சூரியன் 24

இந்துஜாவை தேடி சென்ற இனியவன், இந்துஜா நவீனிடம் புலம்புவதை மறைந்திருந்து கேட்டான்.

நவீன்…நவீன்..டேய் நவீன்..பேசுறத கேளேன்டா..

அடச்சீ, அங்கிட்டு போய் பேசு. கலர்புல்லா பொண்ணுங்க வாராங்க. சைட் அடிக்க கூட விட மாட்டேங்கிற?

சைட் எப்பொழுது நாளும் நீ அடிச்சுக்கலாம். உனக்கு என்னை பார்த்தால் பாவமாக இல்லையா? நானே இனியவன் மாமாகிட்ட ஓவரா பேசிட்டேன். அவர் மட்டும் என்னை பார்த்தால் பேசாமல் போயிடுவார்..

என்னை விட்ரு தாயி. கண்டிப்பா வந்துருப்பாரு. அவர்கிட்ட நேராகவே உன்னோட காதலை சொல்லீடு..

“காதலா, ச்சீ அதெல்லாம் இல்லை” இந்துஜா கூற, புருவம் உயர்த்தி நவீன் இந்துஜாவை பார்த்தான்.

“அது மாமாவை நம்பி நான் ஓவரா பேசிட்டேன்” வருத்தமானாள்.

சரி, விடு. மாமாவை பார்த்தால் நாக்கை புடுங்குவது போல கேட்ருவோம்..

கேக்க போறீயா? டேய் லூசு. அவர் மாமா இல்லை சைக்கோ…பைத்தியம் மாதிரி என்ற இந்துஜா கண்கள் குளம் கட்டியது.

அம்மாடி, இப்ப நீ இங்க அழுறத மட்டும் சஞ்சய் மாமா பார்த்தார் நான் செத்தேன். நல்ல வேளை அவர் இன்னும் வரவில்லை..

எனக்கு கஷ்டமா இருக்கு. எவ்வளவு நம்பினோம்.

“அய்யோ யாராவது என்னை இவகிட்ட இருந்து காப்பாற்றுங்களேன். நேற்றிலிருந்து அதையே பேசி என் உயிரை வாங்குறா” கத்தினான் நவீன்.

ஏதும் அறியாதவன் போல கேசுவலாக அறைக்குள் கட்டிட்ட கையுடன் வந்தான் இனியவன்.

அண்ணா, ரொம்ப நல்ல நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ். ஆமா உங்க கைக்கு என்னாச்சு? நவீன் கேட்க,

இனியவன் பார்த்த பார்வையில், “ நான் எதுவுமே கேட்கலை. ஜாவை பார்த்துக்கோங்க..” வாசல் வரை சென்று, “அண்ணா…பார்த்து பேசுங்க இல்ல காதுல இரத்தம் வந்துரும்” சொல்லி சென்று விட்டான்.

இனியவனின் கட்டிட்ட கையை பார்த்து, “உங்க கைக்கு என்னாச்சு?” இந்துஜா கேட்க,

“சின்ன ஆக்சிடன்ட். நீ இந்த அறையில என்ன பண்ணீட்டு இருக்க?”

நான்….என்று அவனை கண்டு, அது…நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். சாரி என்றாள்.

“எதுக்கு சாரி? உங்க நல்ல மாமா வரலையா?” பல்லை கடித்தான்.

“அதான் சாரி சொல்லீட்டேன்ல” உதட்டை பிதுக்கினாள்.

அவளை நெருங்கி உதட்டை பிடித்து, “எவ்வளவு தைரியம் இருந்தால் அவனை திருமணம் செய்வேன்னு என்கிட்டவே சொல்வ? எந்த பெண்ணிடமும் நான் கெஞ்சியதில்லை. என்னை கெஞ்ச விட்டுட்ட. இனி எவனையும் திருமணம் செய்வேன்னு சொல்லுவ?” கொஞ்சியவாறு அதட்டினான்.

கண்ணீர் நிறைய, “இல்லை” தலையை ஆட்டினாள்.

“அன்று நீ பேசியதற்கு உனக்கு தண்டனை வேண்டாமா?” என்று இதழோடு இதழ் கோர்த்தான்.

பிடிப்பிற்காக இந்துஜா அவன் கரத்தை அழுத்தி பிடிக்க, ஷ்ஷ்ஆ…விலகினான்.

“இது என்னாச்சு?” அவனது கட்டை வருடினாள்.

“சும்மா இல்லாம டெம்ட் பண்றாளே!”

