அற்புதமான விடியலில் தேனீர் அருந்த இனியவன் கீழே வந்தான்.
“ஜூஜூ…ஜூஜூ வெல்லக்கட்டிக்கு பசிக்குதா?” இந்துஜாவின் கொஞ்சல் மொழி கேட்டு எட்டிப் பார்த்தான்.
ராக்கி கையை கட்டி உதட்டை பிதுக்கியவாறு பூனைக்குட்டியை கொஞ்சும் இந்துஜாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
நேற்று மாலை பசியுடன் வந்த பூனைக்குட்டிக்கு இந்துஜா பாலை கொடுக்க இன்றும் அவளை தேடி வந்து விட்டது.
ராக்கியை தூக்கிய இனியவன், “இந்து உள்ள வா” எதிர்வீட்டை பார்த்தவாறு அவன் கூற, “இவனை உள்ளே கொண்டு வரவா?” பூனையை பற்றி அவனிடம் கேட்டாள்.
“நோ..நோ…கொண்டு வரக் கூடாது. நீ வா” இனியவன் அவளது கரத்தை பற்ற, “அவனுக்கு பசிக்குதே!” பாவமாக பார்த்தாள்.
“ராக்கிக்கு பசிக்காதா?” இனியவன் கேட்க, “சித்து…” ராக்கி அவளை தூக்க சொல்லி கையை உயர்த்தினான்.
நீங்க ராக்கியை உள்ளே அழைச்சிட்டு போங்க. நான் இவனுக்கு பால் மட்டும் கொடுத்துக்கிறேன்.
“உள்ள அழைச்சிட்டு வராத…” கண்டிப்புடன் கூறி அதனை பார்த்துக் கொண்டே, “நாம உள்ளே போகலாம்” இனியவன் அவனுடன் உள்ளே சென்றான்.
“நீ இங்கேயே இரு. நான் உனக்கு பால் எடுத்துட்டு வாறேன்” அதனை அவ்விடத்தில் விட்டு குழலியிடம் சென்று பால் வாங்கி ஒரு பாத்திரத்தில் நிறைத்தாள். பிறகு அதனை பூனை முன் வைத்து அதனுடனே அமர்ந்து கொண்டாள் இந்துஜா. பூனை பாலை குடித்துக் கொண்டிருந்தது.
சஞ்சய் எதிர்வீட்டை கண்டு கேள்வியுடன் தங்கையை பார்த்தான்.
“அண்ணா…” இந்துஜா தயக்கமுடன் பிரியசகி வீட்டை பார்க்க, வெளியே வந்த குழலி சஞ்சயை கண்டு அதிர, அவன் அவரை கண்டு திகைத்தான்.
“ஏய்ய்…நீ என்னோட வீட்ல என்ன செய்ற?” சினமுடன் குழலி சத்தமிட்டார்.
ஆன்ட்டி, இவர் என்னோட அண்ணா…
உன்னோட அண்ணனா?
குழலியின் சத்தம் கேட்டு, சுவர்ணலதா, நாகேந்திரன் வெளியிலிருந்தும், விஷ்ணுவும் ராக்கியை தூக்கிக் கொண்டு இனியவனும் வந்தனர். அவர்களும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து அதிர, விஷ்ணுவும் இந்துஜாவும் புரியாமல் பார்த்தனர்.
நீ இவன் தங்கையா? குழலி முகம் மாறியது. ஆனால் பேச்சை நிறுத்தவில்லை. எந்த விதத்தில் உனக்கு இவன் அண்ணன்?”
“பெரியம்மா மகன் ஆன்ட்டி” அவரின் முகப்பாவனையில் இந்துஜாவின் சுருதி குறைந்தது.
இளக்காரமாக சிரித்த குழலி, “இராவோடு இராவாக பணத்தை எடுத்து ஓடிப் போனவன் தானடி உன் அப்பன்?” அவர் சத்தமிட, “அம்மா…” அவர் கரத்தை இறுக பற்றினான் இனியவன்.
“என்னோட அப்பா பணத்தை எடுத்துட்டு எங்கும் ஓடலை. சொல்லுங்க அண்ணா.. பெரியப்பா சொல்லுங்க” நாகேந்திரனை இழுத்தாள்.
இந்தும்மா, கேசவா இவங்க புருசனிடம் தான் வேலை பார்த்தார். இவங்க நம்ம தூரத்து சொந்தம். கேசவனின் தங்கை முறை தான் இந்தம்மா என்றார் நாகேந்திரன்.
