவாள்!!!!!!
என்று நினைத்து கொண்டவன்
பிரணாவ் வீட்டினுள் வரவுமே அவன் சத்தத்தில் ஹாலிற்கு வந்திருந்த அன்னை காஞ்சனாவிடம்
” நாங்கள் வெளியில் போய்விட்டு வருகிறோம் அம்மா!!!!”” என்றான்.
அப்படியே தன் மனைவியின் புறம் திரும்பி ” இப்போது போகலாமா????? ” என்று கேட்க
” சாப்பிட்டு விட்டு கிளம்பு பிரணாவ்!!!!!” என்று எப்போதும் மகன் வெளியேறுகையில் கூறும் வாக்கியத்தை மொழிந்திருந்தார் காஞ்சனா.
அவருக்கு பதிலாக ” வந்து சாப்பிட்டு கொள்கிறேன் ம்மா!!!!!!” என்றான் பிரணாவ் தன்னவளிடம் இருந்து பிரிக்க இயலா கண்களுடன் .
பிறகு “கிளம்பலாம்!!!!!” என்பது போல் வாசலை நோக்கி நீட்டிய கரத்துடன் வெளியேற முற்பட்டவனிடம்
” இல்லை.. சோட்டு!!!! எப்படி விட்டு விட்டு போவது??????” தயங்கி நின்றாள் அவன் மனைவி…
” சோட்டுவை யசோம்மா பார்த்துக் கொள்வார்கள்……..
சின்ன வயதில் எங்கம்மா எங்கேயாவது வெளியே போக வேண்டும் எனில் யசோம்மாவிடம் தான் என்னை விட்டுவிட்டு போவார்…….
என்னை பாரு!!!!!
நான் நன்றாக தானே இருக்கிறேன்…..” என்றபடி தன் கையை தலையிலிருந்து கால்வரை சுட்டி காண்பித்த பிரணாவ்
“அப்படி சோட்டுவும் நல்லா தான் இருப்பான் …. நீ வா…. போகலாம்!!!! ” என்று அழைத்தான் .
” அவன் நல்லா தான் இருப்பான்……. ஆனால் அவங்க????????” இழுத்தவளிடம்
” அவங்க-வா?????? அவங்க என் யசோம்மா!!!!
அத்தை என்று கூப்பிட்டு பழகு…….. சரியா?????” என்று உரைத்தவன்
அடுத்த நொடியே
” நீ எல்லாம் சொன்னால் கேட்க மாட்டாய்!!!!!! விட்டால் நாள் முழுவதும் இங்கேயே கூட நிற்பாய்…” என்று தன் தலையை ஆட்டியபடி முனுமுனுத்து மனைவியின் கரத்தை பற்றி வெளியே இழுத்துப் போனான்……
அவனது பகானி ஜோன்டாவில் ஏற சொன்னவன் பயணத்தை ஆரம்பித்து
ஒரு பத்து நிமிடம் வரை எதுவும் பேசினான் இல்லை…..
பின் ஆழ்ந்த யோசனையோடு தன் இரு கரங்களையும் கன்னத்திற்கு தடுப்பாய் கொடுத்து அமர்ந்திருந்தவளை ஓரக் கண்ணால் பார்த்து
“இப்போது உன் ஸ்டொமக் பெயின் பரவாயில்லையா???? இன்னும் அப்படியே தான் இருக்கிறதா ?????” என்றான்..
கணவனிடம் அக்கேள்வியை சற்றும் எதிர்ப்பாராதவளின் தலை தானாக “ம்ம்ம்ம் பரவாயில்லை!!!!!!!” என்பது போல் ஆட்டி பதிலை கூறிவிட
” ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்.. ஐ ம் சாரி!!!!!!!”
என்றான் அவள் கரத்தை லேசாக பற்றி எடுத்து …….
என்னடா நடக்கிறது இங்கே????????
பிரணாவ் சாரி கேட்பது அவளுக்கு அதிர்ச்சியாக இல்லை…. ஏன் என்றால் திருமணமான முதல் நாளே …. அவள் காபி குடிக்க போனாள் என்று நினைத்து கத்தியவன்
அடுத்த நொடியே சோட்டுவிற்காக தான் பால் வாங்க போனாள் என்று தெரிந்ததும்
சாரி என்றிருந்தானே!!!
