அத்தியாயம்23

மழலையின் முதல் அடி போல முதல் காதல்…

கீழே விழுந்து எழுந்தாலும் அடுத்த அடி வைக்க தயங்குவது இல்லை… காதல்

காரில் வந்து இறங்கிய தம்பதியருக்கு சாந்தா ஆரத்தி எடுத்து உள்ளே ஹோபாவில் அமர வைத்து அடுத்த சம்பிரதாயம் செய்ய தயாராக வைக்க.

“மகா வா…. உனக்கு வீட்டை சுற்றிக் காட்டுறேன் “ என்று சொல்லி எழுந்தவனை முறைத்த சித்திரா

“ உன் பொண்டாட்டி எங்கேயும் போய்ட மாட்டா, இங்கே தான் இருப்பாள். அவளுக்கு பொறுமையா கூட இந்த வீட்டை சுற்றிக் காட்டு. இப்போ இங்கே உட்காரு “ என்று அவனை அமர வைத்துவிட

“என்ன இவங்க எங்கேயும் நகர விட மாட்டேங்குறாங்க. அதான் நம்ம கல்யாணம் முடிஞ்சி மூணு நாள் ஆகுதே “ என்று இவன் யோசித்த படி இருக்க, சாந்தா அவனை யோசிக்க விடாமல்

“ சாமிக்கு பூ வை, அம்மா அப்பா போட்டோ முன்னாடி விழுந்து ஆசிர்வாதம் வாங்கு “ என்று ஒன்று ஒன்றாக இருவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவர்கள் நல்ல நேரம் என்று மாலை தான் மகாவின் வீட்டிலிருந்து கிளம்பி இருந்தனர். இங்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து உணவு உண்ண வைத்து விட்டு மீண்டும் ஹோபாவில் அமர வைத்தனர்.

அப்போது அங்கு வந்த சித்திரா “ மகா வா ம்மா “ என்று அழைக்க இன்பாவும் கூட சேர்ந்து எழுந்தான்.

அதில் அவன் பக்கம் திரும்பிய சித்திரா “ உன்னை யாருடா கூப்பிட்டது “

“அப்புறம் அவளை மட்டும் எங்கே தனியா கூப்பிட்டு போறீங்க “

என்றதற்கு என்ன சொல்ல என்று சித்திரா தடுமாற

“அத்தை எல்லாம் ஓவர் ….” என்று குதித்த படி வந்த மகேஷை பார்த்த இன்பா

“டேய் மாமா நீ இங்கே தான் இருக்கிறியா? “

“டேய்… இன்பா ஒழுங்கா பேர சொல்லி கூப்பிடுடா..” என்று கைநீட்டி மகேஷ் எச்சரிக்க, அவன் கையை தட்டி விட்ட இன்பா

“ப்ச் ,சரி சரி கூப்பிடலை டா , ஆமாம் இவ்ளோ நேரம் இங்கே தான் இருந்தியா? நான் உன்னை பார்க்கவே இல்லையே டா “

“அது உள்ளே ஒரு வேலை பார்த்துட்டு இருந்தேன். நீ வா அதை பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு “ என்று இன்பா கையை பிடித்து இழுக்க

“டேய் பொறுடா மகாவையும் கூப்பிடலாம் “ என்று திரும்பி பார்க்க அங்கே அவன் மனைவியை காணவில்லை.

“ அதெல்லாம் அத்தை அப்போவே லிட்டில் கெர்ல தள்ளிட்டு போய்ட்டாங்க டா “ என்று அவனை இழுத்து செல்ல

“ப்ச் பொறுமையாடா அப்படி எதை காட்ட கூட்டிட்டு போற “ என்று சலிப்பாக கேட்டவனை அதிர்ந்து பார்த்தவன்.

“டேய் உண்மையாவே உனக்கு எதுக்கு நான் கூப்பிடுறேன்னு தெரியாதா டா “

அதற்கு தோள்களை உலுக்கிய இன்பா “ நோ ஐடியா டா “ என்றதும் வாயில் கைவைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு.

“ டேய் இன்னைக்கு உன் ஃபர்ஸ்ட் நைட்டா “ என்று அவன் காதில் கிசுகிசுப்பாக சொன்னவனை மேலும் கீழும் பார்த்தவன்.

