14
உன் விழியில் தெரியும்
பிரியத்தில்
மொத்தமாக விழுந்து
விடுகிறது இதயம்….,
மஞ்சரியின் அம்மாவும் கையோடு அழைத்து வரப்பட.,
நிவேதா நிதானமாக மஞ்சரியைப் பார்த்து “இப்ப சொல்லுங்க., உங்களுக்கு என்ன பிரச்சினை”., என்றாள்.
“அது எப்படி பிரச்சனை ன்னு., சொல்லும் முன்னாடி நீயே முடிவு பண்ணலாம்”., என்றாள்.
நிவியோ., “ஏங்க நீங்க தான் இந்த ஆன்ட்டிஸ் எல்லார்ட்டையும் சொல்லி இருக்கீங்க.., ஒரு பஞ்சாயத்து ன்னு., அது மட்டுமில்லாமல் நீங்க வந்தாலே பிரச்சனை தான்., தெரியும் சொல்லுங்க”., என்றாள்.
மஞ்சரியின் அம்மாவோ “என்னடி பண்ணி வச்சிருக்க., மறுபடியும் எங்க மானத்தை வாங்க போறியா., அவன் ஒரு விதத்தில் மானத்தை வாங்கினான்., நீ அடுத்து வாங்குவியா”., என்றார்.
அவள் அம்மாவை அதட்டி பேசினாள். “வாய மூடிட்டு இரு மா.., நீ எப்பவும் பேக்கு மாதிரி இருக்கீங்க.., அண்ணன எப்படி சொல்லுவீங்க., எங்களை நீங்க தான் நாங்க நினைத்தபடி வாழ்க்கையை வாழ விடாமல் பண்றீங்க”.., என்று சொல்லவும்.,
“இப்படி அடுத்த வீட்டில் வந்து அடிக்கடி பஞ்சாயத்து பண்றது தான்., நீங்க நினைச்ச வாழ்க்கையா., எங்கேயோ தப்பு பண்ணிட்டேன் ன்னு., அடிக்கடி வருத்தப்பட வைக்குறீங்க., நீயும் அவனும்”., என்று வருத்தத்தோடு அவர் சொல்வதை பார்த்துக் கொண்டிருந்தவள்..,
அமைதியாக மஞ்சரியிடம் “உங்க வீட்டு பிரச்சினைன்னா., உங்க வீட்ல போய் பேசிக்கோங்க.., இல்லை ஏதோ சொல்ல வந்து இருக்கீங்க ன்னா., சொல்லி முடிங்க., எனக்கு காலேஜ் போகணும் நேரம் ஆகுது”., என்றாள்.
இந்த பாரு என்ன நினைச்சுட்டு இருக்க., நான் பிரச்சனை பண்றேன்., நான் பிரச்சனை பண்றேன் ன்னு., சொல்லுற., ஒருகாலத்தில் அவன் தான் என் பின்னாடி சுத்தினான்”., என்றாள்.
“சரி அதுக்கு” என்று நிவி கேட்க.,
அதற்குள் நந்தன் ஏய்ய் என்று சத்தம் போட்டுக் கொண்டு ஏதோ சொல்ல வர..,
நிவி போய்த்தான் அவனை “ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்க மா., அவங்க சொல்றது சொல்லி முடிக்கட்டும்”., என்றாள்.
“நீங்க சொல்லுங்க”., என்று சொல்லவும்.
“என்ன நான் சொல்லனும்., அதான் சொல்றேன்ல” என்று மறுபடியும்., தொடங்க.,
“நீங்க சொல்றது பொய்., ன்னு எல்லாருக்கும் தெரியும்”.,என்றாள்.
“அது எப்படி பொய் ன்னு., நீ சொல்லுவ”..,என்றாள்.
“ஏங்க உங்க பக்கத்துல இருக்குற ஆன்ட்டிஸ் எல்லாம் இந்த வார்த்தை சொன்ன உடனே அதிர்ச்சியில் வாயை திறந்து உங்களை பார்க்குறாங்க.,
இங்கே உள்ளவங்களுக்கு அப்படி இவங்க மேல தப்பு இருக்குன்னு தெரிஞ்சா., இதுக்குள்ள என்ட்ட சொல்லி இருக்க மாட்டாங்களா., யோசிக்கவே மாட்டீங்களா”., என்று சொல்லி விட்டு.., “அப்புறம் நெக்ஸ்ட்” என்றாள்.
மஞ்சரியோ., நிவி ஏதாவது கோபப்படுவாள் என்று எதிர்பார்க்க., இவளோ அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அப்புறம் வேற விஷயம் இல்லன்னா நான் கிளம்புறேன்”., என்று சொல்லவும்.