விஷ்ணுவும் இந்துஜாவும் அதிர,
ஆமா..சொந்தம்னு நம்பி தான் எல்லாத்தையும் எம் புருசன் அவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆனால் உன் அப்பன் எங்கள் பணத்தை தூக்கிட்டு துரோகம் செய்துட்டு போயிட்டான்..
“இதுக்கு தான் இந்த சொந்தக்காரங்க வீட்ல வேலைக்கு போகாதீங்கன்னு மாமாகிட்ட தலப்பாட அடிச்சேன் இந்து. அவர் தான் என்னோட தங்கை, என்னோட மாமான்னு போனாரு. உன் அப்பாவுக்கு இவங்க கொடுக்கும் மரியாதையை பார்த்தாயா? துரோகனாம்…” விரக்தியுடன் அதே நேரம் கண்ணீருடன் ஆக்ரோசமாக கத்தினார் சுவர்ணலதா.
தெரு ஆட்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.
“துரோகனா? என்னோட தந்தை துரோகனா?” முகம் சிவக்க இந்துஜா குழலி முன் வந்து,
என்னோட தந்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? சிறு ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்க மாட்டார். அவர் உங்களது பணத்தை தூக்கிட்டு போய் துரோகம் செய்தாரா?
ஆமாடி, அந்தாளு எங்க பணம் எல்லாத்தையும் வாரி சுருட்டீட்டு போனான்ல அந்த பாவம் தான் உன்னோட அக்காவும் செத்து போயிட்டா. உன்னை ஊர் சுத்தவிட்டு உங்க அம்மா என்ன செய்றா? கேட்கவும், இந்துஜா பின்னே நகர்ந்தாள். கண்ணீர் நிற்காமல் வந்தது.
“லதா…” தன் மனைவி கரம் பற்றி அவரை ஆறுதல் படுத்தினார் நாகேந்திரன்.
தடுமாற்றமுடன் நின்ற இந்துஜாவின் கரம் பிடித்த சஞ்சய், “இந்து இன்னும் இங்க நிக்கணுமா?” சினமுடன் பல்லை கடித்தான்.
அண்ணா…இவங்க அப்பாவை..அக்காவை என்றவள் அவனை அணைத்து கதறி அழுதாள்.
“அம்மா…..” இனியவன் ராக்கியை விஷ்ணுவிடம் கொடுத்து, அவன் அம்மாவை அவன் பக்கம் திருப்பினான்.
“யவா, இவ அந்த துரோகியோட பொண்ணாம்டா. தெரியாம உள்ள விட்டுட்டோம்” அவனை நகர்த்தி, “உன்னோட அப்பன் பணத்தை ஏமாத்தினான். நீயும் அதே வேலைக்காக தான் உள்ளே வந்தாயா?” வார்த்தையை கடித்து துப்பினார்.
அம்மாஆஆஆ……..கத்தினான் இனியவன்.
“ஸ்டாப் இட்..ஸ்டாப்இட்… பேசாதீங்க..” காதை மூடிக் கொண்டு கத்தினாள் இந்துஜா.
அமைதி நிலவ, விரைந்து விஷ்ணுவிடம் வந்து ராக்கியை வெடுக்கென பிடுங்கிய இந்துஜா நகர்ந்து மூவரையும் பார்த்தாள்.
“இதுக்கு மேல வேண்டாம். இனி என்ன நடந்தாலும் இந்த வீட்டுக்குள்ள நான் வரவே மாட்டேன். செத்தாலும் வர மாட்டேன்” சீற்றமுடன் கூறி இனியவனை வெறித்து அவள் நகர, அவன் அவளது கரம் பற்றினான்.
“யவா, என்ன செய்ற? இந்த மாதிரி அடுத்தவங்க பணத்துல வாழ்ற இந்த மாதிரி…” அவர் முடிக்கவில்லை. அங்கிருந்த பூச்சட்டியை போட்டு உடைத்தான் சஞ்சய்.
இந்துஜாவை தன் பக்கம் இழுத்து, “இதுக்கு மேல என்னோட குடும்பத்தை பற்றி ஏதாவது பேசுனீங்க? மரியாத கெட்ரும். முதல்ல என்ன நடந்ததுன்னு உங்க மகன் கிட்ட கேளுங்க. அவன் சொல்வான்”.
சஞ்சய் இந்துஜாவிடம், “இந்த வீட்டின் பக்கம் இனி வர நமக்கு அவசியமிருக்காது” என்றான்.
அவளுக்கு இப்பொழுது தான் இனியவன் மீது காதல் துளிர் விட்டிருக்கும். காதல் சுமந்த மனதுடன்,
“ஆமா அண்ணா என்னோட அப்பாவை கேவலமாக பேசிய இந்த வீட்டினர் நிழல் கூட என் மீதும் நம் ராக்கி மீதும் படக் கூடாது” சொல்லி அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.
