அங்கு ஹரிஷின் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு காவலாளியிடம் தன் பெயரை கூறீய கவின் ஹரிஷை சந்திக்கவேண்டும் என கூறவும் அவனுக்கு சல்யூட் வைத்தவாறே
“தெரியும் சார், ஹரிஷ் தம்பி 3 நாளுக்கு முதலே நீங்க வருவீங்க என்று சொல்லிச்சுது. உள்ள போங்க” என்று கேட்டை திறந்து விடவும்
“ஹ.ஹ” என்று கார்த்திக் சிரிக்க தொடங்கினான். அவன் சிரிக்கவும் கோவம் வர பெற்றவனாய்
“எதுக்குடா இப்போ இளிச்சுட்டு இருக்கிற?’ என்று கவின் வினவவும்
“இல்ல. ஹரிஷ் மூன்று நாளைக்கு முன்னமே எல்லாம் கண்டு பிடிச்சு வருவ என்று எவ்வளவு நம்பிக்கையா இருந்து இருக்கான் பாரென்.” என்று கூறி மீண்டும் சிரிக்கவும் அவனோடு சேர்ந்து கவினும் சிரித்தான்.
தன்னுடைய சிரிப்புடன் கவினின் சிரிப்பு இணையவும் தனது சிரிப்பை நிறுத்திவிட்டு கேள்வியாக நோக்கிய கார்த்திக்கை பார்த்து கண்ணடித்த கவின்
“ஹரிஷ், யோசிச்சு இருப்பான் நான் நல்ல ஒருத்தனை இதை எல்லாம் கண்டு பிடிக்க ஒழுங்கு படுத்தி இருப்பேன் என்று. பாவம் அவனுக்கு தெரியாதே உன்னை பற்றி” என்று கூறி காலை வாரவும் இப்பொழுது முறைப்பது கார்த்திக்கின் முறையானது.
அவனை நோக்கி கண்ணை சிமிட்டியவாறே காரிலிருந்து இறங்கியவன் திறந்து இருந்த ஹால் கதவினை பார்த்து தயங்கி நின்றான்.
“ஏன் அங்கயே நிற்கிற கவின் உள்ளவா” என்ற குரல் திடீரென அன்கு ஒலிக்கவும் புருவம் சுருக்கியபடியே கார்த்திக்குடன் உள்ளே நுழைந்தவன் வலது புறமாக போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து மடிக்கணணியில் எதையோ ஆராய்ந்து கொண்டு இருந்த ஹரிஷை கண்டுவிட்டு அவனருக்கில் போனான். அவன் அருகில் வரவும் தனது கணனியை மூடி முன்னாலிருந்த டீப்பாயில் வைத்தவன் கைகளை தூக்கி நெட்டி முறித்தவாறே
“ஏன் ரெண்டு பேரும் நிற்கிறீங்க..ப்ளீஸ்” என முன்னாலிருந்த இருக்கையை காட்டினான்.
அவன் கூறியதை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட கவின் சோபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்தவாறே
“ஸோ ஹரிஷ் நான் வருவேன்னு நீ எதிர் பார்த்து இருக்கிற?”
“எப்படா வருவா அப்பிடினு பார்த்துட்டு இருக்கேன் நீ வேற”
“ஏன் இவ்வளோ நாளுக்கு அப்புறம் இப்பிடி ஒரு எதிர்பார்ப்பு ஹரிஷ்?”
என்று வினவவும் ஆழ மூச்சு எடுத்துவிட்டவன்
“ஆதியோட சொத்துக்கள ஆதிகிட்டயே ஒப்படைக்க இது, உன்னோட அவ செர்ந்த இந்த நேரம் தான் சரியானது கவின்.”
“ஏன் ஆதிகிட்ட இருந்து சொத்தை எல்லம் பறிக்கனும்? ஏன் மறுபடியும் அவ கிட்ட குடுக்கனும்? ஏன் அவளை என்னோட பெயர் சொல்லி மிரட்டனும்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கவின் முன்வைக்கவும்
“என்ன டிடெக்டிவ் சார் உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா இதை பற்றி?” என்று புருவம் தூக்கி வினவினான்.
