“அதுக்கு தான் சொல்றேன் இவ்வளவு செய்து அப்படி ஒன்னும் கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டாம் எனக்கு ஒன்னும் எதுவும் தேவை இல்லை”. என்று மறுபடியும் தன் பழைய இடத்திலேயே வந்து நின்றாள்.
பெற்றவர்களுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை., ஆனாலும் “மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பார்த்துட்டு போகட்டும்., அதுக்கு அப்புறமா பேசிக்கலாம் சரியா”., என்று சொல்ல “சரி” என்று சொல்லிவிட்டு ஒருமனதாக அவள் அறைக்கு செல்ல செல்லு முன்..,
நிவி மா என்று அழைத்த தந்தை “மாப்பிள போட்டோ பாக்கலையா டா”.., என்றார்.,
எப்படியும் போட்டோவை பார்த்தால் மகளுக்கு பிடித்து விடும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.,
“கண்டிப்பா அந்த போட்டோவைப் பார்க்கனுமா” என்றவள் தந்தையின் கையிலிருந்து பிடுங்கி கொண்டு “பார்க்கிறேன் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றாள்.
பெற்றவர்களுக்கு பிள்ளையை நினைத்து சிரிப்பு தான் வந்தது., “என்ன பேச்சு பேசுறா., இப்படி வாயடிச்சா அங்க போய் இதே மாதிரி பேசிருவாளோ” என்று பெற்றோர்கள் இருவரும் அவளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
உள்ளே சென்று படுக்கையில் அமர்ந்தவள் யோசனையோடு இருந்தாள்.
தோழிகளுக்கு அழைத்து தன் வந்து சேர்ந்ததை சொன்னவள்., வீட்டில் பேசியதை சொல்லவும்.,
தோழிகளோ “அடியே அவசர குடுக்கை உங்க அப்பா அம்மா ட்ட யா சொல்ல சொல்லுச்சு., சமைக்க தெரியாது, சமைக்க மாட்டேன்., வீட்டு வேலை செய்ய மாட்டேன்னு.., உன்ன… மாப்பிள்ளை ட்ட சொல்ல சொல்லுச்சு”.., என்று தோழிகள் இருவரும் அவளைப் பிடித்துக் கொண்டனர்.
“அது எனக்கு பிடிக்கல டி.., அவங்க எதுக்கு வாரங்க”., என்றாள்.
“வர்றது வரட்டும்னு., உங்க அப்பா சொல்லிட்டாங்களா., நீ தான் லூசு மாதிரி அவசரப்பட்டு சமைக்க தெரியாது ன்னு சொல்லுங்க., வேலை செய்ய மாட்டேன் சொல்லுங்க.., சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவேன் ன்னு., சொல்லுங்க., இதெல்லாமா அப்பா ட்டயா சொல்லுவாங்க..,
இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு ஆள்கள் காதுல தான் போடணும்.., புரிஞ்சதா.., நீ உங்க அம்மா கிட்ட சொல்ல வேண்டியது என்ன னு., நாங்க என்ன சொல்லி விட்டோம்.., மாப்பிள்ளை பி.ஈ படிச்சி இருக்காரு ன்னு சொன்னாங்கனா நீ பி.ஈ படிச்ச மாப்பிள்ளை வேண்டாம்.., டாக்டர் படிச்ச மாப்பிள்ளை வேணும் கேளு” என்று சொன்னோம் இல்ல.., என்றாள்.
“ஆமா இல்ல.., அது தானே சொன்னீங்க” என்று கேட்டாள்.
“அடியே கைல கிடைச்ச ன்னு வையி., தீர்ந்த பார்த்துக்கோ.., இங்கே எங்களை போட்டு பாடா படுத்திட்டு., அங்க போய் அப்படியே சொல்லி வச்சிருக்க.., தோழிகள் இருவரும் கான்பிரன்ஸ் காலில் அவளை வறுத்து கொண்டிருந்தனர்.
அவளோ அடுத்து மாப்பிள்ளை வீட்டார் வரும்போது என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசனையில் அமர்ந்திருந்தாள்., தோழிகள் இருவரும் பதிலே இல்லை என்றவுடன் “அடியே லைன்ல இருக்கியா., இல்லையா., நாங்க எத்தனை தடவை கூப்பிட”., என்றனர்.
“நான் இருக்கேன் இருக்கேன்.., அவங்க வந்தாங்கன்னா என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.., பேசாம காபில பேதி மாத்திரை கலந்து கொடுத்துறட்டுமா”.., என்றாள்.
