“அய்யோ இதெல்லாம் யார் சொன்னா” என்று கேட்டாள்.

“நேத்து உங்க அம்மா சொன்னாங்க” என்று சொல்லவும்.

“உங்க அண்ணனுக்கு தெரியுமா..,  வேற யாருக்கெல்லாம் தெரியும்”.,  என்றாள்.

“அண்ணனுக்கு சொல்லியாச்சு., அவன் தானே மிதி வாங்கப் போறான்., வேற யாருக்கும் தெரியாது”., என்று சொல்லிவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டு சென்றாள்.

இவள் உள்ளே செல்லும் போது  நந்தன் உள்ளே இல்லை என்ற தைரியத்தில் போனை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு தன்னுடைய உடைகளை அடங்கிய பையை பார்த்தாள்.,

நைட் டிரஸ் இருக்குமான்னு தெரியலையே என்று பார்த்தவள்., இருந்ததை எடுத்து மாற்றிக் கொண்டு படுத்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் போதே நந்தன் வந்துவிட அமைதியாக ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.

உள்ளே வந்தவன்  கதவை தாழிட்டு அவன் சுற்றுமுற்றும் பார்க்க இவளோ அவனை திருதிரு என்று பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்து..,

“ஏதாவது  சேட்டை பண்ணி வச்சிருக்கியா  உள்ள”என்று கேட்க

“நான் இப்பதான் வந்தேன்”., என்றாள்.

“அப்ப ஓகே”., என்றபடி அங்கு வந்து அமர்ந்தான்., “வந்து உட்காரு” என்று அழைத்து தன் அருகே அமர்த்திக் கொண்டான்.

பின்பு பக்கத்தில் கையை பிடிக்க போக அவள் “நேத்து எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணி கொடுத்தீங்க”., என்றாள்.

“என்ன பிராமிஸ்”., என்றான்.

” நீங்கதான சொன்னீங்க.,  நீ என்ன கேட்டாலும் செய்வேன்”.,என்று சொல்லவும்.

“ஆமா இப்பவும் தான் சொல்றேன்., நீ என்ன கேட்டாலும் செய்வேன்., சொல்லு என்ன”., என்று கேட்டான்.

“நிஜமா”., என்றாள்.

“நிஜமா., அதான்  பிராமிஸ் பண்ணிட்டேனே.., என்ன சொல்லு”.,  என்று கேட்கவும்.,

“இல்ல என்னோட ஸ்டேடிஸ் முடியிற வரைக்கும்., நீங்க தள்ளியே இருங்க”., என்றாள்.

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு.,  நேற்று ஷியாம் சொன்னது தான் ஞாபகம் வந்தது.., ‘இதுக்கு பேரு தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறது தான்’.,  என்று இருந்தாலும் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்.., “ஓகே தொந்தரவு பண்ணல” என்று சொல்லவும்.

“அப்புறம் உங்க வீட்ல என்ன சொல்லி அனுப்பினாங்க., மேலே கொண்டு வந்து விடும் போது என்ன சொன்னாங்க” என்றான்.

” ஒன்னுமே சொல்லலையே”., என்றாள்.

“நிஜமா” என்று அவன் கேட்க..,

“நிஜமா ஒன்னும் சொல்லல” என்று சொல்லவும்.,

அவனும் “நம்ப முடியலையே இந்த கால்ல விழ சொல்றது., அத பத்தி சொல்லலையா”., என்றான்.

“ஹலோ நான் எதுக்கு உங்க கால்ல விழணும்.., நீங்க வேணா என் கால்ல விழுங்க”., என்றாள்.

“அது சரி” என்றவன் “காலையிலே தான்  விழ வச்சுட்டாங்களே.., மெட்டி போடச்சொல்லி”., என்றான்.சற்று நேரம் காலையில் நடந்தவற்றை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

“என் மேல் ஏதும் கோபமா இருக்கா” என்று கேட்டான்.

“இவளோஎதுக்கு”., என்றாள். “இதே தான் காலையும் கேட்டீங்க எதுக்கு”., என்றாள்.

