Advertisement

15

பாவனா அழவும் வெகுவாக பதறிப்போன ஆதிரா அவளின் முதுகை நீவி விட்டவாறே ஹேய் பாவனா..என்னது இது சின்ன குழந்தை போல? நல்ல நேரத்தில இப்படி யாரும் அழுவாங்களா?கண்ணை துடை..ச்சே..ச்சே..எதுக்கெடுத்தாலும் கண்ணக்கசக்குறதுக்கு எங்க பழகுன?”

 

என்று அதட்டவும் விசும்பியபடியே அவளிடம் இருந்து விலகியவள் அம் சோ ஸாரி அண்ணிஎன்று கூறினாள்..அவளின் தாடையை தாங்கியவள் எதுக்குடா ஸாரிஎன்று இதமாக வினவினள்.. அவள் அவ்வாறு கேட்கவும் பெருகிய கண்ணீரை துடைத்தவள்

 

இவ்வளவு நாள் உங்களை கூட ஒதுக்கிட்டேனோ என்றூ தோணுது..ஸ்ரீ கூட என் கூட ஒட்ட மாட்டேங்குறா..கவின் அண்ணா சொன்னப்போ தான் எனக்கே விளங்கிச்சு..ஸாரி அண்ணி..நான் வேணும் நே அப்பிடி பண்ணல..கருணோட இருக்க..அது..தப்பு தான் அண்ணி..கொஞ்சம் சுயநலமா..பச்..” என்று அவள் தடுமாறவும் அவள் கூற வருவதை புரிந்து கொண்டவள்

 

கவின்ன்ன்ன்ன்ன்என்று மனதிற்குள் அவனை வறுத்தவாறே

ஹேய்..லூஸா நீ? இனி உனக்கு எல்லாமே கருண் தான்..அவருக்கு அப்புறம் தான் நாங்க..இப்போ ஸ்ரீக்கு புதுசா அப்பா என்ற உறவு வந்திருக்கு ?

 

அவ குழந்தை மா..ஒரு புது டோல் வாங்கி கொடுத்தா அதையே கட்டி பிடிச்சு கொண்டு திரிவாங்க ? அப்பிடி தான் இப்போ கவினோட ஒட்டிகிட்டு திரியுறா..அதுகாக உன்னை விலக்கிட்டா என்று லூஸூ மாதிரி லாம் யோசிக்க கூடாது சரியா? ஹ்ம்ம்.”

என்றவுடன் தலை அசைத்தவளை பார்த்து புன்னகைத்தவள்

 

எங்க இப்போ சிரி பாப்போம்..ஹூஹூம்..இன்னும் கொஞ்சம்..இன்னும்..ம்ம்..இன்னும்என்று கூறி சிரிக்க வைத்து அவளை கருணின் அறைக்கு அழைத்து சென்றாள்..

 

கதவருகே சென்றதும் பாவனாவை பார்த்தவள் விழிகள் கலங்க உன்னை ஒரு நல்ல இடத்தில ஒப்படைச்சாச்சு..நிச்சயம் உன்னோட அப்பா அம்மா பார்த்திருந்தாலும் இந்த மாதிரி வரன் கிடைச்சத நினைச்சு சந்தோஷப்பட்டு இருப்பங்க..

 

உங்க அண்ணனோட ஆசையை நிறைவேறிற்றேன்..இனி எல்லாம் உன் பொறுப்பு பாவனா..இந்த வாழ்க்கையை வாழனும்..நீ சந்தோஷமா இருக்கிறதை நான் பார்க்கனும்..எப்பயுமே நல்ல மருமகளா மனைவியா நீ இருக்கனும்..ம்ம்?” என்று கூறியவளின் பாதம் பணிந்த பாவனா ஆதிரா பதறி போய் அவளை எழுப்ப அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி எல்லாமே எனக்கு நீங்க தான் அண்ணி..நிச்சயம் உங்க பெயரை கெடுக்க மாட்டேன்..” என்று கூறினாள்..

 

அவளை கண்கலங்க அணைத்து நெற்றியில் இதழொற்றி மகிழ்ந்தவள் பின் தன் கண்களை துடைத்தவாறு அவளை அறையினுள் அனுப்பி விட்டு கவினின் அறையை நோக்கி சென்றாள்.

 

மென்னடை இட்டு தனதறைக்குள் குனிந்த தலையுடன் வந்த பாவனாவிடம் விரைந்து வந்த கருண் அவளை நிற்க சொல்லிவிட்டு அவளை சுற்றி சுற்றி பார்த்தான்..

