நேத்ரா, எழிலா அழைக்கும் சத்தம் கேட்டு கீழே எட்டி பார்த்தனர். கலையரசன் நின்று கொண்டிருந்தான்.
எதுக்கெடுத்தாலும் இவன் வந்துடுறானே? அதிரதன் கேட்க, ரதனுக்கு பொறாமையா? என்று நிதின் கேட்க, புன்னகையை மறைத்துக் கொண்டே கீழே சென்று “உள்ள வாடா” என்றாள் நேத்ரா.
உள்ளே வந்தவன் எல்லாரிடமும், நேற்று கோவில் திருவிழா ஆரம்பித்து விட்டது. ஒருவாரம் கலை கட்டும். மாலையில் மாவிளக்கு பூஜை இருக்கு. எல்லாரும் வந்துருங்க என்றான். அவன் பின்னே வந்த மாரியப்பன் உள்ளே வந்து, அனைவரையும் ஒருவாரம் இருந்து செல்ல சொன்னார்.
மாமா, அவர் பையன் எங்களுடன் இருக்கானே? நாங்க எப்படி கோவில் விழாவில் கலந்து கொள்வது? நேத்ரா கேட்டாள்.
அதான் இரு மாதம் முடிஞ்சிருச்சுல்லம்மா. போகலாம் என்றார் சிவநந்தினி.
அத்தை, விளக்கு பூஜை கலந்துக்க கூடாதுல்ல நேத்ரா கேட்க, அதெல்லாம் கணக்கில்லைம்மா. கலந்துக்கலாம். சாமிக்கு நாம் பொருள் வாங்கி கொடுத்து சாமி கும்பிடக் கூடாது. மத்தபடி எல்லாமே செய்யலாம் என்றார் அதிரதன் பாட்டி.
நேத்ரா புன்னகையுடன், நான் எத்தனை பேருன்னு கேட்டுட்டு சொல்றேன் என்று கலையரசனிடம் சொன்னாள். எழிலா நாளை போட்டிக்கு நீ வருவேல்ல என்று கலையரசன் கேட்க, எழிலன் அனைவரையும் பார்த்தான்.
என்ன போட்டி? கிருஷ்ணன் ஆர்வமாக கேட்டான்.
“கால்பந்து போட்டி” என்றான் எழிலன்.
எழிலா, நீ விளையாடுவாயா? ரணா கேட்க, அது என்னம்மா எழிலா? அழகா மாமான்னு கூப்பிடு என்றார் மாரியப்பன்.
மாமாவா? என்று ரணா எழிலனை பார்க்க, இவர் வேற..இவளோட கோர்த்து விட பாக்குறாரே? என மனதில் எண்ணிக் கொண்டு, “ஓ.கே நாளை விளையாடலாம்” என்றான்.
நேத்ராம்மா, “நீ விளக்கு பூஜைக்கும் சேர்த்து எத்தனை பேருன்னு சொல்லு முன்னமே வாங்கிடலாம்” என்றார் மாரியப்பன்.
சரிங்க மாமா என்றாள்.
எதுவும் வேணும்ன்னா சொல்லு. கலை வீட்ல தான் இருப்பான் என்றார். அவர் சென்றதும் நேத்ரா, எழிலன் தனியா பேசணும் என்று இருவரையும் அருகே அழைத்து கலையரசன் ஏதோ சொல்ல, அதிரதனுக்கு எறிந்தது.
நேத்ரா அதிரதனை வரச் சொல்லி அழைக்க, “அப்பாடா” என்று கீழிறங்கி வந்தான். கலை இவரிடமும் சொல்லு என்றாள்.
என்ன? அதிரதன் பார்க்க, அண்ணாவுக்கு எப்படி நேத்ரா விக்னேஷை தெரியும்? என்று அவன் கேட்க, பசங்க அனைவரும் கீழே இறங்கி வந்தனர்.
எதுக்கு இப்படி வேகமா வர்றாங்க நேத்ரா? அவன் கேட்க, நீ சொல்லு என்றாள்.
அண்ணா, விக்னேஷ் வீட்ல பேய் இருக்குன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க என்றான் அவன். என்னது பேயா? என்று அருள் சிரித்தான்.
ஏய் தம்பி, நிஜமாகவே இருக்குன்னு நினைக்கிறேன். நானும் கவனித்து இருக்கேன். திடீர் திடீர்ன்னு கத்தும் சத்தம். அழும் சத்தம் கேட்கும் என்றான் கலையரசன்.
அப்படியா? வீட்ல இருக்கிற பொருள் எல்லாமே கீழ விழும் சத்தம் கேட்குமே? கிருஷ்ணன் சொல்ல, ஆமாப்பா இந்த சத்தமும் நான் கேட்டிருக்கேன் என்றான் அவன் உண்மையான நடுக்கத்துடன்.
பசங்க எல்லாரும் சிரித்தனர். ஆனால் எழிலன், காவியன், நேத்ரா, மிதுன், அதிரதன், நிதுனுக்கு சந்தேகமாக இருந்தது.
சரி தம்பி, “பேயை நாங்க அப்புறம் மீட் பண்றோம்ன்னு சொல்லுங்க. செம்மை டயர்டா இருக்கு” என்று நிதின் சொல்லி விட்டு செல்ல, எல்லாரும் அவனை பார்த்துக் கொண்டே சென்றனர்.
சரிடா, நாம அப்புறம் பேசலாம். இவங்க எல்லாரும் இப்படி தான் என்று அவனுக்கு கையசைத்து விட்டு யோசனையுடன் படியில் ஏறினாள். அனைவரும் அவரவர் ஆடையை அறையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
இங்கிருந்து நடந்து விளக்குடன் கோவில் வரை செல்லணும். முதலில் குத்துவிளக்கு பூஜை தான் நடக்கும். ஐந்திலிருந்து ஏழு மணி வரை பின் இரவில் மாவிளக்கு பூஜை. வீட்டிற்கு வர நேரமாகும் என்றாள் நேத்ரா.
