அத்தியாயம்15

நீ முள்ளாய்க் குத்தினாலும் மனம் உன்னைச் சுற்றித்தான் வருகிறது, என் வெட்கம், மானம் தொலைத்து காதல்…

காரில் ஏறிய பாலாஜி டிரைவரை பின் காருக்கு அனுப்பி வைத்துவிட்டு இவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் பின்னே ஒரு காதை வைத்து படி தான் வண்டி ஓட்டினான்.

பாலாஜிக்கு ஏனோ ஜெனிஷா மீது நம்பிக்கை இல்லை. அதற்கு காரணம் அவளின் வேலையாகக் கூட இருக்கலாம்.

யார் என்று தெரியாத ஒருத்தியிடம் இப்படி அனைத்தையும் சொல்லும் மகாவை சுத்தமாக புரிந்து கொள்ளவும் முடியவில்லை. வேண்டாம் என்று தடுத்து நிறுத்தும் உரிமையும் இவனிடம் இல்லை.

இருந்தும் இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபடி தான் வந்தான் அவன். மகா அவர் யாருக்கும் புலப்படாத புதிராகத்தான் இருந்தார்.

அதுவும் அவரின் வாழ்க்கை, அதைப்பற்றி மூச்சு கூட விட மாட்டார். பாலாஜிக்கே மகாவின் மகனை மட்டுமே தெரியும். அவரைத் தவிர இவரைப் பற்றி ஒன்று கூட இந்நாள் வரை அவனுக்கு தெரியாது.

அதுவும் ஒரு ஆர்வத்தை அவனுக்குள் பிறக்க வைக்க இவர்கள் பேசுவதை கதை கேட்ட பாவனையில் தான் கேட்டு வந்தான்.

காரில் ஏறிய ஜெனிஷா மகாவின் கையைப் பிடித்தபடி “மேம்……. இப்போவாது கன்டினியூ பண்ணுங்க மேம், அப்புறம் என்ன ஆச்சுன்னு “

“அப்புறம்னா… என்ன… கல்யாணம்தான். கல்யாணம் முடிஞ்சி எல்லாம் சடங்கும் முடிஞ்சி இன்பா ஓட அப்பார்ட்மெண்ட் போய்ட்டான் “ என்று சிம்பிளாக முடித்த மகாவை

“மேம்…. என்ன இது “ என்று ஜெனிஷா சினுங்கவும்

“என்னது ? என்ன? ஜெனி “ என்று மகா புரியாமல் பார்க்க

“என்ன மேம் இது கல்யாணத்தை வாம்மா மின்னல்னு முடிச்சிட்டீங்க “ அதைக் கேட்டு சிரித்த மகா

“கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு எனக்கு ஞாபகம் இல்ல ஜெனி “

“மேம் பொய் பேசாதீங்க, அது எப்படி கல்யாணம் ஞாபகம் இருக்காது “

“அது ரொம்ப பயமா இருந்திச்சி  ஜெனி. அம்மா ரொம்ப அட்வைஸ், தங்கச்சிங்க ல விட்டு பிரிய போற சோகம்னு சரியா ஞாபகம் இல்ல ம்மா “

“பரவாயில்லை ஞாபகம் இருக்கிற வரை சொல்லுங்க “ அதற்கு சிரித்த மகா விட்ட இடத்தில் இருந்து தொடங்கினாள்.

அன்று இன்பாவை பார்த்து முறைத்த அந்த நாலு பேர் வேறு யாரும் இல்லை, அவளின் மூன்று சகோதரிகளோடு அவளின் அம்மா அமிர்தமும் தான்.

இப்படி இவர்கள் முறைத்துக்கொண்டிருக்க மகாவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்த முகமாக இன்பாவை தான் பார்த்திருந்தாள்.

அதன் பின் அனைவரும் கிளம்பி சென்றதும் மகாவை இழுத்துக்கொண்டு மூவரும் அறைக்குள் நுழைய

“மகா….எதுக்கு நீ ஓகே சொன்ன, மாத்திரை கூட கலக்க விடாம பண்ணிட்ட “ என்று சுபா குதிக்க

“என்னடி மாத்திரை கலக்க போனீங்க “ என்று அமிர்தம் அதிர்ந்து போய் அறைக்குள் வரவும்

திருட்டு முழியில் முழித்த சுபா “அது ம்மா…” என்று ஏதோ சொல்ல வரதுக்குள் ஜெயா

“ அத விடு ம்மா இந்த மகா…. கல்யாணம் இப்போ வேணாம், நான் முடியாது தான் சொல்லுவேன்னு சொன்னா ம்மா இப்போ என்னன்னா திடீர்னு சரி சொல்லிட்டா ம்மா  “

என்று மகாவை ஜெயா முறைக்க அதற்கு சிரித்த மகா

“அது அப்போ யாரு மாப்பிள்ளைன்னு தெரியாதா? தெரியாத ஒருத்தர எப்படி கல்யாணம் பண்ணுறதுன்னு ஒரு பயத்துல இருந்தன் “

