காலையிலே அரக்கபறக்க கிளம்பி கொண்டிருந்த கவினை டீப்பாவில் இருந்த காபியுடன் சேர்ந்து கன்னத்தில் கைவைத்தபடியே ஆதிராவும் ஸ்ரீயும் நோக்கி கொண்டிருந்தனர்..
“ஆரா என்னோட வாட்ச் எங்க?”
“கண்ணாடிக்கு முன்னுக்கு கவின்”
“ஆரா என்னோட புரொஜெக்ட் சி.டி?”
” ச்சோ..பெட் ல பா”
“சரிடா குட்டி..ஆரா என்னோட ஃபைல்?”
“இங்க டீப்பால இருக்கு“
“ஆரா என்னோட பிரீஃப்கேஸ்?”
“ப்பா..அதுவும் ம்மா கிட்ட”
“சரி டா.. அப்புறம் என்னோட ஷூ?”
“உங்க காலில கவின்”
“உங்க காலில ப்பா”
என்று அம்மாவும் மகளும் ஒருமிக்க கூறி ஒருத்தருக்கு ஒருத்தர் ஹை ஃபை கொடுத்து கொண்டனர்..
இருவரையும் திரும்பி செல்லமாக முறைத்தவன்
“ரெண்டு பேரும் என்னை கிண்டல் பண்ணுறீங்களா? “
“ச்சே..ச்சே.. இல்லையே” என்று மீண்டும் ஒரு முறை இருவரும் கூறி ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்..
“போங்கடி” என்றபடி அவர்கள் அருகில் வந்தவன் ஸ்ரீயை தூக்கி
“அப்புறம் என்னோட ஆராவும் ஸ்ரீயும் எங்க?” என்று கேட்க
“இங்க இருக்கோம்” என்று கூறி இருவரும் அவனது கன்னத்தின் இருபுறமும் முத்தமிட்டு சிரித்தனர்..
இன்று கவினுடைய ஒரு சைட் வேலைகள் நிறைவுறுவதால் தான் இந்த ஆர்பாட்டம்.. மறுநாள் தன் நண்பன் கார்த்திக்கை சென்று சந்திப்பதாக இருந்தான்.. அனைத்து பிரச்சனைகளும் முடிந்தவுடன் தான் ஆதியுடன் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்..
அதை ஆதியிடம் அவன் பகிராமல் விட்டாலும் ஆதியும் அதை உணர்ந்தே இருந்தாள்.. வருடக்கணக்கில் மனதில் சுமந்தவனது அசைவை பற்றியும் அவள் அறியாளா??
“சரிடா..அப்போ நான் கிளம்புறேன்..லேட் ஆயிடுச்சு..ஹா..ஹ்ம்ம்..ஆரா இன்றைக்கு அப்பாவோட காலேஜ்க்கு போற ல?”
“ஹ்ம்ம்..ஆமா கவின்”
“ஹ்ம்ம்..குட். அப்புறம் ஸ்ரீகுட்டிய கமிங் வீக் ல இருந்து ஸ்கூலுக்கு அனுப்பலாம்..சரியா? தேவையான திங்க்ஸ் லாம் இன்றைக்கு ஈவ்னிங்க் வாங்கிக்கோடா..எனக்கு எப்பிடியும் லேட் ஆகும்..முடிய அங்க வருவேன்..சரியா?”
“பாய்..பாய் ஸ்ரீகுட்டி” என்றவன் அறை வாசலுக்கு சென்று திரும்பி பார்த்தான்.
புன்னகையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஆதி அவன் திரும்பியதும் புருவம் தூக்கி என்ன என்பதாய் வினவவும் கண்ணை சிமிட்டிவிட்டு புன்னகைத்தபடியே கிளம்பி சென்றான்.
அன்றைய தினம் இருவருக்குமே விரைந்து செல்ல கல்லூரியில் இருந்து திரும்பி வந்த ஆதிரா கையுடனே அழைத்து சென்ற ஸ்ரீயை தனத்திடம் விட்டுவிட்டு ஃப்ரெஷ் ஆகி வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கினாள்..இரவு உணவுக்கான உத்தரவுகளை சமையல்காரர்களிடம் பிறப்பித்துவிட்டு சுவாமி அறையில் சென்று விளக்கேற்றி வழிபட தொடங்கினாள்..