தாட்சு வேகமாக, “அக்கா நான்” என்றாள். ஆத்வி யோசனையுடன் ரொம்ப தூரமா? என கேட்டாள். “ஆம்” என்று நேத்ரா தலையசைக்க, சிவநந்தினியும் ரேவதியும் உள்ளே வந்தனர்.
ரொம்ப தூரமா இருக்குமே? அண்ணி நான் பக்கத்து தெரு வரை கூட நடக்க மாட்டேன். சரி காவியனுக்காக தானே? நானும் வாரேன் என்றாள் ரணா.
“சரிம்மா, எல்லாரும் வாரோம்ன்னு சொல்லீடு” என்று சிவநந்தினியும் ரேவதியும் வெளியேற, பாட்டி நின்று கொண்டிருந்தார்.
என்னாச்சு? பாட்டி கேட்க, அத்தை “வெற்றி” என்று பாட்டியும் மருமகள்களும் கைகளை குலுக்கி மகிழ, அவர்கள் தோளில் கை பட்டு பயந்து விலகினர்.
என்ன செய்றீங்க? என்று அதிரதனும் அதீபனும் நின்றனர். காவியனும் இவர்களை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.
இல்லையே..ஒன்றுமில்லையே..என்று மூவரும் ஒருவாறு சிரித்துக் கொண்டு அறைக்கு கையை பிடித்துக் கொண்டு ஓடினர்.
என்னாச்சு மாமா? எல்லாரும் சந்தோசமா தெரியுறாங்க? என்று அதீபனிடம் காவியன் கேட்க, காவியா பொண்ணுங்க அறையிலிருந்து தான வந்தாங்க. “வாங்க பார்ப்போம்” என்று மெதுவாக அறையை திறந்தனர்.
ஆத்வி நடுவே அமர்ந்திருக்க ரணாவும் தாட்சுவும் அவளை ஒட்டி படுக்கையில் அமர்ந்து கொண்டு காலை ஆட்டிக் கொண்டு போனில் வீட்டிற்கும் கோவிலுக்கும் எத்தனை கிலோமீட்டர் என பார்த்துக் கொண்டிருந்தனர்.
அக்கா, எந்த கோவில் இடம் சொல்லுங்க என்றாள் தாட்சாயிணி. முத்தாலம்மன் கோவில், பரங்கியநாதன் தெரு என்றாள். அவர்கள் சோதிக்க, ரணா தலையை கவிழ்ந்து “போச்சுடா நான் காலி”. ஐந்து கிலோமீட்டர் காட்டுது.
தர்சுவை கொஞ்சிக் கொண்டிருந்த நேத்ரா நிமிர்ந்து புன்னகையுடன் அவர்களை பார்த்து, காலணி அணைய முடியாது ரணா. ஐந்து கிலோமீட்டர் வெளிய தான் கோவிலை ஒரு சுற்று சுற்றி தான் முடிக்கவே முடியும் என்றாள் நேத்ரா.
அண்ணி கார்ல போகலாமே?
எதுக்காக நாம இதை செய்றோமோ? அதே நடக்காமல் போயிடுமே? என்றாள் நேத்ரா.
நடந்து ஐந்து கிலோமீட்டர் போறதே கஷ்டம். இதுல கோவிலுக்குள்ளுமா? ஆத்விகா மலைத்து கேட்டாள்.
அம்மாவும் அத்தையும் எப்படி அவ்வளவு தூரம் நடப்பாங்க? ரணா கேட்க, அம்மா நடப்பாங்க ரணா. அவங்க பாதுகாப்புக்காக தான் அப்பா கார்ல போக சொல்வார். அவங்க எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போவாங்க. அதான் அம்மா அப்பா காதலை பார்த்தேல்ல. “செம்ம ஸ்ட்ராங்” என்றாள் ஆத்விகா.
இப்ப என்ன செய்றது? என்று ரணா படுக்கை மீது ஏறி நின்றாள். பின் தர்சுகுட்டி நீ ப்ரீயா இருக்கும் போது உன்னிடம் தருவேனாம். நீ அத்தைக்காகவும் மாமாக்காகவும் கொண்டு வருவியா? ரணா கேட்க, அவன் அழுதான்.
கேட்க தானடா செய்தேன். அழுற? ரணா கேட்க, “ரணா உனக்கு விருப்பமிருந்தா மட்டும் கலந்துக்கோ. வாழ்க்கையில் பெயின் இல்லாமல் எதுவும் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது” என்றாள் நேத்ரா சீரியசாக.
அக்கா, “ஐ அம் ரெடி” என்றாள் தாட்சாயிணி. அண்ணி நீங்க சரியா சொன்னீங்க? என்னோட காதலும் வலிக்கு பின் தான் கிடைத்தது. அதை என்றும் தவற விட மாட்டேன் என்று ஆத்விகா கூறினாள்.
நீங்க ஏற்கனவே கலந்திருப்பீங்கல்ல அண்ணி? ரணா கேட்க, ம்ம்..எந்த வருடமும் தவறவிட்டதில்லை. பள்ளி, கல்லூரிக்கு கூட விடுப்பு எடுத்துட்டு வந்துருவோம்.
பள்ளியிலுமா?
படிப்பிற்காகவும் வேண்டிக்கலாம் என்றாள்.
சரி அண்ணி. போகலாம் என்றாள் ரணா.
இப்ப ஓய்வெடுத்துக்கோங்க. மதியம் சாப்பிட்ட பின் தயாராகலாம். அப்புறம் ஆடையை எடுத்து வச்சிட்டு ஓய்வெடுங்க என்றாள் நேத்ரா.
