அப்போது டாக்டர் சில விஷயங்களை சொல்லி “கொஞ்ச நேரம் ஆகட்டும் மருந்து கொடுத்து இருக்கேன்., கொஞ்சம் அவங்களோட உதிரப்போக்கு கண்ட்ரோலுக்கு வந்தவுடனே அனுப்புறேன்.,  சிஸ்டர் பார்த்துகிட்டே தான் இருக்காங்க”.,  என்றார்.

சரி என்று சொல்லி காத்திருந்தாள்…

அதற்குள் ஸ்வேதா வந்தவள்.,  “முதல்ல சொல்ல மாட்டீங்களா மா.,  ஏன் இப்படி பண்றீங்க”., என்று சொல்லி சத்தம் போட்டாலும் அவள் கண்கலங்க பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

‘நிவேதா மட்டும் அவர் பார்த்துக் கொள்கிறேன்.,  நீ கல்லூரிக்கு கிளம்பு என்று சொல்லும்போது சரி என்று கிளம்பி இருந்தாள்., கண்டிப்பாக வீட்டில் கேட்பாரற்று மயங்கிதான் கடந்திருக்க வேண்டும்’., என்ற நினைவு வர..,

நிவேதாவின் கையை அழுத்தமாக பிடித்து “உனக்கு எப்படித்தான் தேங்க்ஸ்  சொல்றதுன்னு தெரியல நிவேதா”., என்று சொல்லவும்.,

“உங்க தேங்க்ஸ் அ  நீங்களே வச்சுக்கோங்க”., என்று சொன்னவள்.,  “எங்க அம்மானா நான் பார்க்க மாட்டேனா.,  என்ன அண்ணி இப்படிப் பிரித்து பேசுறீங்க” என்று சொல்லவும்.,

“ஐயோ தப்புதான்.,  நான் தேங்க்ஸ் சொல்லி இருக்கக் கூடாது., தப்புதான்”., என்று சொல்லி அத்துடன் பேச்சை விட்டாள்…

மாலை நேரம் பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிய நந்தனின் அப்பா “மருமகளே வந்துவிட்டேன் மா.., என்ன விஷயம் ஏதும் வாங்கிட்டு வரணுமா”.., என்று கேட்டார்.

அவள் ஏதோ கேட்பதற்காக தான் அழைத்தாள் என்று நினைத்துக்கொண்டு சிரித்தபடியே கேட்க..,

அவளோ “மாமா ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு ஹாஸ்பிடல் வாங்க” என்று ஹாஸ்பிட்டல் பேரை சொன்னாள்.

“என்னமா.,  என்ன ஆச்சு யாருக்கு என்ன”., என்றார் பதட்டத்தோடு.,

“ஒன்னும் இல்ல மாமா., நீங்க வாங்க”., என்றாள்.

அவரும் ஆட்டோ பிடித்துக் கொண்டு அவசரமாக மருத்துவமனைக்கு வர..,  அப்போதுதான் தேவகி அத்தனை உடல் நலம் இல்லாமல் இருப்பதை கண்டவர் ஒரு நிமிடம் பதறி தான் போனார்.,  கிட்டத்தட்ட 32 வருட தாம்பத்தியம் அல்லவா., “உடம்பு முடியலன்னு உடனே சொல்ல மாட்டியா இப்படித் தான்  இருப்பியா”., என்றார்.

டாக்டர் பார்த்து விட்டு “ஒரு நாள் இங்கே இருக்கீங்களா.., நாளைக்கு போறீங்களா”., என்று கேட்டார்.

தேவகி தான் “இல்லவே இல்ல டாக்டர் என்னால இருக்க முடியாது., நான் ஹாஸ்பிடல் வரவே மாட்டேன்னு சொன்னேன்.,  என் மருமக கட்டாயப்படுத்தி இழுத்துட்டு வந்துட்டா”.,என்று சொல்ல.,

“நல்லவேளை கூட்டிட்டு வந்தாங்க., இப்படியா இருப்பிங்க”., என்று சொல்லி சில மருந்து மாத்திரைகளை கொடுத்து சரியாக உன்னை வேண்டும் என்று சொல்லி அறிவுரையோடு அனுப்பி வைத்தார்.,

நந்தன் வருவதற்கு முன்னே அனைவரும் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

ஏற்கனவே அனைத்து மருத்துவ பில்களையும் நிவேதா கட்டியிருந்ததால்.,  யாருக்கும் அதை பற்றி தெரியவும் இல்லை.,  மற்றவர்களோ தேவகி தான் கொடுத்திருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.,

மருத்துவமனையில் மருந்து மாத்திரை என அத்தனை சகிதம் இவர்களை ஆட்டோவில் முன்னே அனுப்பி வைத்துவிட்டு., பின்னே வண்டியில் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள்.

