அத்தியாயம் 17

உன் சண்டைகளையும் நேசித்தேன், கோபம் கலந்த காதலுடன்…

வித்யா சொன்னதை நம்ப முடியாமல் ஒருவித அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த சாந்தா.

“என்னடி சொல்ற, அவனா லவ் பண்றான்? அதுவும் அந்த புள்ளையவா?” என்று வாயைப் பிளந்தவரைப் பார்த்து மேலும் கீழும் தலையசைத்து

“ஆமாம்மா, அவன் நேத்து அந்த பொண்ணு பேர் சொல்லி தான் புலம்பிட்டு இருந்தான். அதுவும் இல்லாம லட்சுமி கூட தான் காளான் சாப்பிட்டுருக்கான் நேத்து நைட்டு.”

“பரவாயில்லடி, இந்த ஒரு விஷயத்திலாவது உன் அண்ணனுக்கு ஆண்டவன் நல்ல புத்தியைக் கொடுத்திருக்காரே.” என்று கையை குவித்து கடவுளை வேண்டியவரை பார்த்து முறைத்த வித்தியா

“அம்மா…. என்ன உளறுற, அவ பச்சை குழந்தைம்மா.”

“அடச்சி, என்ன பச்சை குழந்தை? அவள் வயசுல என் வயித்துல உன் அண்ணன் இருந்தான்டி” என்று பொறுமையாக சொல்லிக் கொண்ட தாயை முறைத்த வித்யா.

“அம்மா லூசு மாதிரி பேசாதேம்மா, அந்த காலம் வேற, இந்த காலம் வேறம்மா.”

“போசுக்குன்னு அம்மாவ லூசுன்னு சொல்லுறியேடி” என்று உதட்டைப் பிதுக்கியவரை சமாதானமாக அவர் கன்னம் பற்றி

“அச்சோ… மை டார்லிங்ம்மா, தெரியாம சொல்லிட்டேன் சாரிம்மா… நீ யாரு, இந்த புத்திசாலியைப் பெற்ற புத்திசாலி அல்லவா?”

என்றதும் சிரித்த சாந்தா, “நீ புத்திசாலின்னு சுத்தி இருக்கவுங்க சொல்லணும்டி, நீயே சொல்லிக்கிட்டா போதுமா?”

“அட அம்மா” என்று சிரித்த வித்யா, “டாப்பிக்கை மாத்திட்ட பாரும்மா, நம்ம உன் பையனைப் பத்தி பேசிட்டு இருக்கோம்” என்று நினைவுபடுத்தவும்

“அட ஆமாடி, அந்த பொண்ணுக்கு இன்பாகூட பேசி முடிச்சிடலாம்னு பார்த்தா, அவளுக்கு முன்ன ஒருத்தி இருக்கா, இப்போ என்ன பண்ண?”

“அய்யோ அம்மா, நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீ என்ன கல்யாணத்துக்கே போய்ட்ட.”

“ப்ச், இப்போ என்னடி உனக்கு பிரச்சனை? அவளுக்கும் உனக்கும் ஒரு வயசு தான வித்தியாசம், உனக்கே அடுத்த வருஷம் வரன் பார்க்க தொடங்கிடுவேன். என்னமோ அஞ்சு வயசு குழந்தையை விரும்புன மாதிரி குதிக்கிற” என்று சாந்தா கத்தவும் அமைதியான வித்யா.

“அது வந்தும்மா, அண்ணன் குடிக்காம இருந்திருந்தா நானும் சந்தோஷப் பட்டிருப்பேன்ம்மா, அவளால இதை சமாளிக்க முடியாதும்மா, அவ பாவம் சின்ன பொண்ணு ” என்று தலை குனிந்து இருந்த வித்யா தலையை தடவியவர்

“குடியை தவிர வேற ஏதாவது பிரச்சனை இருக்காடி உன் அண்ணன் மேல?” அதற்கு மறுப்பாக தலையசைத்த வித்தியா

“அந்த பழக்கம் இல்லாம அண்ணன் சூப்பர்தான்ம்மா.”

“இங்க பாரு வித்யா, அந்த பொண்ணை பார்த்ததுல இருந்து அவன் குடிக்கிறதே இல்லடி, அதை கவனிச்சியா?”

“ம்ம்ம் ம்மா “ என்று வித்தியா தலையசைக்கவும்

“எப்படி இருந்தாலும் உடனே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறது இல்ல டி முதல்ல உனக்கு முடிச்சிட்டு அப்பறமா தான் அவனுக்கு பண்ணுவோம்.