அண்ணி, எங்க போறீங்க? ஆத்விகா கேட்க, மதியம் சாப்பிட்ட தயார் செய்ய வேண்டமா?
ம்மா..ஊ..ஊ..என்று சத்தமிட, என்னடா கண்ணா உனக்கு இப்பவே பசிக்குதா? என்று தர்ஷன் வாயில் வைத்த கையை எடுத்து விட்டாள் நேத்ரா.
செழியன் அறையிலிருந்து வர, மூவரும் ஒளிந்து கொண்டனர். நேத்ரா அறைக்கு வந்த செழியனை பார்த்து பொண்ணுங்க எழுந்தனர்.
என்னாச்சு மாமா? நேத்ரா கேட்க, அம்மா மதியம் சாப்பிட கோவிலுக்கு வர சொல்லி இருக்காங்க. போகலாம்ல்லம்மா..அவர் கேட்க, மாமா அத்தையிடமும் மத்தவங்களிடமும் கேளுங்க. அவங்களுக்கு பழக்கமிருக்காதுல்ல. நான் வீட்ல தயார் செய்றேன் மாமா என்றாள்.
இல்லம்மா. மாலை கோவிலுக்கு போகணும்ல்ல. நீ ஓய்வெடும்மா. உங்க எல்லாருக்கும் ஓ.கே தான? என்று அவர் கேட்க, அப்பா கோவில்லன்னா எப்படி கொடுப்பாங்க. லயன்ல்ல நிக்கணுமா? ரணா கேட்க, இல்லம்மா. நமக்கு தனி தான் என்றார். அவர்கள் ஒத்துக்கொள்ள தன் மனைவி அறைக்கு சென்று பேச, ரேவதி புன்னகையுடன் வெளியே வந்தார்.
சற்று நேரம் செழியன் பேசி விட்டு செல்ல, ரவிக்குமாரும் தன் மனைவியிடம் பேசி விட்டு சென்றார்.
இவங்க மட்டும் அம்மா அறைக்கு வர்றாங்க? என்று அதிரதன் கேட்க, அவங்களுக்கு லைசன்ஸ் இருக்கு என்று சத்தம் கேட்டு மூவரும் திரும்பி பார்த்தனர். நேத்ரா சொல்ல, ஆமா..எனக்கு லைசன்ஸ் கிடைச்சிருமே? என்றான் அதிரதன்.
கிடைக்கும்..கிடைக்கும்..போங்க. சுத்தாம எல்லாரும் ஓய்வெடுங்க. உங்களுக்கும் வேலை இருக்கும் என்றாள்.
“போங்கடா” என்று அதிரதன் சொல்லிக் கொண்டே நின்றான். அதீபனும் காவியனும் அவனை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர்.
உங்களுக்கென்ன? போகலையா? என்று கேட்டாள் நேத்ரா.
வினு, எனக்கு சின்னதா கிஸ் கொடேன். தூங்கவே முடியலை. நீ பூஸ்ட் கொடு. நான் தூங்கிடுவேன் என்றான் அதிரதன்.
அச்சோ, அத்தை வாராங்க என்று வெளியே ஓடி விட்டாள். அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டே அதிரதன் சென்றான்.
ஹேய், எழுந்திருங்க என்று நேத்ரா அனைவரையும் எழுப்ப, “அண்ணி இன்னும் கொஞ்ச நேரம்” என்றாள் ரணா.
சாப்பிட போகணும்மா. நானும் தர்ஷனும் தயாராகிட்டோம். நீங்க தயாராகிட்டு வாங்க என்று நேத்ரா சொல்ல, அவர்களும் சற்று நேரத்தில் வந்தனர்.
கோவிலுக்கு வெளியே பெரிய குளம் ஒன்று இருந்தது. அவர்கள் சாப்பிட தனியே அமைந்திருந்த கோவில் மண்டத்தில் அழைத்து சென்றனர். மலைகளும் அழகான மரங்களும் இருந்தது. சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டு ஹாலில் அமர்ந்து அரட்டையை தொடர்ந்தனர்.
எல்லாரும் குளித்து தயாராகுங்க. ஒரு மணி நேரத்தில் கிளம்பணும் என்று சிவநந்தினி சொல்ல, அனைவரும் தயாராக சென்றனர்.
முதலில் பசங்க தயாராகி வர, முதலில் ரணா பட்டாலான பாவாடை தாவணியில் வந்தாள். காவியன் அவளை புன்னகையுடன் பார்த்தான். பின் ஆத்விகாவும் தாட்சாயிணியும் பட்டுபுடவையில் வந்தார்கள். நிதினும் அதீபனும் கண்கள் விரிய அவர்களை பார்த்தனர்.
வினு எங்கே? நேராகும்மாம்மா என்று சிவநந்தினி கேட்க, குட்டிப்பையனையும் தயார் செய்யணும்ல்ல வந்துருவாங்க என்றாள் ஆத்விகா. நேத்ரா தர்ஷனுடன் கீழிறங்கி வந்தாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.
கிளம்பலாமா? என்று அவள் கேட்க, எல்லாரும் பொண்ணுங்க எல்லாரையும் பார்த்தனர். ஆடை அணிகலங்கள் அவர்கள் அழகை பறைசாற்றியது.
வாங்க கிளம்பலாம் என்று செழியன் சொல்ல, அதிரதன் நேத்ராவிடம் வந்து அவளை பார்த்து, “ப்யூட்டிபுல்” என்றான்.
ஓ..அப்படியா? என்று நேத்ரா சாதாரணமாக சொன்னாலும் மனதினுள் அவ்வளவு சந்தோசம்.
