குழலி மனம் தவிக்க, லதா தன் மகன்களை ஏதும் கூறி விடுவாரோ? பயத்துடன் பார்க்க, எதிர்மாறாக நடந்தது. அனைத்தும் பிரியசகிக்கு கேட்டது.
“வாங்க…” இன்முகமுடன் இருவரையும் உபசரித்தார் சுவர்ணலதா. ஆச்சர்யமுடன் அவரை குழலி பார்க்க,
பிரியசகி தான், “நான் என்ன செய்தேன்?” வேதனையில் தவித்தாள்.
அந்நேரம் வெளியே பைக் சத்தம் கேட்டது. பைக்கை ஓட்டி வந்தது இந்துஜா..
பைக்கை நிறுத்தி வேகமாக உள்ளே நுழைந்தாள்.
ஜா…ஜா ஜா..ஜாஜா…அவள் பின்னே இரு கைகளில் பெரிய விலாங்கு மீனை தூக்கிக் கொண்டு வந்தான் நவீன்.
“டேய் மரியாதயா தள்ளியே இரு…” அவள் சொல்லிக் கொண்டு ஓடவே செய்தாள். அவனும் விடவில்லை. மீன் துள்ளி அவள் மீது படவும் வீடே அதிரும் வண்ணம் கத்தினாள்.
நவீன் சத்தமாக சிரித்தான்…
“போடா லூசு” தரையில் அமர்ந்து முகத்தை மூடி அழுதாள்.
பயந்த அனைவரும் அவளின் செயலில் புன்னகைத்தனர்.
“இந்து மீனுக்கா இவ்வளவு பயம்?” நெடுங்குழலி கேட்க, ஆன்ட்டி அது மீனில்லை. பாம்பு…
“கண்ண திறந்து பாரு” பிரசாத் சத்தமிட்டான்.
நாகேந்திரன் கோட்டின் அருகே வர, “வேண்டாம் அங்கிள். நான் பார்த்துக்கிறேன்” என்றான் பிரசாத்.
“அண்ணா…” நவீன் அழைத்து சைகை செய்ய,
“அது மீன் மாதிரியே இல்லை பாம்பு. எங்கிட்ட அதை கொண்டு வராதன்னு சொன்னேன்ல?” நெஞ்சை பிடித்து ஆஷ்வாசமான பின் குழலியை பார்த்தாள் இந்துஜா.
“வேண்டாம்டா” தன் தமையனை பார்த்து கூறினான் பிரசாத்.
மெதுவாக இந்துவின் பின்னே வந்து அம்மீனை நவீன் அவள் கழுத்தில் தொங்க விட, அலறி அதை பதட்டத்தில் தூக்கி எறிந்து ஓவென அழுதாள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இனியவன் முன் விழுந்தது விலாங்குமீன். விஷ்ணு அடக்க மாட்டாமல் சிரித்தான்.
“ஏன்டா சிரிக்கிற? இரு நாளைக்கு என்னோட ஸ்பெசல் செடியை உன்னோட பேண்டுக்குள்ள போடுறேன்” இந்துஜா கூறி நாக்கை கடித்தாள்.
இனியவன் விலாங்குமீனுடன் அவர்களிடம் வர, சிரித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை முறைத்தாள்.
திரும்பி நவீனை பார்க்க, வாயில் கை வைத்து “அச்சோ பாப்பா பயப்புடுது” கேலி செய்தான்.
“உன்னோட வந்தேன் பாரு” சிணுங்கியவாறு கூறி எழுந்து அவனை அடிக்க சென்றாள். பிரசாத் அவளை நிறுத்தினான்.
“அம்மா…ஆன்ட்டி கொடுத்த டீயை கூட நிம்மதியா குடிக்க முடியல. நீங்க போட்டு குடுங்க” மீனை நவீன் கையில் கொடுத்து இந்துஜாவை முறைத்து கை கழுவ சென்றான். அவன் வார்த்தையில் ஏதும் பேசாமல் மாடியில் இருக்கும் அவளறைக்கு சென்று விட்டாள்.