ஒரு மூணு வருஷம் ஆகிடும். அது வரை நீ வேணா அவன பாரு அவன் அந்த குடியை தொடுறானன்னு, அதை தொடலன்னா அந்த பொண்ணுக்கே இவன முடிப்போம் இல்லனா நான் பண்ணி வைக்க மாட்டன் ஓகேவா “

சாந்தா சொன்னதை கேட்டு முகத்தில் பல்ப் எரிய, வித்யா “ நீ சூப்பர் ம்மா “ என்று சாந்தா கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு

“இனிமே இருக்கு அந்த மகேஷ்க்கு லைட்டா ஸ்மெல் வந்தாலும் முடிஞ்சான் அவன் “ என்று நம்பியர்போல் கைகளை பிசைந்தவள் எழுந்து சென்று விட சாந்தாவும் எழுந்து சென்று விட்டார்.

இவற்றை எல்லாம் வாசல் அருகே இருந்து ஒட்டு கேட்ட மகேஷ் “ அட பாவிங்களா லவ்வே இன்னும் ஓகே ஆகல அதுக்குள்ள திசைக்கு ஒருத்தரா எங்கள பிரிச்சி விட கிளம்பி இருக்கிங்களே டா “

என்று புலம்பியவனுக்கும் புரிய தான் செய்தது அனைவரும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்காக தான் பார்க்கிறார்கள் என்று.

இவனுக்கும் தெரியும் தன் அப்பாவின் குடி பழக்கத்தால் அம்மாவும் தங்கையும் படும் கஷ்டம் அதே கஷ்டத்தை இன்னொரு பெண்ணிற்கு தர கூடாது என்று எண்ணும் மனதும் புரிய

அவன் நடுங்கும் கைகளை முகத்திற்கு நேராக பிடித்த படி “ இனிமே இந்த கையால எந்த கிளாசையும் பிடிக்க மாட்டேன் “ என்று சபதம் செய்தவன் அவன் அறைக்குள் சென்று விட்டான்.

ஒரு பக்கம் இன்பா மகா வேலைக்கு இடையில் சின்ன சின்ன சீண்டல் கொஞ்சல் என்று நாட்களை கடத்தினர் என்றால் மகேஷோ மூன்று நாட்களுக்கு ஒரு முறை வரும் குணாவின் அழைப்பில் அவன் நாட்களை தள்ளிச்சென்றான்.

அப்படியே திருமண நாளும் நெருங்கியது. நாளை நிச்சயம் என்ற நிலையில் வீட்டில் மகா கையில் வைத்திருந்த மருதாணியை நுகர்ந்து பார்த்தபடி இருக்க, இன்பாவிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது.

அவன் கால் வந்ததும் மருதாணி வைத்துக்கொண்டிருந்த தங்கைகள் மூவரும் ஒன்று போல அவளைப் பார்த்து சிரிக்கவும், முகத்தை இயல்பாக வைக்க போராடிய மகா.

“என்னடி பாக்கிறீங்க? திரும்புங்கடி” என்று மிரட்டி விட்டு வெளியே தோட்டத்திற்கு சென்று போனை எடுத்து காதில் வைக்கவும்.

“தங்கமே என்ன பண்ற…” என்று அஷ்கி குரலில் இன்பா பேசவும் நெளிந்த மகா.

“நார்மலா பேசுங்க, ஏன் இப்படி பேசுறீங்க?”

“ஏன் தங்கம், நான் இப்படி பேசுறது உனக்கு பிடிக்கலையா?”

“அப்படி பேசாதீங்க, ஒரு மாதிரி ஆகுதுங்க” என்று மகா சிணுங்கவும், குறும்பாய் இன்பா சிரித்தபடி

“இப்படி பேசுனா ஓகேவா தங்கம்?” என்று மேலும் குரலை இறக்கி பேசவும் கடுப்பான மகா.

“இப்படி வெறுப்பேத்த தான் கால் பண்ணீங்களா?”

“சரி… சாரி கோபப்படாத தங்கமே…. நார்மலா பேசுறேன்.”

“ம்ம்ம் சரி சொல்லுங்க, எதுக்கு கால் பண்ணீங்க?”

“இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்…. நாளைக்கு நிச்சயம் நமக்கு….நியாபகம் இருக்கா? இந்நேரம் நீயா கால் பண்ணி பேசிருக்கனும் தங்கமே, அதை விட்டுட்டு கால் பண்ணவனையும் ஏன் கால் பண்ணீங்கன்னு கேக்குற.”

