“ஏசிபி இது சுகந்தன்” என்றாள் குரல் நடுங்க.

“எஸ் எஸ்..! டாக்டர் சுகந்தன். அது நான் தான். இப்போ அதுக்கு என்ன?” என்று பூட்டியிருந்த அறைக்கதவை திறந்து கொண்டு வந்த சுகந்தனைப் பார்த்தவர்கள் அதிர்ந்து நின்றனர்.

“டேய் நீ எப்படி இங்க? உன்னை யாரு வீட்டுக்குள்ள விட்டது?” என்றார் ராஜன்.

“வேற யாரு? எல்லாம் உங்க தம்பி தான் சார். இல்லைன்னா மினிஸ்டர் வீட்டுக்குள்ள போறவங்க வர்றவங்க எல்லாம் நுழைய முடியுமா?” என்றான் தீரன் நக்கலாய்.

பார்க்க அவ்வளவு அமைதியாய் இருந்தான் சுகந்தன். ஆனால் முகத்தில் அழுத்தமும் தெனாவெட்டும் நிறைந்திருந்தது.

“சாருக்கு தெனாவெட்ட பார்த்தியா மச்சான்? அதாவது உங்களால என்ன புடுங்க முடியும்னு கேட்காம கேட்குறார்?” என்றான் தீரன்.

“அதான் கேட்குறான்ல..! அப்போ புடுங்கிக் காட்டிட வேண்டியது தான்” என்ற விவேக் அவனை ஓங்கி அறைந்திருக்க,

“அய்யோ என் தம்பி” என்று ஓடி வந்தார் வாசுகி.

“தள்ளிப் போங்க” என்ற தீரனின் குரலில் வீடே அதிர்ந்தது.

“இந்த நாய் என் கையில சிக்குற அன்னைக்கு சங்கோட மிதிச்சு கொல்லணும்னு அப்படி ஒரு வெறி. அது இன்னைக்குத் தான் நிறைவேறப் போகுது” என்று தீரன் எட்டி உதைத்த உதையில் தூரப் போய் விழுந்திருந்த சுகந்தன், கொஞ்சம் கூட பயந்த மாதிரியே தெரியவில்லை.

எழுந்து நிதானமாய் வந்து அமர்ந்தவன்,

“இப்போ என்னை அடிச்சதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ ஏசிபி? என்ன சொன்ன? ஆம்பளை மாதிரி வெளிய வராம வீடியோ மட்டும் எடுத்து மிரட்டிட்டு இருக்கேன்னா? அந்த ஞாபகம் உனக்கு இருக்குல்ல? இப்ப நான் நினைச்சா உன் பொண்டாட்டி வீடியோ உன் மச்சினிச்சி வீடியோன்னு இந்த உலகமே பார்க்கும். பண்ணவா?” என்று சிரித்தவனின் சிரிப்பில் அப்படி ஒரு அகங்காரம்.

“உன்னால முடிஞ்சதை பாருடா? இதெல்லாம் நடக்கும்னு தெரியாமையா இவ்வளவு தூரம் வந்திருப்போம்?” என்றான் தீரன்.

“நாட் பேட்..! ஆனா பாரு தீரன், என்னை என்ன நினைச்ச நீ? அந்த வீட்ல இருக்குற ஹார்ட் காப்பிஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டா என்கிட்ட வேற காப்பிஸ் இல்லைன்னு அர்த்தமா? இல்லை அவ்வளவு ஈசியா வந்துட்டு போறதுக்கு அது அவ்வளவு ஈசியான இடமும் கூடவா? டேய் அது இந்த சுகந்தனோட கோட்டைடா. உன்னால என் ம..ரைக் கூட புடுங்க முடியாது. என்ன சொன்ன? இன்டர்நேஷனல் டீலிங்னு சொன்னதான? இன்டர்நேஷனல் அளவுக்கு பண்ணனும்னா அந்த அளவுக்கு மூளையும் இருக்கணும். அது இல்லாமையா இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருப்பேன்னு நினைக்கிற? நீ எடுத்துட்டு போனது எல்லாமே டம்மி. ஒரிஜினல் என்கிட்ட பத்திரமா இருக்கு” என்றான் சுகந்தன் நக்கல் சிரிப்புடன்.

“யோவ் ஏசிபி..! அவன் கதை சொல்லிட்டு இருக்கான். நீ என்னடான்னா பொறுமையா கேட்டுட்டு இருக்க?” என்றான் சஞ்சய்.