நகரு. சிறிய விபத்து..

“இங்க வா. உட்காரு….” இந்துஜாவை அமர வைத்து, “அம்மா மேல உனக்கு இன்னும் கோபம் போகவில்லையா?” கூர்ந்து அவளை கவனித்தான்.

கோபமெல்லாம் இல்லை. அப்பா பற்றி இனி தவறாக பேசாமல் இருந்தால் சரி..

“ம்ம்! அப்ப அடுத்த திருமணம் நமக்கு தானா?” அவன் கேட்க, “திருமணமா ஆச தோச” பழிப்பு காட்டினாள்.

“இந்து…” இனியவன் அழைக்க, இந்துஜா அவனருகே வந்தாள். அவளை சுண்டி இழுக்க, அவன் மடியில் சென்று விழுந்தாள்.

இடையோடு இந்துஜாவை அணைத்து அவன் கைபேசியிலிருந்த புகைப்படத்தை காட்டினான்.

“முத்தமிடப் போகிறானோ?” எண்ணிய இந்துஜா இன்பமாய் அதிர்ந்தாள்.

“அந்த மாமா நீங்க தானா?” அழகாய் புன்னகைத்தாள்.

“உன்னோட வெண்கழுத்தில் தாலி கட்டணும்” அவள் கழுத்தை வருடி, “ஓ.கேவா?” காதருகே நெருங்கி கேட்டான்.

இனியவனின் சூடான மூச்சுக்காற்றில் இந்துஜாவின் இமைகள் தானாக மூடியது.

ம்ம்!

அம்மாகிட்ட பேசவா?

ம்ம்! இமைகளை இந்துஜா பிரிக்கவேயில்லை.

படாரென கதவை திறந்த விஷ்ணு திகைத்து, “சாரி அண்ணா..கண்டினியூ” கண்ணடித்து நகர, விழித்து அவனிடமிருந்து எழுந்தாள். குறும்பு புன்னகையுடன் “ஒன்ஸ் அகென்” என்றான்.

“ச்சீ..போ மாமா” இந்துஜா வெளியே ஓட, “இந்து…” அழைத்தான் இனியவன்.

உன்னோட எண் என்னிடம் இல்லை என்றான். அவன் கைபேசியை அவள் எடுக்க, அழைப்பு வந்தது.

வெட்கமுடன் அவனிடம் நீட்டினாள்.

புன்னகையுடன் வாங்கிய இனியவன் முகம் மாறியது.

“ஹேய் யாருடா நீ?” இனியவன் சத்தமிட்டான்.

இந்துஜா விழித்து பார்க்க, “எனக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாது. அவன எதுக்கு தேடுறீங்க? நீங்க யாரு?” மறுபடியும் சத்தமிட, அந்த பக்கம் உள்ளவன் இனியவனை மிரட்டி வைத்து விட்டான்.

“மாமா…” அவளின் பதட்டமான குரலிலும் அவளின் மாமாவிலும் இனியவன் முகம் லேசானது.

யாரு? மிரட்டுறாங்களா?

“ஒன்றுமில்லை இந்து. அந்த சின்னப்பையன் ஹரியை தான் தேடுறானுக..” அவளை பார்த்தான்.

அவனை கொன்றுவாங்களா?

தாடையை தேய்த்து, ஹரியை சஞ்சய் மாமா தான் மறைச்சு வச்சிருக்கார். நீ அன்று மட்டும் தான பார்த்த? உனக்கு அவனை முன்பே தெரியுமா?

“இல்ல மாமா. எனக்கு தெரியாது” இந்துஜா நகர,

இந்து சொல்லு?

வீட்ல தான் இருக்கான். அண்ணா தான் யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்கான்..

வீட்லயா? இப்ப யாரும் வீட்ல இருக்க மாட்டாங்கள?

ஆமா, அவன் தனியா தான் இருப்பான். அண்ணா பாதுகாப்புக்கு ஆட்கள் போடணும்னு சொன்னான்.

ஆட்களா? அது எப்படி பாதுகாப்பாகும்? பணத்தை காட்டினால் எவனும் காட்டிக் கொடுத்துருவான்.

ஆனால் இந்துஜா பேச தொடங்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

“அண்ணா, அம்மா உன்னை வரச் சொன்னாங்க” முகத்தை வெளிப்பக்கம் திருப்பி விஷ்ணு பேச, “விச்சு…” இந்துஜா இனியவனை பார்க்க, “சொல்லாத” தலையை ஆட்டினான் இனியவன்.

