மனைவியை தன் அறையில் காணாது அவளை தேடியபடி அடுப்படியில் நிற்கும் சிற்றன்னையிடம் வந்த பிரணாவ்  அவரது உரையாடலை கேட்க நேர்ந்ததும் அப்படியே நொறுங்கி போனான் .

தாலி கட்டி  மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்து  தான் அழைத்து வந்த பெண் சுகமேதும் பெறாத போதும் இத்தனை இன்னல்களை சந்தித்துள்ளாளா????????

கண்டிப்பாக இதில் முழுக்க முழுக்க தன் தவறே நிறைந்திருப்பதாக எண்ணியவனுக்கு

இப்போதே அவளைப் பார்த்தாக வேண்டும் என்ற வெறி மேலோங்க எங்கு சென்றிருப்பாள் என்று தெரிந்து கொள்வதற்கு தாமதிக்காமல் யுகனை அழைத்தான்..

” அம்மு நீ என்னிடம் சண்டை பிடிப்பது சரி……. ஆனால் ஏன் என் பிள்ளையிடமும்

இப்போது மல்லுக்கு நிற்கிறாய் ??????”

பிரணாவிற்கு திருமணமானதிலிருந்து ஒருவித குற்றவுணர்வோடு கணவனை முற்றிலும் புறக்கணிப்பவள் இன்று அவன் கொண்டு வந்து நீட்டிய பாலை ஒதுக்குவதை கண்டு ஆவேசமாக பொங்கினான் யுகன்.

அச்சமயம் அவன் போன் அடிக்கவும் பாலை மேஜை மீது வைத்து விட்டு தனியே வந்து

“ஹலோ …… சொல்லு மாப்பு …….. எப்படி இருக்கிறீர்கள்???? என்று வினவினான் .

“அவள் நம்பர் இருந்தால் கொடுங்கள் மாம்ஸ்………”   பிரணாவ் ஒருவித வேகத்தில் மொழியவும்

யுகனிற்கு நிஜமாகவே புரியவில்லை…….. ஹலோ கூட சொல்லாது…….. யாரை பற்றி இவ்வளவு அவசரமாக கேட்கிறான்

என்று!!!!!!

“யார் நம்பர் பிரணாவ்????”  என்று யுகன் மறுகேள்வி கேட்க

” அவள் தான்…….. தேடி பிடித்து ஒருத்தியைக் கட்டி வைத்தீர்களே !!!!!!”  நொந்து கொண்டபடி கேட்டு வைத்தான் பிரணாவ் .

” மாப்பு நீ பொண்டாட்டி நம்பரையே இனி தான் தெரிந்துகொள்ள போகிறாயா??????

 இத்தனை நாட்கள் என்ன தான் பிரணாவ் பண்ணினாய்????? ” சிரித்தபடியே பிரணாவ்  கேட்ட நம்பரை  அவனுக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தான் யுகன்…..

“இத்தனை நாட்கள்  எதுவும் பண்ணாதது தான் மாம்ஸ் பிரச்சனை……..” என்று யுகனிற்கு கேட்காதபடி முனுமுனுத்தவன்

” சரி மாம்ஸ் தாங்க்ஸ்…… அப்படியே….”  என்று இழுக்கவும்

” என்ன மாப்பு ….. சொல்லு???” பிரணாவின் தயக்கத்தை உணர்ந்து கேட்டான் யுகன்..

” அது…….உங்க பொண்டாட்டியை!!!…… கொஞ்சம்… பார்த்துக் கொள்ளுங்கள்  மாம்ஸ்”  என்று முதலில் தயங்கி பின் எவ்வாறோ கூறிவிட்டான்.

” அட….. உன் உதிக்காவை கொஞ்சம் இல்லை நிறையவே பார்த்துக்கிறேன்…… போதுமா ?????” என்ற யுகனிடம்

“பை மாம்ஸ் !!!!” மேற்கொண்டு எதுவும் பேசாமல் வைத்துவிட்டான் பிரணாவ் .

அடுத்த கணமே யுகன் கொடுத்திருந்த நம்பரை தொடர்பு கொண்டவனுக்கு அது ஏற்கப்படும் வரையில் கூட பொறுமையில்லை……..

“ஹலோ….யாரு??????” என்ற குரலை மறுமுனையில்  கேட்டதுமே

“ஹான்…. உன் புருஷன்!!!!!” என்றான் பிரணாவ்  பட்டென்று…

அவனுக்குமே தயக்கமாக தான் இருந்தது அப்படி சொல்ல!!!!!

