அம்மாவும் இவகிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்றாங்க என்று நினைத்தான்…..

டாக்டர் அனைத்தையும் பேசியபடி “எப்பவும் கொஞ்சம் அவங்க ஹெல்த் நல்லா பார்த்துக்கோங்க., ரொம்ப ஹெல்த் வீக்கா இருக்காங்க.,  இன்னும் தொடர்ந்து மருந்து சாப்பிடனும்.., ஒருவேளை இந்த மாதிரி மாசம் கணக்கு விட்டு வருது அப்படின்னா..,  வர்ற அன்னைக்கு கூட்டிட்டு வந்துருங்க பாத்துருவோம்.., இல்லாட்டி இந்த மாதிரி ஓவராகி கஷ்டப்படக்கூடாது”., என்று சொல்ல..,

அவளும் அவ்வப்போது பதட்டத்தோடு டாக்டர் முகம் பார்க்க புரிந்து கொண்டவர்…,   “டெஸ்ட் ரிப்போர்ட் வந்துட்டு., நார்மல் தான்.,  அது சாதாரண புண்ணு தான்”.., என்று சொல்லவும்..,

அவள் அறியாமல் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.,

“ஏய் நீ எதற்காக அழுற” என்று சொல்லி நந்தன் அவள் தோளை பிடிக்க..,

அவளோ அவன் தோளில் சாய்ந்து கொண்டு இன்னும் அதிகமாக கண்ணீர் வடிக்க நந்தன் நான் பதறிப் போய் டாக்டரை பார்த்து.., “டாக்டர் என்ன ஆச்சு”., என்றான்.

பிறகு டாக்டர் நடந்த விஷயத்தை சொல்ல “உங்க அம்மாவுக்கு கர்ப்பப்பை வாயில் புண்  இருந்துச்சு தம்பி..,  அது கர்ப்பப்பை வாய் கேன்சர் ஆக  இருக்கக்கூட வாய்ப்பு இருந்தது.,

அந்த டெஸ்ட் பண்ணினோம்., சின்ன பொண்ணா இருக்கே அப்படின்னு சொல்லி தான் யோசித்துவிட்டு சொல்றதுக்கு யோசிச்சேன்.., ஆனா சொன்ன உடனே  பண்ணிடுங்க.., ஆனா வீட்டில யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.., எல்லாரும் பயந்துபாங்க..,  இதுக்கே எல்லாரும் பயப்படுவாங்க..,னு அதனால சொல்லாதீங்க.., சொன்னா.,

டெஸ்ட் எடுத்தது உங்க அம்மாவுக்கு கூட தெரியாது.., நிறைய டெஸ்ட் எடுத்ததால  எதுக்கு எடுக்குறாங்க னு தெரியாது.,   மூணுநாள் ரிசல்ட் வர்ற வரைக்கும் மத்தவங்களுக்கு இந்த பயம் தெரிந்திருக்காது.., கண்டிப்பா இவங்க மனசுக்குள்ள பயந்துட்டு இருந்துருப்பாங்க..,  அதுதான் இப்போது அழுகை”., என்று சொன்ன டாக்டர் எழுந்து வந்து நிவேதாவின் தோளை பிடித்து தட்டிக் கொடுத்து..,

“இனி அதை பத்தி ஒன்னும் இல்லம்மா” என்று சொல்ல..,

“இது மனசு நிம்மதில வர்ற கண்ணீர் டாக்டர்”., என்று சொன்னவள் “தேங்க்யூ சோ மச்” என்றாள்.,

“அதற்கு மாத்திரை எழுதியிருக்கேன்.,  எல்லாம் சரியாயிடும் ரொம்ப சூடு ஏற மா பாத்துக்கோங்க.., நிறைய ப்ரூட்ஸ் கொடுங்க”., என்று சொல்லி அதற்கான மருந்துகளை எழுதிக் கொடுக்க வாங்கி கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போதும் நந்தன் நிவேதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.,

வீட்டிற்கு வரும்போதுதான் நிவேதாவின்  கண்ணில் பழைய உற்சாகம் வந்திருப்பதை அவனால் உணர முடிந்தது..,  ஆனாலும் அவள் அழுததை அவள் முகம் காட்டிக்கொடுக்க.,  வீட்டிற்கு வந்தவுடன் ஸ்வேதா தான் “ஏன் நிவி கண்  கலங்கிருக்கு அண்ணா”., என்று கேட்டு “ஏன் கூட்டிட்டு போயி ஏதாவது திட்டிட்டு வந்திட்டியா”., என்று கேட்டாள்.