 

அவனின் செய்கையால் குழம்பி போனவள்என்..என்ன கருண்?” என்று கேட்கவும்

 

இல்ல..இந்த வெட்கம் வெட்கம் என்று சொல்லுவாங்களே? அது உன்கிட்ட இன்றைக்கு ஓவரா ஃப்ளோ ஆகுது..அதான் எந்த பக்கம் ஃப்ளோ கூடவா இருக்கு என்று பார்க்கிறேன்..வெள்ளம் வர முதல் அணை போட்டுடலாம் பாருஎன்று காமடி என்ற பெயரில் பாவனாவை கடுப்பேத்தவும் நங்என்று அவனது உச்சியில் கொட்டியவள் கையில் இருந்த பால் கிளாஸை கொடுத்தவாறேகுடிச்சிடுங்க..எனக்கு பாலே பிடிக்காதுஎன்றுவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தாள்..

 

பால் கிளாஸுடன்ஞேஎன்று முழித்தவாறே சிறிது நேரம் நின்ற கருண் பாவனாவிடம் நெருங்கி என்ன பேபி..இப்பிடி சப்புனு ஆக்கிட்ட?” என்று பரிதாபமாக கேட்கவும் பொங்கிய சிரிப்பை வாயினுள் புதைத்தவள்

 

அப்புறம் எப்பிடி கேட்கனும்

 

இல்ல இந்த சினிமா எல்லாம் காட்டுவாங்களே ஹீரோயின்ஸ் லாம் நெளிஞ்சு ஹஸ்பண்ட் கூட பேசுனாலே காத்து மட்டும் தான் வருது அப்பிடி..இல்ல இல்ல அதை விட உன்கிட்ட இருந்து இன்னும் எதிர் பாத்தேனேஎன்று சோகமாக சொல்லவும் அவனை நெருங்கியவள்

 

அவங்க எல்லாம் திருமணத்தில தான் ஒரு புது உறவை ஆரம்பிப்பாங்க..நான் அப்பிடி இல்லை..எனக்கு நீங்க வேற ஒருத்தர் இல்லை..என்னோட கருண்..உங்க கிட்ட நான் வெட்கப்பட்டு தான் என் காதலை நிரூபிக்கனுமா? ம்ம்?” என்று கேட்கவும்

 

ம்ம்?” என்று கேள்வியாக அவளை மீண்டும் கேட்டவாறே கட்டிலில் அமர்த்தி அவளின் மடியில் படுத்தான்..

 

படுத்தவனின் தலையை அவள் கோத அவளின் முகத்தை மறைத்த கூந்தலை நீவிவிட்டவாறே இப்போ இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கிற ஆள் நான் தான் தெரியுமா? நீ எனக்கு கிடைக்க மாட்ட என்று கலங்கினப்போ கவின் தான் ரொம்ப சப்போர்ட்டிவ் இருந்தான்

 

ஆமாங்க,எனக்கும் ஆதிரா அண்ணி தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க..அவங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்க நாம நம்மால முடிஞ்சதை செய்யனும்

 

ஹ்ம்ம்ம்

 

என்ன என்ன பெருமூச்சு?”

 

பாவனா குட்டி அவங்களை சந்தோசமா வைச்சிருக்க முன்னாடி உன் புருஷனை சந்தோசப்படுத்து பேபிஎன்று கிண்டலாக இழுக்கவும் அவனது மூக்கை பிடித்து ஆட்டியவள் அவரை சந்தோஷப்படுத்த நான் என்ன செய்யனும்?” என்று வினவினாள்..

 

அவளை அப்படியே இழுத்து தன் மேலே சரித்தவன் ஹஸ்கியான வாய்ஸில்

நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்க பதில் சொல்ல எடுத்தவளுக்கு வெட்கத்தில் வெறும் காத்து தான் வந்தது..

 

பரிதாபமாக முழிந்த அவளை கண்டு இன்னும் தன்னுடன் நெருக்கியவன் அவளின் வெட்கத்தை போக்கி தாம்பத்திய பாடங்களை கற்றுக்கொடுக்க தொடங்கினான். பாவனாவும் சமத்தாக அந்த பாடங்களை கற்க ஒரு புதிய உயிரின் விடியலுக்கான முயற்சி அங்கே ஆரம்பம் பெற்றது..

                                                                           *************

 

கவினின் அறைக்குள் கதவை தட்டிய பின் உள்ளே நுழைந்த ஆதிராவும் சரி உள்ளே கட்டிலில் அமர்ந்து இருந்த கவினும் சரி ஒருவரை ஒருவர் முறைத்தவாறே சிறிது நேரம் நோக்கி கொண்டு இருந்தனர்.