“அட இருங்க சகலை..! டாக்டர் எவ்வளவு அறிவா பேசிட்டு இருக்காரு? கொஞ்ச நேரம் தான் கேட்போமே?” என்றான் தீரன்.

“தீரன் என்ன நடக்குது இங்க? இவன் எப்படி இங்க?” என்ற ராஜன்,

“வாசுகி உன் தம்பியை வீட்டுக்குள்ள விடக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? உனக்குத் தெரிஞ்சு தான் எல்லாம் நடந்திருக்கா? சங்கரி என்ன இதெல்லாம்?” என்றார் ராஜராஜன்.

“அய்யோ எனக்கு எதுவும் தெரியாதுங்க” என்றார் சங்கரி.

“அங்கிள் பொறுமையா இருங்க”  என்ற தீரன்,

“அப்பறம் சுகந்தன்? கிளம்பலாமா? எல்லாத்தையும் இங்க வச்சே பேச முடியாது. எதுவா இருந்தாலும் பேச வேண்டிய இடத்துல பேசிக்கலாம்” என்றான் தீரன்.

“அட இரு ஏசிபி? நான் தான் குற்றவாளின்னு எதை வச்சு ப்ரூவ் பண்ணுவ? அந்த விமல் பயல வச்சா? இல்ல செத்துப் போன ஜித்தேஷும், அவன் தம்பி தாரிக்கையும் வச்சா? ஒன்னும் பண்ண முடியாது.ஆனா தேவையில்லாம என்னை சீண்டிட்ட, இன்னைக்கு மீடியா கண்டென்ட்டே உன் பொண்டாட்டி வீடியோ தான். சீக்கிரம் போய் பாரு” என்றான் எகத்தாளமாய்.

அதைக் கேட்ட மொழிக்கோ உடல் நடுங்கி உள்ளம் கூச, சட்டென்று தீரனின் பின்னால் சென்று நின்று கொண்டாள்.

“அப்பறம் இதோ இங்க நிக்கிறாளே பிரகதி?  அவ வீடியோவை இது வரைக்கும் நானும் உன் பொண்டாட்டியும் மட்டும் தான் பார்த்திருக்கோம். அதையும் இப்போ ஊரே பார்க்கும் பாரு. மினிஸ்டர் ராஜ ராஜன் மகள்களின் மன்மத லீலைகள்…டைட்டில் எப்படி இருக்கு?” என்றான் ஒளிர்ந்த ஆத்திரம் கொண்ட முகத்துடன்.

இத்தனை நாள் இது எது பற்றியும் அறியாத பிரகதியோ நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்று விட்டாள். கண்களை சுற்றிக் கொண்டு வருவதைப் போல் இருந்தது.

“பிரகதி” என்று சஞ்சய் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள,

“இதுக்கே ஷாக்கானா எப்படி? நான் அவ்வளவு கெட்டவன் எல்லாம் இல்லமா.. நீ உன் புருஷன் கூட இருக்குற வீடியோவ தான் பார்த்தேன்” என்று சுகந்தன் சொல்ல காதுகளை மூடிக் கொண்டாள் பிரகதி. சஞ்சைக்கே அது அதிர்ச்சியான செய்தி தான். அவன் அதிர்ந்து தீரனை திரும்பிப் பார்க்க, தீரனோ இமைகளை அழுந்த மூடித் திறக்க, அது உண்மை தான் என்று தெரிந்து கொண்ட சஞ்சய் பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்கியபடி நின்றான்.

“பிளீஸ் ஏசிபி ஏதாவது பண்ணுங்க. அக்கா இதையெல்லாம் தாங்க மாட்டா” என்றாள் கலங்கிய குரலில்.

சரியாக அந்த நேரத்திற்கு குமரன் அழைக்க,

“குமரன்”

“சார் பக்கா! நீங்க களத்துல இறங்கலாம். அந்த நாய்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்தாச்சு” என்றான் குமரன்.

“யு ஆர் அப்சலூட்லி கிரேட் குமரன். நான் இன்பார்ம் பண்ண இந்த ஷார்ட் பீரியட்ல தனியா இதை ஹேண்டில் பண்ணியிருக்கிங்க. சீரியஸ்லி ஐ ஆம் ப்ரௌட் ஆப் யு” என்றான் தீரன்.

