4

இதயத்துடிப்பின்
ஓசையோடு
இமைகள் பேசும்
மொழி அழகு…

நந்தனின் வீட்டில் அனைவரும் கிளப்பிக் கொண்டிருந்தனர்.

“இப்ப கிளம்பினால் தான் நமக்கு நேரம் சரியா இருக்கும்., நல்ல நேரத்துக்கு பொண்ணு வீட்டுக்கு போயிடலாம்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.,

“டேய்.., நீ கிளம்பலையா” என்றான் தங்கை கணவன்…

இன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு..,  ஒரு ஸ்கூல் பஸ் எல்லாம் மொத்தமா எப்.சி க்கு வருது..,  போகாட்டி பிரச்சனையாயிடும்..,  நீங்க போய் பாத்திட்டு வாங்க”., என்றான்.

“அண்ணா., நீயும் வந்தா நல்லாயிருக்கும்” என்றாள்.

“நான் தான் சொல்றேன் இல்ல., உங்க இஷ்டம் ன்னு., திரும்பத் திரும்ப  கூப்பிடுறீங்க”., என்றான்.

“டேய் மாப்ள.., இன்னைக்கு செம ஹேன்சம்மா கிளம்பி இருக்க., அப்படியே வந்த ன்னு வையு..,  பொண்ணு உன்னை பார்த்த உடனே மயங்கி விழுந்துரும்., உடனே பொண்ண  ஊருக்கு தூக்கிட்டே வந்துறலாம்,   என்ன சொல்ற”., என்றான்.

“ஏன்டா., பொண்ணு கடத்தல் கேஸ் ல உள்ள வைக்கனும் னு முடிவு பண்ணிட்டீயா., உனக்கு பொய் சொல்லுறதுக்கும்  ஒரு அளவு இல்லையா.,  நான் இப்பதான் கண்ணாடி பாத்துட்டு வந்தேன்”.., என்றான் நந்தன்.

“டேய் போயிட்டு போன் பண்றேன்”., என்றான்.

” மச்சான் நீ வேற ஏதாவது ஊருக்கு போறியா., போயிட்டு போன் பண்றேன் ன்னு சொல்ற”., என்று சொல்லவும்.

“நீ வர்றல இல்லடா., பொண்ணு பாக்குறது வேணா வீடியோ கால் ல பார்க்குறீயா.., லைவ் டெலிகாஸ்ட் பண்ற மாதிரி., பொண்ணு பார்க்கிற விஷயத்தையும் லைவ் டெலிகாஸ்ட் பண்ணிவிடலாம்”.,  என்றான்.

“உனக்கு என்னைய பாத்தா எப்படி தெரியுது., கிண்டலா தெரியுதா, ஆபீஸ்ல நான் ஊஞ்சல் ஆடிட்டு தானே இருக்கேன் போடா”., என்று சொல்லியபடி அவன் கிளம்பவும் இவர்களும் கிளம்பினர்..

“நிவி என்ன சுடி னு இத போட்டுருக்க.,  இத போட்டு இப்ப எங்க கிளம்புற”., என்றார்.,

ஏம்மா  இந்த சுடிதாருக்கு என்ன.,  அழகா இருக்கு பாருங்க., நீங்க தானே சொன்னீங்க.., இந்த சுடிதார் போட்டா நான் பொம்மை மாதிரி இருக்கேன்னு.,  அதனால தான் இதை போட்டேன்”., என்றாள் நிவேதா.

நிவியின் அம்மாவும் “நல்ல புள்ள இல்ல டா வேற சுடிதார் போட்டுக்கோ.., சாரி தான் கட்ட முடியாது.., நான் சுடிதார் தான் போடுவேன் ன.,  நல்லதா போட்டுக்கோ”., என்றார்.

“இதுவே போதும்”., என்றவள் வண்டி சாவியை எடுத்து கொண்டு கிளம்பவும்.

“ஆமா இப்ப எங்க போற வண்டி எடுத்துக்கிட்டு”., என்றார்.

“கோயிலுக்கு போறேன் மா.., நீங்கதானே சொன்னீங்க எந்த ஒரு காரியமும் நம்ம மனசு படி நடக்கணும் னா கோயிலுக்கு போகனும் ன்னு., சொல்லுவீங்க இல்ல அதுதான் நானும் கோயிலுக்கு போயி வேண்டப் போறேன்”., என்றாள்.

” என்ன வேண்ட்ட போற க்கா” என்றான் தம்பி விஷ்ணு.