வினும்மா, “பையனை கொடு” என்று சிவநந்தினி தர்ஷனை வாங்கி சென்றார். மற்றவர்களும் பின்னே செல்ல, எல்லாரும் நகர்ந்த பின் ரணா கிளம்பினாள்.
எதுக்கு தனியா இருக்க? உன்னோட அம்மா கூட போக வேண்டியது தானே! அம்மாவா? ஆத்தாடி அவங்க ரொம்ப டேஞ்சர். அதுக்கு இவனுகளே பரவாயில்லை என்று அவள் சொல்ல, எழிலன் சிரித்துக் கொண்டு அவளுடன் வந்தான். இதை காரிலிருந்து பார்த்த காவியனுக்கு சினம் எழுந்தது.
அட, இந்த ஜோடி நல்லா இருக்காங்களே? என்று அருள் சொல்லிக் கொண்டே காவியனை பார்த்தான்.
பசங்களா, “அமைதியா வாங்க” என்று யசோதா தன் மகனை பார்த்துக் கொண்டே பாட்டியிடம் கண்ணை காட்ட, இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். எழிலனும் ரணாவும் அதே காரில் ஏறினாள்.
டேய், தள்ளி உட்காருடா ரணா எழிலனை சத்தமிட, இதுக்கு மேல தள்ளணும்ன்னா நான் வெளிய தான் போகணும் என்றான் எழிலன். போடா…என்று ரணா அவனை தள்ள, எப்பப்பாரு சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கிறா என்று முணுமுணுத்தான் காவியன்.
எதுக்குடி என் புள்ளய தள்ளுற? யசோதா சத்தம் கொடுக்க, அப்ப உன் புள்ளைய மடியில வச்சு கொஞ்சு. நானே செம்ம கடுப்புல இருக்கேன். நீ வேற..
நீ இறங்குடி. நீ முன்னாடி வா. நான் அவனோட அமர்ந்து கொள்கிறேன் என்றார் யசோதா.
என்னது? எழிலன் கேட்க, நீ கார்ல வரப் போறியா? நடந்து வரப் போறியா? எழிலனிடம் யசோதா கேட்க, வாங்க என்று ரணாவை முறைத்தான் எழிலன். அவளே மெலிதாக இருப்பாள். அவளுக்கே இடம் பத்தலை. யசோவிற்கு எப்படி பத்தும்?
இருவரும் இடம் மாற ரணா எல்லாரையும் பார்த்து விட்டு, “உள்ள தள்ளி உட்காருடா” என்று காவியனிடம் சொல்ல, என் பக்கத்திலா உட்காரப் போறா? என்று அவனுக்கு மனம் அடித்துக் கொண்டான். காவியா கட்டுப்படுத்தி வைக்க விட மாட்டாங்க போலவே? என்று அவன் மனம் அவனிடம் சொன்னது.
ரணா அவனருகே அமர்ந்து, ஹே..காவியா இங்க பாரு. ஸ்மைல் பண்ணு என்று செல்ஃபி எடுக்க, அவன் முறைத்தான்.
நம்ம ப்ரெண்ட்ஸ்க்கு அனுப்ப தான் எடுத்தேன். இதுக்கெல்லாம் முறைக்கிற? பாரு யசோ ஒரு புகைப்படத்துக்கே முறைக்கிறான் என்று ரணா சொல்ல, அவளால் புகைப்படம் எடுக்காமல் இருக்க முடியாது என்று அவர் சொல்ல, காவியன் அவன் அம்மாவை பார்த்தான்.
யசோ விடு. சில பேர் இப்படி தான் இருப்பாங்க. “நீங்களும் இவனை போல் இருக்க மாட்டீங்கல்ல. உங்களுக்கு சிரிக்க தெரியும்ல்ல?” ரணா காவியன் நண்பர்களிடம் கேட்க, ரணா நீ தாராளமாக எடு. எப்படி போஸ் கொடுக்கிறோம்ன்னு பாரு என்று கிருஷ்ணன் சொல்ல, காவியன் அவனை முறைத்தான்.
ரணா எழுந்து, ஹே காரை ஒன் செகண்ட் ஸ்டாப் பண்ணு என்று சுபிர்தனிடம் சொல்ல, அவன் சட்டென பிரேக்கை அழுத்தினான். நின்று கொண்டிருந்த ரணா காவியன் மடியிலே விழுந்தாள். அவளை பிடிக்கிறேன் என்று காவியன் அவள் இடையில் கை வைத்து விட்டான். அவள் காரில் முட்டி அதை தேய்க்க, அவன் கை படவும் பதட்டமானாள். அவளை நகர்த்தி விட்டு கையை எடுத்தான். அவள் நகர்ந்து அமர்ந்து அமைதியானாள். அனைவரும் இருவரையும் பார்த்தனர்.
“எங்க மூஞ்சியில ஏதாவது இருக்கா? காரை எடு” என்று சுபிர்தனிடம் சத்தமிட்டான் காவியன். அனைவரும் மனதில் சிரித்துக் கொண்டிருக்க, ரணா புகைப்படம் எடுக்கணுமே? இந்த பக்கம் வா என்று கிருஷ்ணன் அழைக்க, அவனை முறைத்த காவியன், போய் சேரும் வரை அமைதியா வர்ற? எழுந்தேன்னா அவ்வளவு தான்.
எதுக்குடா? சுபிர்தன் கேட்க, நிறுத்துன்னு சொன்னேன் என்று அவன் சத்தமிட, ரணா பயந்து விட்டாள்.
டேய், எதுக்குடா இப்படி கோபப்படுற? தெரியாமல் தான நடந்தது? யசோதா கேட்க, சுபிர்தன் காரை நிறுத்தினான். பாட்டி இறங்குங்க என்று அவரை அவன் அமர்ந்த இடத்தில் அனுப்பி விட்டு, சுபிர்தன் அருகே முன் சீட்டில் மிதுனுடன் அமர்ந்து கொண்டான் காவியன். ரணா கண்ணீர் பாட்டி கையில் பட்டது. அவர் அவள் கையை பற்றிக் கொண்டார்.