 

முதலில் வாயை திறந்த கவின் நீ என் மனைவி இப்போ..அதோட ஸ்ரீ வேற தூங்கிகிட்டு இருக்கா..சும்ம டொக் டொக் என்று கதவை தட்டி ஊரையே எழுப்பிட்டு வாற?” என்று குதிக்கவும் பட படவென இமை தட்டி விழித்தவள்

 

அப்பிடியா? ஊரே நம்ம கதவு தட்டுனா முழிச்சிடுமா? இந்த விஷயம் எனக்கு தெரியாம போய்டுச்சே..நான் வரும் போது நீங்க ட்ரெஸ் சேங்ஜ் பண்ணிக்கிட்டு இருந்தா இல்ல ஏதும் வேர்க் பாத்துக்கிட்டிருந்தா வெளில நான் நின்று சாத்திரமா பார்க்க முடியும்?? ஹஸ்பண்ட் ஆவே இருந்தாலும் அவங்களோட ஸ்பேஸ் கொஞ்சம் ஃப்ரீடம் கொடுக்கனும்..என் அம்மாவோட பழக்கம் அது..” என்று கூறவும்

 

உனக்கு அம்மா இருக்கா?” என்று அதிர்ந்து போய் கத்தினான்..

 

ஷ்ஷ்ஷ்..இப்போ எதுக்கு கத்துறீங்க? அம்மா என்று ஒருத்தங்க இல்லாம நான் எப்பிடி இங்க வானத்தில இருந்தா குதிச்சேன்?”

 

இல்ல..அம்மா இல்லனுஎன்று கவின் தடுமாறவும்

 

ஹ்ம்ம்..இருந்தாங்க..இப்போ இல்ல..சரி அதை விடுங்க,ஆமா பாவனா கிட்ட என்ன சொன்னீங்க?” என்று முறைப்பாக கேட்கவும்

 

என்ன சொன்னேன்?” என்று கூலாக வினவினான்..

 

பொய் சொல்லாதீங்க..அவளை ஏதோ நாங்க விலக்குன மாதிரி அழுறா

 

பரவால்லையே அவ உன்னை போல இல்லை..பக்குனு பத்திக்குது..இங்க பாரு ஆதிரா என்னை பொறுத்தவரையும் பாவனா எங்க வீட்டு பக்கம் இருந்து தான் இந்த திருமணத்துல பங்கெடுத்தா..அது ரொம்ப தப்பு..பிகாஸ் உன் சைட் க்ரௌட் குறைவு..அவ உன் பக்கம் உனக்கு சப்போர்ட் இருந்திருக்கனும்..அது தெரிஞ்சு செய்தாளோ இல்லையோ பட் அவளுக்கு அது தெரியனும்..அதான் சும்மா லைட்டா சொன்னேன்..”

 

ஆமா இவர் பெரியயயயயயய தர்மபிரபுஎன்று முணுமுணுத்தவாறு அறையில் கட்டிலிற்கு நேராக இருந்த ட்ரெஸ்ஸிங்க் டேபிளருகே சென்று அதன் முன்னால் இருந்த மோடாவில் அமர்ந்து அணிந்திருந்த எளிய நகைகளை கழற்ற தொடங்கினாள்..

 

கவினின் அறை ஒரு சிறிய வீடு போன்ற அமைப்பில் இருந்தது..அறையை திறந்தவுடன் ஒரு பக்கம் மேடை போன்ற அமைப்பில் தரை உயர்த்தப்பட்டு அதில் ஆறு பேர் படுக்க கூடிய அளவில் மிகப்பெரிய கட்டில் அந்தற்கு நேர் எதிரே ட்ரெஸிங் டேபிள், மற்றைய பக்கம் சோஃபா செட் ஒன்று இடப்பட்டு இருந்தது. அந்த அறையுடன் இணைந்த ஒரு அட்டாச் பாத்ரூமும் ஒரு ட்ரெஸிங்க் அறையும் இருந்தது. சோபா இடப்பட்டிருந்த இடத்துக்கு சற்று தள்ளி சுவரோடு பொருத்தப்பட்ட பெரிய கபேர்ட் ஒன்றும் அதன் அருகில் ஆதிராவின் சூட்கேஸ் இருந்தது.

 

கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறு கவின் ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருக்க அவன் அருகில் ஸ்ரீ துயின்று கொண்டிருந்தாள்.. சற்று நேரத்தில் ஒரு பெருமூச்சுடன் கையில் இருந்த புத்தகத்தை மூடி நைட்லாம்ப் பொருத்தப்பட்டிருந்த மேஜையில் வைத்த கவின் தொண்டையை செறுமியவாறுஆதிராஎன்று அழைத்தான்..