ராக்கி அவளை பார்த்து அழுது கொண்டே கீழிறங்கி, “சித்தா….” கையை நீட்டிக் கொண்டே இனியவனை நோக்கி செல்ல, அனைவரும் அதிர்ந்திருந்தனர்.
இந்துஜாவோ இனியவனை நெருங்கிய ராக்கியை இழுத்து அவன் முதுகிலே அடித்தாள். அவன் வீல்லென்று கத்த, துடிதுடித்து போனார்கள் இனியவன் குடும்பம்.
“புள்ளைய எதுக்கு அடிக்கிற?” இனியவன் ராக்கியை தூக்க வர, “பக்கத்துல்ல வந்த இந்த இடத்திலே நானும் ராக்கியும் செத்து போயிருவோம்” ஆங்காரமுடன் கத்தினாள் இந்துஜா.
நவீன் இழுக்க, இவளும் இழுத்தாள். இருவரும் கத்திக் கொண்டிருந்தனர்.
“செட் அப்” சீற்றமுடன் கத்தினான் பிரசாத். இருவரும் அதிர்ந்து அவனை பார்த்து கரத்தை இழுத்துக் கொண்டனர்.
முகம் சுளித்து தலையை சரி செய்து பிரசாத்தை பாவமாக பார்த்தாள். அவளை கண்டு முறைத்தவாறே பிரசாத் சஞ்சயிடம் சென்று அவனது சட்டையை கொத்தாக பிடித்தான் சிவந்த விழிகளுடன்.
இந்துஜாவிற்காக இரு பசங்களை தத்தெடுத்ததாக கூறியது நினைவிற்கு வந்தது. அதை எண்ணியவனுக்கு…. “என்ன இருந்தாலும் உறவில்லாத ஒருவனை இப்படி கட்டிப்பிடிப்பாளா?” சினம் எழுந்தது.
“அப்பா இறந்த பின் நீங்க தானடா எங்களுக்கு எல்லாமே! ஆனால் நீ தான இந்த ஒரு மாதமாக வேலை இருக்குன்னு சொன்ன? நவீனும் இப்பொழுது தான் சேர்ந்திருந்தான். கேரளாவிலிருந்து அடிக்கடி வர முடியாதுல்ல. அதான் அம்மாவுக்கு செய்ய வேண்டியதை சஞ்சய் அண்ணாவே செய்துட்டாங்க” அழுதாள்.
“தந்தை தாயையும் இந்து இழந்திருக்காளா?” குரல் கம்ம குழலி அதிர்ச்சியுடன் இனியவனை பார்த்தார். அவனோ சொல்ல முடியாத வேதனையில் தவிப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
வேலை இருக்கு தான். உங்களை விட எனக்கு வேலை முக்கியமா?
தெரியும் நானா. ஆனால் அப்பா இறந்த பின் எங்களுக்காக ஓய்வில்லாமல் வேலை செய்து படித்து எங்களையும் படிக்க வைத்து கஷ்டப்பட்ட. இனியாவது நிம்மதியாக உன்னோட வேலையை பார்ப்பன்னு என்று அவன் முகத்தை பார்க்க, அவன் இன்னும் இறுக்கமுடன் தான் அவளை பார்த்தான்.
நவீன் அவளை நெருங்கி, “இப்ப எப்படி அம்மாவை நாங்க பார்க்குறது? கடைசியா அவங்கள பார்க்க கூட விடாம பண்ணீட்ட” அழுதான்.
“உங்க எல்லாருக்கும் முன் அவ என்னோட தங்கைடா. நானும் பார்க்க கூட இல்லை. பெரியவங்க கிட்ட எதையும் பேசி செய்ய வேண்டாமா?” அழுது கொண்டே தன் மகனை அடித்தார்.
அய்யோ, பெரியம்மா…அம்மா சாதாரணமா சாகலை. கொன்னுட்டானுக. நீங்க திருமண வீட்டிற்கு போன இடத்தில் சொன்னால் அந்த நல்ல காரியம் தடைபடும். ஜாதகம் குறித்த தேதியில் தான அண்ணாவுக்காக திருப்பதி போனீங்க. நீங்க சென்றது நல்ல விசயத்திற்காக. இந்த மாதிரி நேரம் எப்படி சொல்வது? அடுத்த அடி சஞ்சய் மீது படாமல் இந்துஜா சுவர்ணலதா கரத்தை பற்றினாள்.