“ஏங்க விளையாடாம என்னன்னு சொல்லுங்க, கொஞ்சம் வேலையா இருக்கேன்.”

“ம்ஹூன்… என்னைக்கு என் கஷ்டம் உனக்கு புரிய போகுதோ தங்கமே… எப்போ கால் பண்ணாலும் ஏதாவது சொல்லி போனை வைக்க வேண்டியது. தங்கச்சி இருக்காங்க, அம்மா இருக்காங்கன்னு.

இன்னும் ஒன் வீக் தானே… அதுக்கு அப்பறம் என் கூட தனியா என் அப்பார்ட்மெண்ட்ல இருக்கணும். அப்போ என்ன சாக்கு சொல்றான்னு பாக்குறேன்.”

என்ற இன்பாவின் பேச்சில் மகா முகம் சிவந்து பேச்சு வராமல் நின்றுவிட்டாள்.

இங்கு மகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் இன்பா “தங்கமே… தங்கமே….டேய் தங்கம்“ என்று பத்துக்கும் மேல் கூப்பிட்ட பிறகே மகா

“ம்ம்ம்“ என்று குரல் கொடுத்திருந்தாள். மகாவின் குரல் கேட்ட பின் ஆசுவாசம் ஆனவன் “என்ன தங்கம் எத்தனை வாட்டி கூப்பிட எங்க போன?“

“எங்கேயும் இல்ல, சிக்னல் கிடைக்கலைங்க“

“ஓ…. சரி சரி அப்போ சிக்னல் திருப்பி போறதுக்குள்ள நான் கால் பண்ண விஷயத்தை பேசுறேன். நம்ம நிச்சயத்துல உனக்கு நான் அன்னைக்கு காட்டுன ரிங்கையே போடட்டா தங்கம்?“ என்று ஆசையாக இன்பா கேட்கவும் எதோ ஒன்றை யோசித்த மகா

“அது அந்த ரிங்க….” என்று மகா பேசப் போகும் முன் பாலாஜி காரில் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தி இருந்தான்.

அதில் பேலன்ஸ் இன்றி ஜெனி மற்றும் மகா உடல் முன்னே சென்று விட்டு வர

“என்ன ஆச்சு பாலாஜி…. ஏன் இப்படி ஆர்ஸா பிரேக் போடுறீங்க?“

“அது மேம், முன்னாடி சடனா ஒரு கார் வந்துருச்சு மேம் . நீங்க உள்ளேயே இருங்க, நம்ம பசங்க செக் பண்ணிட்டு சொல்லுவாங்க.“

“யாருடா அது கரடி போல நல்லா போயிட்டு இருந்த ஸ்டோரில கார்ர நிப்பாட்டுனது?“ என்று ஜெனிஷா முன் கண்ணாடி வழியே எட்டிப் பார்த்தாள்.

இங்கு வெளியே மகாவை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பாடி காட்ஸ், காரில் இருந்து இறங்கி என்னவென்று பார்க்க அந்த காரின் அருகில் சென்றனர்.

காரை முன்னாடி நிப்பாட்டியவன் இதுவரை காரில் இருந்து இறங்கவும் இல்லை. அதில் பாலாஜிக்கு ஏதோ சந்தேகம் எழ கையில் துப்பாக்கி ஒன்றை முன் எச்சரிக்கையாக எடுத்து வைத்துக்கொண்டான்.

பின்னே அமர்ந்திருந்த மகாவுக்கும் அதே சந்தேகம் தான். அதில் “ஜெனி கார் டோர்ர லாக் பண்ணிட்டு கீழ குனிஞ்சிக்கோ“ என்று அவளை எச்சரிக்க

“அதெல்லாம் ஏறின அப்போவே லாக் பண்ணிட்டேன் மேம், ஆனா ஏன் குனிய சொல்றிங்க?“ என்று சொல்லி முடிப்பதற்குள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு ஜெனிஷா பயந்து தலையை குனிந்தபடி

“அய்யோ மேம் யாரோ பட்டாசு போடுறாங்க“

“ஆமா தீபாவளி கொண்டாடுறாங்க, நீயும் சேர்ந்து போய் வெடி, யாரும்மா நீ பேசாம தலைய குனிம்மா“ என்று பாலாஜி திட்டவும் பயந்து போய் மகாவின் மடியில் ஜெனிஷா தலையை குனிந்து அமர்ந்து கொண்டாள்.

