மதிய உணவு வேளையில் இருவரையும் அமர வைத்து உணவு பரிமாறும்போது ஒருவருக்கொருவர் ஏதாவது இனிப்பை ஊட்டிக் கொள்ளுங்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள்.
இவள் முதலில் மாட்டேன் என்று சொன்னாலும் அனைவரும் வற்புறுத்த வேறு வழியின்றி அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்களில் தெரிந்த குறும்பில் சற்றே பதட்டம் வந்தாலும்.,
இவள் ஸ்வீட் எடுக்கப் போக ஸ்வேதாவோ., “எங்க அண்ணனுக்கு இந்த ஸ்வீட் தான் பிடிக்கும்” என்று ஒரு ஸ்வீட்டை கொண்டு வந்து வைத்தாள்.
அவளும் சரி என்றபடி எடுத்து மொத்தமாக அவன் வாயில் வைத்து விட்டு விட்டாள்., அவள் விரல் படாத அளவிற்கு.,
ஆனால் அவனோ ஸ்வீட் கொடுக்க வரும் போது., இவள் “எனக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்காது” என்று சொல்லியிருக்க.,
அவன் ரொம்ப பிடிக்காது போல என்று நினைத்து சிறிய துண்டாக எடுத்து அவள் வாயின் அருகில் வைக்கவும்.., விரலோடு சேர்த்து லேசாக கடித்த போது அவனோ “என் கையை கடிக்குற”., என்றான்.
“நான் ஸ்வீட் பிடிக்காது ன்னு., சொன்னேன்., அதுக்காக இவ்வளவு கம்மியாவா தருவீங்க.., கஞ்சூஸ்”., என்று சொன்னாள்.,
நண்பர்களோ., “முதல் நாளே பொண்டாட்டி ட்ட நல்ல பேர் வாங்குற போ” என்றனர்.
அவனோ “அவ ஸ்வீட் பிடிக்காது ன்னு சொன்னா இல்ல” என்று காரணம் சொன்னான்.
தன் இலையிலிருந்து உணவை உருட்டி அவள் வாயருகே கொண்டு போக.., அவளோ “ஐயோ இவ்வளவு வேண்டாம்” என்று சொல்லி “இதில் பாதி மட்டும் எடுத்துக்கிறேன்” என்று சொல்லி கையால் எடுக்க போக..,
அவன் மறுபடியும் சிறிய அளவாக எடுத்து அவள் வாயில் ஊட்டி விட்டான்.,
இந்த முறை அவன் விரலை கடிக்காமல் அவன் ஊட்டிய உணவை அவன் கண்ணை பார்த்து கொண்டே வாங்கிக் கொண்டாள்..
இன்னும் சற்று நேரத்தில் நிவேதாவின் வீட்டிற்கு சென்று வர வேண்டும் அதன் பிறகே நந்தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் என்று சொல்லிப் பேசிக் கொண்டிருக்கும் போதே..,
நேற்று வீட்டில் அவனிடம் சந்தேகம் கேட்ட பாட்டி இவர்கள் அருகில் வந்து உட்கார்ந்தார்.,
இங்கு நிவேதாவையும்., நந்தனையும் சுற்றி., அவர்கள் நண்பர்கள் குடும்பம் மட்டும் இருக்க..,
வீட்டு பெரியவர்கள் முக்கியமானவர்கள் என அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
பாட்டி வந்து அருகில் உட்கார்ந்த உடன் ஸ்வேதா பாட்டி எதுவும் பேசத் தெரியாமல் பேசி விடக் கூடாதே என்று அருகிலேயே அமர்ந்திருந்தாள்..
பாட்டியோ நிவேதா அருகில் அமர்ந்தவர் அவளுக்கு அறிவுரை வழங்க தொடங்கி விட்டார்., “சின்ன பிள்ளை ன்னு சொன்னா தேவகி., இன்னும் படிப்பு முடியலையோ., இந்த காலத்து பிள்ளைங்க மாதிரி புருஷன் பெயர்ச்சொல்லை கூப்பிடாதே.., “மாமா., மச்சான்., அத்தான்னு கூப்பிடணும்”., என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.,
“பாட்டி எப்படி மூன்றையும் சேர்த்து கூப்பிட.., நான் அப்படி இழுத்தா., ஒன்னு நான் கூப்பிடும் போது யாரும் பக்கத்தில் இருக்க மாட்டாங்களே., இல்ல னா., சொல்ல வந்த விஷயம் மறந்தரும்”., என்றாள் நிவேதா.,
“ஏ ஆத்தி அப்படியா கூப்பிடச் சொன்னேன்.., ஏதாவது ஒன்னு சொல்லிக் கூப்பிடணும் ன்னு சொன்னேன்”., என்று சொல்லவும்.,
“நீங்க தாத்தாவை எப்படி பாட்டி கூப்பிடுவீங்க”., என்று பதிலுக்கு கேட்டாள்.