விஷ்ணு அவ்வப்போது இந்துஜா அறையை பார்க்க, “வருவா விச்சு” என்றார் குழலி.
அம்மா, உங்ககிட்ட பேசிட்டாளா?
“இல்லடா. டென்சன்ல பதில் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்” இனியவனை பார்த்தார்.
யவா, ஏன்டா அப்படி பேசிட்ட? கஷ்டப்படுவால்ல?
அவ யாரையும் கஷ்டப்படுத்தலையா? உங்க வேலையை மட்டும் பாருங்கம்மா. அவகிட்ட பேசுறேன்னு முயற்சி செய்யாதீங்க…
“அதெல்லாம் பேசிடும்டா…” அவர் தேனீரை மகன்களுக்கு கொடுத்து விட்டு வெளியே வந்தார்.
பிரியசகியை பார்த்து விட்டு வெளியே வந்து அமர்ந்தான் இனியவன்.
ப்ரெஷ்ஷாக குளித்து விட்டு டாப் பேண்டுடன் வந்தாள்.
“ராக்கி எங்க? வந்ததிலிருந்தே காணோம்?” அவளை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“அவன் மாமா கூட இருக்கான். மாமா மருத்துவமனை பக்கத்திலே வீடு புடிச்சிரு க்கார்” பிரசாத் கூறினான்.
ஓ!..
பிரியசகி இந்துஜாவிடம் நெடுங்குழலி மற்றும் அவரின் மகன்களிடம் முன் போல பேசு என அறிவுறுத்தி இருந்தாள். இந்துஜாவும் பேசும் எண்ணத்திற்கு வந்து விட்டாள். ஆனால் ஏனோ மனம் தடுத்தது.
படியில் அமர்ந்து, ம்ம்! கே ஜியிலிருந்து. அம்மா, அப்பா, யமுனாவுக்கு பின் எனக்கு பிரியா தான். அவளை விட்டு நான் பிரிந்ததில்லை. அவளும் பிரிந்ததில்லை. எங்க கோவிலுக்கு போகும் போது கூட வருசா வருசமும் அப்பா அவளையும் சேர்த்து கூட்டிட்டு வருவார்…
நான் கொஞ்சம் அதிகமா தான் பேசுவேன். சேட்டைகளும் செய்வேன். அவளும் அது போல தான். ஆனால் நிலையுணர்ந்து நடந்து கொள்வாள். எனக்கு அதெல்லாம் தெரியாது.
வாழ்க்கை என்பதே எஞ்சாய் பண்ண என்று தான் இருந்தேன் அப்பா இருக்கும் வரை. அதன் பின் எங்க குடும்பத்தை அம்மாவும் நானாவும் தான் பார்த்துட்டாங்க. அதான் அவனை என்னோட அப்பா இடத்தில் வைத்திருப்பேன். அம்மா அதன் பின் தான் நானாவிடம் நல்லவிதமா நடந்துக்கிட்டாங்க…
“இந்து…” பிரசாத் அவளை பேச விடாமல் தடுக்க, எழுந்து அவனிடம் வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“இனியவன் தவறாக எண்ணிக் கொள்வானோ?” பிரசாத் அவனை பார்த்தான். அவன் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் எவ்வித முகப்பாவனையும் காட்டவில்லை.
பிரியா மேரேஜ் பின் அவளை மறக்காமல் எல்லாம் இல்லை. எங்கே அவளை அழைத்து பேசினால் என்னோட புலம்பலை கேட்டு அவளது மகிழ்ச்சியை தொலைத்து விடுவாள்னு தான் நான் அழைக்கவேயில்லை. ஆனால் இப்படி நடக்கும்னு தெரியாது… பிரியாவிடம் அண்ணா அழைத்து செல்கிறான்னு தெரியாமல் தான் வந்தேன் கண்கலங்கினாள்.
“இந்து உனக்கு ராகவ் மாமா கால் பண்றாங்க” நவீன் கைபேசியை கொடுத்தான்.