மிதுன் காவியனிடம் சைகை செய்ய, அவன் திரும்பாமலே அவளை கவனித்தான். அதிகமாக சினம் கொண்டு விட்டோமோ? என யோசித்தான்.
இறங்கும் இடம் வர அனைவரும் இறங்கினர். ரணா இறங்கிய உடனே ஓடிச் சென்று அதிரதன் கையை பிடித்துக் கொண்டாள். அவளை பார்த்த அதிரதன் பின்னே திரும்பி பார்த்தான். பசங்க எல்லாரும் அவர்கள் முன்னே ரணாவை பார்த்துக் கொண்டே நடக்கும் காவியனை கை காட்டினர்.
ஏதோ நடந்திருக்கு என புரிந்து கொண்ட அதிரதன், நேத்ராவிடமிருந்து தர்ஷனை வாங்கி ரணாவிடம் கொடுக்க, நேத்ரா அவனை கேள்வியுடன் நோக்கினாள். அவன் காவியனை கண்காட்ட, அப்பொழுதும் காவியன் ரணாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைவரும் கோவிலுக்குள் செல்ல, யசோதா ரணாவிடமிருந்து தர்ஷனை வாங்கி விட்டு, ரணா இப்படியா அமைதியா இருப்ப? நாம உன்னோட அம்மாவுக்கு பிடித்த கோவிலுக்கு அதுவும் அவங்க வளர்ந்த இடம் இது. நீ தெரிஞ்சுக்க வேண்டாமா? போ..நந்தினி அண்ணியுடம் போ என்றார்.
யசோ, அம்மாவிடம் மாட்டி விட்ருவ போல? அவள் கேட்க, சும்மா சென்று இந்த கோவிலை பற்றி விசாரி. எல்லா கோவிலுக்கும் கதை இருக்கும் என்று அவளை அனுப்பி விட்டு தன் மகனை பார்த்தார். அவன் நண்பர்கள் அவனை முறைத்து கொண்டிருந்தனர்.
எழிலன் காவியனிடம், ஏற்கனவே கடுப்புல இருந்தா. நீ அவ மைண்ட மொத்தமா ஸ்பாயில் பண்ணிட்ட. அங்க பாரு என்று அவன் சொல்ல, ரணாவால் அவள் அம்மாவிடம் பேச முடியாமல் சிவநந்தினியை சுற்றி சுற்றி வந்தாள்.
என்ன பண்றா? என்று அதீபன் அவளை உற்றுப்பார்க்க, அவள் கண்ணீர் தெரிந்தது.
இதுக்கு மேல முடியாதுப்பா என்று ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வந்து, யுவனை பிடித்தாள். ஆனால் அவனுடனும் பேச முடியாமல் தவித்தாள் ரணா.
ரணா உனக்கு என்னாச்சு? முதல்ல சாமி கும்பிடு பார்த்துக்கலாம் அவள் மனது சொல்ல, கருவறை அருகே வந்து அம்மனை பார்த்தனர். அம்மனை நேரிலே பார்ப்பது போல் அலங்கரித்து இருந்தனர். மணக்க மணக்க சந்தனத்தை முகத்தில் பூசி இருந்தனர். அவரின் காட்சி மனதுக்கு நிறைவானது.
செழியனும் தன் மகளை கவனித்து இருப்பார். பிரணாம்மா முன்னாடி வாங்க என்று அழைத்தார். அவள் முன்னே செல்ல, இந்த கோவிலில் தான் உன் அம்மாவை முதலாக சந்தித்தேன் என்றார்.
அப்பா, நிஜமாகவா? என்று மெதுவாக அவள் கேட்க, ம்ம்..ஆமாடா என்றார் அவர். அதற்குள் பூஜை ஆரம்பமாக அதிரதன் நேத்ரா என அனைவரும் முன்வந்து நின்றனர். ரணா செழியனை பார்க்க, முடிந்தவுடன் சொல்கிறேன் என்று சைகை செய்தார். அப்பா மகளை அனைவரும் பார்த்து விட்டு, கடவுளை தொழுது விட்டு நகர்ந்தனர்.
குத்துவிளக்கு பூஜை ஆரம்பமாக, அனைவரும் குத்துவிளக்குடன் அமர்ந்தனர்.
“ரணா எனக்கு இந்த பூஜை செய்ய ரொம்ப ஆசை. அம்மா ஒருமுறை கூட விட்டதில்லை” என்றாள் தாட்சாயிணி. கடவுளின் முன் அமர்ந்து விளக்கேற்றி மஞ்சள் கயிற்றை விளக்கில் கட்ட, அம்மா கட்டி விடுங்களேன் என்றாள் ரணா.
அவர் சொல்லித் தர எல்லாவற்றையும் செய்தாள். அடியேய், “முதல்ல விளக்கேத்துடி” என்றார் சிவநந்தினி. அதுகூட ரணாவிற்கு பழக்கமில்லை.. ஓரிடத்தில் அமர்ந்து பசங்க எல்லாரும் அவர்களை பார்க்க, அந்த விளக்கொலியில் காவியன் கண்ணுக்கு ரணா மிகவும் அழகாக தெரிந்தாள். அவன் கண்கொட்டாது அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னடா சைட் அடிக்கிறியா? என்று சொன்னவாறே காவியன் தோளில் கையை போட்டான் கிருஷ்ணன். காவியன் ஏதும் சொல்லாமல் அவனை பார்த்தான்.