 ஏனெனில் தாலி கட்டியதைத் தவிர

 அவளுக்கென்று எதையுமே அவன் செய்ததில்லை………

போதாத குறைக்கு வீட்டில் அவள் நடந்துகொண்ட முறை வேறு மனதை பிசைய

 அவ்வாறு உரிமையாக சொல்லவே கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது!!!

இருப்பினும் நிதர்சனம் இதுதான் என்பதை இருவருமே அறிந்து கொள்ள வேண்டும்

என்பதினால் தான் அப்படி தன் மனைவியிடம்  கூறினான் பிரணாவ்….

எப்படியும் அந்த பஜாரி ” புருஷன் என்றால் யார்?? ஹோ !!! இந்த தாலியை கட்டியவனா?????”  என்று எதிர்கேள்விகளை தொடுப்பாள்  என்று எதிர்ப்பார்த்தான் தான்……..

ஆனால் அவளோ ……

“இப்போது என்ன வேண்டும்??”  என்று அமைதியாகவே வேறு கேள்வி ஒன்றை கேட்க..

” நீ இப்போது எங்கே இருக்கிறாய்?????” என்றான் பிரணாவ் ..

“அதை தெரிந்து கொண்டு நீ  என்ன பண்ண போகிறாய்??????” இம்முறையும்  ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகவே கேட்ட போதும் சிறு எரிச்சல் தொனி அதில் வெளிபட்டது….

“முதலில் பதில் சொல்லு….  அப்புறம் நான் என்ன செய்ய போகிறேன் என்பது

உனக்கே தெரிந்துவிடும் “

“இருக்கிற வயிற்று வலியில் இவன் வேறு!!!!!!”  என்று கடுப்பாக முனுமுனுத்து 

“வீட்டு பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் தான் இப்போது நிற்கிறேன்……. ஆனால் இன்னும் ஐந்து நிமிடத்தில் பஸ் வந்து விடும்…..

 அதில் ஏறி ஹாஸ்பிட்ட…. ” என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவள் முன் பிரவேசமானான் பிரணாவ்…….

அவன் வருகையை அவள்  எதிர்ப்பார்க்கவில்லை  என்பதை அவனை ஈர்க்கும் ரோஜா மொட்டுகள் சற்றே திறந்தபடி காட்டி கொடுக்க

அதனை பார்த்தும் பாராததுமாய் அலட்சிய படுத்த முயன்றவன்

” வந்து வண்டியில் ஏறு!!!”  என்றான் பிரணாவ் மகனுடன் நின்ற

மனையாளை……

யாரிடமோ பேசுகிறான்!!!! என்பது போல் கணவனிடம் தன் முகத்தை திருப்பி கொண்டு நின்றவளை கண்டதும்

 அங்கு பஸ் ஸ்டாபில் அவளருகில் நின்ற மற்ற இருவரில் ஒருவன் கொஞ்சம் சத்தமாக

” சொன்னேன் அல்லவா !!!!

நாம் முதலில்  போகா விட்டால் எவனோ ஒருத்தன் வந்து இந்த கைக்குழந்தையோடு  நிற்கும் பெரிய குழந்தையை கொத்திட்டு போய் விடுவான் என!!!!!!!!!!!!”

என்று பிரணாவின் மனைவியை குறித்து தன் நண்பனிடம் கூற…

“பாஸ் நாங்கள் தான் ஃபர்ஸ்ட் பார்த்தோம்…… 

ஆல்சோ இப்போது குட்டிக்கு உங்கள் கூட வருவதற்கும்  விருப்பமில்லை போலும்!!!!!

அதனால் நீங்களாகவே  ஒதுங்கிக் கொள்ளுங்கள்!!!!!!”  என்றான் பிரணாவிடம் மற்றொருவன்…….

அவர்கள் கூற்றில் பிரணாவின் நாடி நரம்பெல்லாம் புடைக்கப்பட்ட போதும் அதனை வெளியே காட்டி கொள்ளாமல்

  ” ஓ!!! அப்படியா பாஸ்……

 சரி….. அப்போது நீங்களே ட்ரை பண்ணுங்கள்”  முகத்தை சிரிப்பது போல் வைத்து கூற

அதில்  அவன் பற்கள் கடிக்கப்பட்டது அருகில் நின்ற மனைவிக்கு மட்டும் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

உடனே ஏதும் பிரச்சினை ஆக போகிறதோ என்று யூகித்தவள்

” நான் வருகிறேன்…. போகலாம்!!!!” என்று பிரணாவிடம் கூற

” ஹேய் நில்லு நில்லு… அப்படியெல்லாம் போக முடியாது…. என் ஃபிரண்ட்

உன்னிடம் பேசுவான்… கேட்டுவிட்டு முடிவெடு!!!!” என்று தடுத்திருந்தான் நண்பர்களுள் ஒருவன்.