வீட்டிற்கு வந்த பிறகு அனைவருக்கும் ஸ்வேதா டீ போட்டுக் கொண்டிருக்க நிவேதாவும் வந்து உள்நுழைந்தாள்..

எப்போதும் 6 மணிக்குள்ளாக வரும் நந்தன் ஏதும் முக்கியமான வேலை இருந்தால் வெளியே போக வேண்டியது இருந்தால் போய்விட்டு வருவான்.,

ஆனால் அன்று சற்று தாமதமாக வந்தாலும் இரவு உணவு நேரத்திற்குள் வீட்டிற்கு வந்து விட., வீட்டில் அமைதி அவனுக்கு சற்று வித்யாசமாக பட்டது. ஸ்வேதாவின் குழந்தையின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் வீட்டில் இல்லை.,

வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து உடம்பு கழுவிக்கொண்டு உடைமாற்றி தேவகி அவர் அறையிலேயே படுத்து விட.,  மற்றவற்றை ஸ்வேதாவும் நிவேதாவும் பார்த்துக்கொண்டிருந்தனர்.,

அதற்குள் முழுநேரம் மருத்துவமனையில் கூடவே இருந்ததால் நிவேதாவும் குளித்து விட்டு வேறு உடை மாற்றிக் கொண்டு கீழே வந்து ஸ்வேதாவிற்கு உதவி கொண்டிருந்தாள்..

அப்போது தான் நந்தன் வந்தான்.,  அதே நேரம் ஷ்யாம் வெளியே சென்றிருக்க உள்ளே வந்தவன்., இத்தனை அமைதி என்ன என்று சொல்லிக்கொண்டே  கிச்சனுக்கு போய் நின்றான்.

“பூனைக்குட்டி என்ன இன்னைக்கு போனே பண்ணல .,அல்லது மதியம் லஞ்ச் டைமில் ஒரு போன் வரும்., ஈவினிங் ஒரு போன் வரும்., என்னாச்சு இன்னைக்கு”.,  என்று கேட்டான்.

“நீங்கதானே மீட்டிங் போன் பண்ண கூடாது சொன்னீங்க”., என்றாள்.

“ஆமாமா சொன்னேன்., ஆனா நான் மீட்டீங் முடிஞ்சு வரும்போது அட்லீஸ்ட் மெசேஜ் ஏதாவது வந்திருக்குமா னு பார்த்தேன்.., ஒன்னையும் காணோம் என்ன ஆச்சு”.,  என்று சொல்லவும்.

அவள் அவன் முகத்தை பார்க்கும் பார்வையில் இருந்த தவிப்பு.., அவனுக்கு ஏன் என்று புரியவில்லை.., யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவரிடம் சொன்னாலும்.,

அவள் அறியாமல் அவளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது.., மனம் பிரார்த்தனை வைத்துக்கொண்டே இருந்தது., அது எப்படிப்பட்ட கனமான ஒரு சூழ்நிலை என்பது அதைக் கடக்கும் போது மட்டும் தான் தெரியும்….

பழுது என்று மிதிக்கவும் முடியாமல்., பாம்பு என்று தாண்டவும் முடியாமல்.,  தவிக்கும் தவிப்பு தான் அது., எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் போராடலாம் என்று நினைத்து விட்டாலும்.., என்னவாக இருக்குமோ என்ற பயம் உள்மனதில் அரித்துக்கொண்டே இருக்கும்.., அப்படித்தான் நிவேதாவுக்கு இருந்தது..,

“ஏய் என்ன ஆச்சு., பூனைக்குட்டி” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே சுவேதா உள்ளே கிச்சனுக்குள் வந்தவள்.,

“நீ போய் ட்ரஸ் மாத்திட்டு வா” என்று சொல்ல.,

“நீ ஒரு மாதிரி இருக்க”.,  என்றான் ஸ்வேதாவிடம்.

“அம்மாக்கு உடம்பு சரியில்லை”., என்று சொல்லி காலையில் நிவேதா கல்லூரிக்கு செல்லாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது எல்லாம் சொன்னாள்., விரிவாக சொல்லாமல் லேசாக சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்.