இந்துஜா விழிகளை தாழ்த்தி அலைபேசியை வாங்கி அவளறைக்கு ஓடினாள்.
இனிய கதகதப்புடன் மறுநாள் புலர்ந்தது ரக்சனாவிற்கு.
ரதி எண்ணம் ரக்சனாவை சூழவும் பெருமூச்சுடன் எழுந்து ரதி செலக்ட் செய்த மாப்பிள்ளைகளை வரிசையாக பார்த்தாள்.
குடும்ப பின்னணியுடன் இருக்கும் ஒருவரை பார்த்து அவளது விழிகள் மலர்ந்தது. அலைபேசியில் ரதியிடம் உரையாடியவாறு கீழே வந்தாள்.
அன்று சஞ்சய் அதிகாலை தான் வீட்டிற்கு வந்தான். எப்பொழுதும் போல பிரியசகி அறை திறந்து இருந்தது. லேசாக எட்டிப் பார்த்தான். இந்து அவளருகே போடப்பட்டிருந்த படுக்கையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
பிரியசகி முகம் வியர்த்து ஏதோ போல விழித்திருந்தாள்.
கடந்து செல்ல முடியாமல் சஞ்சய் அவளருகே சென்றான்.
ரொம்ப பெயினா இருக்கா?
“ஆம்” தலையசைத்து பாத்ரூமை பார்த்தாள்.
“ரெஸ்ட் ரூம் போகணுமா?”
தயங்கி அவனையும் உறங்கிக் கொண்டிருக்கும் இந்துஜாவையும் பார்த்தான்.
இந்து இருக்கட்டும். வா… அவன் கரம் நீட்டினான்.
இருக்கட்டும் சார்..
ம்ச்ச்…வா… அவனாக அவளது கரம் பற்றி அவனது தோளில் போட்டுக் கொண்டான்..
நானே நடக்க ட்ரை பண்ணவா?
பெயினா இருக்கும் போது நடக்க வேண்டாம் என்றவன் அவள் எதிர்பாராத நேரம் அவளை தூக்க, “சார்” பயந்து சத்தமிட்டாள்.
இந்துஜா விழித்து விட, சஞ்சய் பிரியசகியை பாத்ரூமில் இறக்கி விட்டு, “கெல்ப் பண்ணு” சொல்லி அவன் நகர நேரத்தை கவனித்து,
“அண்ணா இப்பொழுது தான் வர்றீயா?” இந்துஜா கேட்க, அரை மணி நேரத்தில் மீண்டும் கிளம்பணும். சீரியஸ் கேஸ். நீ அவள பார்த்துக்கோ. பெயினா இருக்குன்னு சொன்னா. பிப்டீன் மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புகிறேன்.
சரி அண்ணா, நீ போ…இந்துஜா பிரியசகிக்கு உதவ சென்றாள்.
இவர்கள் பேசுவதை கேட்ட பிரியசகி சஞ்சயின் சின்சியாரிட்டியை பார்த்து வியந்தாள். அடுத்தடுத்து சஞ்சய் பற்றிய நல்ல செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்ணில் பட்டது…
ஒரு நாள் இந்துஜா இனியவனிடம் பேச முயன்று கொண்டிருந்தாள். அவன் விலகி விலகி சென்று கொண்டிருந்தான். இதனை கண்ட அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல, நெடுங்குழலியும் விஷ்ணுவும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.
இந்துஜா நெடுங்குழலி அறையின் வெளியிலிருந்து, “ஆன்ட்டி உங்களுக்கு உணவு எடுத்து வைக்க சொன்னாங்க” இனியவனிடம் கூறினாள்.
“உள்ள எடுத்துட்டு வா” என்றான்.
உணவை எடுத்து உள்ளே சென்று அறைக்கதவை தாழிட்டாள்.
எதுக்கு தாழ் போடுற? கதவ திற…
“முடியாது” அவனருகே வந்தாள்.
