“பாத்தியாடி இவன் பின்னாடி நான் எத்தனை வருஷம் சுத்தியிருக்கேன்.,  என்னைய மனுஷியா கூட மதிக்க மாட்டான்., ஆனா கல்யாணம் முடிஞ்சு 3 மாசம் கூட ஆகல.., பொண்டாட்டிய எப்படி தாங்குறான் பாத்தியா”.,   என்று கேட்பது தெரிந்ததும் லேசாக எட்டிப் பார்த்தாள் நிவேதா.,  பார்த்தால் அங்கு மஞ்சரி அவள் அருகே நின்ற இன்னொரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள்.,

“லூசு மாதிரி பேசாத., அந்த பொண்ணு அவங்க பொண்டாட்டி.., அது மட்டும் இல்லாமல் அவங்க ஒன்னும் உன்ன லவ் பண்ணல..,  லவ் பண்ணி இருந்து வேண்டாம்னு சொல்லி இருந்தா.., நீ அவன் கிட்ட போய் வம்பு பண்றதுல நியாயம் இருக்கு.., இப்ப தேவையில்லாம எதுக்கு அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க..,  வேண்டாம் னு ஒதுங்கிரு.,  அவன்  பொண்டாட்டி ட்ட., வேற கல்யாணத்துக்கு  போய் பிரச்சினை பண்ணி இருக்க.., எல்லாம் தெரிந்தும் உன்னை கண்டுக்காம ஒதுங்கி போயிட்டு இருக்காங்க..,

இப்ப  நீ தான் ஒதுங்கி போகணும் புரிஞ்சுக்கோடி மஞ்சு”.,  என்றாள்.

“அப்படி எல்லாம் கிடையாது அவனை நிம்மதியா இருக்க விட கூடாது”., என்றாள்.

“அறிவில்லாம பேசாத நீ போய் உன்னை நீயே கேவலப்படுத்திக்க போறியா”.,  என்றாள்.,

“நான் எதுக்கு என்னைய கேவலப்படுத்திக்க  போறேன்.., நாளைக்கு பாரு அவ புருஷன் பத்தி அவ என்னன்ன  நினைக்க முடியுமோ., அவ்வளவு மட்டமாக நினைப்பா”., என்று சொல்ல..,

நிவேதாவோ ‘ஐயோ திரும்பத் திரும்ப இவ பிளான் சொதப்பலா இருக்கே’என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு

‘பேசாமல் நாம போய் சொல்லி கொடுப்போம்.., நானே உனக்கு பிளான் பண்ண சொல்லிக் கொடுக்க வேண்டியதா இருக்கு அப்படின்னு சொல்லி கொடுப்போம்’ என்று மனதுக்குள் நினைத்தவள் சற்று நேரத்தில் பார்த்துக்கலாம்., என்று நினைத்து நகர  நினைக்கும் போதே மீண்டும் வந்து பேசத் தொடங்கினாள்.,

“எந்த பொண்ணா இருந்தாலும் தான் புருஷன் இன்னொரு பொண்ணோட இருக்குறத  பார்க்க விரும்ப மாட்டாங்க”., என்று அவர் சொல்லவும்.,

இங்கு நிவேதாவும் ‘தப்பா எதுவும் போட்டோவ மார்பிங் பண்ணி இருப்பாளோ’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..,

அதற்கேற்றார் போல் அங்கும் மஞ்சரியும் “நாளைக்கு நான் போய் அவ புருஷன் வாங்கி கொடுத்ததா சொல்லி.., அவ புருஷன் அவளுக்கு என்ன கலரில் சேலை வாங்கினானோ., அதே கலர்ல நானும் வாங்கி இருக்கேன் அதை எடுத்துட்டு போயி நிக்க போறேன்..,

ஏன்னா இவன் வாங்கின அன்னைக்கு அதே இடத்தில அடுத்து அதே மாதிரி சாரி வாங்கி நான் பில் போட்டுட்டு வந்து இருக்கேன்.., நம்பிக்கை இல்லைன்னா உன் புருஷன் உனக்கு வாங்கி கொடுத்த பில்லை போய்ப் பாரு” என்று சொல்லுவேன் என்று சொல்லவும்.,

“இவ மட்டும் இல்லை.,  ஒரு நிமிஷம் எல்லாருக்கும் சந்தேகம் வந்துரும் இல்ல”.,  என்று தோன்றியது..,

அடுத்த நிமிடம் மீண்டும் மஞ்சரி பேசுவதை காது கொடுத்து கேட்க தொடங்கினாள்.,  “அதனால தான்  அவன் பேரில் பில்லை போட்டேன்”., என்று சொல்லவும்.,

“அடிப்பாவி”., என்று நினைத்து கொண்டாள்.,

“நீ வேணா பாரு.,  நாளைக்கு எப்படி காய் நகர்த்துறேன் மட்டும் பாரு”., என்று சொல்லவும்.,

“ஏண்டி போட்டோ எதுவும் தப்பா எதுவும் போட்டு வெச்சி இருக்கியா”., என்று கேட்க “அதெல்லாம் இனிமேல் தான் ரெடியாகி வரும்”.,  என்றாள்.,

“லூசு யார் ட்ட கொடுத்த மார்பிங் பண்ண” என்று கேட்டாள்.

“எல்லாம் என் பின்னாடி ஒரு லூசு சுத்திட்டு இருக்கான் இல்ல., அவன்கிட்ட தான் கொடுத்து இருக்கேன்”., என்றாள்.

“எவ்வளவு செலவாகும்”., என்று  அவள் கேட்டாள்.