“ இதை ஏன்டா நீ வெட்கப்பட்டுகிட்டே சொல்ற “

“அது வந்து மாமா… சீ … இன்பா … என்ன இருந்தாலும் நான் கன்னி பையன் அல்லவா “

என்று காலில் கோலம் போட்டவன் மண்டையில் தட்டி

“ ரொம்ப யோசிக்காம வா டா “ என்று இழுத்து சென்றவன் அவன் அறையை பார்த்து அதிர்ந்து நின்று விட்டான்.

சுவர் எங்கும் பலூனை ஒட்டி வைத்திருக்க கட்டில் முழுவதும் மல்லிகை மற்றும் ரோஜாக்களால் அலங்கரித்திருந்தான்.

ஒரு பக்கம் வாசனை தரும் ஊதுபத்தி ஏற்றி வைத்திருக்க அதோடு ரூம் ஸ்ப்ரே சென்ட் என்று அறையில் மூச்சு விட முடியாத அளவு வாசனையால் மூச்சடைக்க வேகமாக சென்று பால்கனி கதவை திறந்து விட்டான் இன்பா.

“டேய் என்னடா பண்ணி வச்சிருக்க ஒரே புகையா இருக்கு ஓமம் எதாவது நடத்துறியாடா”

“ ஓமம்லாம் இல்ல பக்கி,  நல்லா வாசனையா இருக்கட்டும்னு நான் தான் ரூம் ஸ்ப்ரே சென்ட் கொஞ்சம் ஊதுபத்தின்னு எல்லாம் போட்டு வாசனை ஆக்கி வச்சிருக்கேன் டா எப்படி சூப்பரா” என்று காலரை தூக்கி விட்டவனை

“அ.. உன் மூஞ்சி …” என்று தலையில் தட்டிய

“அவ்ளோ நல்லா இருக்கு” என்று அவனும் தலையை தேய்த்த படி சுற்றி பார்த்தான்.

“ நல்லா தான் இருக்கு… என்ன பலுன் தான் கோஞ்சம் ஓவர் மாதிரி தெரியுது “

“உன்ன தப்பு சொல்லி பிரயோஜனம் இல்ல உன்னை நம்புன எங்க அத்தைய சொல்லணும் . இரு உன் கல்யாணத்துலயும் இப்படி பயங்கரமா ரூம்ம டெக்கரேஷன் பண்ற பாரு”

“ என் பப்லி டெக்ரெஷன்லாம் பாக்க மாட்டா என்ன கடை ஸ்வீட்னு தான் பாப்பா டா அதை வச்சி நான் மேம் பன்னிபேனே “ என்று இன்பவை பார்க்க அவன் சுற்றி அறையை தான் பார்த்து கோண்டிருந்தான் .

“என்னடா இன்பா உனக்கு இந்த டெக்கரேஷன் பிடிக்கலையா”

“ எப்போ வந்து கேக்குற…உன்ன ….போடா” என்றவன் முதலில் அந்த ஊது பத்தியை அனைத்து விட்டு கட்டிலில் இருந்த மல்லிப்பூவை அகற்றி ரோஜாக்களால் இதயம் ஒன்றை வரைந்தவன் திரும்பி மகேஷை பார்த்து.

“இது போதும் இவ்ளோ மல்லி பூவ வச்சி நான் என்ன பூ வியாபாரமா டா பண்ண போறேன்”

“இல்ல வாசனையா இருக்குமேன்னு…”

“என் தங்கத்துக்கு மல்லிப்பூ வாசனை ஒத்துக்காது தலைவலி வந்துரும்”

“ஓ… இத அத்தை சொல்லவே இல்லடா”

“மறந்திருப்பாங்க விடு “என்று பேசும் போது பலூன் ஒன்று பட்டென்று உடையவும் ஜெர்க் ஆன இன்பா

“நல்லா ஒட்டுன டா பலூன நான் என்ன பர்த்டே பார்ட்டியா கொண்டாட போறேன் இத்தன பலூன் ஒட்டியிருக்க “என்று அதையும் அனைத்தையும் உடைத்து விட ரூமை சுற்றி பார்த்த மகேஷ்

“இன்பா ரொம்ப சிம்பிளா இருக்கே டா “என்று மகேஷ் ஃபீல் பண்ண

“ சரி வெளியே போய் பேலன்ஸ் ஃபீலிங்க வச்சிக்கோ டா இப்போ கிளம்பு” என்று அவனை துரத்தி விட்டவன்.