அத்தோடு ” நீ பேசு மச்சி !!!!!” அவன் நண்பனின் தோளில் தட்டி விட்டு

” பாஸ் பர்ஸனல் டாக் பேசுவார்கள்…. நாம் கொஞ்சம் தள்ளி நின்று கொள்ளலாம்!!!!”  பிரணாவிடம் கூறிவிட்டு இரு அடி தள்ளி நின்று கொண்டான்…..

ஆனால் பிரணாவோ இன்ச் அளவிற்கு கூட நகர்ந்திருக்க வில்லை…..

அதை கண்டவனோ ‘இவனை நான் பார்த்துக்கிறேன் மச்சி … நீ அவளை உசாரு பண்ணு ‘ என்பது போல் நண்பனை பார்க்க

உடனே பிரணாவின்  மனைவியின் அருகே சென்றவன்

” இங்கே பாரு பாப்பா…… உன்னை யாரோ

ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தெரியுது……

  நானும் உன்னை நாலு நாளா இதே பஸ் ஸ்டாப்பில் இருந்து ஃபாலோ பண்ணுகிறேன்.. காலையில் குழந்தையோடு 4சி பஸ் ஏறி வேலைக்குப் போகிறாய்!!!!

சாயங்காலம் மீண்டும் குழந்தையைத் தூக்கிட்டு  அடுத்த தெருவில் இருக்கும் வீட்டுக்கு வேலைக்கு போகிறாய்….

ஆனால் ஏன் இவ்வளவு கஷ்டபடுகிறாய்??????

ஆளைப் பார்த்தாலே சும்மா ஸோக்கா இருக்கிறாய்…..

எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது….

பேசாமல் என்கூட வந்துவிடு..

உன் புள்ளைக்கான காசையும் சேர்த்து கொடுக்கிறேன்…….  உன்னையும் வைத்து கொள்கிறேன்.. சரியா???????????” கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்

கேட்டான்.

அவனின் அழுக்குபடிந்த சொற்களால்  சூடேறிய பிரணாவின்  இரத்தம்

” சாரி இன்ட்ரெஸ்ட்  இல்லை” என்ற அவனவளின் வார்த்தைகளில் கொதிக்க ஆரம்பித்தது ..

“போக போக இன்ட்ரெஸ்ட் வந்துவிடும் பாப்பா………. ஐயாவோட ஸ்டைலே தனி!!!!”  என்று அவளை தொட நெருங்கிய கை

 அடுத்த கணமே  எலும்பு முறிக்கப்பட்டு தொங்கி கிடந்தது…….

” சார்ர்ர் விட்டுடுங்கள் ப்ளீஸ்…….

 இந்த பக்கமே தலை வைத்து கூட படுக்க மாட்டேன்!!!!!”  என்று அவன் கத்திய கத்தலில் நண்பன் என்று அவ்வளவு நேரம் அருகில்  நின்றிருந்தவன் பயந்து ஓடி ஓடியே விட்டிருந்தான்……

பிரணாவின் கோபத்தை பார்த்தால்

அவனின் கை எழும்பை முறித்ததோடு விட்டு வைக்காது மேலும் அவனை ஏதோ செய்து விடுவான் என்பது  தெரியவர

” உனக்கென்ன இப்போது ????

 நான் காரில் உட்கார வேண்டும்…… அவ்வளவு தானே!!!! சரி …….. அவனை விட்டுவிடு!!!! இல்லை  இதோ வருகின்ற இந்த பஸ்ஸில் ஏறி சென்றுவிடுவேன் ”  என்று அவள் எரிச்சலாக மொழிந்ததும்

அந்த பொறுக்கியின் மீது படிந்த

பிரணாவின் பிடி தானாக தளர்ந்தது…..

 அதை கண்டவள் கணவனின் பதிலை எதிர்பாராது சென்று அவனது காரில் ஏறியதும் அவள் மீது இருந்த  ஆத்திரம் அளவு கடந்தது……….

அடியேய் பஜாரி !!!! உன் பேச்செல்லாம் என்னிடம் மட்டும் தானா?????

 இந்நேரம் அந்த பொறுக்கி பேசியதிற்கு ஒரு அறையாவது அவனை நீ விட்டிருக்க

வேண்டாமா ??????

