“என்ன இன்பா சொல்றீங்க? என்ன எப்படி உங்களுக்குத் தெரியும்? எனக்கு உங்களை இந்த வொர்க் மூலமாகத்தான தெரியும். அதுக்கு முன்னாடி நான் உங்களைப் பார்த்த ஞாபகம் இல்லையே”
“நீ எங்க தங்கம், என்ன பார்த்த? நான் தான உன்ன பார்த்தேன்” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவனை முறைத்தவள்.
“தெளிவா சொல்லுங்க இன்பா”
“அது ஒரு த்ரீ இயர்ஸ் முன்னாடி நான் படிச்ச காலேஜ்ல ஒரு ஸ்பீச்சுக்காக போயிருந்தேன். சி.ஏ எப்படி ஃபர்ஸ்ட் அட்டம்ட்லயே கிளியர் பண்றதுன்னு ஒரு சின்ன ஸ்பீச்.
அங்க போன இடத்துல ஒரு கலவரம் ஆகி பசங்களுக்குள்ள பிரச்சனை. அது என்னடான்னு பார்க்கப் போன இடத்துல ஒரு பொண்ணு தனி ஆளா பசங்க கூட சண்டை போட்டுட்டு இருந்தா. என் ஜான்சி ராணி.”
என்று ரசித்து பேசியவனின் வாயைப் பார்த்தவள்
“யாரு அந்த ஜான்சி? உங்க ஃபிரண்டா?” என்று அப்பாவித்தனமாக பேசிய மனைவியை நெற்றியில் முட்டி பார்த்தவன்.
“அச்சோ தங்கம் உன்னை என்னடா பண்ண”
“ஏன் என்ன பிரண்டான்னு கேட்டதுல என்ன தப்பு இருக்கு?”
“நான் மேல சொல்றேன், அதை கேட்டுட்டு சொல்லு”
என்றவனுக்கு சரி என்பது போல தலையசைக்க இன்பா தொடர்ந்தான்.
இன்பா வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம் அது. இவன் படித்த காலேஜில் இவனை ஸ்பீச் கொடுப்பதற்காக அழைத்திருந்தனர், அந்த இயர் டிபார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு.
இவனும் அதற்காக அங்கு வந்து அவன் உரையை முடித்துவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு?” என்று இன்பா எட்டி பார்க்க, அவன் ஜூனியர் ஒருவன்
“தெரியலையே ன்னா, ஏதோ பிரச்சனை போலயே.”
“சரி வா என்னன்னு பார்த்துட்டு வருவோம்” என்று அருகில் சென்று பார்த்தனர்.
அருகில் செல்ல செல்ல பேசும் சத்தம் கேட்டது.
“இல்ல அந்த பையன் ஏதோ பேப்பர் பார்த்து தான் டேலி பண்ணான். நான் பார்த்தும் அந்த பேப்பரை தூக்கி போட்டான்.”
“ஏ… என்ன அவன் தான் இல்லன்னு சொல்றான்ல, ஓவரா பேசிட்டு இருக்க.”
“போட்டின்னா நேர்மை இருக்கனும், இப்படி கேவலமா சீட் பண்ணாதிங்க “ என்று பேசியவளை கூட்டத்தில் எட்டி பார்த்தான் இன்பா.
இடை தாண்டி வளர்ந்த கார்குழல் ஆட, தனி பெண்ணாக மூன்று வாலிபர்களுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
“என்னடா தம்பி பிரச்சனை” என்று அருகில் இருந்த ஒரு பையனிடம் கேட்க,
“அது அண்ணா, இங்க டேலி வச்சி ஒரு கேம் கண்டக்ட் பண்ணாங்க. அதுல இந்த பையனுக்கு யாரோ ஆன்சர் பேப்பர் லீக் பண்ணிட்டாங்க போல. அதான் அவன் பார்த்து சம் சால்வ் பண்ணத இந்த பொண்ணு பார்த்துட்டு பிரச்சனை பண்ணுது.”
“ஓ…. இந்த பொண்ணு தான் அப்போ ஃபர்ஸ்ட் அ சால்வ் பண்ணுச்சா?”
“இல்ல ண்ணா, அது வேற ஏதோ பொண்ணு தான் ஃபர்ஸ்ட் அ முடிச்சிருக்கு. ஆனாலும் இந்த பொண்ணு நியாயம், நீதின்னு சண்டை போடுது.”
“ஓ… “என்றபடி அவளை பார்த்தான்.