ஒரு முறை அறையை நன்றாக சுற்றி பார்த்து விட்டு தலையை கோதியவன் வெட்கத்துடன் அவளுக்காக காத்திருந்தான்.

இங்கு மகாவை அழைத்து வந்த சாந்தா ஒரு புடவையை நீட்டியவர்

“இதை குளிச்சிட்டு வந்து கட்டுக்கோ ம்மா “என்று கொடுக்கவும் அவளும் அதை வாங்கி இன்பாவின் அடுத்த அறையில் குளித்து ரெடி ஆகி வந்தாள்.

சிவப்பு பிளவுஸ் போட்டு மஞ்சள் நிற புடவை அது பார்டரில் சிறு சிறு பூக்கள் வேலைப்பாட்டுடன் மிக அழகாகவே இருந்தது புடவை.

அந்த புடவை அணிந்து வந்த மகாவை பார்த்த சித்திரா அவளை நெட்டி முறித்து கொண்டு.

“அழகா இருக்க மகா…. “என்று அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவர்.

“இங்க வா..நான் தலை பின்னி விடுறேன் “என்று ஆசையாக அவள் தலைவாரி தலை நிறைய மல்லிப்பூ வைத்து விட்டார்.

மற்ற நேரம் என்றால் மகா

“ இந்த பூ வேணாம் எனக்கு தலை வலிக்கும்” னு சொல்லியிருப்பாள். ஆனால் இன்று அடுத்து என்ன என்று யோசித்து முகம் சிவந்து இருந்தவளுக்கு அங்கு நடப்பது எதுவுமே கருத்தில் பதியாமல் கனவில் தான் மிதந்த வண்ணம் இருந்தாள்.

அதனாலேயே எல்லாத்திற்கும் சிரித்தபடி தலையசைத்தபடி இருந்தவளுக்கு அங்கு நடந்தது எதுவும் தலைக்குள் ஏறி இருக்கவில்லை.

மகா பாட்டுக்கு அவள் உலகத்தில் இருக்க, இங்கே சித்ராவோ இவளுக்கு தலைவாரிவிட்டபடி அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார்.

“இதோ பாரும்மா, இத்தனை நாள் இன்பா தனியாக இருந்துட்டான். இனிமே நீதான் அவனுக்கு எல்லாம்மா. பத்திரமா அவன பாத்துக்கோ ம்மா” என்று அவள் தலையில் பூ வைத்து திருப்ப, மகா அப்போதுதான் நினைவு வந்தது போல,

“அ… சித்தி” என்று முழிக்கவும் அவள் தலையைப் பிடித்து ஆட்டியவர்,

“இப்போ நாங்க கிளம்பிடுவோம். கொஞ்ச நேரத்தில் நீ வந்து கதவை லாக் போட்டுக்கோ. பால் ரூம்ல வச்சிட்டோம். லைட் ஆஃப் பண்ணிட்டு பக்கத்து ரூம்தான் உங்க ரூம் பாத்து ம்மா…” என்றவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் மகா , பின்

சந்தாவின் காலில் விழுந்து எழ இருவரும் ஆசீர்வாதம் செய்துவிட்டு மகேஷை அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்.

அனைவரும் சென்றதும் மெல்ல எட்டிப்பார்த்து அதை உறுதி செய்தவள் சென்று கதவை தாழிட்டுவிட்டு இன்பாவின் அறையை நோக்கி சென்றாள்.

தயக்கம், படபடப்பு என்று அனைத்தும் அவள் காலைப் பிடித்துக்கொள்ள மெல்ல அடிமேல் அடிவைத்து கதவு அருகே சென்றாள்.

