சற்று நேரத்தில் போயிருவோமா என்று யோசிக்கும் போது இவளைப் பற்றிய பேச்சி வரவும் அமைதியாக நின்றாள்..

அதற்குள் நண்பன் ஒருவன் “டேய் நீ வந்த உடனே தான் போய் பொண்ண பார்க்கலாம் நினைத்திருந்தோம்.., நீ பேசாம வந்து  மாடிக்கு வந்துட்ட., பொண்ணை எப்படா பார்க்கிறது” என்று கேட்டான்.

“கடுப்பேத்தாத நான் இன்னும் அந்த பொண்ண பார்த்தது கூட இல்லை”., என்று சொல்லவும்.

” என்னடா சொல்ற” என்று அதிர்ச்சியாக  நண்பர்கள் கேட்டனர்.

இவளோ ‘பாக்காம கல்யாணத்துக்கு எப்படி  சம்மதம் சொன்னாங்க’ என்ற யோசனையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘மச்சான் நான் உன்ன பாத்துட்டு தான் சம்மதிச்சேன்.., பாக்காம சம்மத்திக்கிற பழக்கம் நமக்கு கிடையாது’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தாள்..,

“என்னடா சொல்ற” என்று நண்பர்கள் கேட்டவுடன்.

இவன் போட்டோ பார்க்காத விஷயத்தை  சொல்லிக்கொண்டிருந்தான்.,

அதை கேட்ட உடனே அவளுக்கு சிரிப்பு வந்தது.,  ‘ஓகே அப்ப யாரும் நம்பல பார்க்கல.., சத்தம் இல்லாமல் போய் எக்ஸ்க்யூஸ் மீ சொல்லிட்டு நகண்டு போகலாம்’.., என்று சொல்லி மறைவில் இருந்து வந்தவள்.,

அவர்களிடம் செல்வதற்குள் நண்பர்களில் ஒருவன் “டேய் நீ எதுக்கு இந்த எதிர் வீட்டு  பிசாசு கெல்லாம் பயப்படுற.,  அவனவன் ஊருக்கொன்னு வச்சிட்டு  சுத்துறான்., பெரிய பெரிய வேலையில் இருக்கிறவன் எல்லாம் சம்பளத்துக்கு ஒன்னு., கிம்பளத்துக்கு ஒன்னு னு வைச்சுருக்கான்”..,  என்று சொல்லவே நிவேதாவிற்க்கு கோபம் வந்தது.,

அதற்குள் நந்தனோ  “வாய மூடிட்டு இருடா., என்ட்ட அடி வாங்கிட்டு போயிராத.,  எவனோ எப்படியோ போறாங்க..,  எல்லாரும் சாக்கடையில் போய் விழுவாங்களா”., என்று சத்தம் போட்டான்.

அதேநேரம் நிவேதாவும் சற்று அருகில் வந்திருக்க அனைவரும் திரும்பிப்பார்த்தனர்.

அவர்கள் நண்பர்களில் ஒருவன் “உன்  வாயை வைத்துக் கொண்டு சும்மா இருடா”., என்றான்.

அருகில் வந்த உடனே லேசாக படபடப்பு இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நின்றாள்.

“யாருமா நீ” என்று கேட்கவும்.,

கேட்டவனை முறைத்த படி “நீங்க எல்லாம் யாரு” என்றாள்.

“நாங்க  எல்லாம் மாப்பிள்ளை வீடு” என்று சொல்லவும்.,

பக்கத்தில் இருந்த மற்றொரு நண்பனோ “பொண்ணு வீடாமா”., என்று கேட்டான்.

திருதிருவென்று முழித்தபடி   தலையை மட்டும் ஆட்டினாள்…

“இங்க என்ன பண்ற” என்று மற்றொரு நண்பன் கேட்டான்.

“போன்ல பேசிட்டு இருந்தேன்” என்றாள்.

மற்றொரு நண்பனோ “போன் வந்தாலும் வந்துச்சு.., இந்த பொம்பள பிள்ளைகள் எல்லாம் போனும் கையுமாக சுத்துது.., யாருமா பாய்பிரெண்ட் ஆ”என்று கேட்டான்.