“சார் இது என் கடமை சார். எத்தனை பொண்ணுங்க லைப் இதுல இருக்கு. உங்களுக்கு டவுட்டே வேண்டாம். மொத்ததயும் சீஸ் பண்ணியாச்சு. நீங்க நம்பி களத்துல இறங்கலாம். நான் இப்போ அங்க ஸ்பாட்டுக்கு வந்துட்டு இருக்கேன் சார். விமல் கிட்டவும் வாக்கு மூலம் வாங்கியாச்சு” என்றபடி குமரன் போனை வைக்க,

“மொழிமா” என்று அந்த நேரத்திலும் அவன் குரலில் ஒலித்த கனிவில் அவனைப் பார்த்தவளின் கண்களில் தான் எத்தனை நம்பிக்கை.

“எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிக்கணும் போல இருக்கு” என்றவன்,

“சகலை உனக்கு? மச்சான் உனக்கு?” என்றான் விவேக்கையும் சஞ்சையும் பார்த்தபடி.

“குடிச்சா நல்லா இருக்கும் தான்” என்றான் விவேக்.

“நான் போட்டு எடுத்துட்டு வர்றேன் ஏசிபி” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு சென்றவளை ஆதுரமாய் பார்த்திருந்தான் தீரன்.

அவள் சென்றது தான் மாயம்… சுகந்தனின் உயிர் நாடியிலே ஒரு எத்து எத்தியிருந்தான் தீரன். ஆத்திரம் தீர அவனைப் புரட்டி எடுத்தவனை விவேக் தடுத்தான்.

“செத்துட போறான் மச்சான்” என்றான்.

“விடு மச்சான் சாகட்டும் நாய். என்ன வாய் பேசுறான்” என்றான் தீரன் ஆத்திரம் அடங்காமல்.

அவனின் கையிலும் கை விலங்கை மாட்டியவன், அவனையும் ஆனந்த ராஜனையும் ஒரு சோபாவில் தள்ளியிருக்க, அப்போதும் அவன் கண்களில் பயமே இல்லை.

“ஆனா இதுல என் பொண்ணுங்களை எதுக்கு இழுக்கணும் தீரன்? இவனையெல்லாம் என் தம்பின்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு?” என்றார் ராஜன் ஆத்திரம் தாங்க முடியாமல்.

“குடும்ப மானத்தையே வாங்கிட்டியேடா பாவி. நம்ம கிட்ட எதுக்கு குறையா இருக்குன்னு இந்த பொழைப்பை பார்த்திருக்க? அதுவும் இவன் கூட சேர்ந்து?”என்று தியாகராஜன் மகனை கன்னம் கன்னமாய் அறைய, அதை ஒரு திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சுகந்தன்.

“உங்க வீட்டுப் பிரச்சனை எனக்கு தெரியாது அங்கிள். ஆனா, இவன் பண்ணது சாதாரண வேலை இல்லை. பொதுவா போதைப் பொருள் விக்கிறவன் அதை வித்துட்டு போயிட்டே இருப்பான். ஆனா இங்க அதை உருவாக்குறதே இவன் தான். இவனுக்கு பின்னாடி ஒரு டீமே இருக்கு. இவன் குடுத்த மேஜிக் ட்ரிங்க் பார்முலா நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் கிடையாது. பாரபட்சமே இல்லாம எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா அதுக்கு அடிமையாக்குறது தான் இவங்க நோக்கமே.

இன்னைக்கு ஸ்கூல் காலேஜ்ன்னு ஆரம்பிச்சு நாளைக்கு வீடு தவறாம அதை சேர்க்குறது தான் இவங்க திட்டமே. அஞ்சு நாடுகளுக்கு புல் சப்ளை இவன் தான். அவனுக்கு தேவையான எல்லா உதவியையும் உங்க பேரை யூஸ் பண்ணி உங்க தம்பியை வச்சு காரியம் சாதிச்சுகிட்டான்.

இப்போ கூட இவன் யூஸ் பண்ற வீடு உங்களோடது. இவன் யூஸ் பண்ற கார் உங்களோடது. இப்படி எல்லாத்துலயும் அமைச்சர் ராஜன் பேரு மட்டும் தான் இருக்கு. இது அவனுக்கு ஒரு சேப் கார்ட் மாதிரி.