“தெரிஞ்சவர்னதும் சரி சொல்லிட்டியா மகா “ என்று குணா மிச்சரை மொக்கியபடி கேட்க

“ம்ம்ம்… வீடும் இங்க இருந்து பக்கம் தான். நான் நெனச்ச நேரம் உங்க எல்லோரையும் வந்து பார்ப்பேன் தான “

“அதெல்லாம் சரி தான், ஆனா உன்ன வேலைக்கு போக வேணாம்னு சொல்றாங்களே டி, நீ எத்தன கஷ்டப்பட்டு வாங்குன அந்த வேலைய “ என்று அமிர்தம் வருத்தமாக கேட்க

“அது பரவாயில்லை ம்மா இன்பா என்ன வீட்டிலேயே கட்டி போட பார்க்க மாட்டார். வேற ஏதாவது பிளான் எனக்காக வச்சிருப்பார் ம்மா”

“ஏதோ….. நீ சொல்ற மாதிரி நடந்த சரி … அப்புறம் மாப்பிள்ளைய பேர் சொல்லி கூப்பிடாத மகா “ என்று அமிர்தம் கண்டிப்பாக பார்க்கவும்

“அதான்ன எங்கடா அம்மா அன்பா பேசுறாங்களே ன்னு பார்த்தன் “ என்று முனங்கியவள்

“சரி ம்மா …” என்று தலையசைத்து கோண்டாள்.

மகா பேசியதில் மூவரும் ஒன்று போல ஒன்றை கெட்டியாக பிடித்து கோண்டார்கள், அது வீட்டு பக்கத்துலே கல்யாணம் பண்ணிக்கனும் என்பது தான்.

இதில் குணா மட்டும் எக்ஸ்ட்ரா ஒன்றையும் பிடித்து கோண்டாள், அது தெரிந்தவனை கல்யாணம் செய்து கொள்வது தான்.

இப்படி மூவரும் எடுத்த முடிவில் என்ன நடக்க போகிறதோ பார்க்கலாம்.

இரண்டு நாள் கழித்து ஆபிஸ் போன மகா வேலையை விட்டு நிக்க போவதாக பேப்பர் போட்டு விட்டு சந்தோஷமாக அமர்ந்திருந்தாள்.

அப்போது அவளை பார்த்த படி உள்ளே வந்த இன்பா கையில் பைக் கீயை சுற்றியபடி அவள் அருகே வந்து

“குட் மார்னிங் தங்கமே…” என்று கண்கள் சிமிட்டி சென்றவனை ரசனையுடன் பார்த்தவள்

“இன்னைக்கும் பைக்ல தான் வந்திருக்காங்கல? பொண்ணு கிடைக்கிற வரை பஸ்ல வந்திட்டு இப்போ எல்லாம் ஓகே ஆனதும் பைக்கா இருக்கட்டும் இருக்கட்டும் “ என்று முனங்கியபடி அமர்ந்து விட்டாள்.

மகா பேப்பர் போட்டிருப்பதை பார்த்து அவள் டீமில் இருந்த அனைவரும் என்ன ஆச்சி மகா என்று கேள்வி கேட்டு நிற்கவும்.

“எனக்கு மேரேஜ்க்கு பாத்துடாங்க அதான்” என்று சிரித்தவள் யாருடன் திருமணம் என்று சொல்லாமல் இன்பாவை பார்க்க அவனும் நீயே சொல்லு என்று தான் பார்த்தான்.

“பையன் என்ன பண்றாரு மகா” என்று அயன் கேட்கவும் மகா “ஆடிட்டரா இருக்காங்க.”

“ஓ…. சுப்பர் மகா, நல்ல இடம் தான்” என்று வாழ்த்து சொல்லி விட்டு அனைவரும் சென்று விட்டனர்.

“ஏன்…. மாப்பிள்ளை நானுன்னு சொல்ல மாட்டியா தங்கமே?” என்ற இன்பாவை நிமிர்ந்து பார்த்தவள்

“ஏன்…. பொண்ணு நானுன்னு நீங்க சொல்ல வேண்டியது தான.”

“நான் தான் என்னும் யார்கிட்டயும் என் கல்யாணத்த பத்தி சொல்லயே.”

“அதான் ஏன் சொல்லல…” என்று தலை சாய்த்து இன்பாவை ஒற்றை புருவம் தூக்கி கேட்டவளை அப்படியே அள்ளி கொஞ்ச வேண்டும் போல் தோன்றவும் கைகளை அடக்க முடியாமல் பேன்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக்கொண்டு குறும்பு நிறைந்த அந்த கண்களை காதலுடன் பார்த்தவன்.

