கணவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்த உதிதா அவன் கையை தட்டி விட்டு அவசரமாக எழுந்து அமர்ந்தாள்…..

” மெதுவா அம்மு !!!!!” என்றவன் அவளுக்கு பின்னால் ஒரு தலையணையை வாகாக சாய்ந்து கொள்வதற்கு வைத்துவிட்டு

“சாப்பிடு ….” என்றான்.

” எனக்கு பசிக்கவில்லை!!!!”

” ஆனால் என் பொண்ணுக்கு பசிக்கும்……”

” ஒருநாள் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது!!!”

என்றவளின் மீது பொங்கிய கோபத்தை ஒரு கணம் தன் கண்களை மூடி திறந்து கட்டுப்படுத்திக் கொண்டவன்

” சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகிவிடப்

போவதில்லை!!!!!!! மரியாதையாக சாப்பிடு !!!” என்றான் .

“நான் தான் வேண்டாம் என்று சொல்கிறேன் அல்லவா!!!” கூறியவாறு

வேகமாக எழுந்து சென்றவளின் கரத்தைப் பற்றி அமரவைத்து

” வாயை திற !!!” தோசையை கிட்டத்தட்ட திணித்து விட்டான் யுகன்…..

 அதிக பாசாங்கு பண்ணாமல் சாப்பிட்டு முடித்தவள் யுகன் பாத்திரத்தை கீழே எடுத்து செல்லவும் முன்பு தான் பயன்படுத்திய ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்……

 கால் மணிநேரம் கழித்து மாடி ஏறியவன் “எவ்வளவு நேரம் தான் அம்மு டிரஸ் மாற்றுவாய்????? ” என்றபடி கதவைத் தட்டவும் அது தாழிடப் படாமல் இருந்தது தெரிந்தது …..

அங்கிருந்த கட்டிலில் மனைவியை கண்டவனுக்கு கோபம் சுருக்கென்று ஏற ” இங்கே என்ன பண்ற?????”  அமைதியாக தான் கேட்க முயன்றான்….

 திருமணமான புதிதில் நான்கு மாதங்கள் அவள் பயன்படுத்திய அறை……

அன்று எவ்வாறு அவளை அரவணைத்து தாலாட்டியதோ இன்றும் அதே போல் வருடிக் கொடுக்க……. ஆனால் இதை சற்றும் எதிர்பாராத யுகனிற்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது…

”  உன்னிடம் தான் அம்மு கேட்கிறேன் …..

இங்கு ஏன் வந்து படுத்திருக்கின்றாய்?????” பலவந்தமாக அவளைப் பிடித்து தன் புறம் திருப்பியபடி கேட்டான் யுகன்.

”  நான் இனி இங்கே தான் படுக்கப் போகிறேன்….. நமக்கு இது பழக்கம்

தானே!!!!”

“ஆனால் அதற்கு இப்போது அவசியம் என்ன  வந்தது ?????? இருக்கிற பிரச்சினை போதாது என்று புதிதாக எதையும் கிளப்பி விடாதே…..”

” பிரணாவ் பிரச்சனை சரி ஆகட்டும்…… நான் அங்கே வந்து படுக்கிறேன்”

” அம்மு திஸ் இஸ் தி லிமிட் !!!!!! உன் இன்ட்ரஸ்ட் இல்லாமல் நான் என்றும் உன்னிடம் வந்ததில்லை… அதனால் ரொம்ப ஓவராக பண்ணாமல் மரியாதையாக நீயே அங்கு வந்துவிடு “

“நான் ஓவராகவும் போகவில்லை அவசரப்பட்டும் பேசவில்லை!!!!! நிதானமாக யோசித்து தான் சொல்கிறேன்…..  எல்லாம் சரியாகட்டும் பிறகு பார்க்கலாம்!!!”

அவள் கூறியதில் ‘அவசரப்பட்டு’ எனும் வார்த்தையை தன்னுள் கூறி பார்த்தவன்

” ஹோ அம்மாவிடம் அப்படி சொன்னது கோபமா?????  நீயே யோசித்துப் பாரு??? நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக உன் தம்பி மனதில் இருந்த ஒருத்தியை தூக்கி வீசிவிட்டு உடனே போய் மணமேடையில் உட்கார்ந்தான்!!!!

 அப்படி என்ன அவசரம்????

 இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க கூட அவகாசம் கொடுக்காமல் ????!!!!!” கூறி சென்றவனிடம்

“வேறு ஏதாவது வழி !!!!!!!

உள்ளதா??????