அவனும் “அவளை திட்டாம கூட்டிட்டு வந்துட்டேன் நினைத்து சந்தோஷப்பட்டுக்கோ” என்று சொல்லிவிட்டு

“அம்மா இனிமேல் உங்க ஹெல்த் அ நீங்க ஒழுங்கா பாக்கணும்.., எல்லாம் வேலையும் இழுத்துப் போட்டு செய்ய அவசியமில்லை.., எல்லா வேலைக்கும் ஆள் வைக்கலாம் புரிஞ்சதா.,  நம்ம ஓரளவுக்கு அப்பர் மீட்டில்ல தான் இருக்கோம்..,

ஓரளவுக்கு மெய்ட்டுக்கு சம்பளம் கொடுக்கலாம்.,  இப்ப தான் நான் ஏர்ன் பண்றேன்.., அப்பாவோட பென்ஷன் வருது..,  இதைவிட என்ன வேண்டும்., மெய்ட் ட்ட சொல்லி மீதி வேலைகளை செய்ய சொல்லுங்க.., நீங்க எதுவும் இழுத்துப் போட்டு செய்ய கூடாது”.., என்று சொன்னான்.,

“ஏண்டா உங்க அம்மாவை ரொம்ப பாக்குற.., இப்பதான் ரொம்ப அக்கறை வருதோ”.,என்று நந்தன் அப்பா கேட்டார்.

அவன் நடந்த விஷயங்களை சொன்னவுடன் அத்தனை பேருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி இத்தனை நாள் நிவேதாவிடம் இருந்த சிறு சிறு முக மாற்றத்திற்கும் காரணம் இதுதான் என்று தெரிந்த போது ஸ்வேதா நிவேதாவை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி விடுங்க எல்லாம் சரியாயிருச்சு”., என்று சொல்லவும்.,

வீட்டிலுள்ளவருக்கு நிவேதா மேல் பாசம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது….

ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று தெரியும். அதிலிருந்து தினமும் நிவேதாவின் அம்மா போன் செய்து தேவகியிடம் பேசுவது வழக்கம் தான்..,

அன்றும் பேசும்போது தேவகி தான் “புள்ளை தங்கம் மா., எப்படி சொல்லனு தெரில.., இப்படி ஒரு பிள்ளை எங்க வீட்டுக்கு கிடைச்சதுக்கு நான்தான் கொடுத்து வைச்சிருக்கணும்”., என்று சொன்னவர்., சில விஷயங்களை சொன்னவுடன் நிவேதாவின் அம்மாவிற்கும் தன் மகளை நினைத்து பெருமையாகத் தான் இருந்தது.,

பொறுப்பாக இருக்கிறாள் என்ற எண்ணமும் அதைவிட என்ன வேண்டும் என்றே தோன்றியது…

அதன் பிறகு வீட்டினர்  இனி தேவையான ஆரோக்கியத்தையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும்., இது நந்தனின் அப்பாவிடம் அதிகமாக தோன்றியிருந்தது.,

உணவிலிருந்து அனைத்தையும் மருத்துவரிடம் கேட்டு வந்து இருந்ததால் அதற்கு தகுந்தபடி இனி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டனர்.,

அன்றிரவு தங்கள் அறைக்கு வந்த நிவேதாவிடம் வந்து எப்பொழுதும் போல் அவள் அருகில் படுத்துக்கொண்டு.,

“நிவி பூனைக்குட்டி”., என்று அழைக்க..,

” என்ன லைசன்ஸ் பார்ட்டி”., என்றாள்.

“இன்னைக்கு என்ன அந்த பக்கமா பாத்து திரும்பிட்ட., இந்த பக்கமா திரும்பு”என்று சொல்ல..,

“அதெல்லாம் முடியாது முடியாது.., ஏதோ இரண்டு நாள் டென்ஷனா இருந்தேன்.., அதனால உங்களை பார்த்து திரும்பி படுத்தேன்.., இப்ப அப்படி படுக்க முடியாது” என்று சொல்ல..,

அவனோ “அதுக்கு என்ன நான் வர்றேன் பக்கத்தில்” என்று சொல்லி எப்பொழுதும் போல அவள் மேல் கையை போட்டு அணைப்பது போல இன்றும் அணைத்தான்.,

ஆனால் அந்த அணைப்பில் அவனுடைய காதல் மொத்தமும் தெரியும்படி அழுத்தமாக கையை பிடித்துக்கொண்டு அணைத்தவன்.., மெதுவாக அவள் முகம் பற்றி தன் பக்கமாக திருப்பியவன் அழுத்தமாக தன் முதல் முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான்.

நிவேதாவோ அவன் முத்தமிடும் போது கண்மூடி அவன் முத்தத்தையும் அவன் மீசையின் குறுகுறுப்பையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

சற்றுநேரம் சென்று அவனை மீண்டும் கண் திறந்து பார்க்க மீண்டும் அழுத்தமாக கன்னத்தில் முத்தம் பதித்தான்..

