“எப்படி அவன் பின்னாடி போய் தானே ஆகனும்”., என்றார்.
“பாட்டி நான் ஏதோ சொல்லனும் ன்னு எதிர்பார்க்குறீங்க., என்ன னு நீங்களே சொல்லுங்க”.., என்றாள்.
” டிரான்ஸ்பர் வந்தா அப்படியே தனியா போயிருவ இல்ல”., என்றாள்.
“இங்க அம்மா அப்பா., எல்லாம் இருக்காங்க., எல்லாரும் சேர்ந்து தான் கிளம்பனும்.., டிரான்ஸ்பர் அப்படின்னா நாங்க குடும்பத்தோடு சேர்ந்து தான் போவோம்., தனியா எல்லாம் போக மாட்டோம்”., என்றாள்.
தேவகிக்கு மனது நிம்மதியாக இருந்தது போல உணர்ந்தார். ‘இந்த பாட்டி மேல ஏதாவது பேசி விட கூடாதே’ என்று ஸ்வேதா ஒருபுறம் நகம் கடிக்க நந்தனும் திரும்பி அமர்ந்தவன் நிவேதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…
ஸ்வேதாவின் மகன் நிவேதாவின் மடியில் இருக்க அவனோடு கையை பிடித்து விளையாடியபடியே பாட்டிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்…
“எல்லாம் நல்லா தான் பேசுவியமா., மாமியார் கூட மாமனார் கூட குடும்பத்தோட நாங்க ஒன்னாதான் இருக்கோம் ன்னு சொல்லுவீங்க.., கல்யாணம் முடிஞ்ச புதுசுல அப்படி தான் இருக்கும்., அப்புறம் கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு பிரச்சனை இல்லாமலா போகும்..,
அதுக்கப்புறம் மாமியார் மருமகள் பிரச்சினை வரும் போது தான் தெரியும்.., அதுக்கு அப்புறம் தெரியும் மாமியார் மருமக எப்படி ஒரே வீட்ல இருக்கீங்களா.., வேற வேற வீட்டுக்கு போறீகளா ன்னு., ஒரே சமையலா வேற வேற சமையலா ன்னு”., சொன்னவுடன்..,
நிவேதாவுக்கு சற்று எரிச்சல் வந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி “எதுக்கு சண்டை வரப்போகுது”., என்றாள்.
“ஆமா இப்ப உள்ள பிள்ளைகள எதுவும் ஒரு வார்த்தை சொல்லிட்டா., உடனே தான் மூஞ்சிய., திருப்பிட்டு மாமியார் கொடுமை ன்னு சொல்லுதுகளே”., என்று சொல்லவும்.
“ஏன் பாட்டி வீட்ல அம்மா இருந்தா திட்ட மாட்டாங்களா.., எங்க அம்மா எல்லாம் கம்பை எடுத்துட்டு என் பின்னாடி சுத்தவே செய்வாங்க., அப்படி கம்பேர் பண்ணும் போது அத்தை திட்ட தானே செய்வாங்க ன்னு நினைத்து நான் சந்தோஷப்படுவேன்.., போவீங்களா”., என்றவள்.
“நா எங்க அம்மாட்ட சண்டை போட தான் செய்வேன்., அடுத்த நிமிஷம் அம்மா பசிக்கு ன்னு போய் நின்னா எங்க அம்மா சிரிச்சிட்டே சாப்பாடு தர தான் செய்வாங்க.., அம்மாட்ட கோவிச்சுக்கிற மாதிரி தான் இதுவும்..,
நான் எதுக்கு சண்டை போடணும்., நான் ஏதாவது தப்பு பண்ணினா., கண்டிப்பா திட்டுவாங்க”.., என்று சொல்லவும்.