 

காதிலிருந்த தோட்டை கழற்றிக்கொண்டு இருந்தவள் கண்ணாடியினுள் தெரிந்த கவினின் விம்பத்தை நோக்கி என்ன என்பதாக புருவம் உயர்த்தினாள். கண்ணாடியில் தெரிந்த ஆதிராவின் கண்களை நோக்கியவாறு

என..எனக்கு சில குழப்பம் இருக்கு..கேட்கலாமா?” என்றவுடன் சிரித்தபடியே கையில் எடுத்த தோட்டை சுரையுடன் இணைத்து முன்னால் இருந்த நகைபெட்டியில் வைத்தவள்

கவின் சக்கரவர்த்தி நினைச்சத நினைச்சபடி கேட்கிறவர் ஆச்சே? ஏன் தடுமாற்றம்? கேளுங்கஎன்ற படி இடது காதிலிருக்கும் தோட்டை கழற்ற தொடங்கினாள்..

இல்ல..நம்மள பொறுத்தவரைக்கும் இந்த திருமணம் ஒரு அக்ரிமென்ட் போல தான்..ஆனாலும்

ஆனாலும்?”

இல்ல..உன்னோட பழைய வாழ்க்கையோட நினைவு, அது..நீ ரொம்ப இயல்பா இருக்கிற மாதிரி..பச்..நான் என்ன சொல்ல வரேன்னா..உனக்கு கவலையாவோ தடுமாற்றமாவோ தயக்கமாவோ இல்லையா?”

அவன் கேட்டவுடன் அவளின் கைகள் சற்று தயங்கி செய்த வேலையை நிறுத்தின..பின்னர் கவினை நோக்கி கொண்டிருந்த விழிகள் தாழ்ந்து நிமிர்ந்தது..ஒரு பெருமூச்சுடன் தோட்டை அகற்றி காதை நீவி விட்டவாறே நகை  பெட்டியை மூடி சென்று கப்பேர்ட்டினுள்ளே வைத்தாள்..

அவளையே நோக்கி கொண்டிருந்த கவின் குழப்பமாக அவளையே பார்த்தபடி இருந்தான்..

அவள் பதில் கூறாமல் தனது வேலைகளை பார்ப்பதை பார்த்தவன்

பச்..கேட்கிறேனே ஆதிராஎன்று மீண்டும் கேட்கவும் அவன் புறம் திரும்பியவள்

ரொம்ப மிஸ் பண்றேன் கவின்..ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்..என்னோட பழைய வாழ்க்கையை நினைச்சு நினைச்சு உள்ளுக்குள்ள உருகிகிட்டு தான் இருக்கேன்..ஆனா..ஆனா..நான் ஒரு நிமிடம் தடுமாறினாலும் என்னை நம்பி இருக்கிற பாவனா,ஸ்ரீயோட கதி?

 என்னோட கவலையையோ தயக்கத்தையோ தடுமாற்றத்தையோ வெளியில காட்டாம உள்ளேயே புதைச்சுக்கிட்டு வாரேன்.... டோன்ட் நோ.அதெல்லாம் எப்போ வெடிச்சு வெளிய வர போகுது என்று”  என கூறி மூச்சு வாங்கியவள் கூறிய எதுவுமே கவினுக்கு  புரியவில்லை..ஆனால் அந்த கேள்வியால் அவள் எமோஷனல் ஆகிறாள் என்பது மட்டும் புரிந்தது..

சரி..சரி..ரிலாக்ஸ்.. இதோ பாரு,எப்போ ஷேர் பண்ணனும் என்று தோணுதோ,அப்போ சொல்லு..இப்போ ரெஸ்ட் எடு..நாளைக்கு ரிசெப்ஷன் இருக்கு ஈவ்னிங்..அன்ட் ஒரே கட்டில்ல தூங்குறது ப்ரொப்ளமா? அப்பிடி ஏதும் என்றால்….”என்று இழுத்துவிட்டு

ஒன்றும் செய்ய முடியாது.. பேசாம தூங்கு

என்று கூறியவனை பார்த்து ஆதிரா புன்னகைக்கவும்

ஹ்ம்ம்ம் குட்.. குட்நைட்என்றவாறு கவின் தூங்க தொடங்க மெலிதாக குட்நைட் என்று முணுமுணுத்த படி அறை விளக்கை அணைத்து விட்டு தானும் ஒரு புறமாக தூங்க தொடங்கினாள்.. இல்லை..இல்லை..தூங்க முயற்சி செய்தாள்..

