ஐயர் மந்திரங்கள் ஓத உதிதாவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சுகளிட்டான் யுகன். அக்னியை வலம் வர கரம் பிடித்தவளின் எழில்மிகு முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது . அதற்கு சற்றும் குறையாத விதத்தில் மணமகனின் தாடையும் இறுகியிருந்தது .
கணவனின் முதல் ஸ்பரிசத்தில் அந்நிலையிலும் நெகிழ்ந்த மான் விழியாள் அவனது வலிமையான விரல்களில் நடுக்கத்தையும் உணர்ந்தாள்.
புதுமணத் தம்பதியரின் ஜோடி பொருத்தத்தை மன நிறைவோடு கண்டு களித்த தேவகி மணமேடையிலேயே மயங்கி சரிந்தார்.
” அம்ம்ம்மா…..” என்று
பதறியபடி பற்றியிருந்த மனைவியின் விரல்களை விடுவித்து கொண்டு தேவகியிடம் ஓடலானான் யுகன்.
உதிதாவும் சற்று திகைப்புடனே அங்கு மாமியாரிடம் விரைந்து ” மேடம்!!! என்னாச்சு …? எழுந்திருங்க..” என்று படபடத்தாள் .
தண்ணீர் தெளித்தும் யுகனின் அன்னை அசைவற்று இருந்ததால் ” அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் . பயப்படும்படி ஒன்றும் நடந்திராது மாப்பிள்ளை…… ” என்று உதிதாவின் பெரியப்பா யுகனிடம் கூறியதோடு அவரே காரையும் விரைந்து எடுத்தார்.
திக் பிரமை பிடித்தார் போன்று நின்றுகொண்டிருந்த தன் மாமனார் கார்த்திகேயனிடம் ” சார் மேடமிற்கு பெரிதாக ஒன்றுமிராது . சிறிய மயக்கமாக தான் இருக்கும் .
வாருங்கள்…..” என்று தன் மாமனாரை சுயநினைவிற்கு அழைத்து வந்ததோடு மருத்துவமனைக்கு கூட்டி சென்றாள் உதிதா.
முள்ளின் மேல் நின்ற அரைமணிநேர பரிசோதனைக்கு பிறகு வெளியே வந்த டாக்டரிடம் “அம்மாவிற்கு ஒன்றுமில்லையே டாக்டர் . நன்றாக தானே
இருக்கிறார்கள் ? ” என்று சுமை தாங்கிய கண்களோடு வினவினான் யுகன் .
“கூல் மிஸ்டர் யுகன் . ஷி இஸ் ஆல்ரைட் நௌ. இன்னும் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும் . ஒவ்வொருத்தராக சென்று பாருங்கள் ” என்று லேசான சிரிப்புடனே டாக்டர் சொல்லவும் அங்கிருந்த நிலைமை சற்றே சீரானது .
பத்து நிமிடத்தில் நர்ஸ் ஒருவர் அங்கு வந்து ” டாக்டர் உங்களை கூப்பிடுகிறார் ” என்று யுகனிடம் கூறிவிட்டு சென்றார்.
என்னவாக இருக்கும் ?????
பயப்படும் படி ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகும் தனியே அழைப்பது என்றால் எதற்கு??? என்று குழம்பிய மனதுடனே டாக்டரின் அறைக்குள் சென்றவனிடம்
“என்ன சார் நீங்கள் இன்னும் இவ்வளவு டென்ஸ்டாக இருக்கிறீர்கள் ?????
முதலில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள் !!!!! அப்போது தான் நான் சொல்ல வந்ததை உங்களால் புரிந்து கொள்ள முடியும் ” என்றார் டாக்டர் .
“சொல்லுங்க டாக்டர் ” என்று ஜீவனில்லாமல் பதிலுரைத்தவனிடம்
“அம்மாவிற்கு இது பிரஷர் கொஞ்சம் கூடியதால் வந்த மயக்கம் …..
ஸ்ட்ரோகிற்கு முதல் ஸ்டேஜ் என்றும் சொல்லலாம் !!!!
மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் …… நான் தருகிற மருந்து மாத்திரைகளை விட
அவருக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் தான் மிக முக்கியம் ……
ஒரு ஆறு மாதத்திற்கு கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும் …… அதிர்ச்சியடையும் படியான தகவலை தெரிவித்திராதிருப்பது நல்லது!!!!!”
டாக்டர் எவ்வளவிற்கு எவ்வளவு பொறுமையாக எடுத்துரைத்தாரோ அவ்வளவிற்கு அவ்வளவு வேகமாக யுகனின் இதயத்துடிப்பு அதிகரித்தது…..
யுகனின் கண்களிலிருந்து வழிந்தோடிய நீரை பார்த்து “என்ன சார் நீங்கள்….. கலெக்டராக இருந்து கொண்டு இப்படி மனமுடைந்து போகலாமா??????? ” என்றார்.
கலக்டராக இருந்தால் மட்டும் என் அம்மாவிற்கு ஒன்று என்றால் தாங்கி கொள்ள முடியுமா???? என்று மனதுள் எழுந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு
“சரி டாக்டர் . கவனமாக பார்த்து கொள்கிறேன் ” என்றான் இறுக்கத்துடன் .
வெய்ட்டிங் ஹாலில் எப்போது உள்ளே அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தபடி ஐ.சி.யு கதவையே வெறித்து கொண்டிருந்த மாமனாரின் அருகில் அமர்ந்திருந்தாள் உதிதா…….
அவளது கன்னங்களையும் கண்ணீர் கோடுகள் வருடி சென்றன !!!!!
நீங்கள் இப்படி உட்கார்ந்திருப்பது தெரிந்தால் மேடம் தான் இன்னும் கஷ்டபடுவார்கள்…..
இதை கையில் பிடித்து குடியுங்கள் சார்!!!!!” என்று சிறு கண்டிப்பு தொனிக்கும் குரலில் வினவி அவரை பருக செய்ததை பார்க்கவும் யுகனின் மனதிற்கு கூட ஆறுதலாகத்தான் இருந்தது…..
ஆனால் அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்தது போல் உடலை நடுக்கியவன்
இது தப்பு யுகன்!!!!!
இந்த பாசம் , பந்தம் போன்ற வீண் நினைப்பிற்கு எல்லாம் இவளிடம் இடம் கொடுக்கவே கூடாது என்று தனக்கு தானே சொல்லிகொண்டான் …..
இன்றைய தன் நிலைக்கும் காரணம் இவளே!!!!!!
இதை எக்காரணம் கொண்டும் மறக்க முடியாது ……
இவளை வேறு விதமாக தான் கையாள வேண்டும்….
புருவங்கள் முடிச்சிட தன் புத்தம் புதிய மனையாளை பற்றிய நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு முடிவிற்கு வந்தவனாய் எழுந்திருந்தான் யுகன்….
அப்போது “அம்மா கண் விழித்து விட்டார்கள் …. ஒவ்வொருவராக போய் பாருங்கள் . அதிகம் பேச வைக்க வேண்டாம்!!!! ” என்று நர்ஸ் கூறி சென்றார்…….
அதையே அருள் வாக்கென எடுத்து கொண்டு உள்ளே சென்று ஆதங்கமாய் தன் மனைவியின் கரத்தை பிடித்த கார்த்திகேயனின் விழிகள் கசிந்திருந்தன .
“என்னங்க நீங்க சின்ன பிள்ளையாட்டம் ?????
நான் இப்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா ?????
இப்படியே இதே நிறைவோடு நான் போய் …..” என்றவரின் இதழ்களை அதற்கு மேல் பேச விடாமல் தன் கரங்களால் மூடியவர்
“என்ன பேச்சு பேசற ?????
ரொம்ப சந்தோஷம்னா என்ன வார்த்தை சொல்றது என்று இல்லையா ????” என்று
அதட்ட
தன் மேல் படிந்த கணவனின் கரங்களை இறுக பற்றி கொண்டார் தேவகி .