“ஒன்னுமில்ல., இது வேற டிலீங்” என்று சொல்லவும்.,

‘இப்படிப்பட்ட பொண்ணா இவள்’ என்று நிவேதாவிற்கு தோன்றியது.,

அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.., சும்மா மிரட்டுகிறாள் என்று நினைத்தால் இவள் கொஞ்சம் தப்பு போலயே.,  என்று தோன்றியது.

பின்பு அவள் தோழி அவளை ஏதோ சத்தம் போட்டுக்கொண்டே கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவள்.,

அதன் பிறகு மெதுவாக தன் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு மெதுவாக எப்பொழுதும் செல்வதை விட மெதுவாகவே சென்றாள்.,

மனம் முழுவதும் நந்தனின் மேலே இருந்தது.

“டேய் புருஷா..,  இருந்திருந்து இப்படிப்பட்ட மோசமான பொண்ணா.,  உன்னை சைட் அடிக்கணும்..,  இவளுக்கும்.,  உனக்கும் பஞ்சாயத்து பண்றதுதான் என் பொழப்பா” என்று நினைத்தவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொரு பக்கம் நந்தனை நினைத்து வேதனையாக இருந்தது…..

‘இந்த பொண்ணு என்ன நெனச்சிட்டு இப்படி பண்ணுது ன்னு தெரியலையே..,  லவ்வா இருந்தா..,  தான் லவ் பண்றவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் நினைக்கிறது.., அப்படி இல்லன்னா.,  லவ் பண்ணினவங்க தனக்கு மட்டும்தான் சொந்தமா இருக்கணும் அப்படிங்கிற நினைப்பு இருக்கும்.,    ஆனா இது எதுவுமே இல்லாம அவன்  நல்லா இருக்க கூடாது.., என்ற ஒரு எண்ணம் மட்டும் தான் இருக்கு.., தன்னை விரும்பாதவன் எவனுமே நல்லா இருக்க கூடாது என்கிற எண்ணம் தான்..,  என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.

நந்தனை  நினைத்து  ‘நீ எனக்கு தெரியாமல் கிப்ட் எல்லாம் வாங்கி வெச்சுருக்கியா எப்ப தருவ’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே போகும் போது வாசலில் நந்தன் தன் நண்பனோடு நின்று பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது..,

அதே நேரம் வாசலில் தேவகியும் வந்து எட்டிப் பார்க்க..,  நந்தன் “உள்ள போங்க ம்மா வருவா”.,என்றான்.

“அவ  வர லேட் ஆகும்னு சொல்லிட்டு தான் போனா., ஆமா நீங்க  இரண்டு பேரும் எதுக்கு டா வாசல காவல்காத்துட்டு நிக்குறீங்க”.., என்றார்.

நந்தன் அம்மாவை முறைத்தபடி பார்க்க., அவன் நண்பனோ சிரித்தபடி., “அம்மா நீங்ககூட உங்க மருமகள மாதிரி பேசத்தொடங்கிட்டீங்க” சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவள் வரவும்..,

அவளைப் பார்த்தவன்., ஏற்கனவே டென்ஷன் ஏறிப்போய் இருந்தவன்., கோபமாக., “ஏன் வண்டிய உருட்டிட்டு வரவேண்டியது தானே.. டயர் தேஞ்சிரும் னா., இவ்வளவு ஸ்லோவா வர்ற., ஸ்பெஷல் க்ளாஸ் முடிஞ்சா கொஞ்சம் சீக்கிரம் வரப்பார்க்கனும்., போ உள்ள”., என்றான்.

அவனை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே வர., “ஏய்ய் சிரிக்குற மாதிரியா இருக்கேன்னு.,நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் மீண்டும் சத்தமாக கேட்டான்.

மீண்டும் அவனை பார்த்து சிரித்து விட்டு உள்ளே வந்து விட்டாள்., அவன் முதலில் கத்த தொடங்கும் போது அவள் முகம் லேசாக மாறினாலும்.., தன்னை அவள் சமப்படுத்திக் கொள்வதே அவனும் உணர்ந்தான்., தேவகியும் உணர்ந்தார்…

அவள் வண்டியை உள்ளே நிறுத்தி விட்டு பேக்கை  எடுத்துக் கொண்டு வாசலில் தேவகியோடு ஏறுவதை கண்ட பிறகு நந்தனின்  நண்பன் தான்.,

“நீ எங்கே  உள்ள டென்ஷனையோ.,  அந்த பொண்ணுட்ட  காட்டுற.,  ஏன் இப்படி போகும்  போதே  இன்னைக்கு  வர லேட்டாகும்னு சொல்லிட்டு தான் போய் இருக்கா ன்னு., அம்மா  சொன்னாங்க  தானே..,  அப்புறம் எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற”., என்று சொல்ல.,

“ம்ச்.,  ஏதோ டென்ஷன் தான்”., என்றான்.

“சரி போ., போய் சரி பண்ணு., இப்பவும் கத்திட்டு இருக்காத”., என்று சொல்ல.,

” நான் கத்தினாலும் பயப்பட்டுற போறா.., இப்ப என்ன செஞ்சா சிரிச்சிட்டு தானே போனா”., என்று சொன்னான்…

“பக்கத்துல  நான் அம்மா எல்லாம் இருக்கோம் ன்னு சொல்லி சிரித்துட்டு போய் இருக்கும்.., ஆனா அந்த பொண்ணு நீ டக்குன்னு கோபப்பட்ட  உடனே முகம் மாறி போச்சு..,  போ போ.., போய் சமாதானம் பண்ணு”..,  என்று சொல்ல

“இல்லடா.., இப்ப வேண்டாம்.,  டென்ஷன்ல கூட கொஞ்சம் எதுவும் சொல்லக்கூடாது”… என்றான்.

“அப்புறமா பேசிக்கிறேன் விடு” என்று சொல்லி விட்டு சற்று நேரம் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர்..,