சற்று நேரம் அவன் கொடுத்த முத்தங்களை அமைதியாக அனுமதித்தால் அதன் பிறகு அவன் இதழில் முத்தம் பதிக்க வர.,  அவசரமாக தடை போட்டபடி “பிச்சி பிச்சி லைசென்ஸ் பார்ட்டி.., இடம் கொடுத்தால் மடம் பிடிக்கிறீங்க..,  சரி ஐயோ பாவம் புள்ள ஆசைப்படுதே..,  முத்தம் கொடுத்துட்டு போகட்டும் னு விட்டா..,  ரொம்ப தான் பண்றீங்க”., என்று சொல்லி அவனுக்கு மீண்டும் முதுகு காட்டி படுத்தாலும்..,

அவள் அறியாமல் அவள் உதட்டில் உறைந்திருந்த சிரிப்பு சொன்னது அவன் கொடுத்த  முத்தத்தை அவள் ரசித்த விதத்தை..,

சற்று நேரம் அமைதியாக படுத்திருந்தவள்.., பின்பு மெதுவாக திரும்பி மறுபடியும் அவனை அணைத்த படி சமீபமாக தொடங்கியிருந்த அவன் நெஞ்சில் முகம் புதைக்கும் பழக்கத்தில்., முகம் புதைத்துக்கொண்டு அவனை அணைத்தபடியே சற்று நேரத்தில் தூங்கி போனாள்…

காலையில் எழும்பும் போது சற்று நிம்மதியாக உணர்ந்தது போல இருந்தது..,  பின்பு எப்போதும் வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண்மணியிடம் இவள் கல்லூரிக்கு சென்றாலும் அனைத்து வேலைகளையும் எப்படி எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொல்லி விட்டாள்.

சமையல் மட்டும் தேவகியுடன் சேர்ந்து தான் செய்துகொள்வதாக சொல்லியிருந்தாள்.,

மற்ற அனைத்து வேலைகளையும் வேலைபார்க்கும் பெண்மணியின் பொறுப்பில் ஒப்படைத்தாள்.

இவள் பேசிக்கொண்டிருப்பதை நந்தனின் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொண்டிருந்தாலும் யாரும் எதுவும் பேசவில்லை..,

அப்பெண்மணி “சம்பள விஷயம் மா” என்று சொல்ல

அதை அத்தை ட்ட பேசிக்கோ..,  உங்க வேலைய மட்டும் தான் நான் சொல்லுவேன்..,  அத்தை இருக்காங்க., மாமா இருக்காங்க பேசிக்கோங்க”.., என்று சொல்லிவிட்டு மதிய உணவு தயாரிக்கும் வேலையை  செய்ய தொடங்கியிருந்தாள்…

‌அதன்பிறகு தேவகி உடல்நலம் நன்கு தேறிய பிறகு தான் தேவகி கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தன் படிப்பை எடுக்க தொடங்கியிருந்தாள்.,

அதுவரை ஒரு விதத்தில் அவரைப் பார்க்கும் பொறுப்பையும் தானே சேர்த்து எடுத்துக் கொண்டது போல அவரை கவனித்துக் கொண்டாள்..

அதன் பிறகு உச்சி பிள்ளையார் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று வந்தனர்., நிவேதாவின் வேண்டுதலுக்காக..,

மேலும் ஒரு வாரம் சென்றிருக்க வீடு பழையபடி எண்ணெயிட்ட சக்கரமாய் சொல்ல தொடங்கியிருந்தது..,

அன்று கல்லூரி விட்டு வரும் வழியில் நந்தன் தன் நண்பனோடு பைக்கில் செல்வதை பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது..,

ஏனெனில் எப்பொழுதும் அலுவலகம் செல்வதும் திரும்புவதும் அலுவலக காரில் தான்.,

எப்பொழுதும் 6 மணிக்கு மேல் வருபவன் இன்று ஏன் இந்த நேரத்தில்., இந்த பக்கத்தில் நண்பனோடு வரவேண்டும்.,  என்ற எண்ணத்தோடு வண்டியை ஸ்லோ செய்துவிட்டு மெதுவாக எப்போதும் வரும் பாதையில் வந்தாலும்..,

அவள் மனம் முழுவதும் நந்தன் வண்டியில் சென்றதே தோன்றியது., எதற்கு இந்நேரம் என்ற எண்ணமும் இருக்க சற்று படபடப்பும் சேர்ந்து வந்தது..,

அவசரமாக வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அதிலிருந்து போனை எடுத்துப் பார்த்தாள்., ஏதும் வீட்டிலிருந்து  போன் வந்திருக்கிறதா என்று., எந்த போனும் வரவில்லை.,

ஏற்கனவே அன்று கல்லூரியில் ஒரு வகுப்பு பேராசிரியர் பாடம் முடிக்காததால் கூட ஒரு மணி நேரம் இருந்து விட்டு செல்லும்படி மாணவர்களை சொல்லியிருக்க.., தான் வருவதற்கு சற்று தாமதமாகும் என்று அத்தையிடம் சொல்லியிருந்ததால்..,  அத்தைக்கு தெரியும் என்ற எண்ணத்தோடு மீண்டும் பேக்கில் போனை போட்டவள் வண்டியை அங்கிருந்து கிளப்பிக்கொண்டு வீட்டிற்கு செல்லும் பாதையில் வர தொடங்கினாள்..,

இதயம் வலித்தாலும் சிரி 
        அது உடைந்தாலும் சிரி“., 
                                             – சார்லி சாப்ளின்