 செல்லுங்கள் யுகி!!!!!

உங்களிடமிருந்ததா?????

அந்தப் பெண்ணிற்கு நீங்கள் ஏற்கனவே

ஏற்பாடு செய்து வைத்திருந்த  கல்யாணத்திலே சுத்தமாக ஈடுபாடு இல்லை……..

  அந்த அயோக்கியடமிருந்து தப்புவதற்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்று நீங்கள் கூறியதால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள்……

 எல்லாவற்றிலும் மேலாக அந்த பொலிடிஷியன் கோர்ட்டில் தொகுத்த வழக்கிற்கு நாளை தீர்ப்பு!!!!!

எப்படியும் அது  அவனுக்கு சாதகமாகவே தான் வர இருந்தது ……

 அதனால் தான்  இந்தக் கல்யாணம் மட்டும் நடந்துவிட்டால் சட்டப்படி அந்த பொறுக்கியால் சோட்டுவிடமும் இந்த பெண்ணிடமும் நெருங்கவே முடியாது என்றீர்கள்!!!!!

 அப்படிப்பட்ட உங்கள் வார்த்தையை நம்பி தானே மணமேடையில் போய்

உட்கார்ந்தாள்…..

 அந்த மாப்பிள்ளை வியானை கடத்தி விட்டார்கள் என்று தெரிந்தவுடன்

‘இதையெல்லாம் நான் கேட்டேனா?????????’

என்பது போல்

 உங்களைப் பார்த்தாளே ஒரு பார்வை !!!!!!

அந்த இடத்திலேயே நான் செத்து விட்டேன் யுகி ……..

 என் உயிரை கொடுத்தாவது இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க மாட்டோமா என தவித்துக் கொண்டு நின்ற போதுதான் கடவுளாக பார்த்து பிரணாவை அனுப்பி வைத்தார்………

 எனக்கு அந்த சூழலில் வேறு வழி தெரியவில்லை……

 என் உயிரை விட பெரிதாக மதிக்கும் என் தம்பியை பணையம் வைத்தேன்!!!!!!!!

 இப்போது அவனையே தொலைத்து விட்டும் நிற்கிறேன் ………”

 மூச்சு விடாமல் பேசிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு விசும்பி அழுதவளை தன் மார்பில் இழுத்துப் போட்டுக் கொண்டான் யுகன்……

 “அம்மு….. ரிலாக்ஸ்!!!! அவன் உன் தம்பி!!!! உன் பிரணாவ்!!!!! உன்னிடம் பேசாமல் அவனால் இரண்டு நாள் கூட இருக்க முடியாது…… நீ வேண்டுமானால் பார் நாளையே உன்னை தேடி இங்கு வருவான்”

” இல்லை யுகி…… பிரணாவை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்……. கண்டிப்பாக மாட்டான்!!!!!

  நான் அவனுக்கு செய்திருப்பது நம்பிக்கை துரோகம்……

 ஒரு நல்ல அக்காவாக இருந்திருந்தால் அவன் ஆசைப்பட்ட படி  இந்நேரம் நான் கவின் மாமா வீட்டிற்கு சென்று விதுல்யாவை பொண்ணு கேட்டிருக்கணும் !!!!!

ஆனால் நான்???????!!!!!!”

 “மாப்பு உன்னிடம் பெண் பார்க்க சொன்னானா?????”

” வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவன் மனம் தான் நமக்கு தெரியுமே!!!

  அதை செய்யாவிட்டாலும் கூட இப்படி என் சுயநலத்திற்காக அவன் விருப்பம் அனைத்தையும் அழித்திருக்க கூடாதல்லவா???!!!!!!

ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லையே ….. “

” ஏன்டி இப்படி மருகிற????? நீ வேண்டுமானால் பார் அவன் நன்றாக இருப்பான்!!!!”

 விரக்தியாய் சிரித்தவள் ” கண்டிப்பாக நல்லா இருப்பான் யுகி ……. ஏனென்றால் இது நான் ஏற்படுத்திக் கொடுத்த வாழ்க்கை!!!!!  நிச்சயம் அந்த வாழ்வை தோற்க விடாது நன்றாக வாழ்ந்து காட்டுவான்…….

 ஆனால் அதேசமயம் இனி அந்த வாழ்க்கையில் உதிதா எனும் ஒரு பந்தத்திற்கு மட்டும் எப்போதும் இடம் அளிக்க மாட்டான்…..”