இங்க தான் இருக்கியா இந்து?

“ம்ம்! ஆல் தி பெஸ்ட் இந்து” விஷ்ணு கையை கொடுக்க,

எதுக்கு?

உனக்கு அண்ணீன்னு பிரமோசன் கிடைக்கப் போகுதுல?

“சொல்லீட்டியாடா?” இனியவன் கேட்க, ஈயென பல்லை காட்டினான் விஷ்ணு.

சஞ்சய் மாமா வந்துட்டாரா?

“வந்துட்டார்” விஷ்ணு இந்துஜாவை பார்க்க, விஷ்ணுவிற்கும் கதவிற்கு இடையில் நுழைந்து இனியவனிடம் கை காட்டி ஓடி விட்டாள் இந்துஜா.

சஞ்சயும் பிரியசகியும் சேர்ந்து வருவதை பார்த்த ரதி, புன்னகை முகமாக இருவரையும் வரவேற்றாள்.

“சஞ்சய் நான் ரக்சியை பார்த்துட்டு வாரேன்” பிரியசகி ரதியை பார்க்க, “வாங்க..” ரதி அவளை அழைத்து சென்றாள்.

முதலில் சஞ்சய் தன் குடும்பத்தினரை தான் தேடினான். நவீனும் பிரசாத்தும் தனியே அமர்ந்திருக்க, பெற்றோரும் தனியே அமர்ந்திருந்தனர்.

இந்து எங்கடா?

மாமா என்று நவீன் இனியவன் இருந்த அறையை பார்க்க, “அங்க என்ன பண்றா?” சஞ்சய் அவ்வறையை நோக்கி நடக்க,

“மாமா” இடையே நின்றான் நவீன். பிரசாத்தும் அவர்களிடம் வந்தான்.

இனியவன் அண்ணா இந்துகிட்ட பேசிட்டு இருக்காங்க. அவங்களுக்கு கையில அடிபட்டிருக்கு என்றான்.

“நானும் அவனிடம் பேசணும்” சஞ்சய் செல்ல, மாமா..இடையில போகக் கூடாது..

“நவீன்..” பிரசாத் சத்தமிட, ஜாவும் அவரை காதலிக்கிறா. முதல்ல அவங்க தனியா பேசட்டும் இல்லை சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க என்றான் நவீன்.

சஞ்சய்கு தான் ஏற்கனவே தெரியுமே! நீ சொல்வதும் சரிதான். நான் பார்க்கும் போது அவனிடம் பேசிக்கிறேன்.

ரதி சஞ்சய் பின்னே ஓடி வந்து ரக்சனை இடித்தாள். மன்னிப்பு கூட கேட்காமல் சஞ்சய் பின் செல்லும் ரதியை பின் தொடர்ந்தான்.

“அண்ணா, நில்லுங்க…” சஞ்சயை மறித்து மூச்செடுத்து அவனை முறைத்தாள்.

உங்களுக்கும் பிரியாவுக்கும் பிரச்சனையா?

இல்ல ரதி.

அண்ணா, பிரியாகிட்ட மாற்றம் வந்தது உங்களுக்கு தெரியலையா? அவள் நிலையில் யார் இருந்தாலும் வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும் இருக்காது. திருமணமான உங்களுடன் இந்த அளவிற்கு இணைந்து வரவும் முடியாது.. எனக்கு தெரிந்து பிரியாவின் முழுதான நம்பிக்கை நீங்கதானு தோணுது.

என்ன?

உங்களது காதலை அவ முழுசா நம்புறா..

ம்ம்! தெரியும். ஆனால் அவளுக்கு என் மீது காதல் இல்லையே!

அண்ணா, காதல் இல்லாமலா இவ்வளவு உரிமையா உங்ககிட்ட நடந்துக்கிறாங்க?

அப்ப சகி என்னை காதலிக்கிறான்னு சொல்றீயா?

சிலர் சொல்லுவாங்க சிலர் காட்டிக்க மாட்டாங்க. பிரியா இரண்டாவது ரகம் அண்ணா..ஆல் தி பெஸ்ட் அண்ணா ரதி சஞ்சய்கு கை கொடுக்க, விரிந்த புன்னகையுடன் கை குலுக்கினான்.

அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரக்சன், இனியவன், விஷ்ணுவும் இருவரின் பேச்சை கவனித்து நின்று பின் அவர்களை நெருங்கினார்கள்.

