ஷியாமோ அவனை பார்த்து “டேய் நான் வரும்போதும் எதோ பொண்ணு பார்க்கலை அப்படின்னு சொல்லி பேசிட்டு இருந்தீங்களே., என்னடா”., என்றான்.

நண்பர்களும் “ஆமாடா இவன் இன்னும் பொண்ண பார்க்கலை”., என்று சொல்லவும்.

“ஏன்டா.,  பொண்ண பாக்கலையா இதை முதல்ல சொல்லி இருக்கலாம் இல்ல.,  போட்டோ வாவது காமிச்சு இருப்பேன் இல்ல”., என்றான்.

” டேய் இப்போ நிச்சயத்தில் எடுத்த போட்டோ காட்டுடா”., என்றனர்.

“அது எதுக்கு நாளைக்கு நீ பொண்ண பார்த்துக்கோ”., என்று சொல்லவும்.

“டேய்., நாளைக்கு பாரு ன்னு., சொல்லிட்டு., நீ அந்த பொண்ணு கிட்ட எதுவும் போட்டு கொடுக்க மாட்டீயே”.,  என்றனர்.

“நான் எதுக்கு சொல்லனும்., இப்ப இவன் பார்த்து என்ன செய்யப் போறான்.,  இன்னும் கொஞ்ச நேரம் தானே.., இவ்வளவு நாள் பார்க்காமலேயே ட்ரீம்ல தானே சுத்தின.., இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே சுத்து”..,  என்று சொல்லிய படி அவன் கிளம்ப..,

“அநியாயம் பண்ணுற”., என்றான்.

“டேய்., போன் நம்பர் கொடுத்தும் நீ பேசாமல் இருந்தா யார் பொறுப்பு… அவனவன் போன்ல கடலை சாகுபடியே முடிக்கான்., நீ பேசி இருந்தா போட்டோ அந்த பொண்ணுட்டயே வாங்கி இருக்கலாம்”., என்றவன்.

அவனைப்பார்த்து மறுபடியும் சிரிக்க.,  “என்னடா”என்றான் நந்தன்.

“இல்லை சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது., ன்னு கேள்விப்பட்டு இருக்கேன் டா மாப்ள.., ஆனால் இப்ப”.., என்றான்.

அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் “என்ன தான்டா  சொல்லுற” என்று கேட்டான்.

“நாளைக்கு தெரியும் அதுவும்” என்று சொல்லிவிட்டு போனான்.,

“என்னடா ஆளாளுக்கு நாளைக்கு தெரியும்., நாளை தெரியும் ன்னுட்டு போடுறாங்க”..,  என்று சொன்னபடி அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினர்.,

நிவேதா  கீழே வரவும்.,  அதற்குள் தோழிகள் வர  அவசர அவசரமாக புடவையை மாற்றியவள்., அந்த லெட்டரை கையில் எடுத்தவள் அதை தற்சமயம் வாசிக்க மனமில்லாமல் அவளுடைய பையில் பத்திரப் படுத்தினாள்.,  யாரிடமும் சொல்லவில்லை.., ஆனால் ஷ்யாம் தன் மனைவியிடமும்.,  நந்தனின் அம்மா அப்பாவிடம் மட்டும் நடந்த விஷயத்தை சொல்லியிருந்தான்.

“யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொன்னான்., அவர்களும் சரி என்று புரிந்து கொண்டனர்.,

ஆனால் நிவேதாவை இதுவரை பார்க்கவில்லை என்று தெரிந்தபிறகு அனைவரும் அவனை கலாய்க்க தொடங்கியிருந்தனர்.,

கீழே இறங்கி வந்தவனிடம் கிண்டலும் கேலியுமாக அனைவரும் பேசி அவனை கலாய்த்து கொண்டிருந்தனர்.,

அப்போது தான் ஷ்யாம் நிவேதா இருந்த அறைக்கு வந்து அழைக்கவும்.,  தோழியிடம் சொல்லிவிட்டு அவனிடம் வந்த நிவேதா கேட்டாள். “அண்ணா என்ன பிரச்சனை” என்று கேட்டாள்.