“நீங்கள் சண்டையே போட்டுக்கொள்ளாத அக்கா தம்பியாக பிறந்து விட்டதால் இதெல்லாம் புதிதாக இருக்கிறது அம்மு……

 எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிப்பாக இருக்கும்…

 அண்ட் ட்ரஸ்ட் மீ… உன் ஸ்வீட் ஹார்ட் உன்னிடமே வந்துவிடுவான்….. இப்போது வா போய் தூங்கலாம்!!!”

 அப்போது அங்கு மேஜை மேல் ஒரு மங்கி டாங்கியின் மீது கை போட்டு அமர்ந்திருந்த படி அவைகளுக்கு கீழே ‘ஸ்வீட் ஹார்ட்’ என்று பொறிக்கப்பட்ட கஸ்டமைஸ்ட் பொம்மை ஒன்று அவள் கண்களில் பட்டது……

 பிரணாவ் கொடுத்தது தான்….. அதுவும் போன வருட பிறந்த நாள் பரிசாக!!!

 அதை எடுத்துப் பார்த்தவள் ” நீங்கள் போய் படுங்கள் யுகி…… இனி நான் இங்கே படுத்து கொள்கிறேன்!!!”  அழுத்தமாக கூறிவிட்டு திரும்பி படுத்தாள்….

 மறுபடியும் முதலில் இருந்தா??????? நொந்து கொண்ட யுகன்

“உனக்கு என்ன இப்போது பிரச்சனை????? என் கூட படுக்கக்கூடாது……… அவ்வளவுதானே ???? நான் இங்கு படுத்துக் கொள்கிறேன்…. போய் நம்ம

பெட்டில் படு ……

 ‘இல்லை!!!  முடியாது!!!! ‘ என்று ஏதாவது ஆரம்பித்தாய் என்றால் உன்னைத் தூக்கிக் கொண்டுபோய் அங்கு படுக்க வைக்க வேண்டிவரும்…….

 எனக்கு டபுள் ஓகே தான்!!!!

 உனக்கும் ஓகே என்றால் சொல்லு”  என்றவனை விழி அகல நோக்கினாள் மனைவி….

” அப்புறம் இன்னொரு கண்டிஷன்!!!! யூ நோ அபௌட் மை  லிமிட்    கண்ட்ரோல்ஸ்…..

 இந்த கண்ணு ரெண்டும் இரண்டு மைல் தூரம் விரிந்தது  என்றால் பிறகு நடக்கப்போகும் விபரீதத்திற்கு நான் மட்டும் பொறுப்பு இல்லை……. இப்போதே சொல்லிவிட்டேன்!!!!!!”  சீரியசாக சொன்னவனிடம்

“கொடுங்கோல் ஆட்சியாளர்!!!!” முனுமுனுத்தபடி  சென்று அவர்கள் மெத்தையில் படுத்துவிட்டாள்…

கண்களை திரையிட்டு இருந்தவளின்  மனதை முழுவதுமாய் ஆக்கிரமிப்பு செய்திருந்தான் தனயன்……..

 அக்காளின் நினைவுகளில் உலா வந்ததால் தான் என்னவோ பிரணாவிற்கு  விக்கல் நிற்கவே இல்லை…..

 அடுப்படிக்குள் சென்று நான்காவது சொம்பு தண்ணீரைப் பருகி கொண்டிருந்தவனின் செல்பேசி விடாமல் அழைத்தது…..

ஹசீனா!!!!!!!!

 என்ற பெயரை திரையில் பார்த்தவன்

“இவள் எதற்காக இப்போது கூப்பிடுகிறாள்??????

 இவளிடம் பேசி பல மாதங்கள் ஆகிவிட்டதே??????

இப்போது என்னவாக இருக்கும்??????

 பேசலாமா வேண்டாமா ??????

அனைத்தையும் ஒரு கணம் யோசித்துவிட்டு தன் உயிர் தோழியின் அழைப்பை ஏற்று இருந்தான் பிரணாவ்….

” பிரணாவ் எப்படி இருக்கிறாய்??????”

 ஹசீனா கேட்டதற்கு

” இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்!!!!”  என்று சிடுசிடுத்தான்…

” உனக்கு என் மேல் உள்ள கோபம் இன்னும் போகவில்லையா?????”

” இதைக் கேட்க தான் கூப்பிட்டாயா?????” என்று அதற்கும் அவன் எரிந்து விழ

 நண்பனை பற்றி முழுதும் அறிந்து

இருந்தவள் நேராக விஷயத்திற்கு வந்தாள்…..

” வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள்……..”