கதவு திறந்தே இருக்க, கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

ரூம் அழகாக இருந்தது. ரூமின் நடுவில் கட்டில் இருக்க, அதன் அருகில் மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் லேப்டாப்பும் இருக்க, அதை பார்த்தபடி அறையை சுற்றி கண்களை ஓட விட்டாள்.

பெரிதாக எந்த பொருளும் இன்றி எளிமையாகவும் நீட்டாகவும் இருந்தது அந்த அறை.

“எங்க இவரை காணோம்….” என்று சுற்றி பார்க்க, அங்கே பால்கனியில் கம்பியை பிடித்தபடி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான் இன்பா.

முழு நிலவு அழகாக சிரித்துக்கொண்டிருக்க, அதை ரசித்தபடி ஓவியமாக நின்றவனை மகா ரசித்து பார்த்தாள்.

சட்டையை விட்டு வெள்ளை டீசர்ட் போட்டு கீழே கருப்பு த்ரீ ஃபோர்த் போட்டு நின்றிருந்தவனை முழுசாக அளந்தவள்.

“என்ன திரும்பவே மாட்டேன்கிறாங்க, நம்ம வந்து நிற்கிறது தெரியலையா என்ன” என்று யோசித்தவள் அவனை எப்படி அழைப்பது என்று அப்படியே நிற்க,

இன்பாவோ அவள் வந்தது தெரிந்தும் அவள் அழைக்கட்டும் என்று திரும்பி நின்றுகொண்டிருந்தான்.

இருவரும் இப்படியே அமைதியாக நின்றபடி இருக்க, “எவ்வளவு நேரம் இப்படியே நிற்கிறது, தங்கம் கூப்பிடுறாளா பாரு” என்று இன்பா நினைத்தது மகாவுக்கு கேட்டது போல,

“இன்பா….” என்று அழைத்திருந்தாள். அவனின் தங்கம் அதில் கண்களை அகல விரித்தவன் அவள் பக்கம் வேகமாக திரும்பி,

“தங்கம் நீயா கூப்பிட்ட என்ன… பேர் சொல்லி கூப்பிடியா அச்சோ ஒன்ஸ் மோர் தங்கம்” என்று பேசியவன் அப்போதுதான் அவளை தலை முதல் கால் வரை பொறுமையாக ரசித்து பார்த்தான்.

“வாவ்….. தங்கமே…. அழகா இருக்க டா” என்றவனின் கண்களை காண முடியாமல் தலையை குனிந்து கொள்ள, இன்பா அவள் இரு கைகளையும் பிடித்தபடி,

“ஒரு வாட்டி கூப்பிடு டா தங்கம்….ப்ளீஸ்” என்று அவள் முகம் அருகே குனிந்து கேட்கவும் மகாவிற்கு வெட்கம் அதிகமாக,

“ம்ஹூம்….” என்று மறுப்பாக அவள் தலையசைக்க,

“தங்கமே…. இப்போ நீ என் பேர் சொல்லல நான் உன்ன சொல்ல வைப்பேன் தங்கம்” என்றதற்கு மகா அவள் கண்களை மாட்டேன் என்பது போல இறுக்கி மூடிக்கொள்ள,

“இது வேலைக்காகாது” என்றவன் அவளை அப்படியே கையில் தூக்கிக்கொண்டான். மகா பயத்தில்,

“இன்பா…..” என்று கத்திக்கொண்டு அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொள்ள, அதில் சிரித்த இன்பா.

“என்ன தங்கமே வெயிட்டே இல்ல எதோ பஞ்சை தூக்குற மாதிரி இருக்கு டி , சாப்பிடுவியா மாட்டியா டி”

“என்னது டி யா…” என்று மகா அதிர்ந்து இன்பா முகம் பார்க்க, இன்பா ஒரு குறும்பு சிரிப்புடன் அவள் முகத்தை பார்த்து

“உன் கிட்ட நிறையா பேசணும் னு இருந்தேன் டி அன… இப்போ ஐ கான்ட் டி தங்கமே ” என்று அவள் முகம் நோக்கி குனிந்தவளின் செயலில் கண்களை இறுக மூடிய மகா, அவன் டீசர்ட்டை இருகப் பிடித்துக் கொள்ள உடல் முழுதும் நடுங்கத் தோடங்கியது.