ஷியாம் அவளிடம் எந்த விஷயத்தையும் மறைக்காமல் அனைத்தையும் சொன்னான்.,

“அவங்க பேசிட்டு இருக்கும் போது நீங்க  எப்படி வந்தீங்க அண்ணா., கரெக்டா மாடிக்கு வந்தீங்க”., என்றாள்.

“நீ மாடிக்கு போய் கொஞ்ச நேரத்துல இந்த பசங்க எல்லாம் மாடிக்கு போனாங்க..,   இவனுங்க எதுக்கு அவசரமா போறாங்க ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.., அப்ப  தற்செயலா பார்த்தேன் அந்த பொண்ணு வெளியே இருக்கும் படி வழியா  மாடிக்கு போயிட்டு இருந்துச்சு..,

அந்த பொண்ணு மாடிக்கு ஏறவும்.,  நீ மாடிக்கு போனீயே., எதுவும் பிரச்சனை வரக்கூடாது ன்னு சொல்லிட்டு தான்., உள்வழியா மாடி ஏறினேன்., அப்ப தான் ஸ்வேதா போன் பண்ணி அந்த பொண்ணு வந்து ரூம்ல உன்னத் தேடிட்டு போச்சுன்னா..,  போச்சே ன்னு தான் மாடிக்கு ஓடி வந்தேன்.., ஆனா அதுக்குள்ள நீ நல்ல கொடுத்திட்ட”.., என்று சொல்லவும்.

“நம்ம மேல தப்பு இருந்தா தானே நம்ம பயப்படனும்.., நம்ம மேல தப்பு இல்லயே.,  அப்புறம் எதுக்கு பயப்படனும்.,  ஏன் உங்க பிரண்டு இவ்வளவு யோசிக்காங்க”., என்று கேட்டாள்.

“அது தான் சொன்னேன் இல்லமா., கொஞ்சம் சரி இல்லாத ஆள்கள்”.,என்றான்.

“சரி விடுங்க., இது எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது.., சில லூசுங்க அப்படித்தான்.,  நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்”., என்று சொன்னவள்.

“விடுங்க ண்ணா., பார்த்துக்கலாம்”., என்றாள்.

“நந்தன் ரொம்ப நல்ல டைப் மா.,  இந்த லெட்டரை வச்சு எதும் பிராப்ளம் பண்ணிடாத”., என்று சொன்னான்.

“ஐயோ அண்ணா நான் வாசிக்க கூட இல்ல., தூக்கி உள்ள வைச்சிட்டேன்., நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.., பாத்துக்கலாம்,  அதெல்லாம் ஒன்னும் இல்ல ஜஸ்ட் ஜாலி, அவ்வளவு தான்”., என்று சொன்னாள்.

“சரிமா பாத்துக்கோ”., என்று சொல்லவும்.

“அண்ணா என் போட்டோ காட்டாதீங்க நாளைக்கு பார்த்துக்கட்டும்., உங்க ப்ரண்ட்” என்று சொன்னாள்.

அவனும் சிரித்தபடி “சரிம்மா”., என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இங்கு பொண்ணு வெளியே வருமா என்று நண்பர்கள் அடை காத்துக் கொண்டிருக்க.., சரியாக சம்பளம் கிம்பளம்  உள்ளூரிலும் வெளியூரிலும் ஒன்று என்று சொன்ன நண்பனின் மனைவியை அழைத்தவள்.,

அவருக்கு சில விஷயங்களை மட்டும் சொல்லிக் கொடுத்தாள். “அக்கா நீங்க சும்மா மிரட்டி வைங்க.,  ஒன்னும் இல்ல சும்மா ஜாலிக்கு தான்.., பிரண்ட்ஸ் ட்ட பேசினாங்க” என்று சொல்லி விஷயத்தை சொல்லி வைத்தாள்.