“புரியுதுடி. அவ எனக்கு அடுத்து பிறந்து வளர்ந்தவடி. உனக்கு யமுனா மாதிரிடி” அழுதார் சுவர்ணலதா.
“எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கோம்? முதல்ல இந்த வீட்ல இருந்து வெளிய வாங்க” சத்தமிட்டான் சஞ்சய்.
ரணத்தை விழுங்கிய பிரசாத், தன் காருக்கு சென்று ஒரு பத்திரத்தை எடுத்து குழலி முன் வந்தான்.
உங்கள் கணவன் இறக்க கேசவன் அங்கிள் காரணமில்லை..
கண்ணீருடன், இது எங்களது வீட்டின் பத்திரமும் உங்களது கணவரின் பறி போன சொத்துகளும் இருக்கு. எப்படியாவது உங்களுக்கு இதை திருப்பி தரணும்னு கேசவன் அங்கிள் பொறுப்பை எனக்கு கொடுத்து தான் தற்கொலை செய்து கொண்டார். உங்கள் கணவர் இறந்த அதே நாளில் தான் கேசவன் அங்கிளும் இறந்தார் என்று இந்துஜாவை பார்த்தான். கண்ணீரை கட்டுப்படுத்தி திரும்பி நின்று கொண்டாள் அவள்.
இதை என்னுடைய உழைப்பை போட்டு தான் கொடுக்கிறேன். யாருடைய பணமும் இல்லை. எங்க குடும்பத்துல யாரும் துரோகம் செய்யவில்லை. உங்க மேனேஜர் தான்…திருடி…பத்திரப்படுத்தி இருந்த அனைத்து சொத்துக்களையும் உங்க கணவரை ஏமாற்றி வாங்கி இருக்கார்.
கேசவன் அங்கிள் உங்களது தொழிலுக்கான கணக்கீட்டை மட்டும் தான் பார்த்தார். அதனால் உங்கள் கணவன் ஏமாந்தது அவருக்கு தெரியாது.
“அங்கிள் தற்கொலை உங்களால் தான். துரோகம் செய்துட்டார் துரோகம் செய்துட்டார்னு நீங்க அழுததில் ஊரார் அனைவரும் அவரையும் எங்களையும் அவதூறாக பேசினார்கள். அதனை தாங்க முடியாமல் அவரின் செல்லமகளின் என்னவாள் என்று கூட சிந்திக்காமல் தொங்கீட்டார்…” அழுது கொண்டே கூறினான் பிரசாத்.
“பாவம் செய்தோம்னு நீங்க சொன்னீங்க? அது பாவமில்லை. மற்றவர் மீதுள்ள கரிசனை உண்மையான அன்பு தான் அவர் குடும்பமே உடைந்து போய்……இப்பொழுது அந்த வீட்டில் ஜாவும் ராக்கியும் மட்டும் இருக்காங்க. இன்னும் ஏதாவது பேசி அவர்களையும் ஏதும் செய்திறாதீங்க…” கையெடுத்து கும்பிட்டான்.
“என்ன பேசுறடா? நம்ம இந்துவும் ராக்கியும் நூறு வருசம் நல்லா இருப்பாங்க” அவன் கரம் பற்றி சுவர்ணலதா வெளியே இழுத்து வந்தார்.
உடைந்து அமர்ந்தார் நெடுங்குழலி.
அம்மா, உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீங்க. அப்பா ஏமாற்றத்தில் தான் உயிரை விட்டார். கேசவன் மாமாவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. மேனேஜரை சஞ்சய் மாமா உள்ளே தள்ளினார் என்றான் இனியவன்.
“முன்னாடியே சொல்ல மாட்டியாடா?” வருத்தமுடன் இந்துஜாவை பார்த்தார். அவன் கண்கள் கலங்கியது.
பிரசாத் இந்துஜாவின் கரம் பற்ற, அவனை நகர விடாமல் நிறுத்தி அவனை ஏறிட்டாள்.
“இந்து அவளுக்கு ஏதும் பிரச்சனையா?” சஞ்சய் அவ்வீட்டை பார்த்துக் கொண்டே கேட்டான்.
பிரசாத், சுவர்ணலதா சத்தம் கேட்டு தரையில் சுருண்டு கிடந்த பிரியசகி மெதுவாக எழுந்து சன்னலுக்கு வெளியே பார்த்தாள்.
அனைத்தையும் பார்த்த அவளுக்கு எண்ணமொன்று உதிக்க, அவள் சரணுக்கு எதிராக திரட்டிய ஆதாரம் மற்றும் சில முக்கிய பொருட்களை ஓர் பையில் எடுத்தாள்.