அவன் தான் சற்று நேரம் அமைதியாக இருந்தான்., அவனுக்கு என்ன என்பதுகூட புரியாமல் இருக்க நிவேதாவின் கையை பிடித்தவன் கிச்சனுக்குள் நின்றுகொண்டு “நிவி என்னன்னு சொல்லு” என்று அவள் முகத்தை பார்த்த படி முகம் கலங்க கேட்டான்.,

அவளுக்கு அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை., இது வரை இது போல வேறு எதுவும் பேசாத காரணத்தினால் சற்று தயங்கினாலும் எங்கோ பார்த்தபடி அத்தனையும் சொல்லி முடித்தாள்…

காத்திருக்கும் பரிசோதனை பற்றி மட்டும் சொல்லவில்லை.., மற்ற அனைத்தையும் சொல்ல அவன் ஏனோ ஒரு முகம் கலங்கி நின்றான்.,

“அம்மா எப்படி இருக்காங்க”., என்று கேட்டான்.

“ஓகேவா இருக்காங்க., கொஞ்சம் நல்ல கவனிக்கணும்., கேர் எடுத்து பார்த்துக்கணும்”., என்று சொன்னாள்.

“சரி.,ம்ம்ம்”., என்று சொல்லிவிட்டு உடை கூட மாற்றாமல் நேரடியாக அம்மா அப்பாவின் அறைக்குள் சென்றவன்.,

அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு தேவகியின் கையை பிடித்தபடி “ஏன்மா இப்படி பண்றீங்க., இத எல்லாம் சொல்ல மாட்டீங்களா.,  நீங்களாவே ஒரு முடிவு பண்ணிட்டீங்களா ம்மா., சரி  என்கிட்ட சொல்ல முடியாது உங்களால., ஸ்வேதா கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல..,  அப்பா கிட்ட சொல்லி இருக்கலாம்.., அட்லீஸ்ட் உங்க கூட உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கா இல்ல அவகிட்ட  அதைச் சொல்லியிருக்க வேண்டியது தானே”.., என்று வருத்தத்தோடு கேட்டான்.,

மகனின் வருத்தத்தை புரிந்து கொண்டவர்., “அதான் ஒன்னும் இல்லை இல்லடா., இப்ப நல்லா இருக்கேன்.,  ஸ்வேதா கூட இப்படி இருப்பாளா.,  எனக்கு செய்வாளா ன்னு தெரியாது., ஆனால்  நிவேதா உண்மையிலேயே எனக்கு பெருமையா இருக்குடா”.., என்று சொல்லும்போதே அவருக்கும் கண்கலங்க தொடங்கியது.,

நிவேதா கிச்சனில் இருந்ததால் அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை.,   அதேநேரம் அவர் தேவகி கண்கலங்க நந்தனிடம் “மருமகளை மகளா நீ பார்க்கீயா என்று  இந்த தெருவிலேயே எல்லாரும் சொன்னாங்க.., என்னதான் இருந்தாலும் மருமக ஒருநாள் மருமக புத்திய  காட்டிருவா னு சொன்னாங்க..,

என்னைக்காவது ஒரு நாள் நீங்களும் உங்க மாமியார் புதிய காட்டாமலா இருப்பீங்கன்னு கேட்டாங்க.., நான் ஒருவேளை மாமியார் புத்திய காட்டினா கூட., அவ காட்டவே மாட்டா டா.., அவ என்னைக்கும் மகளாக தான் இருப்பா”., என்று சொல்லும் போதே அவருக்கு கண்ணீர் வடிந்தது.,

இவன் அவசர அவசரமாக கண்ணீரைத் துடைத்துவிட ஸ்வேதா அவருக்கு வெண்ணீர் வைத்து எடுத்துக்கொண்டு வர.,

“நிவேதா எங்க”., என்றார்.

“கிச்சன்ல சட்னி செஞ்சிட்டு இருக்க மா” என்று சொல்ல.,

“ஸ்வேதா இருந்தாக்கூட எனக்கு அந்த விஷயத்தில் இவ்வளவு பண்ணி இருப்பாளா னு தெரியலடா.., ஏன்னா அவ மாமியாரா நான்  ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து நாளைக்கு என் மருமகளுக்கு டெலிவரி நேரத்துல செய்வேனா னு தெரியல்ல..,  ஆனா அவ எனக்கு செஞ்சா.,  நான் அந்த அளவுக்கு நல்ல மாமியாரா இருந்தேனா அப்படிங்கிறது தெரியல”என்று  கண்கலங்க சொல்லவும்..,

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா அவ யோசிக்கிற ஆள்  கிடையாது விடுங்க”., என்று சொன்னான்.,

“அவ யோசிக்க மாட்டா., ஆனா எனக்கு தோணுது நான் நல்ல மாமியாரா நடந்துகிட்டேனா ன்னு.., திரும்பத் திரும்ப என் மனசாட்சி என்னை கேட்குதே” என்று சொல்ல.,

“சட்னி எல்லாம் அரைத்து வைத்துவிட்டு நந்தனுக்காக டீ போட்டு எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து கதவை தட்ட.., “வா உள்ள வா” என்று தேவகி அழைத்தார்.