ஆனால் அன்று அவன் மீது தவறு இருக்க சாரி என்றவன்
இன்று அவன் எதுவுமே செய்யாதிருக்கும் போதும் விளிக்கிறானே!!!!!
எதனாலோ???
என்பதுபோல் அவளையும் அறியாமல் கணவனை ஈர்க்கும் ரோஸ் பட்ஸை திறந்து வைத்து அவனை ஏறிடவும்
சடர்ன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியிருந்தான் பிரணாவ்!!!!
என்னை வில்லனாக்காமல் விடமாட்டாள் போலவே !!!!!! என்று எண்ணிய மனசாட்சியிடம்
“இல்லை……. நீ நினைப்பது போல நான் வில்லன் இல்லை!!!!!!” என சத்தமாக கூறியிருந்தான் பிரணாவ்..
அவள் சற்றே அரண்டு விழிப்பதை பார்த்து தான்
என்ன உளறி வைத்திருக்கிறோம்!!!??? என்பதை நினைவு கூர்ந்தவன் மானசீகமாக தன் தலையில் குட்டு வைத்தபடி அவளிடம் பேசினான் .
” இல்லை…. அது வந்து …..
அன்று ஃபர்ஸ்ட் டே இல்லையில்லை ஃபர்ஸ்ட் நைட்டில் உன்னிடம் கொஞ்சம் அப்படி நடந்து கொண்டேனா ?????!!!
அதை வைத்து என்னை கணித்து விடாதே!!!
வில்லன் என்று நினைத்து விடாதே!!!! என்றேன்…..
நான் இரண்டு அக்காள்களுடன் பிறந்தவன்……
எப்பவும் உனக்கும் உன் எண்ணங்களுக்கும் ரெஸ்பெக்ட் கொடுப்பேன்!!!!!
ஆனால் தயவுசெய்து நீ ஹிந்தியில் மட்டும் பேசி விடாதே……
அதென்னமோ சின்ன வயதில் இருந்தே எனக்கும் ஹிந்திக்கும் செட் ஆகாது!!!!
எப்பவும் ஐயா ஹிந்தியில் மட்டும் ஃபெயில் தான்!!!” என்று தன் கண்களை சுருக்கி விரித்து கெத்தாக சொன்னவனை இமைக்க மறந்து பார்த்தாள் அவன் மனைவி……..
மிகவும் பிரயார்த்தனைப்பட்டு தன் விழிகளை கணவனிடம் இருந்து பிரித்து மறுபுறம் திருப்பியவளிடம் அவனே
தொடர்ந்தான்..
” என்னடா இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் அவன் பாட்டிற்கு இருந்து விட்டு இப்போது திடீர் அக்கறை என்று நீ நினைக்கலாம்……….
நம் கல்யாணம் திடீர் என நடந்து விட்டதால் எனக்கு அதை அக்ஸப்ட் பண்ணிக் கொள்ள கொஞ்ச நாள் தேவைப்பட்டது……
ஆனால் நீ வீட்டில் சாப்பிடாமல் இப்படி சோட்டுவை அழைத்து கொண்டு தினம் தினம் வெளியே வந்து விடுவாய் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை…..
என் தப்பு தான்!!!!!
ஆனால் இனி அப்படி நடக்காது….. நம் ரூமிற்கு அவ்வளவு சண்டை பிடித்தாய்?????
அதே மாதிரி தான் வீடும்…..
அது உன் வீடு…… உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கிறது!!!!!
இப்போது கிளம்பும் போது அம்மா சொன்னார்களே…. ‘சாப்பிட்டு போ பிரணாவ் ‘ என்று !!!
அப்படி உன்னையும் ஒரு நாள் சொல்ல தான் போகிறார்கள்…. அதற்கு கொஞ்சம் டைம் கொடேன்…. ப்ளீஸ்…..”
காஞ்சனா வீட்டில் அப்படி சொல்லும் போது பிரணாவ் தன் மனைவியையே தான் பார்த்திருந்தான் ….
அவள் விழி இரண்டில் சிந்திய எதிர்பார்ப்புகளையும் வலியையும்!!!!!!
அப்போது பாவம் சின்ன பெண் என்ற உணர்வை தாண்டி அவனுக்கு அவளிடத்தில் வேறெதுவும் தோன்றவில்லை ……
இப்போது பணிந்து போய் உரையாடுவதும் அவன் இழைத்த
பிழையால் தானே ஒழிய
சற்று முன் சோட்டுவிடம் இயல்பாக உண்டான அன்போ பாசமோ சோட்டுவின் அம்மாவின் மீது பிரணாவிற்கு ஏற்பட மறுத்தது….
