அனைவருடனும் நல்ல நட்போடு அன்றே கைகோர்க்க தொடங்கியிருந்தாள் நிவேதா அவளது பேச்சும் துறுதுறுப்பும் அனைவருக்கும் பிடிக்க சந்தோஷமாக கிளம்பிவிட்டனர்.,
அங்கிருந்து பெண்ணை அழைத்துக் கொண்டு வரும் வழியில்., அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவது போலவே இல்லை.., ஏதோ அனைவரும் சேர்ந்து சுற்றுலா வந்தது போல பேச்சும் கலகலப்பும் சிரிப்புமாக திருமண மண்டபம் வந்து சேர்ந்தனர்….
அங்கு வந்த பிறகு மணமகளுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில் சொந்தங்களோடு இருக்க மற்றவர்கள் அருகில் இருந்த அறைகளில் தங்கினர்.
இவளோ அம்மாவிடம் சொல்லிவிட்டு “அம்மா பிரெண்ட்ஸ் எப்ப வர்றாங்க ன்னு., கேட்டுட்டு வந்துறேன்., ஒரு போன் மட்டும் பண்ணிட்டு வந்திடுறேன்”என்றாள்.
“எங்கடி போன் பண்ணுறேன் ன்னு., போன தூக்கிட்டு போற” என்று கேட்டார்.
“மொட்டை மாடியில் போய் பேசிட்டு வாறேன்”., என்று சொல்லி மாடி நோக்கி சென்றாள்.
அவள் செல்வதை பார்த்த ஷியாம் “எதுவும் வேண்டுமா” என்று கேட்டு வந்தான்.
“அண்ணா என் பிரண்டுக்கு மாடில போய் பேசிட்டு வரேன்”., என்று சொல்லி விட்டு அவசரமாக மொட்டை மாடிக்கு ஏறினாள்.,
கீழ்த்தளம் முழுவதுமாக உணவருத்தும் இடமாக இருக்க., அதற்கு மேல் இருந்த தளம் திருமணம் நடக்கும் மேடை., ஹால் என இருக்க அங்கேயே பெண் வீட்டினர் தங்க என்று ஒரு நான்கு அறைகளும்., மாப்பிள்ளை வீட்டினர் தங்க என ஒரு நான்கு அறைகளும் இருந்தது.,
அதற்கு மேல் மொட்டை மாடியும் படியேறி முடியும் இடத்தில் ஒரு சிறு அறையும் இருந்தது…
போன் பேச சென்றதில் அந்த மொட்டை மாடியில் இருந்த அறையின் ஒருபுறத்தில் வெளிப்பக்கமாக மறைவாக நின்று தோழிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.,
“எங்கடி வந்துகிட்டு இருக்கீங்க” என்று கேட்டாள்.,
“இதோ ஹாஸ்டல்ல இருந்து கிளம்பிட்டோம்., ஒரு 20 மினிட்ஸ் குள்ள மண்டபத்துக்கு வந்து விடுவேன்” என்றனர்.
“சீக்கிரம் வாங்கடி”., என்றாள்.
தோழிகளோ., “ஏன் உனக்கு தான் மாப்பிள்ளை வீட்டு ஆள்கள்., உங்க சொந்தக்காரங்க ன்னு ஒரு கூட்டமே இருக்குமே., ஏண்டி பொலம்பிட்டு இருக்க” என்று கேட்டாள்.
“ப்ளீஸ் வாங்கடி.., நீங்க எல்லாம் வந்தா தான் ஜாலியா இருக்கும்”., என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
“கல்யாண பொண்ணு போல இரு., ஜாலியா இருக்கனும் ன்னு சொல்லிட்டு இருக்க”., என்றாள்.
“கல்யாணம் பண்ணா பேச கூடாதா., ஜாலியா இருக்க கூடாதா.., இது என்னடா கொடுமையா இருக்கு”., என்று கேட்கவும்.
“தாயே உன் கிட்ட பேசவே இல்ல.., நீ நல்ல பிள்ளையா அங்கேயே இரு.., நாங்க இப்போ வந்துருவோம்”., என்று சொன்னாள்.
“சரி சரி வார்டன் என்ன சொன்னாங்க”., என்று கேட்டாள்.
“வார்டன் கொண்டு வந்து எங்கள விட்டுட்டு. உங்க வீட்டு ஆட்கள் ட்ட பொறுப்பை ஒப்படைத்துட்டு திரும்பிருவாங்க ஹாஸ்டலுக்கு..,
திருப்பி நாளைக்கு கல்யாணத்துக்கு வந்துட்டு., மத்தியானத்துக்கு இருந்துட்டு எங்களை ரிட்டர்ன் கூட்டிட்டு வந்துடுவாங்க ஹாஸ்டலுக்கு”.., என்று சொன்னாள்.
“ஆமாடி ஜெயில் கைதிங்க மாதிரி கூட்டிட்டு வந்துட்டு.., திருப்பி ஜெயில் கைதிகள கூட்டிட்டு போற மாதிரி கூட்டிட்டு போக சொல்லு., இப்ப என்ன உங்களை பரோல்லய்யா எடுத்து இருக்காங்க” என்று கேட்டாள்.,
“அடியே உடனே உனக்கு கற்பனை அதிகமா போகுது ன்னு நினைக்கிறேன்., வை வர்றோம்”., என்று சொல்லிவிட்டு போனை வைத்தனர்.,
இவளோ போனை வைத்த உடன் மேல் மாடியில் இருந்து பார்க்க தூரத்தில் தெரிந்த மலை கோட்டையை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அங்கு மலை மீது. குடியிருந்த கடவுளை நினைத்து வேண்டிக் கொண்டிருந்தாள்.,
வெளியே கலகலப்பாகப் பேசிக் கொண்டாலும் மற்றொரு வீட்டிற்கு போகும் பெண்ணாக மனதிற்குள் சிறு படபடப்பும்., பயமும் அவளிடம் இருந்தது.