“இதோ பாருங்க, அவனுக்கு பிரைஸ் கொடுத்தீங்கன்னா நான் கண்டிப்பா கம்ப்ளைன்ட் பண்ணுவேன்.”
“ஏதோ ஒரு பொண்ணுக்காக நீ ஏன் துள்ளிட்டு வர, ஒழுங்கா கிளம்பிடு. இது எங்க காலேஜ், யாருக்கு என்ன தரனும்னு எங்களுக்கு தெரியும். பொண்ணா இருந்துகிட்டு என்ன வாய் பேசுற? “
“தப்புன்னா யாரு வேணும்னாலும் கேட்கலாம், பையன் தான் கேட்கணும்னு அவசியம் இல்லை”
என்று முறைத்து நின்றவளை ரசித்து பார்த்த இன்பா.
யாரு இந்த பொண்ணு என்று அவளுக்கு உதவ செல்வதற்குள் அந்த காலேஜ் ஸ்டாப் ஒருவர் அங்கு வந்துவிட, அவர் சமாதானம் செய்து நியாயமாக ஜெயித்த பெண்ணிற்கே பரிசை தந்து விட்டு சென்றார்.
அதன் பின் அந்த பெண்ணும் அவள் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ள, இன்பாவின் கால் காந்தத்தை நோக்கி ஈர்க்கப்பட்டது, அவளின் பின்னால் சென்றது.
அவள் பெயரை கண்டுபிடிக்க அவள் பின்னாலேயே சென்றவன், அந்த கூட்டத்தில் அவளை தொலைத்து விட, காலேஜ் மூடும் வரை அங்கே தான் அவளை தேடி அலைந்தான்.
அவள் இந்த காலேஜ் இல்லை என்று தெரிந்து கொண்டவன், அன்று இந்த கேம்க்கு வந்த அனைத்து காலேஜின் பெயரையும் வைத்து மூன்று வருடம் தேடி அலைந்தான்.
இந்த விஷயம் மகேஷுக்குக் கூட தெரியாது. ஏதாவது பெண்ணின் முடி நீலமாக இருந்தால் போதும், வேகமாகச் சென்று அந்தப் பெண்ணின் முகம் பார்த்து, அது அவள் இல்லை என்றதும் சோர்ந்து போவான்.
“அப்போ அந்த ஜான்சி பொண்ணை நீங்க லவ் பண்ணீங்களா?” என்று சோகமாக முகத்தை வைத்து கேட்ட மகாவை முறைத்தவன்,
“சரியான மக்கு பொண்டாட்டி நீ. நான் அவள் வீரத்தை சும்மா ஜான்சி ராணி மாதிரி சொன்னேன்”
“அப்போ அந்த பொண்ணு பேரு என்னங்க?”
“ம்ம்ம்…. மகாலட்சுமி”
“ப்ச்… விளையாடாம சொல்லுங்க”
“அட தங்கமே விளையாடலடி, உண்மையாதான் சொல்றேன். என் ஜான்சி ராணி, என் தங்கம், என் எல்லாம் நீதான்டி”
என்று கன்னத்தைக் கடித்தவனின் செயலில் வெட்கப்பட்டவள்.
“அப்போ அந்த பொண்ணு நானா ?” என்று தலை சரித்தவளை ஆசையாக பார்த்தவன்
“ம்ம்ம் ….டா தங்கம் “
“அதென்ன எப்ப பாரு தங்கம் னு கூப்பிடுறிங்க? பேபி, செல்லம், பட்டுன்னு நிறைய செல்லப் பேரு இருக்கும்போது ஏன் குறிப்பிட்டு தங்கமேன்னு கூப்பிடுறீங்க இன்பா?”
“அதுவா தங்கமே……, உனக்குத் தெரியும்தான என் சின்ன வயசுலயே என் அம்மா அப்பா இறந்துட்டாங்கன்னு.”
அதற்கு மகா தெரியும் என்பது போல தலையசைக்கவும்
“அவங்க என் கூட இருந்தது ரொம்பக் குறைவுதான் தங்கம். அவங்க ஞாபகங்களும் எனக்குக் குறைவுதான். அதுல இருக்கிற நினைவு ஒண்ணுதான் எங்க அப்பா அம்மாவை செல்லமா தங்கம்னு கூப்பிடுறது.