“ரெண்டு நாளைக்கு மிரட்டி விடுங்க”.,     என்று சொல்ல..,

அவளும் சிரித்தபடி “அது ஒரு லூசுமா.,  மனசுல எதுவும் வச்சுக்க மாட்டாங்க..,   நீ எதும் தப்பா எடுத்துக்காத.,  வளவளன்னு பேசுவாங்க மனசுல எதுவும் இருக்காது”.,  என்று சொல்லி தன் கணவனின் குணத்தை சொன்னவள்.,

“இருந்தாலும் நான் போய் நீ சொன்ன மாதிரி மிரட்டிட்டு வரேன்”என்று சொல்லி அவனிடம் வந்தவள்.

“ஆமா  மொட்டை மாடில வச்சு பேச்சு ரொம்ப பேசுறீங்க போல”.,  என்று கேட்டவுடன்.

அவனும் நிஜமாகவே பயந்து போய் “அய்யய்யோ அது இல்லமா ஜாலிக்கு”., என்று சொல்லி அவளிடம் சரணாகதி அடைய தயாராய் இருந்தான்.

“லெட்டர் பொண்ணு கைக்கு போயிருக்குமோ., ஆனா கொடுக்க மாட்டேன் ன்னு., அந்த பொண்ணு சொல்லுச்சே”., என்று பேசிக் கொண்டிருந்தனர்.,

‘எப்படியும்  இரவு உணவுக்காவது பெண்ணை உணவு உண்ணும் இடத்துக்கு அழைத்து வருவார்கள்’., என்று நினைக்க அவளுக்கான உணவை தோழியர் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றனர்.,

அவன் உறங்கச் செல்லும் வரை யார் பெண் என்று பார்க்காமலேயே சுத்திக் கொண்டிருந்தான்.,

ஒருமுறை நேரில் சென்று பார்த்து விடலாமே என்று நந்தனும்., நண்பர்களும் நினைக்கும் யாரையும் பார்க்க முடியாத அளவில் வீட்டினர் மறித்துக் கொண்டனர்..

நிவேதாவின் அம்மாவின் மூலமாக நிவேதா கட்டிலில் படுக்கும் போது மிதிக்கும் விஷயம் ஸ்வேதாவிற்கு  தெரிய.,

ஸ்வேதா ஷியாமிடம் சொல்ல..,  அவன் சென்று நந்தனை அதை சொல்லியே கூட கொஞ்சம் கலாய்க்க., நந்தன் மொத்தமாக அன்றைய தூக்கத்தை இழக்கும் நிலைக்கு வந்திருந்தான்.,  “டேய் சமாளிச்சுக்கிறேன் டா.., நீ ஏன்டா இப்படி கிண்டல் பண்ணுற”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்..,

இங்கு ஒருவன் இரவு முழுவதும் தூக்கம் வராமல் உருள..,  அங்கு நிவேதாவோ ‘சின்ன விஷயத்திற்கு எதற்கு பயப்பட வேண்டும்., தங்கை மேல் அதிக பாசம் போல., தங்கை வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற பயம் போல’.,  என்ற நினைப்போடு அவளும்  சற்று நேரமாவது தூங்கி எழ வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்ணை இறுக மூடி படுத்திருந்தாள்.

அங்கு மஞ்சரியோ யாரென்றே தெரியாத ஒரு பெண் தன்னை அடித்து விட்டாளே.., என்ற கடுப்போடு இவன் திருமணம் காலையில் நடக்குமா நடக்காதா..,  லட்டர் பெண்ணின் கையில் கிடைத்திருக்குமா.., ஒருவேளை திருமணம் நடந்து விட்டால்.., அதன் பின்பு என்ன செய்வது என்பதைப் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்..,

எப்போதும் ஒரு விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

உன் மனம் வலிக்கும் போது சிரி., பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை“..

                                     – சார்லி சாப்ளின்.