ஏன்டா, தேவையில்லாமல் பேசி அவள காயப்படுத்துற? அவ அழுறான்னு தெரியுதுல்ல சமாதானப்படுத்த உனக்கு தோணவேயில்லையாடா? கிருஷ்ணன் கேட்க, அப்பொழுதும் அமைதியாக இருந்தான்.
முதல்ல நீ காதலை சொல்லாமல் இருக்க காரணம் இருந்தது. ஆனால் இப்ப நீ அவளுக்கு முறைப்பையன்டா. அவளை காதலிக்கும் மொத்த உரிமையும் உனக்கு இருக்கு. சீக்கிரம் சொல்லிடுடா. அவளோட க்யூட்டா செயல் எல்லாருக்குமே பிடிக்கும். சுபிர்தனுக்கு கூட அவளை பிடித்து இருந்தது. வேறு யாரும் அவள் மனதில் வரும் படி செஞ்சுடாதடா. மிஸ் பண்ணிட்டு வருத்தப்பட்டா பிரயோஜனமேயில்லைடா காவியா என்று கிருஷ்ணன் சீரியசாக அறிவுரை கூறினான்.
அம்மனுக்கான பாடலை வழிநடத்துபவர் சொல்ல சொல்ல அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தனர். ரணா முகம் சோகமாக இருந்தது. விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வலம் வந்து பூஜையை முடித்தனர்.
பின் குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து இருக்க, பக்கத்து ஊர்க்கார பெரிய ஆட்கள், பூசாரி வகையினர் அனைவரும் தாமாக வந்து செழியனிடம் பேச, அவர் தன் குடும்பத்தில் அனைவரையும் அறிமுகப்படுத்து விட்டு, காவியனுடைய நண்பர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் குடும்பத்துடன் சேர்ந்திருக்க அழைப்பார் என்றே நினைக்காத அவர்களுக்கு செழியன் மீது தனி மரியாதை உண்டானது.
குடும்பத்தினர் தனியாக அமர்ந்திருக்க செழியன், அதிரதன், நிதின் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். பூஜை முடிந்து வந்த ரணாவின் கருப்பு நிற சிறிய பொட்டின் கீழே அழகான சிவப்பு நிற குங்குமம் அவளை மேலும் அழகாக காட்டியது.
யசோதாவிற்கும் பாட்டிக்கு காவியன் பதிலளித்துக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் என்னவோ ரணாவை தான் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் தன் தந்தை எப்பொழுது வருவார். அவரிடம் காதல் கதையை கேட்கலாம் என ஆர்வமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
செழியன் ரணாவை பார்க்க, நேரமாகுதுப்பா..என்று உதட்டை அசைத்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த காவியன் அவள் உதட்டை பார்த்துக் கொண்டிருக்க, அவன் முதுகில் தட்டுவதை உணர்ந்து காவியன் யாரென பார்த்தான்.
சிவநந்தினி காவியனுக்கு விபூதி இட்டு விட்டு அவனருகே அமர்ந்தார். அவன் அவரை பார்க்க, ஏதாவது வேணுமாய்யா? என்று கேட்டார். அவன் வேண்டாம் என்று தலையசைத்து ரணாவை பார்த்தான். அவள் அங்கே இல்லை. அவன் கண்கள் அலை பாய்ந்தது. சிவநந்தினி காவியனை புன்னகையுடன் பார்த்து, “ரணா அவள் அப்பாவோட இருக்கா” என்று கையை காட்ட, இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ரணா விடம் செழியன் தன் மனைவி சிவநந்தினியை சந்தித்து காதலித்த இடத்தை காட்டினார். தர்ஷனிடம் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க நேத்ரா காவியனிடம் வந்து அமர்ந்தாள். அவன் அவளை பார்த்து விட்டு போனை பார்த்தான்.
அதை பிடுங்கி வைத்துக் கொண்டு, ரணாகிட்ட கோபப்பட்டியா? என்று நேத்ரா கேட்க, நிதினும் அவர்களிடம் வந்து அமர்ந்தான்.
தெரியல. திடீர்ன்னு கோபம் வந்துருச்சு. திட்டிட்டேன் என்றான்.
இங்க பாரு காவியா, இங்க இருக்குற எல்லாருக்கும் உங்க காதல் தெரியும் என்றான் நிதின்.
எங்களா? காவியன் கேட்க, ஆமா உனக்கும் அவளை பிடிக்கும்ன்னு எல்லாருக்குமே தெரியும். நீ மறைக்க நினைத்தாலும் உன் பார்வை தெளிவாக காட்டி விட்டது.
கோபத்தையும், தேவையில்லாத எண்ணங்களையும் தள்ளி வைத்து விட்டு முதல்ல காதலை சொல்லு. அவ ரொம்ப நாள் பொறுமையா இருப்பான்னு தோணலை என்று நிதின் சொல்ல, “ஆமா உன் விசயத்துல தான் பொறுமையா இருக்கா” என்று சொல்லிக் கொண்டே ஆத்விகா நேத்ரா அருகே வந்து அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் செழியனும் ரணாவும் வர சாப்பிட்டு விட்டு மாவிளக்கு பூஜைக்கு தயாரானார்கள். மணி ஒன்பதாக ஆரம்பிக்கப்பட்டது பூஜை. ஊர் எல்லை பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் கோவிலுக்கு விளக்குடன் பெண்கள் நடக்க, ஆண்களும் அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சிலரும் முன்னே சிலரும் இருந்தனர்.
பொண்ணுங்களா விளக்கு அணையாமல் அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லணும். வேறெங்கும் கவனம் இல்லாமல் நடங்க என்று ஒருவர் சொல்ல, இது வேறயா? என்று ரணா சலிப்புடன் ஆரம்பித்தாலும் மகிழ்வுடன் தன் அக்கா, அம்மா, அண்ணி, அத்தையுடன் சென்றாள்.