ஆனால் அவ்வளவு பணிந்து போனவனிடம் ” நான் யாருக்கும் டைம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை……
யாரும் எனக்காக பேச வேண்டிய எதிர்பார்ப்புமில்லை!!!!! இப்போது வண்டியை எடுக்கிறியா?????? ” என்று அவள் கூறியதும் திரும்ப முறுக்கி கொண்டான்..
” சின்னப் பொண்ணாச்சே!!!!! பாவம் என்று பார்த்தால் …… ரொம்ப தான்டி பேசுகிறாய் பஜாரி!!!!! ” திட்டியவன்
” ஆமாம் அடுத்து என்ன பண்ண போவதாக உத்தேசம்????????” என்றான்…
“புரியவில்லை???????? ” அவன் கேள்வி
உண்மையிலேயே அவளுக்கு புரியவில்லை.
” அது அடுத்து என்ன பண்ண போகிறாய் என்று கேட்கிறேன்………
இந்த வயதில் கல்யாணம் பண்ணியாகி விட்டது….. ஓகே…..
அதற்கு இப்படியே இருந்து விட முடியாதல்லவா???????
உனக்கு எதில் இன்ட்ரெஸ்ட் என்று சொல்லு!!!!!
இங்கு சென்னையில் இருக்கும் காலேஜில் ஜாயின் பண்ணிக்கொள்……
சோட்டுவை வீட்டில் யசோம்மா பார்த்து கொள்வார்……
இவை எல்லாவற்றையும் விட முக்கியம்…..
இனி நீ வீட்டில் தான் சாப்பிட வேண்டும் !!!!
புரியுதா??????
அங்கு சாப்பிடாமல் எப்படி இருக்கிறாய்
என்று நானும் பார்க்கிறேன்!!!!!” சவால் விட்டவன்
” சரி சொல்லு … உனக்கு என்று ஏதாவது ட்ரீம் இருக்கிறதா?????” என்றான்..
அப்போதெல்லாம் ஹார்ட் அட்டாக் என்று சொன்னாலே சுனாமி வோர்ல்ட் வார் போல் அவ்வளவு பயம் வரும்……..
கேட்க கூடாத வார்த்தையை கேட்டது போல் ஒரு நடுக்கம் வரும் …….
ஆனால் ….
இப்போது இருக்கும் ஜெனரேஷனிற்கு
20 வயதிலும் சர்வ சாதாரணமாக ஹார்ட் ஹட்டாக் ஏற்படுகிறதே???!!!!
இந்த நிலைமை கண்டிப்பாக மாற வேண்டும்……
கடிகாரத்தில் பயணம் செய்யும் நொடி முள்ளின் வேகத்தில் ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டு இருக்கும் இவ்வுலகத்தை மாற்ற முடியாத
போதும்…….
என்னால் ஆன சிறு பங்களிப்பை கொடுத்தே தீருவேன்……..
ஒரு நல்ல ஹார்ட் சர்ஜன் ஆகிய பின் !!!!!!!
இந்தியா முழுவதும் நம் ஹாஸ்பிட்டல் ஃப்ரீ சர்வீஸில் இயங்க வேண்டும் …….
ஓகே தானே டாடி???????????
தந்தையிடம் மும்பை ஜூஹா பீச்சில் அவள் பேசிய மொழிகள்
பிரணாவ் கேட்டதும் மனதில் பளிச்சிட ……..
ஆனால் எப்போது அப்பொறுக்கியின் பார்வை பட்டதோ அப்போதே அனைத்தும் தடம் மாறிவிட்டதே என பெருமூச்சுவிட்டபடி
“எனக்கு எந்த ஆம்பிஷனும் இல்லை!!!!!!!!
கொஞ்சம் தொண தொணனு பேசாமல்
வருகிறாயா???????” என்றாள் பிரணாவிடம்.
“என்னது?????? ஆம்பிஷன் இல்லையா?????
அப்போது காலேஜ் போக மாட்டாய்???????”
“மாட்டேன்!!!!!!!”
“கொழுப்புடி பஜாரி உனக்கு……..” என்று திட்டியவன் அப்போது தான் கவனித்தான் அவர்கள் வந்தடைந்த இடத்தை!!!!!!!!!