“சஞ்சய் உங்கிட்ட ஒரு விசயம் பேசணும்” இருவரும் அவர்களை பார்த்தனர்.

பேசலாம்.

ரதி அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தவாறு நகர்ந்தாள்.

என்ன இனியவா? உன்னோட சாகசம் முடிந்ததா?

ஆமா மாமா, அவனை பிடிப்பதற்குள் ஹப்பா…ரெண்டு வருசமாகிடுச்சு சலித்துக் கொண்டான் இனியவன்.

“யார பேசுறீங்க?” ரக்சன் கேட்க, அதான் நேற்று வந்த செய்தி என்று இனியவன் கல்லூரிக்கு பிரபசராக வந்ததே கல்லூரியில் பெண்களை கொல்லும் கொலைகாரனை பிடிக்க..நேற்று வசமா சிக்கிட்டான்..

“நான் தான் அண்ணாவுக்கு கெல்ப் செய்தேன்” விஷ்ணு கூற, “அவார்டுக்கு ரெடி பண்ணலாமா இனியவா?” சஞ்சய் சிரித்தான்.

“மாமா, கேலி பண்ணாதீங்க. அண்ணா பாக்குறதே ரகசியம். இதுல எங்க அவார்டு கிடைக்கப் போகுது? எங்க கல்லூரி பெண்களும் பெண் விரிவிரையாளர்களும் தான் அண்ணா கல்லூரி  விட்டு செல்வதை எண்ணி வருந்தப் போறாங்க” கேலியுடன் நகைத்தான் விஷ்ணு.

இனியவன் அவனுக்கு வந்த மிரட்டலை கூற, நேற்று ரக்சனுக்கு வந்த மிரட்டலை அவனும் கூறினான். என்னையும் மிரட்டுனானுகடா சஞ்சய் கூற, விஷ்ணு தான் திகைத்து மூவரையும் பார்த்தான்.

“இதற்கெல்லாம் பயந்தால் புழப்பு நடக்குமா?” இனியவன் கேட்க, சஞ்சய் அவனுக சொல்ற மாதிரி யாரையும் ஏதும் செய்திருவாங்களோன்னு தான் பதட்டமா இருக்கு.

ரக்சன் கமிஷ்னர் சார் சொல்ற மாதிரி நீ இதுல தலையிட வேண்டாம்.

“என்னை மிரட்டுவாங்க நான் அமைதியா இருக்கணுமோ?”

சரி பார்த்துக்கலாம். ஆனால் எல்லார் மீதும் ஒரு கண்ணு வச்சுக்கணும். இனியவா அடுத்து உனக்கு என்ன வேலை வந்துருக்கு?

இன்னும் சொல்லவில்லை மாமா. கையை சரி செய்துட்டு வர சொன்னாங்க.  மாமா, அந்த ஹரியை வேற கேட்டு மிரட்டினாங்க. அவன் உங்க வீட்ல பத்திரமா இருப்பான்னு தோணலை.

வீட்ல இருக்கானா?

ஆமா ரக்சா…

“அண்ணா மாப்பிள்ள வீட்ல வர்றாங்க. பாட்டி உன்னை வரச் சொன்னாங்க” ரக்சனின் தங்கை  தனா சொல்லி திரும்ப, பிரசாத் அவள் முன் நின்றிருந்தான்.

இருவரும் மாறி மாறி நகர, “வெயிட்” அவன் நகர, அவனை பார்த்துக் கொண்டே அவள் சென்றாள்.

“வாங்க போகலாம்” அனைவரும் நகர, “மாமா..” சஞ்சயை பிரசாத் தனியே அழைத்து சென்று, எனக்கு முக்கிய வேலை இருக்கு. நான் கிளம்பணும்..

“மேரேஜ் முடியவும் போடா” சஞ்சய் கூற, “சரி” என்று அவர்களுடன் சென்றான். ஆனால் அவன் விழிகள் கைபேசியிலே இருந்தது.

மாப்பிள்ளையையும் அவர் வீட்டாரையும் வரவேற்றனர். மணமேடையில் மாப்பிள்ளை ஏறவும் திருமண சடங்கிற்கான பொருட்களை பெரியவர்களும் பெண்களும் அடுக்கிக் கொண்டிருந்தனர்.

சடங்குகள் தொடங்க, சந்திரசேகர் தன் மகனை காண, அவனாகவே சந்திரசேகர் அருகே வந்து நின்று கொண்டான்.

ரக்சனாவின் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறவும் அனைவரும் வாழ்த்த, ரதி ரக்சனாவை அணைத்து காதில் ஏதோ கூற ரக்சனா முகம் பிரகாசித்தது.