“எங்கே நம் பையனையும் மருமகளையும் காண வில்லை????” என்று கேட்டு கொண்டிருக்கும் போது அறையினுள் உள்ளே நுழைந்த யுகன்
“ஹஸ்பண்ட் அண்ட் வைப் ரொமான்ஸை டிஸ்டர்ப் வேண்டாமே என்று கொஞ்ச நேரம் கழித்து வந்தால் அப்போதும் கூட என்னை பற்றி தான் பேசி கொண்டிருப்பீர்களா??????
இதெல்லாம் டூ மச் ஆக தெரியவில்லை?????”என்று கண் சிமிட்டி லேசாக புன்னகைத்தான் …..
“டேய் படவா …..
உன்னை அடக்க ஒருத்தி வந்தும் இன்னும் உன் வாய் குறைந்த பாடாக தெரியவில்லை ….. அவள் எங்கேடா
யுகா????? ” என்று தேவகி கேட்டதும்
சோகமே உருவாய் தன் பெரியப்பாவின் தோள் மீது தலை சாய்த்து அவள் படுத்திருந்த தோற்றம் யுகனிற்கு நினைவு கூர்ந்தது.
” அவள் வெளியே இருக்கிறாள் ……
..”
வாக்கியத்தை முடிக்கும் முன்னே “போய் அவளை அழைத்து வா யுகா!!!! ” என்றிருந்தார் தேவகி.
மறு பேச்சு பேச வழியின்றி வெளியே வந்தவன் “அம்மா உன்னை கூப்பிடுகிறார்கள்!!!! ” என்றான் மனைவி இருந்த திசையை நோக்கி.
உடனே தன் பெரியப்பாவை பார்த்தவள் “போய் வாடா!!!!” என்று அவர் கண்ணசைக்கவும் எழுந்து கணவனுடன் நடந்தாள் உதிதா.
மனைவி நடந்து கொண்ட விதத்தை கண்டவனுக்கு எரிச்சல் பன்மடங்கு அதிகமானது!!!!
உன் பெரியப்பா சொல் தான் உனக்கு வேத வாக்கு???????என்று அவளை பிடித்து பலமாக உலுக்க வேண்டும் போல் ஒரு வேகம் எழுந்தது…..
அதை கட்டுப்படுத்திக்கொண்டு யுகன் மனைவியை நோக்கும் போது
தன் அருகில் ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்து ஐ.சி.யுவின் கதவை திறந்து “மேடம் ………” என்று தேவகியிடம் விரைந்திருந்தாள் உதிதா.
“இப்போது எப்படியிருக்கு மேடம் ???????”
“பரவாயில்லைம்மா…… ” என்ற மாமியாரின் பதிலை கேட்டு
“நான் சொன்னேன் அல்லவா சார்… மேடத்திற்கு ஒன்றுமில்லை என்று !!!!
நீங்கள் தான் கேட்கவே இல்லை…… “
என்றாள் உதிதா மாமனாரிடம்.
“யார் சொன்னது எனக்கு ஒன்றுமில்லை என்று ??????” என்று தேவகி குறைபடவும் அறையிலிருந்த மற்ற மூவருமே திடுக்கிட்டனர்.
” என்னம்மா ???? என்னம்மா செய்கிறது??????” என்று யுகன் முன்வரவும்
“ஒரு விஷயம் என் மனதை ரொம்பவும் வருத்துகிறது யுகா!!!!! ” என்றார் தேவகி.
இதை தான் சொல்ல போகிறார் என்று திருமண நிகழ்வின் குழப்பங்களை யூகித்தவள் பனித்த கண்களோடு
“சாரி மேடம் !!!! செய்த தப்பை எப்படி…..”