முன்பும் இப்படி பயந்து ஒதுங்கி போய் இருந்ததன் விளைவு தானே  இன்று கையில் ஒரு குழந்தையோடு நிற்கிறாய் !!!!!!??????

முதல் வேலையாக இவளை ஒரு கராத்தே கிளாசில் சேர்த்து விட வேண்டும் !!!!! என்றெல்லாம் எண்ணியவனுக்கு தெரியாது

அவள் ப்ளாக் பெல்ட் ஹோல்டர் என்பது!!!!!

எப்பேற்பட்ட பெண்ணாக இருப்பினும் சூழ்ச்சி வலையில் போதை மருந்தை உட்கொள்ளச் செய்து பிணைக் கைதியாக ஆட்கொள்ளப்படும் போது

அவளால் என்ன செய்திருக்க முடியும்????????

என்பதை அறியாதவன்

அந்த பொறுக்கியை அப்படியே கீழே தள்ளி விட்டு வண்டியில் ஏறி

” எங்கே போக வேண்டும்??????”  என்றான் மனைவியிடம் கோபமாகவே.

” கேர் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்!!!!!”  பதிலளித்தவள்

கார் மெயின்ரோட் நோக்கி செல்லாமல்

 யூ டெர்ன் அடித்து திரும்பவும்

“எங்களை இறக்கிவிடு நாங்களே போய் கொள்கிறோம்!!!!!!”  என்று கார்க் கதவை திறக்க முயன்றாள்……

அவள் செய்கையில் சிரித்தவன்

” சின்ன பொண்ணே !!!! இது பகானி ஜோன்டா!!!!!

இந்த காரை பற்றி கேள்வி பட்டிருந்தாலே பெரிய பொண்ணு ஆகியிருப்பாயே!!!!!

பகானி இட்டாலியன் மேட் கார்……

இந்த ‘ஜோன்டா’ பகானியின் 2018 ஆம்

வருடத்தின் மாடல் …. மொத்தமே 140 கார்கள் தான் தயாரிக்கப்பட்டன !!!!!

இங்கு நம் இந்தியாவில் மொத்தம் ஏழு பகானி கார்கள் ஓடுகிறது….

அதிலும் இந்த புளு கலர் ‘ஜோண்டா’ மாடல்  இரண்டே இரண்டு தான்!!!!!

வந்து லான்ச் ஆன முதல் காரை வாங்கி ஆக வேண்டும் என்று தான் டிரை பண்ணினேன்….

ஆனால் நான் என் அப்பாவிடம் சொல்லிவிட்டு வாங்க முற்படுவதற்குள் உங்கள் ஊர் காரன் ஒருவன் புக் பண்ணிவிட்டான்!!!!” சிறு வருத்தத்துடன் விவரித்தவனின் மொழிகளில்  கார்கள் மீது அவனுக்கு இருந்த ஆசை ஆர்வம் பற்று எல்லாம் நன்கு விளங்கியது……

உடனே ஒரு பெருமூச்சை விட்டு ” இதையெல்லாம் உன்னிடம் சொல்லி கொண்டு இருக்கிறேன் பார்!!!!!” என்று தன் தலையை ஆட்டி கொண்டவன்

திடீரென அவள் புறம் திரும்பி

” ஆமாம்.. நீ நிஜமாகவே   +2 முடித்து

விட்டாயா?????????” என்று கேட்டவனுக்கு ஒரு முறைப்பையே பதிலளித்தவள்

 அவன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி “இறங்குடி பஜாரி!!!”  என்றதும்

“முடியாது!!!!!!!!!”  என்றபடி அப்படியே அமர்ந்திருந்தாள் . உடனே

அவள் மடியில் சமத்தாய் அமர்ந்து அவள் வைத்திருந்த பர்சில் எதையோ தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவனை

” பேபி இங்கே வா…… ” என்று கூப்பிட 

நொடியும் தாமதிக்காமல் தன் பொக்கை வாயை காமித்தபடி  தந்தையிடம் தாவியிருந்தான் மகன்….  

அறியாதவர் எவரிடமும் செல்ல மறுப்பவன்   பிரணாவிடம் அவ்வளவு மகிழ்ச்சியாக குதித்து சென்றதை எண்ணி அவள் வியந்து நோக்க பிராணவிற்குமே ஆச்சர்யம் தான்..

இத்தனைக்கும் பிரணாவ்  குழந்தையையே தூக்கி பழகிறாதவன் அல்ல!!!!!