“இதோ நான் கட்டிட்டு வந்திருக்கும் புடவை இவன் தான் வாங்கி கொடுத்தான்., நம்பிக்கை இல்லையா”., என்று சொல்லி நேற்று பார்க் ல் சொன்ன அதே டயலாக்கை தப்பாமல் சொல்ல.., இவளும் அமைதியாக கேட்டுக் கொண்டவள்.
நந்தனை திரும்பி பார்த்து “உங்களுக்கு கொஞ்சம் கூட சென்சே இல்லையா”., என்று கேட்கவும்.
அவனோ “சொல்றத கேட்டுட்டு பேசு நிவி” என்றான்.
“உங்கள என்ன சொன்னோம்., ஆசிரமத்தில் உள்ளவங்களுக்கு டிரஸ் வாங்கி கொடுங்க ன்னு சொல்லிட்டு இருந்தா.., நீங்க ரோட்டில் போறதுக்கு எல்லாம் வாங்கி கொடுத்துருக்கீங்க”., என்று சொல்லவும்.,
அவனுக்கு இவள் ஏதோ கேம் பிளே பண்ணுறா என்று புரிந்தவன்.., “ஏய்ய் அது ஒரு லூசு., அது சொல்லுறத எல்லாம் கணக்கில் எடுக்காதே”., என்றான்.
அவளோ “ஐயோ சும்மா இருங்க” என்று சொல்லிவிட்டு..,
“நீ சொல்லுமா., அடுத்து”, என்றாள்.
அவளும் “சேலை வாங்கிக் கொடுத்திருக்கான் சொல்றேன்., நீ பேசாம இருக்க., இதே மாதிரி தான் உனக்கும் வாங்கி வச்சி இருக்கான்”.., என்று சொல்லவும்..,
அவளுக்கு நின்று கேட்கும் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போலவே உணர்ந்தாள்., “நிஜமா நீங்க சொல்றது புரியல., வேற என்ன விஷயம்”., என்று கேட்டாள்.
“நான் சேலையை தான் சொல்றேன்னு புரியலையா”., என்றாள்.
“உலகத்துல ஒரே மாதிரி 7பேர் இருப்பாங்க ன்னு சொல்றாங்க சரிங்களா., பட்டுசேலை நெய்யும் போது கூட நமக்கு பிடிச்ச மாதிரி கொடுத்தா மட்டும் தான்., அது தனித்துவமாக கிடைக்கும்.., கடையில ஒரே மாடலில் ஆயிரம் சேலை கூட இருக்கும்., ஒரே கலர்ல இரண்டாயிரம் சேலை கூட இருக்கும்.., அதெல்லாம் கணக்குல எடுத்துக்க முடியாது.., இதெல்லாம் செல்லாது செல்லாது.., அடுத்த மேட்டர்”.., என்று சொல்லவும்.,
அவளுக்கு கோபம் தான் வந்தது.,
“நல்லா இருக்கா.., இல்லையான்னு., ஒரு வார்த்தை சொல்லல”., என்று அவள் லூசு போலவே பேச..,
இவளுக்கு தான் ஒரு பக்கம் சிரிப்பாகவும்., ஒரு பக்கம் கோபமாகவும் வந்தது., மெதுவாக அவளை பார்த்தபடி “சாரி அழகா இருக்குங்க., ஆனா உங்களுக்கு சூட் ஆகல.., அப்புறம் வேற”., என்று சாதாரணமாகவே பேச..,
‘என்னடா இந்த பிள்ளைக்கு கோபமே வராதா’., என்று மனதிற்குள் மஞ்சரி நினைக்கத் தொடங்கினாள்.,
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்., நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க”., என்று மறுபடியும் கேட்க.
“ஏன் ங்க.., என் ஹஸ்பென்ட் அனாவசியமா அடுத்தவங்களுக்கு செலவு பண்ணுற ஆள் கிடையாது”., என்று சொன்னாள் நிவி.,
“சரி வேற விஷயம் இல்ல ன்னா., நான் காலேஜ் கிளம்புறேன் டைம் ஆயிடுச்சு” என்று சொல்லியபடி பேக்கை எடுக்கவும்.,
வந்தருந்த பெண்களும் அமைதியாக இருந்தனர்., மஞ்சரியின் அம்மாவோ “வாடி வீட்டுக்கு” என்று இழுக்க அவள் அம்மாவின் கையை உதறியபடி மறுபடியும் பேசத் தொடங்கினாள்.