அவளை பின்பற்றி ஸ்ரீயும் சென்று வணங்க அத்தனை நேரமும் ஆதியை பெருமையாக ஹாலில் இருந்து பார்த்து கொண்டிருந்த பெரியவர்களும் அப்பொழுது தான் தத்தமது அறையில் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்த கருண் பாவனாவும் சிந்துவும் பூஜை அறைக்கு சென்று வணங்க தொடங்கினார்கள்..
குடும்பமே தன்னால் பூஜை அறைக்குள் வந்து வணங்குவதை அறியாத ஆதிரா விழி மூடி இசையால் இறைவனை வழி பட்டுக்கொண்டிருந்தாள்..
வணங்கி முடித்து விழி திறந்தவள் அனைவரும் அங்கிருக்கவும் ஆச்சர்யமாக புன்னகைத்துவிட்டு கற்பூரதட்டை எடுத்து அனைவரின் முன்னே நீட்டினாள். அனைவரும் வழிபட்டு முடியவும் ஹால் வாசலை எதேர்ச்சியாக நோக்க அங்கே சஞ்சய் உதவியுடன் நொண்டியபடி வந்த கவினை கண்டு அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்..
அவளின் அதிர்ச்சியை கண்டு அனைவரும் வாசலை நோக்கி பின் பதறியபடியே கவினை நோக்கி ஓடினர்.. ஸ்ரீயை தூக்கியபடி சிந்துவும் அவர்களை தொடர ஆதி மட்டும் உறைந்து அவ்விடத்திலேயே நின்றாள்..
கவினின் அருகில் ஓடிய தனம் அவனை பதற்றமாக வருடி
“கவின்..என்னபா ஆச்சு?” என்று வினவவும் அவரை அணைத்து ஆறுதலாக தட்டி கொடுத்தவன்
“நதிங்க் மா..அம் ஓகே.. ஜஸ்ட் ஒரு சின்ன அக்ஸிடென்ட்..அவ்வளோ தான்.”
என்று கூறவும் வந்திருந்த சஞ்சய்
“சும்மா இருடா.. ஜஸ்ட் மிஸ் மா.. ஒரு கார் இவன் ரோட்டுக்கு வரும் போது அடிக்க பாத்திச்சு.. “
“டேய்” என்று கவின் உறுமவும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்
“நல்லவேளை இவன் முன்னாடியே பார்த்தான்.. இல்லனா”
என்று அவன் இழுக்கவும் கையிலிருந்த தட்டு கீழே விழ ஆதிரா மயங்கி சரியவும் சரியாக இருந்தது..
ஸ்ரீயைகட்டிலில்கிடத்தியவன்ஆதிகோவிலுக்குசென்றிருப்பதைகேள்விப்பட்டு அதிலிருந்தேஅவளதுமனப்பாரத்தைஅறிந்தவன்,ஆதியுடன்கருணும்சென்றதைஉறுதிப்படுத்தி பின்னர் தாயிடம்,ஆதியிடம்கூறுமாறுகூறிதனது உளவுத்துறைநண்பன்கார்த்திக்கைபார்க்கவிரைந்தான்.
அவள்விலக்கியதும்தாபம்மேலிடபார்த்தவனைகண்டுஅவன்நெற்றியில்முத்தமிட்டவள் “கவின்? நான்யாரு? உங்கஆரா..நான்யாருக்குஇந்தகவினுக்குமட்டும்தானே? ஏன்இவ்வளவுஅவசரம்? ம்ம்?” என்றுஇதமாகவினவிமுடிகோதியவளின்பேச்சில்தெளிந்தவன் எழுந்து அவளது மடியில் படுத்தவாறே
“எல்லாம் சரியாக போகுதுனு ஒரு சந்தோஷத்தில இப்பிடி அவசர பட்டுட்டேன் ஆரா” என்று தன்னிலை விளக்கம் கொடுக்கவும் அவனது தலையை கோதியவள்
“எப்போ வேணா ஆராவை நீங்க எடுத்துக்கலாம் கவின்..ஆனா உங்களுக்கு கால் ல அடி பட்டு இருக்கிறப்போ இதெல்லாம் வேணாம் நு தான் யோசிச்சேனே ஒழிய வேற எதுவும் இல்ல சரியா?” என்று அன்பாக எடுத்துரைத்தாள்.