முடித்து கோவிலுக்குள் செல்ல பன்னிரண்டானது. சரியான நேரத்தில் வந்துட்டோம் என்று மற்றவர்கள் பேசிக் கொள்ள, விளக்கை கோவிலுக்குள் வைத்து விட்டு ரணா வெளியே வந்து காலை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
குட்டிம்மாவுக்கு கால் வலிக்குதா? அதிரதன் ரணாவிடம் கேட்க, நான் நினைத்த அளவு இல்லை அண்ணா. பரவாயில்லை. நான் கூட உன்னை உதவிக்கு கூப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது தேவைப்படலை என்றாள்.
நீ இரு. நான் வினுவை பார்த்துட்டு வாரேன் என்று அவன் எழுந்து சென்றான். ரணா இயற்கை காற்றை சுவாசித்தவாரே வெளியே தனியாக வந்து விட்டாள். இருட்டு பகுதியில் கூட்டமாக சிலர் அமர்ந்துருக்க, என்ன செய்றீங்க? என்று அவர்களிடம் கேட்டாள்.
சாரோட பொண்ணா? நாங்க கள் குடிக்கிறோம்மா? என்றார் ஒருவர். கள்ளா? என்னது? எப்படி இருக்கும் ரணா கேட்க, “இந்தா குடிச்சு பாரு” என்று ரணாவிடம் ஓர் பானையை கொடுத்தான். அவள் குடித்து விட்டு தள்ளாட அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பல்லை காட்டினார்கள்.
கோவிலில் அனைவரும் ரணாவை தேட எழிலன், காவியன், காவியன் நண்பர்களும் எல்லாரும் வெளியே வந்து அவளை தேடினர். காவியன் சரியாக ரணாவை பார்த்தான். அவளை சுற்றி இருந்தவர்களை பார்த்து பதறி வந்தான்.
ஹே, ரணா என்ன பண்ற? காவியன் சத்தமிட, அவர்களில் ஒருவன் ரணாவை பிடித்துக் கொண்டிருந்தான். அவள் போதையில் இருந்தாள். அவனை தள்ளி விட்டு ரணாவை காவியன் அவன் பக்கம் இழுத்தான்.
தம்பி, அந்த பொண்ணு அவளா தான் வந்தா. விட்டு போங்க. ஏதும் ஆகாமல் பார்த்துக்கிறோம் என்று போதையில் ஒருவன் ரணாவை இழுக்க, காவியன் ரணாவை பிடித்து அவன் பக்கம் இழுத்தான்.
இந்த கோவில் எதுக்கு இப்படி சுத்துது? என்று அவள் உலற, “இது சரிவராது” என்று காவியன் அவளை தூக்கினான்.
தம்பி, “விட்டு போங்கன்னு சொல்றோம்ல்ல” என்று ஒருவன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்தான். காவியனை அவர்கள் சுற்றி வளைத்தனர்.
ஒருவனை பிடித்து வேகமாக தள்ளி விட்டு ரணாவை தூக்கிக் கொண்டு ஓடினான் காவியன். அவர்களும் விடாமல் அவனை விரட்டினர். ஓர் கட்டத்தில் அவனை தவற விட்டனர். ஆனாலும் அவனை தேடிக் கொண்டு தனியா பிரிந்து சென்று தேடிக் கொண்டிருந்தனர்.
காவியன் ஓடி வந்த வழியில் செடிகளால் சூழப்பட்ட சிறிய பழைய வீடு ஒன்று இருந்தது. வேகமாக அதனுள் சென்று ரணாவை போட்டு விட்டு வெளியே வர, அவர்களை விரட்டி வந்த ஒருவன் அங்கே தான் சுற்றிக் கொண்டிருந்தான். காவியன் உள்ளே சென்று கதவை அடைத்து விட்டு ரணாவிடம் வந்தான்.
ரணா காவியனை பார்த்து எழுந்து தள்ளாடிக் கொண்டு அவனிடம் வந்தாள். காவியன் கோபமாக கையை கட்டிக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
ஹே காவியன் என்று அவனது கன்னத்தை பிடித்துக் கொண்டு, நீ ஏன்டா என்னோட காதலை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற? அம்மா மாதிரி என்னை திட்டிக்கிட்டே இருக்க?
ஹாஹம், நீ அம்மாவோட தம்பி பையன்ல்ல என்று அவனை உற்று பார்த்து, மாமா..நீ எனக்கு மாமா தான? உனக்கு என்னை இத்தினோன்டு கூட பிடிக்கலையா? என்று விரலை சுருக்கி காட்டி கேட்டாள். அவன் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது.
ஆனால் நான் உன்னை இவ்வளோ காதலிக்கிறேன் தெரியுமா? என்று கையை விரித்து காட்டி குழந்தை போல் சொல்லி விட்டு, நீ மாயா பத்தி பேசும் போது எனக்கு வரும் பாரு கோபம். உன்னை அடிக்கலாம் போல இருக்கும். ஆனால் என்னால் உன்னை தொடவே முடியாதே? நான் உன் பக்கம் வந்தாலே உனக்கு பிடிக்காதே?
நீ எதுக்குடா சுத்திக்கிட்டே இருக்க? நில்லு..என்று அவன் சட்டையை பிடித்து நிறுத்தி விட்டு, எனக்காக எல்லாமே செய்ற? ஏன்டா என்னை உனக்கு பிடிக்கலை? என்று கேட்டுக் கொண்டே அவனை அணைத்து போதையிலே அழுதாள் ரணா.
அவளை விலக்கி காவியன் ரணாவை பார்க்க, நான் அழக்கூடாது.. நீ போ. என்னோட அப்பா மாதிரியெல்லாம் உன்னால் காதலிக்கவே முடியாது என்று அவனை விட்டு விலகி பின்னே தள்ளாடிக் கொண்டே நடந்தாள்.