அங்கு தேவகிக்கு கண்கலங்க தொடங்கிவிட்டது., கடவுளே இப்படி ஒரு மருமகளை கொடுத்ததற்கு நன்றி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
‘இந்த பெரியம்மா சும்மா இருக்காமல் சும்மா இருக்குறவளையும் சண்டை இழுத்து விடும் போலியே., அந்தளவுக்கு பேசுதே’ என்று மனதிற்குள் நினைக்கும்போதே வெளியே உள்ளவர்களும்
“நீங்க பேசின கதையெல்லாம் போதும் பாட்டி” என்று ஆளாளுக்கு பேசத் தொடங்க.,
“இதுல என்ன இருக்கு கேட்கத்தானே செய்தேன்”., என்று பேசிக் கொண்டிருந்தார் பாட்டி….
அதற்குள் காலை உணவு தயாராக அனைவரும் சாப்பிட அமரவும்., பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
நிவேதா கிச்சனில் நின்று கொண்டு அவர்கள் கேட்பதை மட்டும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.,
“நீ சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட மா”., என்று சொன்னதற்கு
“இல்லத்த உங்க கூட சாப்பிடுகிறேன்”., என்று சொல்லிவிட்டாள்..
அப்போதும் பாட்டி தான் “ஏத்தா பேத்தி பொண்ணு இங்க வா”., என்று அழைக்கவும்.,
கிச்சன் வாசலில் இருந்து எட்டிப் பார்த்தவள் “என்ன பாட்டி”., என்றாள்.
“உன் புருஷன் கூட உக்காந்து சாப்பிடு” என்றார்.
“இல்ல பாட்டி., நீங்க தானே காபிக்கே முதல்ல அவங்களுக்கு கொடுக்கனும் சொன்னீங்க.., அது தான் முதல்ல அவங்க சாப்பிடட்டும்., நான் அப்புறமா அத்தை கூட சாப்பிட்டுக்குறேன்”., என்றாள்.
“ஏன் இப்ப சாப்பிட்டா என்ன.., அவன் கூட உக்காந்து சாப்பிடு., அப்ப தானே அவனுக்கு என்ன பிடிக்கும்., என்ன பிடிக்காது ன்னு., உனக்கு தெரியும்”.,என்றார்
“அதெல்லாம் கத்துக்கிறேன் பாட்டி அத்தை ட்ட இருந்து கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்”., என்று சொன்னவுடன்.
“ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டா., கூட ஒரு இட்லி உள்ள போகும் இல்ல” என்றார்.,
“பாட்டி உங்க பேரன் தனியா உட்கார்ந்தாலே நல்ல தான் சாப்பிடு வாங்க., நான் அப்புறமா தனியாவே சாப்பிடுகிறேன்”., என்று சொல்லவும்.
பாட்டிதான் “பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கனும்.., அப்போ தான் புருஷனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று., பொம்பளைக்கு தெரியும்”., என்று சொல்லவும்.,
“பாட்டி இருக்குறது இட்லி மட்டும் தான்.., அதுல எந்த இட்லியை பிடிக்கும்.., எந்த இட்லியைப் பிடிக்காது.., என்று எப்படி கண்டுபிடிக்க முடியும்.., எல்லாம் ஒரே பாத்திரத்தில் வெந்த இட்லி தானே., நீங்க வேற சும்மா சொல்லிட்டு இருக்காதீங்க பாட்டி.., தாத்தாக்கு எந்த இட்லி பிடிக்கும்., இந்த இட்லி பிடிக்காது., இப்ப நீங்க சொல்லுங்க பார்ப்போம்”.., என்று கேட்கவும்.
“அடி ஆத்தே ஒரு வார்த்தை பேச முடியாது போலயே”., என்று பாட்டி சொல்லிக்கொண்டே இருக்க.,
அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் யாரும் எதையும் கண்டுகொள்ளாத மாதிரி இருந்து கொண்டனர்….
பேச்சும் சிரிப்புமாக குடும்பத்தினருடன் கழித்துவிட்டு இருநாள் சென்றவுடன் திண்டுக்கலுக்கு அழைத்துச்செல்ல வீட்டினர் வந்திருந்தனர்., அங்கு இரண்டு நாட்கள் இருந்து விட்டு வருவதாக பேச்சு.., அதன் பிறகு இங்கு வந்தவுடன் மறுபடி லீவு முடியும் இருவரும் அவரவர் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்ற சூழல்.,
திண்டுக்கல் வந்து சேர்ந்த தம்பதியரை குடும்பத்தினர் உறவினர் என அனைவரும் வரவேற்று உபசரித்தனர்.,
ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே நந்தன் நிவேதிதாவின் அருகில் வந்து நெருக்கமாக அமர்ந்தான்.