இவர்கள் கார் நின்றிருந்த பகுதியில் ஆட்கள், கடை வீடு என்று எதுவும் இன்றி வெறிச்சோடி இருந்தது. மாலை நேரம் வேறு, அந்த நெடுஞ்சாலையே வெறிச்சோடி இருக்க, அந்த கருப்பு கார் இவர்களின் வழியை மறைத்தது போல வந்து நின்றது.

யார் என்று பார்க்க ஆட்கள் நெருங்கும் முன், ஆறு பேர் அந்த காரில் இருந்து வேகமாக இறங்கி ஆட்களை சுட தொடங்கி விட்டனர்.

இதை எதிர்பார்த்திருந்த பாடிகாட்சும் எதிர்த்து சண்டை போட்டு கொண்டிருக்க, பாலாஜி கன்னை லோட் செய்த படி அவனும் இறங்கி சுட தொடங்கி விட்டான்.

இவற்றை பார்த்த படி மகா மற்றும் ஜெனிஷா பாதுகாப்பாக காரில் அமர்ந்திருந்த அதே நேரம், இன்னொரு கார் வந்து அதே இடத்தில் நின்று அதிலிருந்து நால்வர் இறங்கி மகா காரை நோக்கி செல்லவும்.

அதை கவனித்து பாலாஜி வரும் முன் காரின் கண்ணாடியை உடைக்க தொடங்கி விட, பயந்துபோன ஜெனிஷா காதுகளை இறுக்க மூடிய படி இருக்க, இவளின் மிக அருகில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

அதில் பயந்தவள் வேகமாக எழுந்து மகாவை பார்த்து பேச்சின்றி அதிர்ந்து போனால்.

காரின் கண்ணாடியை உடைத்த அந்த நால்வரும் மகாவால் சுடப்பட்டு கீழே விழுந்திருந்தனர். மகா அவள் கையில் இருந்த துப்பாக்கியை வாயை குவித்து ஊதி அதை சுற்றி பார்த்து விட்டு

“பறவாள மகா உனக்கு இன்னும் டச் விட்டுப் போகல” என்று அவளை அவளே பாராட்டியபடி பையில் துப்பாக்கியை வைத்துவிட்டு ஜெனியை திரும்பி பார்க்க, ஜெனியின் முகத்தை பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டாள் மகா.

“என்ன ஜெனி இது? இப்படி ஒரு ஷாக் ரியாக்ஷன் நீ கோப்பால் மாதிரி பாத்துட்டு இருக்க”

“மேம் ….நீங்களா சுட்டிங்க?” என்று வாயைப் பிளந்தவளின் வாயை மூடியவள், “நீ இங்கேயே இரு, நான் இதோ வந்திடுறேன்” என்று மகா எழுந்து செல்லவும் பயந்த ஜெனிஷா,

“ஐயோ மேம், என்னை விட்டுப் போகாதீங்க, எனக்கு பயமா இருக்கு” என்று கத்தியபடி மகாவின் கையை பிடித்துக் கொள்ள,

“மேம் ஏன் வெளிய வந்தீங்க மேம்? நீங்க உள்ளயே இருங்க நான் பாத்துக்குறேன்.”

“எல்லாரையும் பிடிச்சாச்சா?”

“ம்ம்ம் ப்ராப்ளம் எல்லாம் சால்வ் மேம். இருந்தாலும் நீங்க இங்க இருக்க வேணாம்னு சார் சொல்லிருக்காரு. வாங்க போலாம்.”

“ப்ச், அவன் சொன்னா நான் கிளம்பிடனுமா பாலாஜி? இவங்க யாருன்னு தெரிஞ்சுக்காம நான் எப்படி போக? இங்க உனக்கு பாஸ் நான் தான், என் பையன் இல்லையே, அவனுக்கு எப்படி அதுக்குள்ள இன்பார்ம் பண்ண” என்று மகா கோபமாக பேசியதில், பாலாஜி தலையை குனிந்து நிற்கவும் கார் ஒன்று அங்கே வந்து நிற்கவும் சரியாக இருக்க,

ஜெனிஷா அச்சோ அடுத்த கார்ரா என்று பயந்து போய் மகாவின் கையை இறுக பிடித்துக்கொண்டு நிற்கவும் காரில் இருந்து வெள்ளை சட்டை மற்றும் காக்கி ஃபேன்ட் போட்டுக்கொண்டு முறைத்த முகமாக இறங்கினான் சத்திய இன்பன் எஸ்.பி. போலீஸ்.