அவள் நடுக்கத்தை கையில் உணர்ந்த இன்பா அப்படியே கட்டிலில் அவளை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தவன்.

அவளை விட்டு பிரிந்து அவள் முகம் பார்க்க மகா தான் தவித்து போனால், அவனை பார்க்கவும் முடியாமல், பேச்சும் வராமல் பட பட வென துடிக்கும் இதயத்தோடு கண்களை அழய விட்டு கோண்டிருந்தாள்.

“ஸ்டாரபெரி மாதிரி சிவந்து போய்ட்ட தங்கம், வித் யுவர் பர்மிஷன் உன்ன கடிச்சி சப்பிடவா தங்கம் “

என்றவனின் பேச்சில் உடல் கூச அவன் கழுத்தில் முகம் புதைத்து அவனை அனைத்துக் கொள்ள அதை சம்மதமாக ஏற்றவன் மகாவிடம் விரும்பியே தொலைந்தான்.

நிலவின் ஒளியில் அவளை முழுதும் அவன் வசம் கொண்டு வந்தவன், அவள் சிணுங்கல் களை, மறுப்புகளை, அனைத்தையும் கலைத்து அவளை முற்றும் திறந்து தேடி சுவைத்து பல அடிகள் கடிகளை பரிசாக பெற்று.

“டெய் இன்பா…. நோ…. இன்பா…. போதும்…. இன்பா” என்று பல விதமாக அவன் பெயரை கேட்டு சிலிர்த்து இணைந்து, இசைந்து, அவனில் இவள் கலந்தாளா, இல்லை அவளில் இவன் கலந்தானா என்று அறியா வண்ணம் தொடங்கியிருந்தனர் தாம்பத்தியத்தை.

அனைத்தும் முடிந்து அவன் மார்பில் தலை வைத்து மகா படுத்திருக்க இன்பாவின் விரல்களோ அவளின் கூந்தலை அழகாக கலைத்து அதில் இருந்து பூக்களை கையில் எடுத்து ஓரமாக வைத்தவன்.

அவளின் கார்கூந்தலில் தொலைந்து விடுபவன் போல அதை கையில் சுற்றி முகத்தில் போட்டு என்று விளையாடிக் கொண்டிருந்தான்.

மகாவிற்கு அவன் முகம் காணவே வெட்கமாக இருக்க அவன் முகம் பார்க்காமல் “அந்த முடியை விடுங்க ங்க “ என்று தயங்கிய படி பேச

“என்ன டி சொன்ன தங்கம் “ என்ற அவனின் டி அழைப்பிலேயே அவன் சொல்ல வருவது புரிந்து.

“அது இன்பா முடியை விடுங்க சிக் ஆகிட்டுனா கஷ்டம் “

“நோ தங்கம் இத மட்டும் கேக்காத நீ என் கூட இருந்தா உன் முடி எனக்கு தான் “

“அ… என் முடியை அவ்ளோ பிடிக்குமா இன்பா “

“பின்ன பிடிக்காம எத்தன வருஷம் இந்த முடியை வச்சி உன்ன தேடி அலஞ்சிருக்கேன் “ என்றவனை புரியாமல் நிமிர்ந்து பார்த்த மகா.

“புரியல நாம்ம மீட் பண்ணி…. ஒன் இயர் தான இருக்கும் “

“ம்ஹூம்…. தங்கம் நீ என்ன பார்த்து ஒன் இயர் தான் ஆகிருக்கும் அன நான் உன்ன தேட ஆரம்பிச்சி மூணு வருஷம் ஆகுது “ என்றவனை அதிர்ந்து போய் பார்த்தவள்.

“என்ன சொல்றிங்க இன்பா ?”

“ம்ம்ம் டா தங்கம் நீ எனக்கு கிடைக்காம போயிடுவயோன்னு எவ்வளோ பயந்த தெரியுமா காலேஜ் காலேஜ் ஆ ஏறி இறங்கி ரொம்ப கஷ்ட பட்டா…என் தங்கம் நீயே என்ன தேடி வந்துட்ட “ என்று மகிழ்ந்தவன் அவள் முகம் தாங்கி நெற்றி முத்தம் தர மகா சுத்தமாக குழம்பி போனால்.