அவளின் பேச்சில் புன்னகைத்தவன் அவள் வயிற்றில் முகத்தை ஆழ புதைத்தவாறே உறங்க தொடங்க முதலில் வெட்கத்தில் நெளிந்தவள் பின்னர் தாய்மை உணர்வு பெருக்கெடுக்க அவனின் தலையை அணைத்தவாறே மறுகையால் அவனை தட்டிக்கொடுக்க தொடங்கினாள்.
***********************
கார்த்திக்கும் கவினும் மறுநாளில் இருந்தே ஆதியின் பின்னால் என்ன நடக்கிறது என்பதை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்தறிய முயன்றுகொண்டு இருந்தனர். இருவரின் அலசலிலும் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு விடை “வக்கீல் சிவத்திரம்”
கார்த்திக்கை கவின் சந்தித்து சரியாக பத்து நாள் கழித்து.. கார்த்திக்கின் அலுவலக அறையில் தனது கூலர்ஸினை நெற்றியில் தட்டியபடி யோசித்துக்கொண்டிருந்த கவினையே கேள்வியாக நோக்கிக்கொண்டு இருந்தான் கார்த்திக்.
“டேய் கவின். எவ்வளவு நேரம் தான் இப்படியே யோசிச்சுட்டு இருக்க போற?” எனவும் அவன் புறம் திரும்பியவன் முறைப்புடனே கூலர்ஸை மேசையில் தூக்கிப்போடுவிட்டு அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து
“தீர்வு கிடைக்கும் மட்டும் யோசிக்காம என்ன பண்ண சொல்ற?” என்று கடுப்பாக வினவினான்.
“ம்ச். இப்போ நீ அனுப்பின ஆட்கள் கூறியத வைச்சு பார்க்கிறப்போ இப்போதைக்கு ஹரிஷ் மேல எந்த தப்பும் இல்ல. ரைட்?”
“ஆமாடா. இதைத்தான் நான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன்.” எனவும் சிரித்தவன் கவினை நோக்கி ஒரு ஃபைலை தூக்கி போட்டவாறே
“இதை படி ஹரிஷ் மேல தப்பு இல்லைங்ன்கிறது மட்டும் இல்ல. ஹரிஷ் தான் இவ்வளோ நாட்களா ஆதி பாவனா ஸ்ரீ க்கு காவலா இருந்திருக்கான்” என்று கூறவும் அதிர்ச்சியானவன்
“அப்போ ஏன்? ஏன் ஹரிஷ் ஆதியை மிரடனும். தன்னை பற்றி தவறான விம்பத்தை ஆதிக்கிட்ட உருவாக்கனும்? உண்மையா ஹரிஷுக்கு என்ன தான்டா வேணும்?”
எனவும் தோள்களை குலுக்கிய கார்த்திக் “இதை நம்ம ஹரிஷ் கிட்டயே நேரா டீல் பண்றது தான் சரி என்று தோணுது.” என்று கூறவும் தலையை ஆமோதிப்பாக ஆட்டிய கவின்
“அப்போ இந்த சிவத்திரம்?”
“அதுக்கும் ஹரிஷ் கிட்ட தீர்வு இருக்கும் நிச்சயமா. அதனால நம்ம கிளம்பலாம் கவின். இப்போவே ஹரிஷை பார்த்துடலாம்” என்று கூறவும் அவனுக்கும் அதுவே சரியாக தோன்றியமையால் மறுக்காமல் கார்த்திக்குடன் சென்றான்.