மடிக்கணினியில் அலையமைப்பு இருந்தது. இனியவன் ஹெட்போன் மாட்டிருந்தான்.
“விச்சுகிட்ட நான் மன்னிப்பு கேட்டுட்டேன்” அவனை பார்த்தாள்.
ம்ம்!!
“இன்னும் கோபமா?” இந்துஜா தன்மையுடன் பேச, ஏதும் கூறாமல் ஹெட்போனை காதில் மாட்டினான். அதை எடுத்து விட்டு அவனருகே அமர்ந்தாள்.
“கிளம்பு” சினமுடன் கூறினான்.
“நான் தான் மன்னிப்பு கேட்டேனே!”
அதுக்கு இப்ப என்ன பண்ணனும்..?
“நீங்க அன்று கூறியது…..” என அவன் காதலை காட்டியதை கேட்டாள்.
அவன் தவறாக எண்ணிக் கொண்டு, “அன்று போல் முத்தம் வேண்டுமா?” இந்துஜாவை இழுத்தான்.
விடுங்க சார்..
சாரா? மாமா சொல்லு. நான் உன்னோட மாமா தான?
விடுங்க…
“நீ இதுக்கு தான வந்த? சும்மா நடிக்காத. முத்தம் தான!” அவளை நெருங்க அவனை தள்ளி விட்டாள் இந்துஜா.
சினமுடன் அவன் முறைக்க, கண்ணீர் வடிய வாயிலை பார்த்தாள்.
“எத்தனை ஆட்கள் முன்னாடி அவமானப்படுத்தீட்டு ஒரு சாரி சொன்னால் எப்படி மன்னிக்க முடியும்?”
“ஏன் உங்க அம்மா செய்யவில்லையா? என் அப்பாவை எப்படி பேசினாங்க? வீட்டுக்குள்ள வச்சா பேசுனாங்க” வாய் துடுக்குடன் கேட்டாள்.
வேண்டாம்..நீ கிளம்பு..
நான் பேசினால் தப்பு. உங்க அம்மா பேசினால் சரியோ? நல்ல நியாயம் அவள் சொல்லும் போது அவளை இழுத்து முத்தமிட்டு, “நீ வந்த வேலை முடிஞ்சது. எனக்கு இன்ட்ரஸ்ட் இருந்தால் அழைக்கிறேன் வா…” சினத்தில் அவனும் வார்த்தையை விட்டான்.
நான் ஒன்றும் பிராஸ்டியூட் இல்லை. நீங்க விருப்பப்படவும் வருவதற்கு… கத்தி விட்டு அழுது கொண்டே தாழிட்ட கதவை திறந்து அவளறைக்கு ஓடினாள்.
“செட்…” சத்தமிட்ட இனியவன் வெளியே சென்றான்.
அழுது கொண்டே செல்லும் இந்துஜாவையும் சினமுடன் செல்லும் இனியவனையும் அறையிலிருந்த பிரியசகி கண்டு பதறி எழுந்து மெதுமெதுவாக நடந்து மாடியருகே வந்தாள்.
“இந்து…..” சத்தம் வராத குரலில் கீழிருந்து அழைத்து பார்த்தாள் பிரியசகி. இந்துவிடம் பதிலில்லை எனவும் மேலும் பதட்டமாக, வலியுடன் மாடிப்படியில் ஏறினாள். பாதியை தாண்டவும் உள்ளே சஞ்சய் வந்தான்.
கவனிக்காமல் அவன் பிரியசகி அறைப்பக்கம் செல்ல, “சார்…” வயிற்றை பிடித்துக் கொண்டு கண்ணீர் வழிய அழைத்தாள்.
மாடியில் தாங்க முடியாத வேதனையில் பிரியசகி முகத்தை காணவும் பதறி, “ஏய்…என்ன பண்ற?” விரைந்து ஏறி அவளை தாங்கினான்.
“இந்து…” இந்துஜாவின் அறையை கை காட்டினாள்.