மறுநாள் காலை கருண்பாவனா ஜோடிக்கு காதலாக விடிந்தது என்றால் கவின்ஆதி ஜோடிக்கு வழமை போல சண்டையில் தான் விடிந்தது..

 

காலையிலேயே எழுந்து ஸ்ரீயையும் எழுப்பி அவளை தயார் செய்து பின்னர் தானும் தயாராகி கீழே சென்றவள் அங்கு சமையலறையில் காபி தயாரித்துக்கொண்டிருந்த சமையல்காரம்மாவுடன் அளவளாவியபடி ஸ்ரீக்கு ஹார்லிக்ஸ் கலக்கி, சோபாவில் சமத்தாக இருந்தவளுக்கு ஆற்றி கொடுத்து விட்டு, அப்பொழுது பூஜை முடித்து விட்டு வந்த தனலக்ஷ்மி,சுமதி இருவருக்கும் காபி கொடுத்து, பின்னர் வாக்கிங்க் போய் விட்டு வந்த மனோகர்,மகாதேவன் ஆகியோருக்கு அவர்களின் சத்துகஞ்சியை கொடுத்து மெல்ல மெல்ல அந்த

வீட்டுடன் சகஜமாக தொடங்கினாள்..

 

மனோகர் ஸ்ரீயை மடியில் தூக்கி வைத்து விளையாடி கொண்டிருக்க அதை ரசித்தவாறே மீண்டும் சமையலறை பக்கம் திரும்பியவளை அம்மா ஆதிஎன்று தனம் அழைக்கவும் நின்று அவரை திரும்பி பார்த்தாள்.. சொல்லுங்க மா

 

இல்ல மா..பாவனாவையும் எழுப்பி அவளும் தயாரானதும் இரண்டு ஜோடியும் ஒருக்கா நம்ம குலதெய்வம் கோயிலுக்கு போகனும் மா..உன்னை நானே வந்து கூப்பிடலாம் என்று தான் இருந்தேன்..ஆனா நீயே எழும்பி எல்லா வேலையும் பார்த்திட்ட..ஏன்மா முதல் நாளே கஷ்டப்படுற?”

 

இதுல என்னமா கஷ்டம்..நம்ம வீட்டு வேலையை பார்க்கிறதுல என்ன இருக்கு? எப்போவுமே எழுந்து பழகிடுச்சு..இதோ பாவனாவை கூப்பிட்டு நீங்க சொன்னதை சொல்லிடுறேன் மா என்று கூறி படிகளில் ஏறியவளை அங்கிருந்த நால்வருமே பெருமையாக நோக்கினர்..

 

அய்யோ கருண்..விடுங்க..இதென்ன மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க..ஐயோ விடுங்களேன்என்று பாவனா கருணின் அணைப்பில் அடங்கியபடி சிணுங்கி கொண்டிருக்க அவளை பார்த்து போலியாக முறைத்தவன்

 

என்னோட வொய்ஃபை அதுவும் நேற்று தான் கல்யாணம் கட்டி கூட்டி வந்தவளை,காலையில இப்பிடி பண்ணலானா தான் தப்புஎன்று கூறவும் அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள்

 

என் செல்லமில்ல? இப்போ விடுவீங்களாம்.. நான் கீழ போய்ட்டு அப்புறம் வருவேனாம்

 

ஹா..ஹா..”

 

என்ன சிரிப்பு?’

 

நீ தானே வந்திட்டு தான் மறுவேலை பார்ப்பஎன்று கூறியபடியே எல்லை மீற தொடங்கியவனை தடுத்துக்கொண்டிருந்த பாவனா வெளியே ஆதிராவின் குரல் கேட்கவும் பதறி எழ போக அவளை இன்னும் இறுக்கியவன்

என்ன ஓடுற?”

 

ஐயோ கருண் அண்ணி..”

 

நான் அம்மா என்றா சொன்னேன்

 

பச்..விளயாடாதீங்க கருண்..அண்ணி தப்பா நினைச்சுட போறாங்க

 

இப்போ கூப்பிட்ட உடனே நீ போய் நின்றா தான் ஆதி தப்பா நினைப்பாஎன்று கூறினாலும் அணைப்பை தளர்த்தி அவளை விடுவிக்க அவனிடம் நழுவி கட்டிலில் இருந்து குதித்தவள் ஆடையை சரி செய்தபடியே

போடா என் மக்கு புருஷாஎன்று அழகு காட்டியபடி கதவை நோக்கி ஓடினாள்..

 

அவளை பார்த்து மகிழ்வாக சிரித்தவன் அருகிலிருந்த தலையணையை அணைத்தவாறு உறங்காத இரவுக்காக அப்பொழுது உறங்க தொடங்கினான்.

Advertisement