“அது வாடா.,  கடவுள் கிட்ட போய் கடவுளே கடவுளே இந்த கல்யாணம் நடக்கக் கூடாது.., வர்றவங்களுக்கு என்ன பிடிக்க கூடாது.,  அப்படின்னு வேண்டப் போறேன்”., என்றாள்.

“ஏண்டி உன் வாயில நல்ல வார்த்தையே வராதா.,  கோயிலுக்கு போறதுக்கு பேசுற பேச்சை பாரு..,  வாயிலேயே அடிச்சிடுவேன் பார்த்துக்கோ..,  போயிட்டு வா சீக்கிரம் வந்துரு”., என்று சத்தம் போட்டு அனுப்பினார் அவளுடைய பிடிவாதம் அறிந்து…

அவள் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் நந்தனின் வீட்டினர் வந்து சேர அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.,

பொதுப்படையான விஷயங்கள் சிலவற்றை பேச நிவேதாவின் அம்மாவிற்கோ., கோயிலுக்கு போனவளை   இன்னும் காணோமே என்ற பதட்டமே அதிகமாக இருந்தது., அவரும் போன் செய்து பார்க்க புல் ரிங் ஆனதே தவிர  எடுக்கவில்லை..,

என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு கிச்சனில் காபி போடும் வேலையில் இருந்தார்…

நிவேதாவின் அப்பா வந்து கேட்க “இப்ப வந்துருவாங்க”., என்று பதற்றத்தோடு சொல்லிக்கொண்டே இருந்தார்.,

“சரி நீ சீக்கிரம் ரெடி பண்ணு., ஸ்வீட் ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்து வை., நான் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

நண்பனிடம் இருந்து ஷியாமிற்கு போன் வர செல்போனை எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டு வாசல் படியில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தான்.,

“கோயிலிருந்து வீட்டுக்கு வரும் போது தன் வீட்டு வாசலில் கார் எல்லாம் நிற்பதை பார்த்தவள் ‘ஐயையோ வந்துட்டாங்க போல’ என்று நினைத்தவள்.,

வீட்டு வாசலை பார்க்க வேறு யாரோ நிற்பது தெளிவாக தெரிந்தது. போட்டோவில் பார்த்த முகம் அல்ல என்று தைரியத்துடன் வாசல் வரை வண்டியில் வந்தவள்., ஆனால் அதன் பிறகு வீட்டிற்குள் செல்ல சற்று தயக்கமாகவே இருந்தது.,

மெதுவாக வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் வண்டியை நிறுத்தியவள் என்ன செய்வது என்று யோசனையோடு வெளியே நின்றாள்…

அதே நேரம் அவள் வண்டியில் வருவதை பார்த்த ஷியாம் நண்பனிடம் “அந்த பொண்ணு.,  எங்கேயோ வண்டியில போயிட்டு வருது டா”., என்றவன் லைவ் கமெண்டரி கொடுப்பதுபோல “வாசலில் வண்டியை வந்து நிறுத்தியாச்சி.,  இன்னும் வீட்டுக்கு வரல”.,  என்கவும்.

“நீ வாசலில் நிற்க இல்ல அதான் வரலையா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

“பக்கத்து வீட்டுக்குள் போகுதுடா அந்த பொண்ணு”., என்று சொல்லவும்.,

“பக்கத்து வீட்டுக்குள்ளேயா” என்றவன் “டேய் நல்லா பாருடா வேற பொண்ணா இருக்க போகுது.,  நீ பொண்ணு நினைச்சி கிட்ட போய் பேசி விடாதே”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்  நந்தன்..

நிவேதாவோ பக்கத்து வீட்டிற்குள் சென்று வாசலில் நின்று அந்த வீட்டு உரிமையாளரிடம் பேசிய படி அவர்களின் வீட்டின் இடைப்பட்ட இடமான சந்து பகுதி வழியாக நுழைந்து பின் பக்கம் சென்றாள்.

ஷ்யாமும் நண்பனிடம் அதை சொல்லிக்கொண்டே “அந்த பொண்ணு அவங்க வீட்டு சந்து வழியா பின் பக்கத்திற்கு போகுதடா.., இரு என்ன ன்னு பார்க்கிறேன்”., என்று சொல்லிக்கொண்டே அவன் வாசலை விட்டு இறங்கி மெதுவாக இவர்கள் வீட்டு பக்கம் இருந்து அவள் போனதைப் பார்க்க..,

அவள் பக்கத்து வீட்டிலிருந்து சுவர் ஏறி குதித்து அவள் வீட்டின் பின்பக்கமாக இறங்குவதை பார்த்தவன்., சிரித்துவிட

“ஏன்டா சிரிக்கிற”.,  என்றான்.