பிரியசகியை தூக்கி மாடிப்படியிலிருந்து சஞ்சய் இறங்கிக் கொண்டிருக்கும் போது அவன் பெற்றோர் சஞ்சயை பார்த்து அதிர்ந்தனர். அவன் விழிகள் குளம் கட்டி இருந்தது.
“சஞ்சய்…” சுவர்ணலதா சத்தமிட, அவள் கரம் பற்றி அவரை முறைத்தார் நாகேந்திரன்.
அவன் என்ன செய்றான் பாருங்க…
“நீ பிரியாவை பாரு” அவர் முகத்தை பிரியசகி பக்கம் திருப்பினார்.
சஞ்சயின் உணர்வுகள் தெரியாத பிரியசகி அவன் கன்னம் தொட்டு விழிகளை மூடி திறந்து இந்து…இந்துஜா அறையை காட்டினாள். அவனோ அதை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை…
அவனுக்கு கோபம். எவ்வாறு இவ்வளவு தூரம் உதவிக்கு யாருமில்லாமல் மாடிப்படி ஏறி இருக்கிறாள்..
பிரியசகி அறைக்கு வந்த சஞ்சய் அவளை படுக்கையில் கிடத்த, அவன் கரம் பற்றி.. “இந்துவை பாருங்க” சொல்லிக் கொண்டே வலி தாங்க முடியாமல் மயங்கினாள்.
சகி..சகி…சகி…அழைத்துக் கொண்டே அவளது கன்னத்தை அவன் தட்ட, அவள் விழிக்கவில்லை. நீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்தான்..
“எல்லாரும் எதுக்கு இப்படி நிக்கிறீங்க?” விஷ்ணு தன் அண்ணனை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“யவா, என்னாச்சு?” நெடுங்குழலி தன் மகனிடம் கேட்டார்.
“அம்மா..” பிரியசகி இனியவன் பேச தொடங்கும் போது கதவை திறந்து வெளியே சினமுடன் வந்தாள் ரக்சனா..
“ரக்சி…” ரதி அவளை தடுக்க வேக நடையுடன் அவள் பின் வந்தாள். அதற்குள் ரக்சனா இந்துஜாவை அறைந்திருந்தாள்.
“ரக்சனா” சஞ்சய் சத்தமிட, இனியவன் அதிர்ந்து அவளை பார்த்தான்.
இனியவனை கண்டு, உங்களுக்கு சண்டை போட நேரம் காலமில்லை. இந்துஜா அழுவதையும் நீ கோபமாக செல்வதையும் பார்த்து பிரியசகி பயந்து இந்துஜாவை காண மாடியேறி இருக்கா. சஞ்சய் இதான் நீங்க பார்த்துக்கிற லட்சனமா? அவ வீட்ல இருந்தா எல்லாரையும் பார்த்து மனச நிலையா வச்சுப்பா. எல்லாரும் அவளுக்கு இருக்கீங்கன்னு அவளுக்கு நம்பிக்கை பிறக்கும்னு தான் நான் சம்மதித்தேன்.
“ரக்சி அமைதியா இரு” என்ற ரதி,
“அண்ணா அவங்களுக்கு பெயின் ரொம்ப அதிகமாயிடுச்சு. இப்பொழுதைக்கு தூங்க மருந்து கொடுத்து குளுக்கோஸ் போட்டிருக்கோம். இப்பொழுது தான் பெண்ணிருப்பில் ஆறிக் கொண்டிருந்தது. உங்களால பார்த்துக்க முடியாதுன்னா மருத்துவமனையிலாவது சேர்த்திடுங்க. எந்த பாதிப்பும் வரக் கூடாது. இந்த வலி கொடுமையா இருக்கும். பார்த்துக்கோங்க…
பிரியசகியை நான் எங்க வீட்ல வச்சி பார்த்துக்கிறேன் என்றாள் ரக்சனா..
“ரக்சி…” ரதி தயக்கமுடன் சஞ்சயை பார்த்தாள்.