எங்க அப்பா எங்க அம்மாவை தங்கம்னு கூப்பிடும்போது எல்லாம் எங்க அம்மா முகம் அப்படியே பளிச்சுன்னு மாறும் பாரு, எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அந்த நினைவு வரும்போது எல்லாம் நான் நினைச்சிப்பேன் நமக்கு மேரேஜ் ஆச்சுன்னா என் மனைவியை அப்படிதான் கூப்பிடணும்னு”
அதைக்கேட்டு கண் இமைக்காமல் இன்பாவை பார்த்தவள்,
“மிஸ் பண்றியா இன்பா “
“ம்ஹூம் இல்லடி பலகிடுச்சி….”
என்று அவளை மேலே இழுத்து அவள் கலுத்தில் முகம் புதைத்தபடி ஆழ மூச்சு எடுத்து அப்படியே இன்பா இருக்கவும்.
இன்பாவிற்கு அவன் அம்மா அப்பா நினைவு வந்து விட்டதை புரிந்தவாளக சிறிது சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள்.
“இவுங்கள எப்படி நான்மலா ஆக்க “ என்று யோசித்தவளுக்கு யோசனை ஒன்று பிறக்க,
“என் ரிங் எங்க இன்பா? அதை இப்போ போட்டு விடுங்க” என்ற மகாவின் குறளில் இன்பா நிமிர்ந்து அவளின் முகத்தை பார்க்க, மகா அவளின் விரல்களை காட்டி
“ரிங் எங்க அதை தாங்க இன்பா” என்றதும் இன்பா
“அடியேய் தங்கம், இப்போ போய் ரிங்க கேக்குறியேடி. மார்னிங் போட்டு விடுறேனே”
“ம்ஹூம் எனக்கு இப்போவே வேணும்” என்று அடம்பிடித்தவளை பாவமாக பார்த்தவன்.
கண்களால் அவனையும் அவளையும் சுட்டிக்காட்டி
“இப்போ வேணுமாடி?” என்றதில் அவள் முகம் சிவந்த போதும் ஆம் என்று இவள் தலையசைக்க, கட்டிலில் இருந்து இன்பா போர்வையுடன் எழுந்திருக்க முயன்றான்.
“அச்சோ எனக்கு போர்வை….”
என்று மகா ஒருபுறம் போர்வையை இழுக்கவும் மீண்டும் கட்டிலில் அமர்ந்தவன். மகாவை பார்த்து ஒரு முடிவு எடுத்தவனாக.
அவளை கையில் அள்ளிக்கொண்டு அவன் காலில் நிற்க வைத்து இருவருக்குமாக போர்வையை போத்தி மேஜையை நோக்கி நடக்க தொடங்கினான்.
“ஏ… இன்பா என்ன பண்றீங்க?”
“ப்ச்… ரிங் கேட்டதானே ஷூ..”
என்றவன் மேஜை அருகே சென்று அங்கிருந்த பெட்டியை திறந்து அதிலிருந்த மோதிரத்தை எடுத்தவன் மகாவை அணைத்தபடி கையில் போட்டு விட,
அதை ஆசையுடன் பார்த்து ரசித்த மகாவின் முடியில் முகத்தை நுழைத்த இன்பா முனுமுனுப்பாக
“ரிங் வாங்கிட்டா போதுமா? பதில் எங்கடி?”
என்றவன் அவள் காதை கடித்து விட
“இன்பா….. ” என்று மெல்ல முனங்கியவளிடம் “சொல்லு தங்கம்….” எ
ன்று அவளை பின்னிருந்து தூக்கிச் செல்ல, மகா அவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு அவன் கண்கள் பார்த்து
“லவ் யூ இன்பா “ என்று சொன்ன மறு நொடி வாயை அடைத்திருந்தான். மீண்டும் ஓர் நிதனமான கூடல் என்று அன்று இரவு மறக்க முடியாத நினைவுகளைத் தாங்கியே கடந்து சென்றது.
காலை மகாவிற்கு எப்போதும் போல சீக்கிரமாக முழிப்பு வந்துவிட கண்களை மெல்ல திறந்து பார்த்தாள். உடலில் ஏதோ பாரம் அழுத்துவது போல இருக்க குனிந்து அவளை பார்த்தாள்.
இன்பா தான் அவள் மீது கையை, காலைப் போட்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து மெல்ல வெட்கத்துடன் சிரித்தவள் எழுந்து அவன் கை, காலை விலக்கி விட்டு எழுந்து செல்லப் போக, மகாவின் முடி அவன் கையில் சிக்குண்டு கிடக்கவும்.
அதில் செல்லமாக அவன் தலையில் தட்டியவள் அவன் விரல்களை எடுத்து அவள் முடியை விடுவித்தவள்.