அதை எப்படி போக்குவது என்று அவளுக்கு தெரியவில்லை., அதே யோசனையோடு அவள் இருக்க யாரோ மாடிப்படி ஏறி வரும் சத்தம் கேட்டது.
இவளோ ‘யார் வந்தா நமக்கு என்ன’ என்ற எண்ணத்தோடு மறுபடியும் உச்சிப் பிள்ளையார் கோயிலை நோக்கி திரும்பியவள்., பிள்ளையாரிடம் வேண்டுதல் வைக்கத் தொடங்கிவிட்டாள்.,
அதேநேரம் நிறைய சத்தம் கேட்க மெதுவாக அந்த சுவர் பக்கமாக எட்டிப்பார்க்க சரியாக படியேறி மாடியில் நிற்கும் இடத்தில் நாலைந்து ஆண்கள் நிற்பது தெரிந்தது.,
இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்க்க பார்த்தவள் பார்த்தபடியே நின்றாள்.,
அங்கு நின்றது நந்தன் அலுவலகம் முடிந்து அப்படியே வந்திருப்பான் போல.., ஃபார்மல் உடையில் அத்தனை அம்சமாக தெரிந்தான்.,
இவளோ ‘பரவால்ல போட்டோல பார்த்தத விட நல்லா தான் இருக்காங்க’ என்று சொல்லி தன் சைட் அடிக்கும் வேலையை தவறாமல் செய்து கொண்டிருந்தாள்.
அவர்களோ இவள் இங்கு நிற்பதே கவனிக்காமல் அவர்கள் பேச தொடங்கியிருந்தனர்..,
“லூசாடா நீ வந்த உடனே மாடிக்கு வர்ற., அத்தனை பேரையும் வாங்கன்னு சொன்னதோடு சரி.., கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துட்டு வந்து இருக்கலாம் இல்ல.., எதுக்கு இவ்ளோ வேகமா மாடிக்கு வந்த.., அதுவும் எங்களையும் இழுத்துட்டு வர்ற”., என்றான் நண்பன் ஒருவன்.
“டேய்., எனக்கு இப்போ இருக்குற கோவத்துக்கு.., யாரு ட்டயும்., கத்திருவனோ ன்னு., தெரியல அது தான் உடனே இங்கே வந்தேன்” என்று சொன்னான்.
இவளோ ‘என்ன கோபமோ’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தாள்.
‘ரொம்ப கோபம் எல்லாம் வருமாடா மாப்பிள உனக்கு’., என்று இவள் மனதிற்குள் கேட்டுக்கொண்டாள். ‘அப்படி கூப்பிட கூடாது’ என்று நினைத்தவள் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“டேய் என்னடா சொல்ற., இன்னைக்குமா”., என்று மற்றவர்கள் பதட்டமாக கேட்பதைப் பார்த்தாள்.
“எந்த பிசாசு” என்று இவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“போன் பண்ணி பழையபடி அதே விஷயம் தான்., இந்த கல்யாணத்தை நிறுத்து., இல்லாட்டி நான் சூசைட் பண்ணிக்குவேன்., உன்னை எழுதி வச்சுட்டு செத்துப் போயிருவேன் ன்னு.., என்ன நினைச்சுகிட்டு இருக்கா.., லவ் பண்ணிட்டு ஏமாத்திட்டு கல்யாணம் பண்றவன் எல்லாம் நல்லா நிம்மதியா கல்யாணம் பண்ணிட்டு போறேன் டா.., நான் நிமிர்ந்து கூட பார்க்காமல் இந்த பாடு பட்டு கிட்டு இருக்கேன்.., இப்ப எங்க அம்மா மேல தான் எனக்கு கோவம் வருது”.., என்று சொல்லி கொண்டே இருந்தான்.,
‘அம்மா மேல எதுக்கு கோபம் வருது’ என்று இவளோ இங்கு யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் நண்பர்கள் அங்கு உள்ள கதையை லேசாக கோட்டிட்டு காட்டியது போல அவர்களுக்குள் பேச.., பிரச்சனை பற்றி தெரிய தொடங்கியது.,
அவர்களுக்குள் பழைய கதையை பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள்., ஓஹோ., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். சிரித்துவிட்டு ‘லூசு மச்சான் உனக்கு எதுக்கு அவ பிளாக்மெயில் பண்ணனும்’ என்று யோசித்தவள் ‘அத அப்பறம் பாத்துக்கலாம் அல்லது கீழே போய் கேட்கலாம்’ என்று யோசித்தாள்.
அவள் நினைப்பிற்கு பதிலாக அவன் நண்பனிடமிருந்து பதில் வந்தது., அவ உன்ன மட்டுமா பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கா.., பக்கத்து தெரு., அடுத்த தெரு ன்னு.., தெருவுக்கு ஒருத்தனை எல்லாம் மிரட்டிட்டு இருக்கா.., இதுல இவ மிரட்டாத ஒரே ஆள் அந்த சிவா மட்டும் தாண்டா”.., என்று சொல்லி ஒரு இடத்தை சொன்னான்.
“அவன் தான் இவளுக்கு ஏற்றவன்., பண்றது எல்லாம் ஒன்னா நம்பர் போர்ஜரி.., நீ பேசாம இரு.., நீ என்ன லவ் ஆ பண்ணின., அவ சுத்துனா அதுக்கு நீ எப்படி பொறுப்பு”., என்றான் மற்றொரு நண்பன்.,
‘சரியான ரவுடி பொண்ணா இருக்கும் போல.., இவங்க ஏன் பயப்படனும்’ என்று அவள் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.