கண்ணை சிமிட்டி ரதி கீழே செல்ல, ரக்சன் பார்வை அவளிடம் நிலைத்தது.

சந்திரசேகர் தன் மகனை மகள் அருகே நிற்க வைத்து குடும்பமாக புகைப்படம் எடுத்தனர்.

ரக்சன் கைபேசி சத்தமிட, சஞ்சய் அழைப்பை பார்த்து அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.

ஹரி நல்லா இருக்கானா?

ம்ம்! வீட்டில் பொருட்கள் கலைந்து இருந்தது. உன்னிடம் ஒரு விசயம் சொல்ல தான் அழைத்தேன். கமலாவை பிடிச்சுட்டோம். பதிலே கூறாத கமலா வாயிலிருந்து 24 எண் மட்டும் வந்தது. கண்டிப்பாக ராஜன் ஹாஸ்பிட்டல் சம்பந்தப்பட்ட எண்ணாக தான் 24 இருக்கும். ஏதாவது உனக்கு தெரியுமா?

எண்ணா? 24 ஆ? சிந்தனையுடன், எனக்கு கொஞ்சம் நேரம் தருகிறாயா?

சரி ரக்சா, யாருக்கும் கமலாவை பிடித்தது தெரியாது. ராகவன் மாமாவும் ராக்கியை பார்க்கவே வரவில்லை. எனக்கு ஏதோ தவறாக நடந்திருக்குமோன்னு தோணுது..

நீ எங்க இருக்க?

என்னோட ஸ்டேசனில் தான்..

“நானும் வாரேன்..” ரக்சன் அழைப்பை துண்டித்து, அவனுக்கு நெருங்கிய செவிலியர் ஒருவரை அழைத்து, உங்க செவிலியர்கள் இருக்கும் அறை பற்றி கேள்விப்பட்டிருக்கேன். உங்கள் பொருட்களை வைக்க எண்கள் பயன்படுத்துவீர்களா? கேட்டான்.

ஆமா சார்..

எண் 24 பற்றி ஏதாவது தெரியுமா?

அது…சிந்தித்து…ஹா சார் சிடுமூஞ்சி சவிதாவுடையது.

எனக்கு அவங்களை பற்றிய விவரம் வேண்டுமே!

அவர் சவிதாவின் குடும்பத்தை கூற, மேலும் சில விடயங்களை கேட்டு அறிந்து கொண்டு, ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்..

சார், உங்க சிஸ்டர் மேரேஜ் நல்லபடியா முடிந்ததா?

“முடிந்தது” என்று கைபேசியை துண்டித்து, வெளியே வந்து கார்ச்சாவியை எடுத்தான்.

ரக்சா, இப்ப ரக்சி வந்துருவா. எங்க போற? தாத்தா சினமுடன் கேட்க, தாத்தா வந்துருவேன். சின்ன வேலை தான்…

“ரக்சியை அவ வீட்டிற்கு அனுப்பி விட்டு எங்கேயும் போ ரக்சா” பாட்டி கூற, “ரொம்ப முக்கியமான விசயம் பாட்டி வந்துருவேன்” அவன் சென்று விட்டான்.

சீர்சனத்திகளுடன் ரக்சனாவின் புகுந்த வீட்டிற்கு செல்ல ரக்சன் வீட்டினர் அவனுக்காக காத்திருந்தனர். வந்தவன் பைல் ஒன்றுடன் விரைந்து அறையில் வைத்து விட்டு வீட்டினரிடம் திட்டு வாங்கி காரை எடுத்தான்.

ரக்சனாவின் மாமியார் அவளிடம் நன்றாக நடந்து கொள்வதை பார்க்கவும் தான் அனைவருக்கும் நிம்மதியானது. அன்றிரவின் பின் அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினார்கள். ரக்சன் வீடு பெண் பிள்ளையில்லாமல் வெறிச்சோடி இருந்தது.

“ராக்கி…நா வந்துட்டேன். எங்க இருக்க?” பிரியசகி சத்தமிட்டு கண்கட்டை பிடித்தவாறு வாசலருகே செல்ல, இந்துஜா கை தட்டினாள்.

திரும்பி…இந்து ஷ்ஷ்..என்று வாயில் கை வைத்து அவளை அதட்டி வாசலின் அருகே இருக்கும் மேசையை தடவினாள். ராக்கி ஒளிந்து ஒளிந்து இந்துஜாவிடம் சென்றான்.