அதை வாரி எடுத்து கொண்டையாகப் போட்டுக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
குளித்து முடித்து வந்தவள் தலையை துண்டால் கட்டிக்கொண்டு சென்று சாமி அறைக்கு விளக்கை ஏற்றி வணங்கினாள்.
பின் சமைக்க சமையல் அறைக்கு போய் முதலில் கேசரி செய்தாள். அத்தோடு பிரிட்ஜில் இருந்த மாவை கலக்கி வைத்தவள் தேங்காய் சட்னியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டிருக்க, திடீரென்று அவள் வயிற்றை சுற்றிய கையில் பயந்து திடுக்கிட்டாலும் பின் அது யார் என்று புரிந்து சமாதானம் ஆகியவள்,
“குட் மார்னிங் இன்பா “
“குட் மார்னிங் தங்கம். ஏன் இவ்ளோ சீக்கிரம் முழிச்ச டா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே “
“அது பரவாயில்லைங்க காலைல எழுந்து பழக்கம் ஆகிடுச்சி “ என்ற படி அவள் செய்த கேசரியை அவனுக்கு ஊட்டி விட அதை சாப்பிட்டவன்,
“ம்ம்ம்…. தங்கம் சூப்பரா இருக்கு “
“அப்போ கொஞ்சம் கிண்ணத்துல போட்டு தரவா “
அதற்கு சரி என்று அவன் தலையசைக்கவும் ஒரு கிண்ணத்தில் போட்டு கொடுத்தவள்
“ ஒரு பைவ் மினிட்ஸ் ங்க தோசை சுட்டுறேன்”
என்று தோசை சுட்டவள் அவனுக்கு சூடாக பரிமாற, பதிலுக்கு அவன் அவளுக்கு ஊட்ட என்று சமையல் திண்டில் அமர்ந்த படி இருவரும் உண்டு முடித்தனர்.
சாப்பிட்டு முடித்த இன்பா அருகில் இருந்த சிங்க்கில் எட்டி கைகழுவியவன் மகாவின் புடவையை பிடித்து இழுத்து அவளை அவன் கைகளுக்குள் வைத்த படி,
என்று அக்மார்க் குடும்ப இஸ்திரியாக பேசிய மனைவியை இமைக்காமல் உற்று பார்த்த இன்பா அவள் பேசி முடித்த பின்னும் அமைதியாக தான் இருந்தான்.
இன்பாவின் பார்வையில் அமைதியான மகா அவனை என்ன என்பது போல பதில் பார்வை பார்த்து வைக்க,
“அது உன்கிட்ட கொஞ்சம் பேசணும் தங்கம் ” என்று அவள் பார்வைக்கு பதிலாக சொன்னவை பார்த்து
“என்ன இன்பா பேசணும் “
“அது நேத்தே இதைப் பத்தி பேசணும்னு தான் நினைச்சேன் “
என்று தலையை கோதியவனை பார்க்க முடியாமல் மகா தலை குனியவும்
“நோ… நோ… டாப்பிக் திருப்பியும் மாறுது நான் நேர விஷயத்துக்கே வரேன். இன்னும் மூணு நாள்ல உனக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது சோ ஹனிமூன் போக டைம் இல்ல டா தங்கம்.”
“என்ன கிளாஸ் எதை பத்தி பேசுறீங்க “
“யூபிஎஸ்ஸி கிளாஸ் தங்கம் ” என்றவனை மலர்ந்த முகமாக பார்த்த மகா
“ எப்போ என்ன சேர்த்தீங்க ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே “
“உங்க வீட்டுல தெரிஞ்ச ஏதாவது சொல்லுவாங்கன்னு தான் தங்கம் சொல்லல, உனக்காக என்னோட சின்ன சர்ப்ரைஸ் “
என்றவனை அணைத்து அவன் தோளில் சாய்ந்தவள்
“ இன்பா….” என்று ஆரம்பித்தவள் வாயை அடைத்து கண்களை உருட்டினான்.
“சரி அது இருக்கட்டும், அந்த கிளாஸ் மூணு நாள்ல ஸ்டார்ட் ஆகுது. சோ சென்னையை சுத்தி வந்து சின்னதா குட்டி ஹனிமூன முடிச்சிடலாம் தங்கம். அப்பறமா வேணா நீ பாஸ் ஆனதும் பெரிய ஹனிமூன் போயிடலாம் ” என்று கண்களில் கனவு மின்ன பேசியவனை ஆசையாக பார்த்திருந்தாள் மகா.