அவள் முன்னே வந்த காவியன் ரணாவை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் சன்னருலருகே இருந்த மரக்கிளையை இழுத்தாள். காவியன் அவளை விலக்கி பார்க்க, அதில் கொத்தாக இருந்த பூவை எடுத்து இதை வச்சுக்கோ. அழகாக இருக்குல்ல என்று அவனிடம் கொடுத்து விட்டு அவள் கீழே விழ, அவளை விழாது பிடித்து கையில் தூக்கினான் காவியன்.
ஹே..ஹே…நான் பறக்கிறேன் என்று அவள் கையை நீட்டி பட்சி போல் ஆட்ட, அவன் புன்னகையுடன் அவளிடம் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரௌடி. என்னால காதலை சொல்ல தான் முடியாமல் கஷ்டப்பட்டேன். நீ எந்த பசங்களோட பேசினாலும் எனக்கு பிடிக்கல. அதான் கார்ல கூட உன்னை திட்டினேன். “லவ் யூ மை ரௌடி பேபி”. இது உனக்காக இல்லை. எனக்காக என்று அவளது இதழ்களில் முத்தமிட்டான். அவள் போதை தெளியவில்லையே? ரணாவின் காதலும் காவியனை முத்தமிட செய்தது. அவள் மயங்கவும் அதிரதனை அழைத்தான் காவியன்.
வீட்டினர் அனைவரும் காவியனும் ரணாவும் இருக்கும் அவ்வீட்டிற்கு வந்தனர். காவியன் அவனது சட்டையை கழற்றி கீழே விரித்து ரணாவை படுக்க போட்டிருந்தான். அவன் வாசல் பக்கம் எல்லாருக்காகவும் காத்திருந்தான்.
அதிரதனும் அதீபனும் காவியனை சட்டையில்லாமல் நிற்பதை பார்த்து, பிரச்சனையா? என்று கேட்டனர். அவன் உள்ளே பார்க்க ரணாவையும் காவியனையும் இருவரும் மாறி மாறி பார்த்தனர்.
எல்லாரும் உள்ளே வர, சிவநந்தினி ரணாவை திட்டினார்.
அத்த, சும்மா அவள திட்டிக்கிட்டே இருக்காதீங்க. அவ தனியா வரக் காரணமே நாம எல்லாரும் தான் என்று காவியன் முதல் முறையாக ரணாவிற்காக பேசினான்.
புள்ளைக்கு வேற ஏதும் ஆகலையே? சிவநந்தினி கேட்டுக் கொண்டே காவியனுக்கு அடிபட்டிருக்கா என்று பார்த்தார்.
நடுஇரவை தாண்டிய நேரம். அதிரதன் தன் தங்கையை தூக்கி காரில் அவன் அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு காரை எடுத்தான். காவியனும் அவர்களுடன் ஏறினான்.
ரணா மெதுவாக விழித்து போதையிலே சிவநந்தினியை பார்த்து, அம்மா உனக்கு என்னை பிடிக்காதா? திட்டிக்கிட்டே இருக்க? ஆத்வியை மட்டும் திட்டவே மாட்ட. அண்ணாவையும் அதீயையும் மட்டும் பாசமா பார்த்துக்கிற? என்று மனதில் இருந்த எல்லாத்தையும் குழறலுடன் கேட்டான்.
சிவநந்தினி கண்ணீருடன் தன் மகள் தலையை கோதினார். அவர் கையை தட்டி விட்டு காருக்குள்ளே எழுந்தாள். நேத்ராவை பார்த்து, சாரி அண்ணி. நான் உங்கள அக்கான்னு சொல்லீட்டேன். அந்த சேடிஸ்ட் அப்படி தான சொன்னான். அதான் நானும் சொன்னேன் என்று அவளருகே இருந்த எழிலனை பார்த்து, ஹே மாமு நீ என்னோட அண்ணாவோட அதிகமாக பேசாத..எனக்கு பொறாமையா இருக்கு. அப்புறம் கடிச்சி வச்சிருவேன் என்றாள்.
ஆமா, இப்ப அது ஒண்ணு தான் குறை பாரு. லூசு..லூசு..என எழிலன் திட்டினான். அண்ணா இவன் என்னை திட்டுறான். பேட் பாய்..என்று பின் பக்க சீட்டிலிருந்து முன் பக்கம் தலையை நீட்டி காற்றை ஊதினாள்.
ச்சீ..ரொம்ப ஸ்மெல்லா இருக்கு. வீட்டுக்கு வாடி உன்னை வச்சுக்கிறேன் என்று யசோ சொல்ல, வச்சிருக்கிறியா? நீ என்னை வச்சுக்கக் கூடாது..நோ..நோ..என்று காரை செலுத்திக் கொண்டிருந்த அதிரதன் பக்கம் திரும்பினாள்.
அண்ணா, நீ லவ் பண்றியா? நம்பவே முடியல. நீ கல்யாணம் பண்ண பிறகு என்னை டீல்ல விடக்கூடாது என்று பொத்தென பின்னே விழுந்தாள். அனைவரும் பதற, “ஆ..எனக்கு வலிக்கலையே?” என்று எழுந்தாள். காவியன் கண்ணீருடன் அவளை பார்த்தான்.
பாப்பா, “அப்பாகிட்ட வா” என்று செழியன் அழைக்க, “அப்பா” என்று சின்னபிள்ளை போல் கையை நீட்டிக் கொண்டு அவரிடம் சென்று சாய்ந்து கொண்டாள் மனதில் வலியுடன் இருந்த க்யூட் ரணா.
அதி சீக்கிரம் வீட்டுக்கு போ என்று செழியன் சொல்ல, காரை வேகமெடுத்தான் அதிரதன்.