 மனம் அவளுக்காக சந்தோஷமடைந்த போதும் “சரி !!!” என்று காட்டமாகவே சொன்னான் பிரணாவ்….

”  வாப்பா ‘சரி’ என்று சொன்னதை

 அஃப்னானிடம்

 கூட சொல்லாமல் உன்னிடம் சொல்ல தான் அவ்வளவு ஆசையாக அழைத்தேன்!!!!!

 ஆனால் நீ எப்போதுமே என்னிடம் பேச மாட்டாய் போல…. நான் மறைத்ததை என்றுமே மன்னிக்கவும் மாட்டாய் போல…..

 சரி வைக்கிறேன்….”  என்று கலங்கிய குரலோடு போனை அணைக்க போனவளிடம்

” ஹே ஹசீ…….. ஹாப்பி ஃபார் யூ !!!! அஃப்னானிடம் பேசும் போது என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடு” என்றான் .

உடனே மகிழ்ச்சியாக “தேங்க்ஸ்டா….. நீ என்னிடம் பேசவே மாட்டாயோ என்று பயந்து விட்டேன் ” என்று குதூகலித்தவளிடத்தில்

“அப்படி பயந்தவள் தான் இத்தனை மாதங்கள் எக்கேடோ கெட்டு போ என்று  ஒரு போன் கூட பண்ணாமல் ஜாலியாக சுற்றிக் கொண்டு இருந்தாயா??????” என்றான்.

 ” அபாண்டமாக  புழுகாதே பிரணாவ்  ……. நான் உன்னை ஒருவேளை அழைத்திருந்தால் அதனை உடனே ஏற்று பேசியிருக்க போகிறாயா?????? என்று அவள் கேட்டதற்கு

“கண்டிப்பாக மாட்டேன்…… உனக்கே என்னை பற்றி  தெரியும் தானே …….   ” என்று ஒப்புக்கொண்டான் .

“பிறகு……. தினம் தினம் ஏன் உனக்கும் தொல்லை கொடுக்க வேண்டும் என்றுதான் விட்டேன்!!!!! ஆனால்  இப்போது நான் டபுள் ஹேப்பி பா……

 ஆமா சார் எப்படி இருக்கீங்க?????”

 என்றாள் ஹசீனா  நண்பன் பல மாதங்கள் கழித்து சகஜமாக பேசுவதால்.

 “நானா??? எப்படியோ இருக்கேன் !!!”

“ஏன்டா விதுவிடம் உன் காதலை இன்னும் செல்லவில்லையா??????? நான் வேண்டுமானால் ரெகமெண்ட் பண்ணவா பிரணாவ்????? நீ எனக்கு செய்ததை நானும் டாலி பண்ணி விடுகிறேன்…. எப்படி????”  என்று சிரித்தபடி கேட்கவும்

ஏற்கனவே புண்பட்ட மனதை கூர்வாள் கொண்டு அறுத்ததைபோல் உணர்ந்தான் பிரணாவ்…..

” சரி நான் அப்புறம் பேசுகிறேன்….. கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கிறது….. பை ஹசீ!!!! ”  தோழியின் சாதாரண கேலி மொழிகளை  கேட்டவனுக்கு மேற்கொண்டு பேச தோன்றாது போனை அணைத்தும் விட்டான்.

 தன் காதலை எண்ணி தன்னுள் வருந்தி  கொண்டிருந்தவனின் அருகில் வந்து அவன் தோளை தொட்டு

” டேய் தம்பி…… அந்த பொண்ணு எதுவும் சாப்பிடவில்லைடா…..

குழந்தையும் அழுது கொண்டே இருக்கும் சத்தம் கேட்கிறது!!!! ரூமை விட்டு அவள் வெளியே வந்ததாக தெரியவில்லை…..

 போய் கொஞ்சம் பாரு ” என்றார் யசோதா.

”  நான் பார்த்துக் கொள்கிறேன் யசோம்மா….. நீ போய் படு!!!!

ஆமாம்  சித்தப்பா நாளை காலையில் வந்து விடுவார் அல்லவா…..

 அவர் பேசினால் தான் அப்பாவிற்கு கொஞ்சமாவது  புரியும்!!!!”  என்றவனின் கன்னத்தை தடவி

” எப்போதுடா இவ்வளவு பெரிய மனிதன் ஆனாய்????” என்றார் யசோதா சிலிர்த்தபடி…….

‘என் சின்ன பையன் பிரணாவா இது??????’

அவன் வந்ததிலிருந்து அவர் மனதுள் ஓடும் கேள்வி!!!!!