“நேத்து மொட்டை மாடியில் நடந்த விஷயத்தை வைத்து”.,  என்று தயங்கி சொல்லவும்.,

“இல்லை”., என்றாள்.

“அந்த லெட்டர்” என்று கேட்கவும்..,

“நான் வாசிக்கலை., பட் பத்திரமா தான் இருக்கு.., அந்த பொண்ணு இதே மாதிரி வேற ஏதும் பிரச்சனை பண்ணினா.., அப்போ உதவும்”.., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இனியும் பிரச்சனை பண்ணுவாங்க ன்னு நினைக்கிறீயா” என்றான்.,

“எனக்கு தெரியல.., ஆனா மே பி வாய்ப்பு இருக்கு”., என்று சொல்லவும்.

சற்றுநேரம் இருவருக்கிடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமலிருந்தது..,

அதன்பிறகு அவள் தான் மெதுவாக  “ஒன்னே ஒன்னு கேட்கணும்”., என்று சொல்லவும்.,

“என்ன சொல்லு”., என்றான்.

“இல்ல எனக்கு இந்த மாதிரி புடவையோட தூங்கி எல்லாம் பழக்கம் கிடையாது.., நான் நைட் டிரஸ் மாத்திக்கணும்”., என்று சொல்லும் போது

“மாத்திக்கோ., இதெல்லாமா கேட்பாங்க”., என்றான்.

“நைட் பேண்ட்ஸ் தான்”.., என்று சொல்ல.,

“போட்டுக்கோ., இங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க”.,  இதுல யாரு சொல்றதுக்கு என்ன இருக்கு.., எங்க ஸ்வேதா அப்படித்தான் போடுவா.., இப்பதான் பேபி வந்ததுக்கு அப்புறம் தான் மாறியிருக்கா.,  உனக்கு எது பிடிக்குமோ போட்டுக்கோ.,  யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க…,

யாரும் எதுவும் கண்டுக்க மாட்டோம்.,  அதனால உன் இஷ்டம் தான்.., என்று சொல்லி அவளை உடை மாற்றி கொள்ள சொன்னான்.,

அவள் குளியலறைக்கு உடையோடு சென்று மாற்றிக் கொண்டு வந்த பிறகு அவனுக்கு நேற்று பார்த்த குட்டி பிள்ளை போல்  தான் தெரிந்தது.., “இப்ப தான் பூனைக்குட்டி மாதிரி இருக்க” என்று சொல்லவும்.,

இவள் அவனை முறைக்க அவனும் “அட்லீஸ்ட் சாரி கட்டும் போது., கொஞ்சம் போது பெரிய பொண்ணு மாதிரி தெரியுற.,  இந்த மாதிரி ட்ரெஸ்லாம் போட்டா.,  ரொம்ப குட்டி பிள்ளையா தெரியுது..,  என்றான்.

அவனிடம் “நீங்க கீழே படுத்துக்கோங்க., நான் கட்டிலில் படுத்துக்கிறேன்”., என்று சொன்னாள்.

“ஓய்.. நான் ஏன் கீழே படுக்கனும்”.,  என்று கேட்டான்.

ஆமா நான் தான் உங்ககிட்ட சொன்னேன் இல்ல.., ஸ்டடிஸ் முடியுற வரை தள்ளி இருங்க ன்னு”., என்றாள்

“அதுக்கு நான் ஏன் கீழே படுக்கனும்.., நான் கட்டில்ல படுப்பேன்., என்று சொல்ல.,

“அது எப்படி நான் தான் ரூமுக்கு பர்ஸ்ட் வந்தேன்., அதனால கட்டில் எனக்கு தான்”., என்றாள்.

“இவ்வளவு நாள் அது என்னோட கட்டில்., அதுனால எனக்கு தான்” என்றான்.

அவள் அமைதியாக இருக்க…,

“ஏய் பூனைக்குட்டி.. என்னாச்சு..,
அதெல்லாம் பிராமிஸ் மீற மாட்டேன்”., என்றான்.,

“இல்ல அது வந்து”.,என்று தயங்கவும்.