பர்ஸ்ட்  உங்களைத் தான் பாலோ பண்ணோம். அதுக்கப்பறம் கிடைச்ச தகவல் தான் இது. நான் சொல்றது ஜஸ்ட் சாம்பிள் மட்டும் தான். இன்னும் இவன் நிறைய வேலை பார்க்குறான். எல்லாமே இல்லீகல் ஆக்ட்டிவிட்டிஸ் தான். ஒவ்வொருத்தரையும் ஏதோ ஒரு வகையில மிரட்டி அவங்களை ட்ரம்ப் கார்டு மாதிரி யூஸ் பண்ணியிருக்கான்” என்றான் தீரன்.

“ஆமாடா..! நான் தான் பண்ணேன். அதுக்கு என்னங்குற இப்போ? இதோ என் அக்கா புருஷன் இந்த ஆளை கூட மிரட்டி தான் எல்லாம் பண்ண வச்சேன். என்ன பண்ண முடியும் உன்னால? இதோ அந்த ஆள்கிட்ட டீசன்ட்டா வந்து மொழியை எனக்கு கட்டிக் குடுங்கன்னு கேட்டேன். அதுக்கு இந்த கிழவன் குடும்ப பேர், தகுதி அது இதுன்னு பேசுனார். நான் ஒரு டாக்டர். இதுக்கு மேல என்னய்யா தகுதி வேணும்?” என்றான் ஆத்திரம் அடங்காமல்.

“குணம் கெட்டவனுக்கு யாராவது பொண்ணைக் கட்டிக் குடுப்பாங்களாடா? உன் வயசென்ன? என் பொண்ணு வயசென்ன?” என்றார் ராஜன் ஆத்திரம் தாங்காமல்.

“அதான்யா உன் குடும்ப மானத்தை வாங்கியிருக்கேன். நாளைக்கு என்னைய விடு, எல்லா நியூஸ்லயும் என்ன ஓடும்? அமைச்சர் ராஜ ராஜனின் தம்பி அப்படின்னு தான் ஓடும்” என்றவனுக்கு எதையோ சாதித்த திருப்தி.

“டேய்” என்று அவன் சட்டையை அவர் பிடிக்க,

“யோவ் விடுய்யா..! இந்த ஏசிபி கொஞ்சம் குறுக்க வந்துட்டான். இல்லைன்னா உன் வீட்டு மானத்தை கப்பலேத்தி, அந்த தாரிக்கை வச்சு இந்நேரம் உன் பொண்ணை என் பொண்டாட்டி ஆக்கியிருப்பேன். எல்லாம் இவன் ஒருத்தனால கெட்டது தான். உன் பொண்ணுக்கு கொஞ்சம் லக் இருக்குய்யா? நான் போட்ட எல்லா பிளான்ல இருந்தும் தப்பிச்சுட்டா?” என்றவன் மொழியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையில் கூசியவள் தீரனிடம் காபியை நீட்டிவிட்டு அவன் பின்னால் நின்று கொள்ள, அவளை இழுத்து தனக்கருகில் முன்னால் நிறுத்திக் கொண்டான் தீரன்.

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ஏசிபி. நான் நிஜமாவே இவளை லவ் பண்ணேன். என் மொத்த சாம்ராஜ்யத்துக்கும் இவ மட்டும் தான் ராணியா இருக்க முடியும். இவ பேரைக் கெடுத்தாலாவது எனக்கு கட்டிக் குடுப்பார்னு நினைச்சேன். அதுவும் உன்னால நடக்கலை. என்கிட்ட இருக்குற எல்லாத்தையும் எடுத்துக்க. ஆனா, அவளை எனக்கு குடுத்துடு. இல்லண்ணா கண்டிப்பா நான் எங்க இருந்தாலும் அவளை நிம்மதியா வாழ விடவே மாட்டேன்” என்றவனின் பேச்சில் தீரனுக்கு முந்தி சஞ்சய் அவனை வாயோடு குத்தியிருந்தான்.

“போதை மருந்து  மாபியாவின் முக்கிய அங்கமாக செயல்பட்ட டாக்டர் சுகந்தனையும், சுகந்தனுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த அமைச்சர் ராஜ ராஜனின் தம்பியும், ராஜன் ஜிவல்லரிஸ் ஒனருமான ஆனந்த ராஜனையும் போலீசார் இன்று அமைச்சர் வீட்டில் வைத்து கைது செய்தனர்” என்ற செய்தி அனைத்து செய்தி சேனல்களிலும் ஓடிக் கொண்டிருந்தது.