“என்ன அங்க இருந்த வரைக்கும் நல்ல பிள்ளையா இருந்தீங்க., இங்க வந்த உடனே மாறிட்டீங்க”., என்று முணுமுணுத்த படி சொல்லவும்.,
“என்ன மாறிட்டேன் பூனைக்குட்டி”., என்றான்.
“பக்கத்தில் வரக்கூடாது சொல்லியிருக்கேன்ல”., என்று சொன்னாள்.
“உட்கார்ந்தா டிஸ்டர்பா இருக்கா உனக்கு.., சொல்லு., உனக்கு நான் எப்ப எல்லாம் டிஸ்டர்ப் பண்றேன் ன்னு., கரெக்டா சொல்லனும்”.., என்று சொல்லவும்.,
“நான் இப்ப சத்தம் போட்டு கூப்பிடுவேன்”., என்றாள்.
“எங்க சத்தம் போடு கூப்டு., இப்ப கூப்டு உங்க அம்மா., உங்க அப்பா., உங்க சித்தப்பா சித்தி சொந்தக்காரங்க எல்லாத்தையும் கூட கூப்பிடு., நியாயம் கேட்போம்., இல்லை னா நானே கூப்பிடட்டுமா”.., என்று சொல்லவும்.
வேகமாக அவன் அருகில் இருந்தவள் எழுந்து பின் பக்கமாக சென்று விட்டாள்.
சற்று நேரம் பொருத்து ‘அடப்பாவி அப்படியே இங்கு வந்தபின் என்னை மிரட்டுறாங்களே’., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
சற்று நேரம் கழித்து எப்படியும் வீட்டிற்குள் சென்று தானே ஆக வேண்டும் என்று நினைத்தபடி உள்ளே வந்தவள்., அங்கு அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க இவள் வேகமாக அறைக்குள் நுழைந்தாள்.
அவள் நுழைவதை பார்த்துவிட்டு இவனும் மெதுவாக அவர்களிடம் தலையாட்டி விட்டு எழுந்து அவள் பின்னே செல்ல தொடங்கினான்.
வாசலில் நின்றுகொண்டு “இப்ப உள்ள வந்தீங்கன்னா இருக்கு.., அப்படியே வெளியே போய் ஹால்ல உட்காருங்க.., இல்லாட்டி என் தம்பியைக் கூட்டிட்டு இன்னொரு ரூம்ல போய் உட்காருங்க”., என்று சொல்லி அவனை பிடித்து தள்ள முயற்ச்சிக்க..,
அதே நேரம் அந்தப் பக்கம் நிவேதாவின் அம்மா ஏதோ வேலையாக வருவதை கண்ட நந்தன் “என்னை கீழே தள்ளிறாத., நான் சரியாக பேலன்ஸ் பண்ணல.., நீ எதுக்கு இப்படி பிடிச்சி தள்ளுற”., என்று அவர் காதுக்கு கேட்கும்படி ஆகவே சொன்னான்.
வேண்டுமென்றே சொன்னது தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்., அதே நேரம் நிவேதாவின் அம்மாவும் அருகில் வந்து விட்டார்.,
அங்கு வரும் போதே நந்தனின் சத்தம் அவருக்கு லேசாக கேட்க.., நந்தன் வேறு வாசலில் நிற்பது தெரியவும்., இவளும் தற்செயலாக அவனை போங்க என்று சொல்லி கை நீட்டி பேசிக் கொண்டிருப்பது தெரியவும்.., வேகமாக வந்தவர்.
“நீங்க இருங்க தம்பி.., நீங்க உட்காருங்க ஏதாவது சாப்பிடுறீங்களா.., ஏதாவது கொண்டு வரவா”., என்று அவனை உபசாரமாக கேட்டவர்.,
“நிவி என் கூட வா”., என்று கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றவர் நேராக கிச்சனுக்கு அழைத்துச் சென்றார்.,