அதற்குள் நந்தன் ஏற்கனவே போன் செய்து சொல்லியிருந்த நந்தனின் நண்பர்கள் வந்து சேர்ந்தனர்., அதுபோலவே மஞ்சரியின் அப்பாவும் வந்திருந்தார்.,
அதற்குள் நிவேதாவுக்கு அம்மா வீட்டிலிருந்து போன் வர எடுத்து பேசிக் கொண்டிருக்கும் போது.,
“அம்மா கொஞ்சம் பொருத்து கூப்பிடு பேசுறேன் ன்னு சொல்லுங்க., உடனே எல்லாம் பேச முடியாது., ஒரு பத்து நிமிஷமாவது கொடுக்க சொல்லுங்க அதுக்கு அப்புறம் பேசுறேன்” என்று சொல்லி வைத்தவள்.,
வைத்து விட்டு திரும்பி பார்க்கவும் அங்கு அனைவர் கையிலும் சில பல போட்டோக்கள் இருக்க அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருப்பது போல முகம் வெளிறி இருந்தனர்…
இவளுக்கு புரிந்தாலும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று காலையில் பானு சொல்லியிருந்ததால் அதையே செயல்படுத்த முடிவு செய்தாள்…
அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தபடி அவளிடம் போட்டோக்களை கொடுக்க அனைவரிடமும் இருந்து வாங்கியவள் நந்தனின் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தால் இருவரும் அதிர்ச்சியில் இருப்பது தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல்.,
நந்தனை பார்க்க நந்தனும் அவளை பார்த்தவண்ணம் இருந்தான்., அந்த போட்டோவை பார்த்த நந்தனின் நண்பர்கள் கூட அதிர்ந்து போய் நின்றனர்.,
நந்தன் நிவேதா முகத்தில் வரும் மாற்றத்தை பார்க்க மட்டுமே காத்திருந்தான்…
அனைத்தையும் வாங்கியவள் மேலோட்டமாக பார்க்கும் போது அவளுக்கு உண்மையிலேயே முகம் மாறத் தொடங்கியிருந்தது.,
ம்ஹூம்.. ம்ம்ம் என்று சத்தம் மட்டும் கொடுத்தவள்., அமைதியாக போட்டோவோடு சோபாவில் அமர்ந்து விட்டாள்.,
எல்லோரும் அவள் முகத்தை பார்க்க.., அவளோ அமைதியாக யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் போட்டோவை மட்டும் பார்த்தவள்..,
சீட்டுக்கட்டை கலைத்து போடுவது போல ஒவ்வொரு போட்டோவாக தனித்தனியாக எடுத்து போட்டு பின்பு எடுத்து பார்த்து கொண்டிருந்தாள்., அதுவும் மிகவும் நிதானமாக பிரித்து போட்டுக் கொண்டிருந்தாள்.,
அவள் முகத்தில் சற்று நேரம் இருந்த பாவனைக்கு என்ன அர்த்தம் என்று யாருக்குமே தெரியாது.., ஆனாலும் பொதுவாக தேவையில்லாத சிலவற்றைப் பார்க்கும்போது வரும் முகச்சுளிப்பு அதில் வரத்தான் செய்தது.., அனைவரும் அவளை சுற்றி நின்று கொண்டிருக்க அவளோ நிதானமாக அமர்ந்து போட்டோவை பிடித்து பார்த்து கொண்டிருந்தாள்.
நந்தனின் நண்பர்கள் நந்தனை பார்த்து “என்னடா”., என்று கேட்க., அவனோ அமைதியாக இருந்தான்.,
அவள் என்ன செய்வாள் என்று அவனுக்கு புரியவில்லை., ஆனால் பொங்கி வரும் பாலில் தண்ணீர் தெளித்தது போல அவர்களுக்குள் இருந்த சந்தோஷம் மறைந்தது போல ஒரு நொடி அவன் உணர தொடங்கி இருந்தான்..,
எதுவும் பேசாமல் மூச்சை இழுத்து விட்டவள்., மஞ்சரியை பார்த்து “அவ்ளோதானா., வேற ஏதும் இருக்கா”.., என்றாள்.
அவள் “இதை பார்த்து உனக்கு நம்பிக்கை வரலையா”., என்று மஞ்சரி கத்த.,
ஷ்ஷ்.., வீட்டுக்குள்ள சத்தம் போட்டு பேசுற வேலை வச்சுக்க கூடாது.., இது ஒன்னும் உன் வீடு கிடையாது., நீ கத்தறதுக்கு புரிஞ்சதா”., என்றவள்.