என்று மருமகள் கூறவிருந்த விளக்கத்தினை ஏற்று கொள்ளாதவர் போல முகத்தை
திருப்பி கொண்ட தேவகி
“உன் பொண்டாட்டியை முதலில் அழகாக அத்தை-னு கூப்பிட சொல்லுடா!!!!! ” என்று தன் மகனிடம் சொல்லவும்
என்னமோ ஏதோ என்று பயந்த கார்த்திகேயன் சிரித்துவிட்டார்…….
” அதெல்லாம் இனி ஒழுங்காக கூப்பிடுவாள்!!!!! ” என்ற பதில் யுகனிடமிருந்து பாய்ந்தது.
“பாருடா மனைவிக்கு இப்பவே வக்கீல் ஆகுறத ???? ” என்று கார்த்திகேயன் கேலி செய்யவும்
“அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கின்றான்!!!! ” என்று தேவகி கணவனை காலை வாரிவிட அங்கு ஒரு
சிரிப்பலை எழுந்தது….
அப்போது உள்ளே வந்த நர்ஸ்
“இதென்ன ஐ.சி.யு வார்டா இல்லை ஆதித்யா சானலா ??????” என்று லேசான கண்டிப்புடன் கூற
அதிலும் புன்னகைத்தவர்
“இந்த ஒரே ஒரு ஆதித்யா ஜோக்கிற்கு மட்டும் சிரித்து கொள்கிறோம்மா ” என்று கூற நர்ஸ் உட்பட அனைவரும் அதில் கலந்து கொண்டனர்…..
“என்னையும் இழுத்து விட்டீர்களே???? ” என்று குறை பட்டு கொண்டு
“மேடம் ரெஸ்ட் எடுத்து கொள்ளட்டும் சார். நீங்கள் கொஞ்ச நேரம் வெளியே இருங்கள் ” என்றார் நர்ஸ்…..
பின் அவர்கள் புறப்பட்டதும் தேவகியின் ட்ரிப்ஸ் லெவெலை குறைத்து வைத்தவர்
“நல்ல அருமையான குடும்பத்தை பரிசாக பெற்று விட்டு மனதை போட்டு ஏன் குழப்பி கொள்கிறீர்கள் மேடம் ????
நல்லா ரெஸ்ட் எடுத்தீர்கள் எனில் நாளைக்கே டாக்டர் வீட்டிற்கு அனுப்புவதாக கூறினார்…..” என்றார்.
“என்னது நாளைக்கு தான் அனுப்புவார்களா?????
என் கணவரை கொஞ்சம்
கூப்பிடுங்களேன்…..
அவரிடம் ஒரு நிமிடம் பேசிவிட்டு ரெஸ்ட் எடுத்து கொள்கிறேன்!!!! ” என்று சிறு பிள்ளை போல் கேட்டவரிடம் சரியென்று தலையாட்டினார் நர்ஸ்.
நர்ஸ் கூப்பிட்டார் என்று கார்த்திகேயன் மீண்டும் தேவகியிடம் சென்றுவிட
தனித்து வந்து கொண்டிருந்த தம்பதியினரிடம் விரைந்த பிரணாவ்
“நீ இங்கே வா!!!!!”
என்று அருகில் நின்றவனை சட்டை செய்யாது உதிதாவின் கையை பிடித்து
இழுத்து கொண்டு சென்றான் .
“என்னடா ஆச்சு ????? எதற்காக இப்படி இழுத்து கொண்டு வருகிறாய்?”
“அந்த ஆளு முன்னாடி பேச எனக்கு இஷ்டமில்லை அதான்!!!!”
“ஓங்கி அடித்தேன் என்றால் பாரு….. என்ன பேச்சு இது???? ஆளு கீளுனு…..
அவரை ஒழுங்காக மாமா என்று கூப்பிடு பிரணாவ் ” உதிதா அதட்டியதற்கு
“என்னால் இன்னும் ஏற்று கொள்ள முடியவில்லை உதிக்கா” மறுத்து அடம்பிடித்தான் பிரணாவ்…
“தப்பை நம் பேரில் வைத்து கொண்டு அவரிடம் ஏன்டா அனாவசியமாக கோபத்தை காட்டுகிறாய்??????”