அவன் தன்னை நோக்கி கேட்டதும் கவினை பார்த்த கார்த்திக் மீண்டும் அவனை நோக்கியவாறே
“ஆதியை எதுலயோ சிக்க விடாம நீ காப்பாத்தி இருக்க.. இப்போ அந்த பிரச்சனை தீர்ந்ததும் திரும்ப கூப்பிட பார்ர்க்கிற”
எனவும் தலையை பின்புறம் சாய்த்து “ஹா..ஹா” என சிரித்தவன்
“அது மட்டும் இல்ல. என் அண்ணனை கொன்றவனை பழி தீர்த்துட்டு வந்து இருக்கேன்” என்று கூறும் போது அவன் கண்களில் மின்னிய கோவம்..ஹப்பா கார்த்திக்குக்கே புல்லரித்து விட்டது.
இருவரையும் பார்த்து தன்னை அமைதிப்படுத்தியவன்
“கையாலாகாதவனா இருந்தேன் அப்போ..என்னை என் குடும்பமே நம்பாத ஒருத்தன் நான் அப்போ..நான் சொன்னா யாருமே கேட்க மாட்டாங்க என்ற நிலை.. அந்த நேரத்துல என்னோட குடும்பத்தை என் அண்ணியோட வம்சத்தை காப்பாத்த நானே வில்லனா என்னை காட்டி என் கிட்ட இருந்து அவஙள ஓட வைச்சேன் கவின்”
“ஆதி பற்றி எனக்கு அண்ணி சொல்லி இருக்காங்க.. அண்ணனுக்கு என்னை எவ்வளவு தான் பிடிக்காம போனாலும் அண்ணி என்னை பாசமா தான் நடத்துவாங்க நான் அவங்க வீட்ட போறப்போ எல்லாம்..என்னோட இன்னொரு அம்மாவா பார்த்தேன் அவங்கள. ஆனா..ஆனா..கடைசியில அவங்களும் என்னை தப்பா நினைச்சுட்டாங்க என்றப்போ” என்று இழுத்தவன் முன்னால் இருந்த மேஜையில் கையை ஓங்கி அடித்து
“நரகம் கவின்” என்று கூறும் போது அவன் கண்களில் பொய்யே இல்லை.
மெல்ல மெல்ல அவன் நடந்தவற்றை விளக்கி முடிக்கவும் அங்கே ஒரு கணத்த மௌனம் நிலவியது. அதை முறியடிக்கவென்றே தொண்டையை செறுமிய கவின்
“இதுல சிவத்திரமை எப்பிடி ஹரிஷ் தனியாளா நின்று சமாளிச்ச?” என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்கவும்
“எப்பிடி ஆதியோட அப்பா அவனை நம்பி குடும்ப வக்கீலா நியமிச்சப்போ அவன் அவரோட சொத்தை அபகரிக்க திட்டம் போட்டாரோ, எப்பிடி ஆதி அவனை நம்பி தன்னோட சொத்துக்கு கார்டியனா அவனை நியமிச்சுட்டு போனாளோ, அதே நம்பிக்கையை தான் நானும் ஆயுதமா எடுத்தேன்.”
“கண்மூடித்தனமா அவன் நம்புற மதிரி நடிச்சு அவனை ஏமாத்தி அவனுக்கு எதிரான சாட்சிகளை திரட்டி இப்போ அவனை உள்ள தள்ளி ஆதியோட சொத்து பொறுப்பை என் கிட்ட எடுத்துகிட்டேன்.ஆனா அந்த கோவத்தை உன் மேல காட்டுவான்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல”
“வாட்?”
“யெஸ் கவின். அவனோட ஆட்கள் செய்த வேலை தான் அது.அவன்களையும் உன்பாதையில இருந்து ஒதுக்கிட்டு தான் நான் இப்போ பேசிட்டு இருக்கேன். ஆனா கவின். அவன் அடிபட்ட பாம்பு. எப்போவேணா வெளியில வரலாம். அவனை உள்ள அனுபுரதுக்கு நான் எல்லாம் செய்துட்டேன். இனி அவன் வராமலே போக உன்னால தி கிரேட் கவினால தான் முடியும்.” என்று ஹரிஷ் கூறி முடிக்கும் போது ஆரம்பத்தில் ஹரிஷிடம் இருந்த கோவம் இப்பொழுது கவினிடம் இடம் மாறி இருந்தது.