பாட்டியோ “மாமா ன்னு கூப்பிடுவேன்., எனக்கு மாமா முறை தானே., இவன் உனக்கு மாமா முறை கிடையாது.., சும்மா மச்சான் கூப்பிடு”., என்று சொல்லவும்..,
பாட்டியோ உறவினரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தாத்தாவை காட்டவும்.,
“இப்ப எப்படி கூப்பிடுவீங்க”., என்றாள்.
“அந்த மனுஷனை இப்ப எப்படி கூப்பிட்டா என்ன”.., என்று சொல்லவும்.,
அது என்ன பாட்டி., நேரத்திற்கு மாத்தவா முடியும்.., கூப்பிட்டா எப்பவும் ஒன்னு போல தான் கூப்பிடனும்”., என்றாள்.
“இப்போ கூப்பிட்டா உடனே அந்தால ஓடி வந்துருவாரு”., என்று சலிப்போடு பாட்டி சொல்ல.,
“இங்க இருந்து நீங்க கூப்பிட்ட., உடனே தாத்தா ஓடி வர்றத மட்டும் பார்க்குறீங்க” என்றாள்.
“அந்த மனுஷனுக்கு என் மேல பாசமே கிடையாது., என்னத்த கல்யாணம் முடிச்சு என்னத்த வாழ்ந்தேன்., பார்க்க சிவாஜிகணேசன் மாதிரி இருக்கவும் பொசுக்கு ன்னு., தலையாட்டிப்புட்டேன்., என் கெரகம் அப்படி மாட்டி வைச்சிட்டு” என்று பாட்டி பேசவும்.,
“பாட்டி உங்களுக்கு என்ன இப்படி சொல்லிட்டீங்க., முன்னாடி கூப்புடுற மாதிரி அப்படியே கூப்பிடனும்., இப்ப தாத்தா உங்கள திரும்பி பார்க்கனும்., அவ்வளவு தான”., என்று பாட்டியிடம் கேட்டவள்.,
அடுத்து ஏதோ சொல்லப் போகிறாள்., என்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க.., இவள் மெதுவாக பாட்டியிடம் “நீங்க அப்படி கூப்பிட்டா திரும்பலை னா., பாட்டி இப்போ நான் சொல்ற மாதிரி தாத்தா வ கூப்பிட்டு மட்டும் பாருங்க”.., என்று சொல்லி விட்டு “மாமா நீங்க எங்க இருக்கீங்க.., அப்படின்னு கூப்பிடுங்க பாட்டி”.., என்று சொல்லிக் கொடுத்தாள்.
“இப்படி கூப்பிட்டால் வந்துவிடுவாரா., அந்த கெழட்டு மனுஷனுக்கு காது கேட்காதே., எனக்கு வேற வெட்கமா இருக்கு” என்று சொல்லி விட்டு “எப்படி கூப்பிடனும் இன்னொரு தடவை சொல்லு” என்று பாட்டி சொல்லவும்.,
“பாட்டி நீ எப்பவும் கூப்பிடுற மாதிரி கூப்பிட்டுக்கோ.., பேசுற மாதிரி பேசிக்கோ.., இவ சொல்றா ன்னு கூப்பிடாதீங்க”.,என்று நந்தன் சொல்லவும்..,
நிவேதாவோ கூச்சப்பட்டு அவனிடம் இருந்து விலக முயல.,
“என்னடா இப்படி சொல்லிட்ட., பிள்ள வாயை பிடித்து அமுக்காதே., அவ என்ன சொன்னா, கூப்பிட தானே சொன்னா”., என்று சொல்லி பாட்டி நிவேதாவின் பேச்சு புரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஸ்வேதா தான் அப்படியே பேச்சை மாற்றி வேறு பேச்சுக்கு மாற்றி விட்டாள்.,
அதன் பிறகு அனைவரும் சேர்ந்து நிவேதாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு மறுபடியும் அவர்கள் உறவினர் எல்லாம் சேர்ந்து நிவேதாவை நந்தன் வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.,
தெருவில் உள்ள நல்ல நட்போடு குடும்பமாக பழகிய உறவினர் அனைவரும் வந்து நிற்க., அதிலு ம் வேண்டாதவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள்., அவர்கள் மட்டும் கண்டும் காணாமலும் வந்து நின்றார்கள்.,
ஆனால் அனைவரிடமும் அவர்களுடைய நல்ல பழக்கம் நன்றாகவே தெரிந்தது.,
ஆரத்தி எடுத்து முறைப்படி வலது காலை எடுத்து வைத்து நந்தனின் குடும்பத்தின் மருமகளாக நந்தனின் சரிபாதியாக வீட்டிற்குள் நுழைந்தாள் நிவேதா..