அவளையே ஒரு கணம் உற்று பார்த்த பிரணாவ் வேறு ஏதும் பேசாமல் தமக்கையின் வயிற்றை கட்டி கொண்டு
அவள் மடியில் தன் முகத்தை புதைத்து கொண்டான் .
அவனது கேசத்தை வருடியபடி
“டேய் பெரியமனுஷா …… பெரியப்பா பெரியம்மா அம்மா அப்பா எல்லோரையும் நீ தான் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் ….. இனி எப்போது நம் வீட்டிற்கு வருவேன் என்று தெரியவில்லை…..” எனும்போது அவளது துக்கம் தொண்டையை அடைத்தது …..
“உன்னை யார் உதிக்கா அங்கே பார்த்துக் கொள்வார்கள்????? அப்பா கிட்ட நான் பேசுறேன் ….
திடீரென்று கட்டாயப்படுத்தி உனக்கு கல்யாணம் நடத்தி வைக்கிறாரு… அப்படியே அனுப்பியும் வைப்பாரா???”
“பெரியப்பா என்ன பண்ண முடியும்????? அவர் தான் ரொம்ப பாவம்… அவர் கிட்ட எதுவும் வம்பு வளர்க்காதே… புரியுதா??”
” ஆமாம் எப்பவும் எல்லாருக்கும் நான் பண்றது தான் தப்பாக தெரியும்….
உனக்கு புடிக்காத ஒரு ஆளுக்கு உன்னை கட்டி கொடுத்தாலும் நீ பெரியப்பா பெரியப்பா என்று அவருக்கு தான் சப்போர்ட் பண்ணுவாய்!!!!!”
தன் தந்தை எடுத்த அவசர முடிவினால் செல்ல அக்காவின் வாழ்க்கை இந்த இக்கட்டில் மாட்டியாக வேண்டுமா?????என பிரணாவிற்கு அவர் மீது கோபம் கோபமாக வந்தது.
அமைதியாய் அமர்ந்திருந்தவளிடம் ” சொல்லு உதிக்கா…. அந்த ஆளை உனக்கு பிடிக்காது தானே… அப்புறம் எப்படி அவங்க வீட்டுக்கு போவாய்??????” என்று பிரணாவ் கேட்ட போது
அங்கு வந்த யுகன் அவர்களது அணைப்பை ஒரு நொடி கூர்ந்து
நோக்கிவிட்டு பின் பிரணாவின் கேள்வியை கேட்டும் கேளாதவனாய்
“அப்பா உன்னை அழைத்து வர சொன்னார்!!!!” என்றான் இம்முறை
உதிதாவை நேராக பார்த்து…..
“கொடுங்கோல் ஆட்சியாளர்!!!! ” என்று தன் அக்காவிற்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு அவளை விடுவித்தான் பிரணாவ்…..
முறைப்பாளோ?????
என்று பார்த்தால் உதிதா லேசாக சிரித்து தம்பியையும் அச்சிரிப்பில் சேர்த்திருந்தாள் …
இருவரும் சிரிப்பதை பார்த்து ‘வந்தால் வா இல்லாவிட்டால் உன் இஷ்டம்!!!’ என்பது போல் தன் தோளை குலுக்கி கொண்டு சென்ற அந்த ஆட்சியாளன் பின்னால் கிட்டதட்ட ஓடலானாள் உதிதா….
அக்காட்சியை கண்ட பிரணாவிற்கு யுகனின் மீது இருந்த வெறுப்பு பன்மடங்காக அதிகரித்து கொதித்தது…..
தன் உதிக்காவிற்கு மட்டும் இவனால்
ஏதாவது ஆபத்து வருமாயின் பிறகு வீட்டில் யார் சொல்வதையும் நான் கேட்க மாட்டேன்….
அந்த கொடுங்கோல் ஆட்சியாளனை கொல்லவும் தயங்க மாட்டேன்!!!!
அங்கு நின்றபடியே தன்னுள் சூளுரை மேற்கொண்டு வைத்தான் பிரணாவ்….