“நீங்க ஏதாவது குடிக்கறீங்களா., அத்த” என்று கேட்டாள்.

“இல்லடா”., என்று சொல்லவும் நந்தன் கையில் கொடுத்துவிட்டு “மாமா உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாமா உட்காரு” என்று சொல்லவும்.,

தேவகி அவளை அருகில் அழைத்து “நான் உனக்கு நல்ல மாமியாரா இருந்தேனாடா”., என்று கேட்டார்.

“இல்லையே”., என்று சிரித்தபடி சொன்னவள் “நல்ல அம்மாவா இருந்தீங்க”., என்று சொல்ல அவரோ அவள் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார்.

அவருக்கு கண்ணீர் வடிய துடைத்து விட்ட படி “ஐயோ அத்த இதுக்கெல்லாம் அழுவிங்களா” என்று சொல்லி கண்ணீரை துடைத்து விட்டாள்.

அவரிடம்  “சுடா இட்லி எடுத்துட்டு வரேன் சாப்பிட்டுட்டு மாத்திரையை போடுங்க”., என்று சொன்னவள்.,

“எந்த ஹெல்ப்னாலும் கூப்பிடனும்” என்று சொல்ல.,

ஸ்வேதா “நான் இங்க தானே இருக்க போறேன் நீ போ நான் பார்த்துக்கிறேன்”.,  என்று சொன்னாள்.

இரவு அவருக்கு தேவையான உணவை கொடுத்து அவருக்கு மீண்டும் உடை மாற்ற உதவி செய்துவிட்டு.,

“இப்போஉங்களுக்கு எப்படி இருக்கு.,  ஏதாவது வித்தியாசம் தெரியுதா.., இல்ல டாக்டர் க்கு போன் பண்ணி கேட்கவா”.,  என்று கேட்டாள்.

” இல்லம்மா இப்ப எனக்கு பரவால்ல..,  ஹாஸ்பிடலில் இருந்ததை விட இப்ப பரவால்ல..,  நீ போய் படுத்துக்கோ”., என்று சொன்னார்.

அவருக்கு தேவையானவற்றை எடுத்து அறையின் ஒரு ஓரத்தில் வைத்து இங்கே வைத்திருக்கிறேன் என்று சொன்னாள்.

நந்தனின் அப்பாவின் கட்டாயத்தினால் பிள்ளைகள் அவர்கள் அறைகே படுக்க செல்லவும்.,

நந்தன் மொட்டை மாடியில் கைகட்டி நின்றபடி வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டிருந்தான்…

நிவேதாவிற்கு அன்றைய அலைச்சலும் மன உளைச்சலும் சேர்ந்து அவளை சோர்வாகி இருக்க..,

ஆனாலும் நந்தன் வெகுவாக உடைந்துபோய் நின்ற கோலம் அவளுக்கு சற்று வருத்தத்தை தந்தது..,  ஏனெனில் ஒரே நாளில் தேவகி அந்த அளவிற்கு சோர்ந்து போயிருந்தார்.., அதுவே  அவருடைய குடும்பத்தினரை மிகவும் சோர்வடைய செய்திருந்தது..,

அருகில் போய் நந்தன் கையை பிடித்து அவன் தோளில் சாய்ந்தபடி “என்ன ஆச்சு” என்று கேட்க.,

“ஒன்னும் இல்லடா இன்னைக்கு பார்த்தா மீட்டீங் வரணும்.,  தனியா கேன்டில் பண்ணி ரொம்ப கஷ்டப்பட்டுட இல்லையா”., என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க வாங்க”., என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தவள்.

எப்போதும்போல படுத்தாலும் அன்று ஏனோ எப்போதும் நந்தனுக்கு முதுகு காட்டிப் படுப்பவள்., அன்று நந்தனை இறுக அணைத்தபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்து படுத்துக்கொண்டாள்..,

அவனுக்கு அவளுடைய நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருந்தாலும் ‘அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் தனியே நிற்கும் நேரம் பயந்திருப்பாள்’ என்று நினைத்துக்கொண்டான்…

கண்ணாடி என் நண்பன்
ஏனெனில் நான் அழும்போது
அது சிரிப்பதில்லை.

                      –சார்லி சாப்ளின்.