இவளோ அவனை நேருக்கு நேராக முறைத்தபடி., “ஹலோ என்ன என்னமோ பசங்க போன் யூஸ் பண்ணாத மாதிரி பில்டப் பண்ணுறீங்க., ஃபிரண்ட் னா அது பாய் ப்ரண்டா ன்னு கேட்குறீங்க., எந்த பிரெண்டுனு சொன்னா நீங்க நம்புவீங்க” என்று திருப்பி கேட்டாள்.,

“ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்க கைல போன் கொடுக்குற பெத்தவங்கள சொல்லனும்” என்றான் நந்தன்.

“ஹலோ யாரு ஸ்கூல் படிக்கிற பிள்ளை… நான் காலேஜ் வந்து ரொம்ப நாள் ஆச்சு”.., என்றாள்.

அவனும் அவளிடம் “பூனைக்குட்டி மாதிரி இருந்துட்டு பேச்சைப் பாரு” என்றான்.

அவளோ முறைத்தப்படி நிற்க..

அதே நேரம் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் சம்பளம் கிம்பளம் என்று பேசியவன்.,

“இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் அப்படி தான் டா..,  பாய் பிரண்டு இல்லாதவங்க யார் இருக்கா..,  அப்படி தான் பேசி இருக்கும்” என்று சொல்லவும்.

“அரிய கண்டுபிடிப்பு” என்று சொன்னவள்., “இதுக்கு ரொம்ப பீல் பண்ணுவீங்க”., என்றாள்.

“நான் எதுக்கு பீல் பண்ணனும்”., என்றான்.

“நீங்க இப்ப சொன்னீங்களே சம்பளம்., கிம்பளம் எக்ஸ்ட்ரா., எக்ஸ்ஸட்ரா.., ன்னு.., சொன்னீங்க இல்ல” என்று கேட்டவள்., “உங்க ஒய்ஃப் பெயர் என்ன., உங்கள் பெயர் என்ன”., என்று அவனிடம் கேட்டாள்.

அவனும் “எதுக்குமா கேட்கிற”.,என்றான்.

“கீழே போய் முதல்ல அதை சொல்லுறேன்., அப்புறம் இருக்கு உங்களுக்கு”என்று சொன்னாள்.

” ஐயோ அம்மா தாயே தயவுசெய்து சொல்லிறாதேமா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..

மற்றொரு நண்பன்., “டேய் நீ எப்படிடா பொண்ணு வீடுன்னு சொல்லுற”என்று கேட்கவும்.,

அவனும் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நந்தன் அம்மா வந்து எல்லாத்தையும் திட்டிட்டு போனாங்க..,  பொண்ணு வீட்டுல எல்லாரும் கை நிறைய மெஹந்தி வெச்சு இருக்காங்க.., நம்ம வீட்டுல தான் யாரும் கையில் மருதாணி வைக்கல ன்னு.,  எல்லாரும் வைங்க ன்னு சொல்லிட்டு இருந்தாங்க..,  இப்ப எல்லாரும் அந்த வேலைய தான் பாத்துட்டு இருப்பாங்க ன்னு நினைக்கிறேன்”.,  என்று சொன்னான்..

இவள் அங்கிருந்து நகர போக., மற்றொரு நண்பனும் வாயை வைத்து சும்மா இருக்காமல் “பொண்ணு எப்படி இருக்கும் மா.,  பொண்ணு போட்டோ எதுவும் உன்கிட்ட இருக்கா மா”., என்று கேட்டான்.,

இவ்வளோ “எதுக்கு” என்றாள்.,

“இல்ல மாப்பிள பையன் பாவம்.,  பொண்ணு போட்டோ பார்க்கலை மா கொஞ்சம் காட்டிட்டு போறியா”.., என்று சொல்லவும்.,

“ஏன் கீழே போய் நேரில் பார்க்க வேண்டியது தானே”..,  என்றாள்.