அப்புறம் என்ன செய்றது? இங்க பெரியவங்க இருக்காங்கன்னு தான் பேர். யாரும் அவளை கவனிக்கலை. இவங்களுக்கு சண்டை போட நேரம் சரியா போகும். நானே அவளை அழைச்சிட்டு போறேன்.
“ரக்சி…” சஞ்சய் சினமுடன் அழைத்தான்.
“என்ன? உனக்கெதுக்கு கோபம் வருது? உன்னோட பெற்றோர் பார்த்துப்பாங்களா? மாட்டாங்கள… இப்ப பிரியசகி பெயரில் சொத்து இருந்தால் பார்த்துப்பாங்க. அவ தான் யாருமில்லாத அநாதையாச்சே!” அவள் சொல்லி முடிக்கும் போது அவள் கரம் தானாக கன்னத்தில் இருந்தது.
சஞ்சய் ரக்சனாவை அடித்திருந்தான். இந்துஜா அழுது கொண்டிருந்தாள். அனைவரும் அதிர்ந்திருந்தனர்.
“மாமா, பொறுமையா இருங்க” என்ற விஷ்ணு ரக்சனாவிடம் வந்தான்.
“என்னோட அம்மா தான் அவங்கள பார்த்துட்டு இருந்தாங்க. நான் தான் கோவிலுக்கு அழைத்தேன். இனி அம்மா எங்கும் வெளியே போகாமல் இவங்கள பார்த்துப்பாங்க. இங்கேயே அம்மா தங்கிக்கட்டும்” மாமா…சொல்லுங்க விஷ்ணு சஞ்சயை இடித்தான்.
ரக்சி, நீ அதிகமா பேசிட்ட..
“நானா பேசினேன்? ஏன் உங்க அம்மா பேசியது தப்பா தெரியல. நான் கூறியது தவறா?” புருவம் உயர்த்தி கேட்டாள்.
“புள்ளைய நான் பார்த்துக்கிறேன்” நெடுங்குழலி கூற, “இனியவனிடம் சென்று கோபத்தை கட்டுக்குள் வச்சுக்க பாரு” பல்லை கடித்து, “ரதி நீ இன்று எனக்காக பிரியசகியுடன் இருக்கிறாயா? அவங்க விழித்தவுடன் அவங்க நிலையை கூறு பார்க்கலாம்” ரக்சனா சஞ்சயின் பெற்றோரை முறைத்தாள்.
“அவ சொன்னதிலும் தவறில்லை” என்ற சஞ்சய் இனியவனையும் இந்துஜாவை பார்த்தான்.
“நாங்க பிரியாவை பார்க்கலாமா?” இந்துஜா கேட்டாள்.
“அவங்க ஓய்வெடுக்கட்டும்” ரதி கூறிக் கொண்டிருக்க, இவர்களின் சத்தத்தில் விழித்த ராக்கி அனைவரையும் பார்த்துக் கொண்டே பிரியசகி அறைக்கு சென்றதை யாரும் கவனிக்கவில்லை..
உறக்கத்திலிருக்கும் பிரியசகி படுக்கையில் பிஞ்சு கரம் பதித்து எக்கி அவளை பார்க்க முயன்று கொண்டிருந்தான் ராக்கி…
எட்டவில்லை எனவும் அத்த…அத்த….அவன் அழைக்க, பிரியசகி எழவில்லை…மீண்டும் மீண்டும் அழைத்தான். அவள் எழவில்லை எனவும் வீல்லென கத்தி அழத் தொடங்கினான் ராக்கி.
அவன் பிரியசகி புறம் கரம் நீட்டி அழுதான். அவன் பாட்டி இறந்த பின் இவ்வாறு தான் நிகழ்ந்திருக்கும். அதே போல நடக்கவும் பிரியசகிக்கு ஏதும் ஆகிடுச்சோ! என்று பயந்து விட்டான் ராக்கி. இந்துஜா குழலியிடமிருந்து ராக்கியை வாங்கி வெளியே சென்றாள்.