“டிங்….டிங் ” என்ற சத்தத்தில் நினைவு கலைந்தவளாக போனை எடுத்து பார்த்தாள். சத்யா தான் மெசேஜ் செய்திருந்தான்.
மகாவை தாக்க வந்தவர்கள் அந்த தீம் பார்க் ப்ராஜெக்ட்டை ரிஜக்ட் செய்த கோபத்தில் நான் ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறான் என்று தகவலை படித்தவள்.
போனை கீழே வைத்து விட்டு நேரத்தை பார்த்தாள். இரவு பத்து என்று இருக்கவும் பெருமூச்சு ஒன்றை விட்டவள்
“ என்ன அடிக்ட் ஆக்கி வச்சிருக்க இன்பா நீ இல்லாம தூக்கமே வர மாட்டேங்குது “ என்றவள் குளியல் அறை சென்று விட்டு வந்து பையில் இருந்து தூக்க மாத்திரை எடுத்து போட்டு கொண்டு தூங்கி போனாள்.
தூக்க மாத்திரை உதவியால் தூங்கி முழித்த மகா குளித்து விட்டு கிளம்பி வெளியே வர ஜெனிஷா வேக வேகமாக இவளை நோக்கி ஓடி வந்தாள்.
“சாரி மேம் கொஞ்சம் லேட் ஆகிருச்சு “ என்று மூச்சு வாங்கியவளை சிரித்த முகமாக பார்த்து
“இட்ஸ் ஓகே ஜெனி வா போலாம் ” என்று அழைத்து கொண்டு சத்யா உடன் விருது நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
அங்கே ஆடிட்டோரியத்தில் ஜெனிஷா உடன் மகா அமர்ந்திருக்க
“ அம்மா….. மகா அம்மா…..” இங்க பாருங்க என்று கைகளை ஆட்டிய படி ஒரு பெண் இவர்கள் அருகே வந்திருந்தாள்.
பார்க்க வடமாநிலத்து பெண் போல இருந்தாள். அவளும் புடவை அணிந்து மூக்கில் சிறு வளையம் ஒன்று மாட்டிருந்தாள்.
“மகா அம்மா… எப்படி இருக்கீங்க “
என்று மகாவை அணைத்து கொள்ளவும் ஷாக் ஆன ஜெனி
“என்ன இவுங்க நல்லா தமிழ் பேசுறாங்க. மேம்… அ அம்மான்னு வேற கூப்பிடுறாங்க “ என்று மாறி மாறி இருவரையும் பார்த்த படி இவள் நிற்க
“ஏ… ஜெனி இவ லேகா என் பொண்ணு டாக்டர் “ என்று அறிமுகம் செய்ததும் கைகுலுக்கிய லேகா
“ ஹாய் ஜெனி எப்படி இருக்கீங்க என் அண்ணன் உங்கள பத்தி தான் நைட் பூரா புலம்புனான் ஒரே நாள்ல எங்க அம்மா ஓட பெட் ஆகிட்டீங்களாமே “ என்று சிரித்தவளை ரசித்து பார்த்தவள்.
“ நீங்க கூட தான் க்யூட்டா இருக்கீங்க “ என்றவள் அவர்களுடன் அமர்ந்து வாய் ஓயாது பேச தொடங்கி விட்டாள்.
இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே விழா தொடங்கி விட அனைவரது கவனமும் அங்கே திருப்பியது.
பல பெரிய ஆட்கள் வரிசையாக பேசி முடித்து விருதும் வழங்கி விழா மிக அருமையாக முடிந்து விட மூவரும் எழுந்து சாத்தியாவை நோக்கி சென்றனர்.
மகா சத்தியாவை பார்த்த படி நெஞ்சு முட்டும் சந்தோஷம் கலந்த பொறுமையுமாய் அவன் அருகே செல்ல அங்கே சத்தியா அருகே சிரித்த முகமாக இன்பா நின்று கொண்டிருந்தான்.
இன்பாவை அங்கே பார்த்து அசையாது நின்ற மகா இது பொய்யோ என்று பயந்து கண்கள் கலங்க கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்க்க இன்பா இவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.
அதில் வேகமாக அவன் அருகே செல்ல கால்களை எடுத்து வைத்து நகர்ந்தவளின் கால்கள் திடீரென்று வலுவிழந்து போக பார்வை மங்கலாக மாற அப்படியே மயங்கி லேகா மீது சரிந்து விழுந்தாள் மகா.