தன் அக்கா பிரணிதாவின் மகன் ஆதிரனை எப்போதுமே அரவணைத்து கொள்பவன் தான்……

 பிறந்த புதிதில் சற்று தூக்க தயங்கியவன்.. ஆதிக்கு நான்கு மாதம் ஆனதும் அவனை இறக்கிவிட்டதுமில்லை…….

ஆதிரனும் தன் மாமன்  பிரணாவை கண்டாலே இப்படி தான் தாவி வருவான்……

ஆனால் பிறந்ததிலிருந்தே அவ்வபோது கூடவே இருந்ததால் அக்காளின் மைந்தனிடத்தில் அவனைத் தூக்கும் சமயங்களில்  இவ்வாறு ஒரு புதிய நெகிழ்ச்சி தோன்றவில்லையோ?????????

பிரணாவையும் அறியாமல் அவன் கரங்களின் அணைவில் தஞ்சமடைந்தவனை தந்தைக்குரிய உரிமையில் கட்டிப்பிடித்து அவன் உச்சிமுகர

 மகனோ ஒரு படி மேல் போய்

பிரணாவின் கன்னத்தில் “அவ்வா” என்று தன் முத்தத்தைப் பதித்தான்…….

மகனின் செய்கையில் பிரணாவ் எப்படி உணர்ந்தான் என்பதை வார்த்தைகளால்  விவரித்து விட  முடியாது…..

அப்படியே ஸ்தம்பித்து நின்றான்!!!!!

அவன் அதிர்ச்சிக்கு சற்றும் குறையாத விதத்தில் இக்காட்சியைக் கண்ட அவனது மனைவியோ  உறைந்து போனாள்…….

” அம்மாவுக்கு ஒரு அவ்வா கொடுடா …… ப்ளீஸ்டா சோட்டு கண்ணா…”  எத்தனை முறை கேட்டு ஓய்ந்திருப்பாள். 

அப்படி லட்சம் முறை கேட்பவளுக்கே அத்திப்பூத்தாற் போல் ஒருமுறை கொடுத்துவிட்டு  அழகாய் புன்னகைப் பூப்பான் அவள் புத்திரன்……

அப்புன்னகை ஒன்று  தானே அவளை உயிரோடு வாழ வைக்கும் மாயமந்திரம்!!!!!!

இன்று மகனின் செய்கையை தன் மனப்பெட்டகத்துள் படம் பிடித்து வைத்திருந்தளின் உள்ளம் இருகொள்ளி எறும்பாய் சிக்கித் தவித்தது……..

மகனிற்கும் பிரணாவிற்குமான பந்தம் புரியாத புதிராக  புத்துணர்ச்சி அளித்த போதும்

 நிலையில்லா இச்சொந்தத்தை ஏங்கி பிற்காலத்தில் சோட்டு தவிக்க நேர்ந்துவிட்டால்??????????

ஆழ்ந்த யோசனையில் இருந்தவளை

சொடக்கிட்டு அழைத்தவன்

” இப்போது நீயாக உள்ளே வருகிறாயா??இல்லை உன்னையும் இது போல் தூக்கி கொண்டு போகவா???????” என்று பிரணாவ் கேட்க

என்ன சொன்னாய்????????

என்பது போல் அவனைக் கவரும் ரோஜா மொட்டுகள் சற்று அதிர்ந்து  தன் இருப்பிடத்தை விட்டு இரண்டு சென்டிமீட்டர் நகர்ந்தது!!!!!!!!

அதை கண்டவனோ

இவளொருத்தி!!!!!!

இந்த ரோஸ் பட்ஸை பார்த்தாலே  இவள் ஸ்கூல் பொண்ணு என்றே மறந்து விடுவேன் போல…….

கன்ட்ரோல் பிரணாவ்!!!!!!! தன்னுள் கூறி கொண்டு

“நீ உட்கார்ந்து இருப்பதை பார்த்தாலே உன்னையும் தூக்கி செல்ல வேண்டும்

என்று ஆசை படுவாய்  போலவே!!!!!”  என்று கண்ணடித்தபடி மனைவியை நெருங்க

” இப்போது ஏன் இங்கு கூட்டி வந்துள்ளாய்??? எனக்கு ஹாஸ்பிட்டல் போக வேண்டும் ” என்றாள் அவசரமாக…..

” ம்ம்  போகலாம்…. ஒரு டூ மினிட்ஸ் வீட்டில் பேச வேண்டியதை பேசிவிட்டு போகலாம் வா ” என்றபடி அவள் கரம் பற்ற

தள்ளு தள்ளு…..  நானே வருகிறேன்!!!”  என்று முறைத்து கொண்டே இறங்கினாள் அவனின் பஜாரி…