அவள் அருகே குனிந்து நெருங்கவும் அதில் திகைத்து கண்களை விறித்து பயந்த மகா கால்களை தறையில் ஊனி சேரை பின்னால் நகற்ற முயன்றவளின் முயற்சியை குறும்பாக பார்த்து அதை தடுக்கும் விதமாக அந்த சேரை பிடித்து தடுத்தவன்.

“எங்க போற தங்கம்….” என்று அவளை அருகே இழுத்து இன்பா மகா மூச்சி விடும் தூறத்தில் புன்னகை நிறைந்த முகத்துடன்.

“என்னும் நாலு மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு இப்போவே சொல்லி கண்ணு பட்டுறாது.”

என்று கண்களை சிமிட்டி இன்பா சொன்னது எங்கே காதில் விழுந்தது அவன் நெருக்கத்தில் உடல் நடுங்க தோடங்க எதோ ஒரு பதற்றம் சேரை இறுக பிடித்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டு இருக்கும் மகாவை மேலும் நெருங்கிய இன்பா அவள் நெற்றியில் சுன்டி விட்டு இவன் எழுந்து நின்று விட்டான்.

அதில் மயக்கம் தெளிந்த மகா “இதை நின்னுட்டே கூட சொல்லியிருக்கலாம்.”

என்று தன் நெற்றியை தேய்த்தபடி மகா முனங்கி கோள்ள அதற்கும்.

“ம்ம்ம்…? என்ன சொன்ன மகா” என்று அருகில் இன்பா மீண்டும் வர பார்க்கவும், வேகமாக அவள் டெஸ்க்கை பார்த்து திரும்பிக்கொண்டவள்

“போய் வேலையை பாருங்க.” என்று கையில் மவுஸை பிடித்துக்கொள்ள

“எப்படி…. திரும்பிட்டா ஒன்னும் பண்ண முடியாத தங்கமே ” என்ற இன்பாவின் குறள் மிக அருகில் கேட்கவும் திடுக்கிட்டு மகா தலையை திருப்ப, இன்பாவின் முகம் மிக அருகில் மீண்டும் அதில் மகா பயந்து

“இக்….. இக்….. இக்…” என்று விக்கி தோடங்கிவிட்டாள்.

விக்கி கோண்டி திரு திரு என ஒரு அவஸ்தையுடன் முழிக்கும் மகாவை ரசித்த இன்பா தண்ணீர் எடுத்து அவளுக்கு அருந்த கொடுக்க.

அதை வாங்கி குடித்தவளுக்கு விக்கல் நின்ற பாடு இல்லை அதில் லேசாக மகா முகம் கோபத்துக்கு மாற

 “ஆபிஸ்.. இக்… டைம்ல என்ன.. இக்… பன்றிங்க …இக்…” என்று சிரமப்பட்டு சொல்லி முடிக்க.

“சரி அப்போ ஆஃப் போட்டு வா பீச் போலாம் தங்கமே” என்று மகா கையை பிடித்து இன்பா இழுக்க, மகாவுக்கு மூச்சே நின்று விட்டது ஒரு நிமிடம்.

கண் முன் அமிர்தம் துடப்பத்துடன் வந்து கண்களை உருட்டும் காட்சி வந்து போக தலையை உலுக்கிய படி

“நான் எங்கயும் வர மாட்டேன் அப்பா சித்தப்பாக்கு தெரிஞ்சிது பிச்சிடுவாங்க என்ன” என்று பயந்து கைகளை அவள் உதறவும்.

“ஐ… என் தங்கத்துக்கு விக்கல் நின்னுருச்சி” என்று இன்பா சொன்ன பிறகே விக்கல் நின்றதை உணர்ந்தவள்.

“ஏன் இப்படி விளையாடுறிங்க…. எனக்கு வர்க் இருக்கு அதை கொஞ்சம் பாக்க விடுங்க சார்.” என்று மகா அழும் குரலில் கெஞ்ச அதை எதையும் கண்டு கொள்ளாதவன்.

“ஏன் என்ன என்னும் சார் போட்டு கூப்பிடுற. நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் தங்கம்.”

“கல்யணம் பண்ணிக்க தான போறிங்க முடிஞ்ச பிறகு சார் போடல ” என்று மகா பழைய பார்ம்க்கு வரவும் அதை உணர்ந்தவனாக.

“சரி தங்கமே என்னை கடைமை அழைக்கிறது அப்பறம் பார்க்கலாம்” என்று சொல்லி சென்றவனை முறைத்து பார்த்தவள்.

“இவ்ளோ நேரம் என்ன இம்சை பண்ணிட்டு இப்பொ என்ன கடமைன்னு சொல்லிட்டு வெளிய போறாங்க” என்று எட்டி பார்க்க வெளியே வளாகத்தில் மகேஷ் கை ஆட்டி இன்பாவை அழைத்து கொண்டிருக்க, அவனும் கை அசைத்தபடி அவனை நோக்கி தான் சென்றான்.