” டேய் உனக்கு சுவர் ஏறி குதிக்க எல்லாம் தெரியுமா”.,  என்று கேட்டான்.

” ஏன்டா”., என்று கேட்டான்.

“பொண்ணு பக்கத்து வீட்டு வழியா ஏறி குதிச்சு வீட்டுக்குள்ள பின் வாசல் வழியாக வருது டா..,  வெளியே போயிட்டு வந்திருக்கும் போல.,

இங்க கார் நிக்குறத  பார்த்த உடனே வீட்டுக்குள்ள எப்படி வர தயங்கி பக்கத்து வீட்டுல போய் பேசிட்டு.,  சைடு வழியாக போய்  பின்பக்கம் சுவர் ஏறி குதிச்சு அவங்க வீட்டுக்குள்ளே வந்தாச்சி., அது தான் கேட்டேன், உனக்கு சுவர் ஏறத் தெரியலைனா கத்துக்கோ”., என்றான்.

“உங்களைப்  பொண்ண பார்க்க சொன்னா வானரத்தை பார்த்து வச்சிருக்கீங்க”.,  என்று கேட்டான் நந்தன்.

“எப்படியோ சமாளி, உனக்கு ஏத்த பொண்ணா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.., நான் உள்ள போறேன் உனக்கு போன் பண்ணி வைக்கவா..,  என்ன பேசுறாங்கன்னு கேட்க போறியா”.,  என்று கேட்டான் ஷ்யாம்.

“ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா..,  நீங்க என்ன பேசுறீங்க கேட்கிறது தான் என்  வேலையா”..,  வைக்கிறேன் என்று சொல்லி போனை வைக்கவும் இவனும் உள்ளே வந்தான்.,  என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக..

பின்வாசல் வழியே வீட்டிற்குள் வந்தவளைப் பார்த்ததும் நிவேதாவின் அம்மாவிற்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும்.,  ஒரு பக்கம் சற்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்..,

“எங்கடி இப்படி வர்ற.,  ஏறி குதிச்சு வீட்டுக்குள்ள வர்றீயா”., என்று கேட்கவும்.

” இதுல என்ன இருக்கு., வாசலில் கார் நிற்பதை பார்த்தேன். அதனால் ஏறி குதிச்சு பின்வாசல் வழியே வந்தேன்., இதில் என்ன தப்பு”., என்றாள்.

“தப்பே இல்ல..,  உன்ன பெத்தேன் பார்த்தியா., அதுதான் என் தப்பு” என்றார்.

“அத இப்ப யோசிச்சி என்ன பண்ண”., என்றாள்.

டைனிங் ரூம் வழியாக அவளை தனியே இருந்த அறைக்கு அழைத்து சென்றவர்., “முகத்தை கழுவு கொஞ்சம் தலையை சீவு., முடியெல்லாம் பிச்சிட்டு நிக்குது.,  வண்டியில போக வேண்டாம் னு  சொன்னா கேக்குறியா”.., என்று கேட்கவும்.

“ஏன்மா இப்படி இருந்தா என்ன.., இந்த சினிமாவெல்லாம் வர்ற மாதிரி வீட்ல எப்பவும் போடுற டிரஸ்ஸோட  இருக்கிற மாதிரி பார்க்கணும்.., நான் வேண்டும் னா அந்த மாதிரி நைட் டிரஸ்ஸோட போய் உட்கார்ந்தா என்ன” என்று கேட்டாள்.

“நீ அடி வாங்க போற., மானத்தை வாங்கிறாத”, என்றாள்.

“ஏம்மா.. வீட்டில எப்பவும் இருக்குற மாதிரி பார்க்குறது தானே முறை”., என்றாள்

முறைத்தவர் “அப்பாவ வரச் சொல்லட்டா”., என்றவர்., “போய் முகத்தைக் கழுவு தலையை சரி செய்து கொஞ்சம் லைட்டா மேக்கப் பண்ணிக்கோ”., என்று சொன்னார்.

“அம்மா எனக்கு இந்த பெயிண்ட் அடிக்கிற பழக்கம் கிடையாது”., என்றாள்.

“பெயிண்ட் அடிக்க போறியா”., என்று சொன்னவர். “என்னடி பேசுற”., என்றார்.