“தெரியும் தெரியும் நீ மிதிப்ப னு சொன்னாங்க., அதுக்கு நான் ஒரு ஐடியா யோசித்து வைத்து இருக்கேன்., நீ  போய்   படுத்துக்கோ”., என்று சொன்னான்.

ஒரு பக்கமாக சரிந்து கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்தவளை பார்த்துக்கொண்டே அவன் சென்று உடைமாற்றி விட்டு வந்து மறு ஓரத்தில் படுத்தவன்..,

தன் கால்களை கொண்டு அவள் கால்களை மட்டும் அழுத்தமாக வளைத்துப் பிடித்துக் கொண்டான்.,

“நீங்க இப்ப தான் ப்ராமிஸ் பண்ணி கொடுத்தீங்க.,  ஆனா இப்ப இப்படி கால வச்சு கால பிடிக்கீங்க”.,  என்று சொன்னாள்.

நீ மிதிப்ப இல்ல..,  இப்ப எப்படி மிதிப்ப..,  மிதிக்க மாட்ட இல்ல அதுக்கு தான் தூங்கு”.., என்று சொன்னான்.

“அவளோ இல்லை., எடுங்க எனக்கு கூசுது”.,என்றாள்.

“வேற வழியே இல்ல இப்படி தான்”., என்று சொல்லவும்.,

வேறு வழியின்றி அமைதியாக இருந்தாள்.

சற்று நேரத்தில் விளக்கை அணைத்து விடிவிளக்கை எரிய விட்டவன்.

அவன் மெதுவாக அவள் இடுப்பில் கையை போட்டபடி.., அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொள்ள..,

“இவளோ அவசரமாக ஏன் பக்கத்தில் வர்றீங்க போங்க.., இல்லை னா கையை பிடிச்சு இழுத்தீங்க ன்னு கத்திருவேன்”., என்று சொன்னாள்.

“நீ கத்தினா உன் வாயை வேற விதமா அடைப்பேன் பரவாயில்லை யா”., என்றான்.

அவளுக்கோ சத்தமே வர வில்லை.,  அவனும் “பூனைக்குட்டி கால வச்சு மிதிப்ப.., கையை வைச்சி தள்ளி விட்டுட்டா என்ன செய்ய அது தான்”.., என்று சொல்லவும்.

“இல்ல வேண்டாம் எடுங்க”., என்று சொல்லிக்கொண்டே இருக்க..,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பூனைக்குட்டி தூங்கு”., என்றபடி அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.,

அவளுக்குத்தான் கூச்சமாக இருக்க இறுக்கமாக கண்ணை மூடியபடி படுத்திருந்தாள்.,

“பிராமிஸ் மீற மாட்டேன்”. என்று காதருகே மீசை உரச சொல்லவும். கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

சற்று நேரத்தில் அப்படியே உறங்கி போய்விட..,

காலையில் எழுந்தவனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை..,  இரவெல்லாம் காலை தொடாதே கையைத் தொடாதே என்றவள்..,

இப்பொழுது எழும்பும்போது அவன் தோளில் தலை வைத்து., அவன் மேல் கையை போட்ட படி தூங்கிக்கொண்டிருந்தாள்.,

அவனுக்குத்தான் சிரிப்பு வந்தது.,  அம்மணி பெரிய ஆளு மாதிரி ‘ஐயோ என் கால பிடிக்காத., என் கையைத் தொடாதே.,  என்று சொல்லிட்டு இப்ப படுத்திருக்குறத பாரு’ .,  என்று நினைத்தபடி மெதுவாக அவள் தூக்கம் கலையாத வாரு., அவளை நகர்த்தி படுக்க வைத்து விட்டு படுத்துக் கொண்டான்.

காலை விடியலில் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.., கூடல் மட்டும் வாழ்க்கை இல்லை.,  மனம் நிறைந்த வாழ்க்கை துணை அருகில் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டான்.,

கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்கு பிறகு“.,

                                       – சார்லி சாப்ளின்.