நந்தனும் அமைதியாக அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதுவும் மற்றவர்கள் பேசும் போதும் அவ்வப்போது அவனை தீண்டிச் சென்ற அவள் கண்களை கண்டப் பிறகு தான்..,

“டேய் சும்மா இருங்கடா.., கீழே போய் எதுவும் சொல்லாதேமா.., நீ போமா” என்று ஒருவன் சொல்லவும்.,

இவள் அங்கிருந்து நகல போகவும்.,

நந்தனோ., “ஏய் பூனைக்குட்டி, நீ நிவிக்கு என்ன முறையாகனும்” என்றான்.

“என்ன முறையா இருந்தா என்ன”., என்றாள்.

“இல்ல நீ எனக்கு என்ன முறையாகனும் ன்னு தெரிஞ்சிக்க தான்”., என்றான்.

சிரித்தபடி “அதை நாளைக்கு தெரிஞ்சிக்கோங்க”., என்றாள்.

“ஏனோ., பூனைக்குட்டி சொல்லாதா” என்று கேட்டான்..,

“மியாவ்.. மியாவ்”.. என்று சத்தமிட்டு அங்கிருந்து கிளம்ப முயற்சிக்கவும்.,

நந்தனோ சத்தமாக சிரித்தபடி… “ஏய் உங்க வீட்டுல எல்லோரும் இப்படி தானா”., என்றான்.

அதேநேரம் மண்டபத்தின் வெளிப்புறம் உள்ள படி வழியாக யாரோ ஏறி வருவது தெரிய..,  அத்தனை பேரும் அங்கு திரும்பிப் பார்த்தனர்.

அந்தப் பக்கமாக அவர்கள் சொல்லும் எதிர்வீட்டு பிசாசு ஏறி வரவும்.., நந்தன்  பதட்டத்துடன் இவளைப் பார்த்தான்.,

“நீ கீழே போம்மா” என்று நண்பன் ஒருவன் சொல்ல..,  நந்தனும் “கீழ போ” என்று சொன்னான்.

அவள் “ஏன் எல்லாரும் பயப்படுறீங்க”., என்றாள்..

நந்தன் மெதுவான குரலில் “பூனைக்குட்டி மாதிரி இருந்துகிட்டு எல்லா வேலையும் பார்க்காதே..,  ஏன் எதுக்குன்னு கொஸ்டின் கேட்காத..,

ஒரு விஷயம் பெரியவங்க சொன்னா அதுல ஏதாவது அர்த்தம் இருக்கும் ன்னு யோசி.., நீ சின்ன புள்ள கீழே போ”.., என்று சொன்னான்..

“ஒஒ நீங்க எல்லாம் நூத்து கிழமா.., யாரப்பாத்து சின்னப்பிள்ளை ன்னு சொன்னீங்க”., என்றாள்.

“உன்னை பார்த்து தான் சொன்னேன் பூனைக்குட்டி., நீ  கீழே போ”., என்று சொன்னான்.

“நான் ஒன்னும் பூனை குட்டி இல்ல..,  என்னைய இப்படி சொல்லக் கூடாது”., என்றாள்.

“குட்டி பிள்ளைய அப்படி தான் சொல்லனும்”., என்றான்.

அவளோ அவனுக்கு சற்று தள்ளி தான் நின்றாள்.,  “இல்லையே உங்க தோளைத் தாண்டி தான் இருக்கேன்”.,  என்றாள்.

அவனும் சிரித்தபடி “வளர்ந்துட்டா போதாது..,  நீ சின்ன புள்ள மாதிரி இருக்க போ போ போ”.., என்று சொல்ல

இவளோ மனதிற்குள்., ‘சின்னபிள்ளைய கல்யாணம் பண்ணுறவங்கள என்ன சொல்லுவாங்க’ என்று யோசித்து கொண்டிருந்தாள்.

அதற்குள் அந்த எதிர்வீட்டு பெண்ணும்  வந்து சேர்ந்திருந்தாள்..

மதிப்புடைய வாழ்க்கையை தேடி கண்டு பிடிக்கலாம் உன் புன்சிரிப்பால்”.

                                      – சார்லி சாப்ளின்