இப்பொழுது தான் பிரசாத்திடம் பிரியசகி பற்றி இந்துஜா பேச, சஞ்சய் அவ்வீட்டை பார்த்த போது அவளறையிலிருந்து அப்பையை கீழே போட்டாள் பிரியசகி. அனைவரும் அதிர்ந்து அதை பார்த்தனர்.
“பிரியா…பிரியா…பிரியா வந்துரு. நாம போயிறலாம்” இந்துஜா அழுது கொண்டே கத்தினாள். அனைவரும் அதிர்ந்த வண்ணம் இருந்தனர்.
இவ்வளவு நேரம் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கமலா விரைந்து உள்ளே ஓட, புடவையில் முகத்தை மறைத்தாற் போல வயிற்றை பிடித்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தாள் பிரியசகி.
வாசற்படிக்கு அருகே வரவும் கமலா பிரியசகியின் கரத்தை இறுக பற்ற, தேனு ஓடி வந்து கமலாவை இழுத்து தள்ளி, “போயிரும்மா” என்றார்.
வயிற்றில் கை வைத்து அலங்கோலமாக வருபவளை இவர்கள் மட்டுமல்ல அத்தெருவினர் திகைத்து பார்த்தனர்.
வந்து கொண்டிருந்த பிரியசகி நடக்க முடியாமல் தடுமாற, சஞ்சயும் பிரசாத்தும் ஒருவாறு அவள் விழாமல் பிடித்தனர்.
“பிரியா…” மனம் பதைக்க பிரசாத் அழைக்க, “சகி…” இதயம் வெடிக்க சஞ்சய் அழைத்தான்.
அவள் முகத்தை காட்டாமல் அவர்களின் கரத்தை எடுத்து விட்டு திகைத்தவாறிருந்த சுவர்ணலதாவை அணைத்தாள்.
“ஆ..ஆ..ஆன்ட்டி…என்னால முடியல. ரொம்ப வலிக்குது..எ…என்னை உங்களோட அ..அ..ழைச்சிட்டு போயிருங்க…” கதறி அழுதாள். அவளால் அழ கூட முடியவில்லை.
“பிரியா…” அவர் அவளை நகர்த்த, அவள் நிற்க முடியாமல் மடிந்து அமர்ந்து முன்னே குனிந்திருந்தாள்.
“என்னாச்சுடி?” இந்துஜா அவளது கூந்தலை ஒதுக்க, “மை காட்….” விஷ்ணு கூறினான்.
முகமெங்கும் அடி பட்டு கண்கள் வீங்கி, உதடு கி ழிந்து இரத்தம் வந்த தடம் இருந்தது.
“என்னடி இதெல்லாம்?” அவளை உலுக்கி கதறி அழுதாள் இந்துஜா.
“பிரியாம்மா…” திகைத்து நாகேந்திரன் தம்பதியினர் தன் மகன் சஞ்சயை பார்த்தனர். அவன் முகம் இரத்த சிவப்பேறி இருந்தது.
“விச்சு நடக்கும் எல்லாத்தையும் வீடியோ எடு” இனியவன் அவனது அலைபேசியை தன் தம்பியிடம் கொடுத்து அவனறைக்கு விரைந்தான்.
கமலா சரணை அழைத்து வர, “வெளிய வந்து சீன் கிரியேட் பண்றீயாடி?” அவளை நெருங்கினான் சரண்.
“அண்ணா, இவன் பிரியா பக்கம் வரக் கூடாது. என்னை அவன் படுக்கைக்கு அழைத்து வரச் சொல்லி பிரியாவை மிரட்டி இருந்தான். அதான் கண்டவங்க வீட்ல நான் தங்க வேண்டியதா போச்சு” கத்தினாள் இந்துஜா.
ஏற்கனவே அவன் சகியை பார்த்து உறைந்த சஞ்சய்கு இந்துஜா கூறியதில் வெறியேறியது .
சரண் பிரியசகி அருகே வந்து அவளது கூந்தலை பற்ற, அவனது கையில் ஓங்கி அடித்தான் பிரசாத். சஞ்சய் சீற்றமுடன் அவனை நெருங்கி பிரித்து எடுத்தான்.
சஞ்சயை தள்ளிய இனியவன், “அடிக்காதீங்க…” பிரியசகியை கை காட்டி, “அவள நிற்க வையுங்க” என்று கூறினான்.
“இவனை…” சஞ்சய் துள்ள,
“சொல்றேன்ல இது பிரியசகியின் முடிவில்லை. இதான் அவள் வாழ்க்கையின் தொடக்கம்” கத்தினான் இனியவன்.