“அடியே உங்க வீட்டு பாத்ரூம் தாண்டி நாறிப்போகும்”., என்றாள் பானு.,
“ஆமா இல்ல., வேண்டாம் அப்ப என்ன செய்யலாம்”., என்று அவர்களிடம் ஐடியா கேட்டாள்.
“அடி வாங்க போற.., உங்க அம்மா கண்டிப்பா உன்ன அந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய விடமாட்டாங்க., நீ இந்த மாதிரி ஏதாவது பண்ணுவ னு அவங்களுக்கு இதுக்குள்ள தெரிஞ்சிருக்கும்.,
அதனால சத்தம் காட்டாமல் இரு.., மாப்பிள்ளை வந்தா எனக்கு சமைக்க தெரியாது ன்னு சொல்லு.., மாப்பிள்ள ட்ட எனக்கு கல்யாணம் பிடிக்கலை ன்னு சொல்லு சரியா.., மாப்பிள்ளை ஃபோட்டோ பாத்தியா”.., என்று கேட்டனர்.
“கையில தான் இருக்கு.., நான் தான் பிரிச்சி பார்க்கலை”., என்று சொன்னாள்.
“பாருடி” என்று சொன்னார்கள்..,
“ம்ம்ம்ம்.., பார்க்கிறேன் பார்க்கிறேன்” என்று சொன்னாள்.
” பார்த்துட்டு போட்டோ வ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பு”.., என்றனர்.
“நானே வேண்டாம்னு சொல்ல போறேன்., அந்த மாப்பிள்ளை போட்டோ உங்களுக்கு எதுக்கு” என்றாள் நிவேதா.
“அடியே மாப்பிள்ளைய நீ கல்யாணம் பண்ணுறதா இருந்தா நாங்க அண்ணா னு சொல்லனும்.., உனக்கு வேண்டாம் இல்ல., அப்ப நாங்க சைட் அடிக்கலாம்”., என்று சொன்னாள்.
“பிச்சு போடுவேன்” என்று இவள் பதில் சொல்ல..,
“நீ தான் அவர கல்யாணமே பண்ணிக்க போவதில்லையே., அப்ப நாங்க சைட் அடிச்சா உனக்கு என்னடி”., என்று கேள்வி கேட்டாள்.
” லூசு மாதிரி பேசாதீங்க” என்று சொன்னவள் பின்பு சாதாரண பேச்சோடு பேசி அழைப்பை துண்டித்து விட்டாள்.
இரவு உடையை மாற்றிவிட்டு தாய் அழைக்கும் சத்தம் கேட்க வெளியே வந்தவள் “என்ன அம்மா” என்றாள்.
“என்ன மாப்பிள்ளை பிடிச்சிருக்கா” என்று கேட்கவும்., திரு திருவென முழித்தவள்..,
“இன்னும் பார்க்கலை ம்மா”., என்றாள்.
அவளை திரும்பிப் பார்த்த தாயும் தந்தையும் “என்ன பாப்பா போட்டோ வாங்கிட்டு உள்ளே போய் இவ்வளவு நேரம் ஆச்சு., பார்க்கலை னு சொல்ற., நீ டிரஸ் மாத்தி ரெப்ரெஷ் பண்ணி வந்திருக்கவும்., நான் பார்த்திருப்ப அப்படின்னு யோசிச்சேன்”., என்று நிவேதாவின் அம்மா கேட்டாள்.
“சரி சரி இந்தா பால் குடிச்சிட்டு போ.., போய் பார்த்துட்டு சொல்லு”., என்றார்.
” காலையில பார்த்து சொல்றேன்” என்று சொன்னபடி அறைக்குள் நுழைய போனவளை தடுத்த தந்தை
“மாப்பிள்ளை வீட்டில் நாளக்கழிச்சு வருவாங்க சரியா”., என்று சொன்னதோடு அவரும் அறைக்குள் சென்றுவிட்டார்.,
அவள் தம்பி தான் “அக்கா நான் இன்னைக்கு உன் ரூம்க்கு படுக்க வர்றேன்” என்றான்.
“மிதி வாங்குவ ஒடிப் போயிரு” என்று சொன்னாள்.
“பின்ன உன் பக்கத்தில் படுத்தா மிதிக்க தான் செய்வ., அதனால நான் உன் பக்கத்துல வர மாட்டேன்., உன் ரூம்ல கீழே விரிச்சு படுத்துக்கிறேன்”., என்றான்.
” ஏன்டா., நீ அங்கேயே படுத்துக்கோ”., என்றாள்.