கேலியும் கிண்டலும் பேச்சும் சிரிப்புமாக இருந்தாலும் பெரியவர்கள் சொல்வதை மட்டும் சரியாக செய்து கொண்டிருந்தாள்., அதில் மட்டும் எந்த குறையும் வைக்கவில்லை.., அதில் எந்த விளையாட்டும் காட்டவில்லை…
உள்ளே வந்து அமர்ந்த பிறகு அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்க.., சற்று நேரம் புது இடம் என்று நினைவில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிவேதாவிற்கு குனிந்து பார்க்கும் போது தன் காலில் காலையில் அணிந்த மெட்டி படவும்.., காலையில் அதை போடும் போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது..
மெட்டி போட அவள் காலை அம்மி மேல் எடுத்து வைத்து மெட்டி போட்டு கொண்டிருக்கும் போதே அவளுக்கு சிரிப்பை அடக்க.., அதைக்கண்ட ஷியாம் அருகில் வந்து என்னமா என்று கேட்டான்.
“அண்ணா உங்க பிரண்டு என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறாரு” என்று சொல்லவும்.
ஸ்வேதாவிற்க்கும் சிரிப்பு வந்தது.., ஸ்வேதாவோ வேண்டுமென்றே “இன்னைக்கு ஒரு நாள் எல்லாருமே காலுல மெட்டி போடுற சாக்கில கால்ல விழுவாங்க”., என்று சொல்லவும்.,
சுற்றி இருந்த நண்பர்கள் கூட்டம் “அப்படி எல்லாம் கிடையாது.., வேணும்னா பாருங்க., நம்ம மச்சான் ஃபுல்லா காலுல விழப் போறான்., அது கன்பார்ம்”.., என்று சொல்லி கலாய்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.,
இப்பொழுது காலில் கிடந்த மெட்டியை பார்க்கும்போது அந்த ஞாபகம் தான் வந்தது..
அதன்பிறகு தெருவில் உள்ள நண்பர் குடும்பம் ஒவ்வொருவராக வந்து அவர்களை பார்த்து விட்டு வாழ்த்தியது..,
வீட்டில் பாலும் பழமும் கொடுத்து அவளை வீட்டில் விளக்கேற்ற சொல்ல அதையும் நல்ல பிள்ளையாக செய்துமுடித்தாள் நிவேதா…
அதன் பிறகு நிவேதாவின் குடும்பத்தினர் அவளை விட்டுவிட்டு இரண்டு நாள் கழித்து அவளை மறுவீடு அழைக்க வருவதாக சொல்லி விட்டு கிளம்பினர்.,
அவர்கள் கிளம்பும் வரை அவள் தம்பியின் கையை பிடித்தபடியே இருந்தாள்.
இருவருமே ஒரு வாரம் தான் விடுப்பு எடுத்து இருந்தனர்., அதன் பிறகு இவள் கல்லூரிக்கும் அவன் வேலைக்கும் செல்ல வேண்டுமென்று முடிவு செய்திருந்தனர்.
நிவேதாவின் அம்மாவோ “இங்க பாரு வாயை அடக்கிகோ சொந்த பந்தம் கூட்டமாய் இருக்கும் போது உன் வாய் துடுக்கு தனத்தை காட்டாத.., தனியா இருக்கும்போது பேசுறது வேற”.., என்று அறிவுரை வழங்கி விட்டு சென்றார்..
சற்று நேரம் சென்றவுடன் மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள் ஸ்வேதா.,
குளித்து உடைமாற்ற சொல்லியவள்., அவளை உணவு உண்ண அழைத்து சென்றாள். பின்பு அவர்களோடு சேர்ந்து உணவருந்தி விட்டு அவர்களுக்கான தனிமையான நேரத்திற்காக மாடியில் அழைத்துக் கொண்டு வந்து ஸ்வேதா விடவும்..,
ஸ்வேதாவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்., ஸ்வேதாவிற்கு சிரிப்புதான் வந்தது.., இருந்தாலும் அவளிடம் ஒன்னும் இல்ல என்று சொல்லி ஆறுதல் படுத்தி விட்டு..,
“நீங்க தூக்கத்தில் ரொம்ப மிதிப்பிங்கலாமே., எங்க அண்ணன் பாவம் பார்த்து மிதிக்க.., கீழே தள்ளி விட்டுருவீங்க ன்னு சொன்னாங்க.., அதுனால அதையும் மெதுவாக தள்ளி விடுங்க.., அடி பலமா படக்கூடாது”., என்று சொல்லி சிரிக்க அவளுக்கு வெட்கமாக போய்விட்டது.