மேசையின் பின் ராக்கி இல்லாதது தெரிய வரவும், இந்து சீட் பண்ணாத..

சத்தமில்லாமல் இருந்தனர்.

காலை உதைத்து, “சத்தமில்லாமல் இருந்தா எப்படி கண்டுபிடிப்பது?” சிணுங்கினாள் பிரியசகி..

பிரியசகி முன் வந்து கைதட்டி அவள் பின்னே இந்து சென்று நிற்க, ஷூவை கழற்றி வீட்டிற்குள் வந்த சஞ்சயை பிடித்தாள் பிரியசகி.

இந்துஜா சத்தமாக சிரிக்க, “அத்த அவுட்” சிரித்தான் ராக்கி.

“அவுட்டா?” சஞ்சயின் கரத்தை தடவி கண்கட்டை அவிழ்த்தாள். சஞ்சய் உதட்டை மடித்து சிரிக்க, பிரியசகி வெட்கமுடன் அறைக்குள் சென்று விட்டாள்.

“நானு அத்த…” ராக்கி அவள் பின்னே ஓடினான்.

இந்து, ஹரி எங்க?

“அண்ணா, முதல்ல பிரியாவை கவனி. அப்புறம் ஹரியை பார்க்கலாம்” கண்சிமிட்டி சஞ்சயை கேலி செய்ய, குறுஞ்சிரிப்புடன் அவனறைக்கு சென்றான்.

பிரியசகி சஞ்சயை காண, அமர்ந்த சஞ்சய் அவளை இழுத்து மடியில் அமர வைத்து கட்டிக் கொண்டான்.

திடுக்கிட்ட பிரியசகி இதயம் வேகமாக அடிக்க, “நான் எதுவும் செய்யமாட்டேன் சகி உன் விருப்பமில்லாமல்….

ம்ம்! தலை கவிழ்ந்து கொண்டாள்.

இமைகளை இறுக மூடி திறந்து, “சகி நாம வெளியே போகலாமா?” அழைத்தான்.

ம்ம்! எங்கே?

நீயே சொல்லு..

திட்ட மாட்டீங்கள?

இல்லை..

பீச்சுக்கு போகலாமா? எல்லாரும் சேர்ந்து போகலாமா? இப்படி எனக்கு குடும்பம்னு யாரும் இருந்ததில்லை. ஆசையா இருக்கு..

“சரி போகலாம். தயாராகு” அவன் நகர, சஞ்சய் அழைத்தாள்.

குனிங்களேன்…

என்ன?

ப்ளீஸ்..

முகத்தை அவன் முன்னே கொண்டு வர, அவனது முகத்தை திருப்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு குளியலறைக்குள் ஓடினாள்.

தன்னவளின் பாசமிக்க முத்தம் மிகவும் இனித்தது. மனம் துள்ளி குதித்தது சஞ்சய்க்கு.

சிரிப்புடன் வெளியே சென்று அமர்ந்தான்.

“எம் பிள்ளைகிட்ட என்னை பேசவே விட மாட்டாங்க” புலம்பியவாறு சுவர்ணலதா காபியை எடுத்து வர, சஞ்சய் அப்படியே அமர்ந்திருந்தான்.

“சஞ்சய்” சுவர்ணலதா உலுக்க, சுயம் வந்து அம்மா…

என்னாச்சுடா?

“அம்மா..” வெட்கமுடன் எழுந்தான்.

வெட்கப்படுறானா?

பாட்டி, இருவருக்கும் கசமுசா நடந்திருக்கும். உனக்கு இது கூட புரியலையா? ஹரி கேட்க, யாருக்கு யாருடா பாட்டி? அவனிடம் சீறினார்.

நான் உங்க மகனுக்கு தத்து பையன்னா நீங்க எனக்கு பாட்டி தான?

“சஞ்சய்…” சுவர்ணலதா சிணுங்க, “என்னோட பேரான்டி அறைக்கு வாங்க” நாகேந்திரன்  அழைக்க,

விரைந்த சஞ்சய் அவர்களிடம், “நாம இப்ப பீச் போகணும். எல்லாரும் தயாராகுங்க” கூறி சஞ்சய் அவனறைக்கு செல்ல, “தாத்தா நாம பீச்ல எஞ்சாய் பண்ணலாம்” ஹரியும் சஞ்சய் பின்னே சென்றான்.

நவீன் வீட்டிற்கு வரவும் அனைவரும் கடற்கரைக்கு கிளம்பினார்கள்.