அவனை பார்த்து முறைத்த மகா, “இவன் நாளைக்கு மார்னிங் வரேன்னு தான சொன்னான்னு சொன்ன?” என்று பாலாஜியை பார்க்க,

“அது சார் என்கிட்ட அப்படி தான் மேம் சொன்னாரு.”

“நான் தான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு வந்தேன்ம்மா.”

“நாங்க இங்க இருக்குறத யார் சொன்னா?”

“அது சாரி மேம், நான் தான் சொன்னேன்” என்று பாலாஜி தலைகுனியவும்,

“அம்மா அவன எதுவும் சொல்லாதீங்க, இது அவனோட ட்யூட்டிம்மா.”

“ஐ நோ தட் சத்தியா, அதே மாதிரி என்கிட்ட இதை இன்ஃபார்ம் பண்றதும் அவனோட ட்யூட்டி தான், அதை நீ மறந்துடாத.”

“சரி கூல் டவுன்ம்மா, இங்க இருந்து முதல்ல ஹோட்டலுக்கு போவோம், அங்க போய் மத்தத பேசுவோம்ம்மா” என்று மகா தோளில் கை போட்டு அழைத்து சென்றவனை முறைத்து அவனை விட்டு நகர்ந்து நின்றவள்,

“என்ன கொல்ல சொன்னவன் யாருன்னு தெரியாம நான் இங்க இருந்து நகர மாட்டேன்டா.”

“அதை விசாரிக்க தான் போலிஸ் இருக்காங்கம்மா.”

“எப்படி, கொன்னவன் கிட்டயே போய் அவுங்க மிஸ் ஆகிட்டாங்கன்னு ரிப்போர்ட் பண்ற போலீஸா?”

“ப்ச் அம்மா உங்க பையனும் போலீஸ் தான்றத மறந்துட்டு பேசுறீங்க.”

“நீ மட்டும் இங்க போலீஸ் இல்லன்னு மறந்திடாத ன்னு சொல்றேன் சத்தியா “

“அம்மா….” என்று மகாவின் கண்களை உற்று பார்த்து சத்தியா நிற்கவும் தலையை மறுப்பாக அசைத்த மகா,

சரி போலாம், ஆனா மார்னிங் குள்ள இவங்க டீடைல் என்கிட்ட இருக்கணும் என்று சொன்னபடி மகா காரை நோக்கி நடக்க,

இவர்களை அதிர்ந்து பார்த்த ஜெனி, “நீங்க மகா மேம் பையனா?” என்ற கேள்வியில் சத்தியாவும் மகாவும் இருவரும் ஒன்றாக திரும்பி பார்க்க. சத்தியா,

எஸ் நான் அவங்க பையன் தான், அண்ட் நீ என்ன தான் இன்டர்வியூ எடுக்க வந்திருக்க?

அப்படியா ஜெனி? நீ என் பையனையா இன்டர்வியூ பண்ண வந்திருக்க என்ற மகாவிற்கு தலையை அசைத்தவள், “சார் உங்க பையன்னு நீங்க சொல்லவே இல்லையே மேம்.”

நீ என் லவ் ஸ்டோரிய தான கேட்ட, இவன பத்தி கேக்கலையே என்று சிரித்தபடி அவள் கையை பிடித்த மகா, “சரி வா ஹோட்டல் போய்ட்டே பேலன்ஸ் கதையை பேசுவோம்” என்று இருவரும் காரில் ஏறியதை பார்த்து முறைத்தான் சத்தியா.

பின்ன முறைப்பு வராத என்ன நம்ம சத்தியா கிட்டயே நம்ம மகா அழுது அழுது தான் பேசுவா அப்படி இருக்க திடீர்ன்னு எங்கேயோ இருந்து வந்த பொண்ணு கிட்ட அவுங்க லவ் ஸ்டோரிய பத்தி சொன்ன கோபம் வர்றது நியாயம் தான?.

“எத்தனை முறை நான் கெஞ்சிருப்பான் அப்பாவ எங்க பாத்திங்க எப்படி கல்யாணம் பண்ணிங்கன்னு ஒரு வார்த்தை சொல்லல இப்போ என்னன்னா யார் கிட்டையோ எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்காங்க. இருக்கட்டும் என் கிட்ட தான இன்டர்வியூ க்கு வரனும் நான் பாத்துக்குறன் “ என்று முனங்கிய படி பாலாஜி இடம் பொறுப்பை கொடுத்து விட்டு காரில் ஏறினான் சத்தியா.