” நீ சொன்ன கொழுப்பிற்கு ஒரு தாங்க்ஸ் !!!!
என்னை இங்கு இன்று டிராப் பண்ணியதற்கு இன்னொரு தாங்க்ஸ்!!!!” என்றபடி அவள் இறங்க யத்தனிக்க
” ஏய் இரு இரு…….. ஏன் இந்த ஹாஸ்பிட்டலிற்கு வந்திருக்காய்??????
இங்கே நன்றாகவே ட்ரீட்மென்ட் பார்க்க மாட்டார்கள்!!!!
உன் வயிறுவலிக்கு வேறு ஒரு நல்ல ஹாஸ்பிட்டலிற்கு நான் கூட்டி போகிறேன் வா……….” என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்
” நோ தாங்க்ஸ்!!!!!!!”
என்றபடி பிரணாவ் அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன் இறங்கி உள்ளேயும் சென்றிருந்தாள்.
ஊரில் இவளுக்கு வேற ஹாஸ்பிட்டலே கிடைக்க வில்லையா???????
என்று நொந்துகொண்டபடி மனைவியை அவசரமாக பின் தொடர்ந்தவன்
அவள் அங்கு அமர்ந்திருந்த அட்டண்டரிடம் எதையோ கேட்க போகும் சமயத்தில் ஒரே ஓட்டத்தில் அவர்களை நெருங்கி
“டாக்டர் இப்போது வந்து விடுவார்களா????? இல்லை லேட் ஆகுமா????” என்றான் பிரணாவ் ……
” வரும் டைம் தான் சார்……. யாருக்கு பார்க்க வேண்டும்?????? டோக்கன் போடணும் …… பெயர் என்ன???????” என்று அட்டண்டர் கேட்டதும் தான்
பிரணாவிற்கு தன் மனைவியின் பெயரை இத்தனை நாட்கள் அறிந்திருக்காமல் விட்டது புரிந்தது!!!!!
பெயரை கேட்டால் சொல்வதற்கென்ன???????
வாயில் அடிக்கடி கொழுக்கட்டையை திணித்து கொள்வாளோ!!!!!
கம்பீரமாய் அவள் பெயர் பலகையை தாங்கியிருந்த கதவை சற்றே அலட்சியமாய் தாண்டி சென்றவளை
பிரமிப்பாய் பார்த்து நின்றான் பிரணாவ்…
அங்கு அவன் கண்கள் உணர்த்திய உண்மையை புரிந்து கொள்வதற்கு அவனுக்கு சிறு மணித்துளிகள் தேவைப்பட்பது……
பார்க்க சின்னப் பெண்ணாக தெரிகிறாளே!!!!!
ஒருவேளை எனக்கு மட்டும் தான்
அப்படியா?????
இல்லையே சற்று முன் பஸ் ஸ்டாப்பில் நின்ற அந்த க்ராப்பும் அப்படி தானே உரைத்தான்!!!!
முடி தான் வளரவில்லை என்று பார்த்தால்
ஆள் வளர்ந்த்திருப்பது கண்ணிற்கே தெரியவில்லையே……
மனையாளை பற்றிய சிந்தனையிலிருந்தவனிடம் “சார் அந்த பகானி கார்!! உங்களுடையதா??????” என்று கேட்டபடி நெருங்கினான் வாட்ச்மேன்……
“ஆமாம்!!!”
” சார்…… ரைட் சைட் பார்க்கிங் டாக்டர்ஸ் உடைய வண்டிகளுக்கானது!!!!!
கொஞ்சம் உங்கள் காரை எடுத்து லெஃப்ட் சைட் நிறுத்துகிறீர்களா ????”
யோவ் இப்போது என் பகானியும் உங்கள் டாக்டர் அம்மாவுடைய கார் தான் !!!!
ஆனால் அதை தான் என்னால் நம்பவும் முடியவில்லை…….. என்று மனதுள் குமுறிய பிரணாவ்
” இதோ வந்து எடுக்கிறேன்!!!!!” என்று வாட்ச் மேனிடம் கூறியபடி காரை நோக்கி நகர்ந்தான் ……
ஆனால் அவன் பயந்தபடியே நிகழ போவதற்கு சாத்திய கூறாக இம்மருத்துவமனையினுள் தான் இப்போது விதுல்யா இருக்கிறாள் என்பதை மட்டும் அறிந்திருந்தால் இப்படி விலகி செல்வானா?????????