 ” ஒரு ஏழு எட்டு  வருடமாகவே இதே ஹைட்டில் தானே யசோம்மா இருக்கிறேன்…….

 இப்போது போய் இப்படி ஒரு டவுட் கேட்கிறாய் ?????

அப்படியென்றால் உன் கண்ணை தான்

முதலில் செக் பண்ணனும் …..

முதல் வேலையாக நாளை காலையில் ஐ ஹாஸ்பிட்டலிற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்குகிறேன்!!!!!”

” டேய் அடங்கவே மாட்டாயா???”

 பொய்யாக முறைத்துக் கொண்டவர் மறுநொடியே

“கல்யாணம் கூட சரி பிரணாவ்…..

ஆனால் அந்தக் குழந்தை!!!!! நிஜமாகவே உனக்கு  எதுவும் தோன்றவில்லையா?????

கொஞ்சம் கூட  கஷ்டமாக இல்லையா?????

 காலையில் நீ உன் அப்பாவிடம் அந்த குழந்தையை ‘என் பையன்’ என்று குறிப்பிட்டதும் எனக்கு அப்படியே புல்லரித்துப் போய் விட்டது…….

 நான் அந்த பொண்ணை எதுவும் சொல்லவில்லை…..

 ஆனாலும் அந்த குழந்தையை எப்படி பிரணாவ் நீ மனதார  ஏற்றுக் கொண்டாய்???????” ஒருவித பரவசத்தோடு

வினவினார்……

 “யசோம்மா…..  உனக்குள்ளே ஒரு பட்டிக்காட்டு பாட்டியின் ஜீன் ஒளிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!!!!!

 அதுதான் இப்போது உன்னை இப்படி பொல்லாத பூதம் மாதிரி பேசவும் வைக்கிறது ” என்றவன்

யசோதா அமைதியாகவே எதுவும் பேசாமல் நிற்கவும் அவனே தொடர்ந்தான்….

” முதலில் ‘அந்த பொண்ணு’ ‘இந்த குழந்தை’ என்று சொல்வதை நிறுத்து யசோம்மா……..

 அவள் உன் மருமகள் !!!!!

எப்போது அவள் கழுத்தில் தாலி கட்டினேனோ அப்போதே அவள் பையனும்

என்னுடைய பையன் தான்……

 உன்னுடைய பேரன் !!!!!!

 நீயே இப்படி பேசிக்கொண்டு இருந்தால் இன்னும் அம்மா அப்பாவிற்கு எல்லாம் யார் யசோம்மா புரிய வைப்பார்கள்?????

 இந்தச் சின்ன வயதில் பார்க்கக்கூடாத கொடுமை எல்லாம் அனுபவித்து விட்டு வந்திருக்கிறாள்…….

 பிடிக்காமல் தான் கட்டிக் கொண்டேன்…. ஆனாலும்

மனதார !!!!!!!!!!!

யசோம்மா இனி என்னைப் பற்றி கவலைப்படாமல் உன் மருமகளை பற்றி இல்லை இல்லை வேண்டாம் அவளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று லேசாக கண் சிமிட்டிவிட்டு

“நீ உன் பேரனை மட்டும் கவனித்துக்

கொள் சரியா” என்றான் ……

” நீ ஏன் என் வயிற்றில் பிறக்கவில்லை என்று அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறேன் பிரணாவ்!!!!! ஆனால் இன்று…..”

” இன்று நல்ல வேலை எஸ்கேப் ஆகி விட்டோம்டா சாமி என்று நினைக்கிறாயா யசோம்மா????????”

 அவன் சொன்ன விதத்தில் சிரித்தவர் இல்லை என்பது போல் தலையை ஆட்டி “உன் கூட ஒரே வீட்டில் இருப்பதையே இந்த ஜென்மத்தில் நான் செய்யும் புண்ணியமாக நினைத்துக் கொள்கிறேன்” என்று கண் கலங்க

 “ஐயோ யசோம்மா……. சென்டிமென்ட் சீனை பிழிந்து விட்டாயே!!!!!! ” என்று கட்டி அணைத்தான்……

மகனை திருப்பி அணைத்தவர்

” உன் ரூமுக்கு போ…. ரொமான்ஸ் சீன் வெயிட்டிங்!!!!!!”  என்று சிரிக்க

” அது ஆக்ஷன் சீனா மாறிவிடாமல் இருந்தால் சரி!!!!!” என்று கூறி பிரணாவ் தன் அறையினுள் சென்றதும் அவன் கண்ட காட்சியில் உறைந்தான் ….