“நீ எப்படியும் போன நோண்டிட்டு தூங்க பதினொரு மணி ஆகும்., அதுவரைக்கும் நான் கொஞ்ச நேரம் படிக்கலாம் இல்லை” என்று கேட்டான்.,
“வந்து தொலை” என்று சத்தமிட்டுக் கொண்டே சென்னாள்.
அவனும் “அக்கா இந்த சம் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று கேட்டான்.,
“டியூஷன் போற இல்ல., படிச்சிட்டு வர வேண்டியது தானே”., என்று அவளும் கேட்டாள்.
“ஒரு ரெண்டே ரெண்டு சம் தான்., சந்தேகம் னு கேட்டா.., அதையே திரும்பத் திரும்ப என்ன போட்டு அந்த சார் கொன்னுருவாரு.., அதனால தான் கேட்கல.., நீ எப்படியும் வருவ இல்ல.., வீட்ல தான் இருப்ப என்கிற தைரியத்தில் வந்துட்டேன்”.., என்று சொன்னான்.
” வா சொல்லி தரேன்” என்றபடி அவனோடு போய் அமர்ந்தாள்.
அவள் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அவனுக்கு படுக்கையை கொண்டு வந்த அம்மா கீழே விரித்தவள்.., “தூங்குங்க தூங்குங்க.., டேய் இங்க பிடிக்கலன்னா அங்க ரூமுக்கு வந்துரு.., அதை விட்டுட்டு மறந்தும் கூட அவ பக்கத்துல படுக்காத.., மிதிச்சு தள்ளிருவா ஜாக்கிரதை”., என்று சொல்லி விட்டு போக போனவரை..,
“அம்மா நீங்களே சொல்லி கொடுங்க.., இதே பானு ட்டையும்., வசு ட்டையும்., சொல்லியிருக்கீங்க.., ஹாஸ்டல்ல அவ இரண்டு பேரும் கட்டிலை ஒட்டி போட்டிருக்கா.., நானும் கட்டிலை ஒட்டி போட்டுக்கிறேன் சொன்னா.., உன்கிட்ட மிதி வாங்க எங்களால முடியாதுன்னு சொல்றா.., நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க”.., என்று சொல்லி அவளிடம் குறைபட்டாள்.
உன் பக்கத்துல படுத்து இருந்தா., காலையில நாங்க உருண்டு கீழே தான் இருக்கணும்.., அதுக்கு தான் உனக்கு தனி பெட்., தனி ரூம் போட்டுக் கொடுத்தது.., என்னா மிதி மிதிக்க.., அந்த பழக்கத்தை இன்னும் விடமாட்டீக்கீயே” என்று சொன்னார்.
“அக்கா நீ வா எனக்கு கணக்கு சொல்லி கொடு” என்று சொல்லி அவளோடு அமர்ந்து அவன் படிக்கத் தொடங்கினான்….
அவள் தம்பி விஷ்ணு படித்துவிட்டு படுக்கவும்.., அதன் பிறகும் தன் செல்போனில் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே இருந்தவள்.., சற்று நேரம் தோழிகளோடு வாட்ஸ்அப் செய்து விட்டு படுக்க திரும்பியவள் தலையணை அருகே இருந்த கவரை பார்த்தாள்..,
அப்போது தான் எடுத்து அவனுடைய சுய விவரங்களை படித்தவளுக்கு ‘பயங்கர மூளை இருக்கும் போலயே குரூப் 1 எக்ஸாம் எழுதி ஆர்டிஓ ஆபீஸ்ல ஆபீஸர்’., என்று நினைத்துக் கொண்டாள்.
‘நமக்கு அந்த அளவுக்கு மண்டையில மூளை இருக்குமா என்ன என்று யோசித்தவள்’., மெதுவாக அவன் போட்டோவை செல்போன் வெளிச்சத்தில் பார்த்தாள்.
பார்த்தவளுக்கு மிகவும் பிடித்தது போல தான் இருந்தது.., ஆனாலும் மனதிடம்., ‘நோ நோ நிவேதா படிக்கனும்., வேலைக்கு போகனும்., கல்யாணத்தைப் பற்றி யோசிக்க கூடாது.., சைட் அடிப்பதோடு நிறுத்திக்கணும்.., அவனைப் பார்க்காத., அடியேய் போட்டோ பார்க்காதடி கன்ட்ரோல் யுவர்செல்ப்’ என்று சொல்லி அவளை அவளே திட்டி கொண்டாள்.
ஆனாலும் அவள் அறியாமல் அவள் கண்கள் ரகுநந்தனின் புகைப்படத்தில் அலைந்து கொண்டு தான் இருந்தது.,