அதன் பின் அன்வீதா சொன்னபடி, த்ரூவிற்காக வைக்கப் படும் சாக்லேட்டை எடுக்காமல் அப்படியே விட்டுவிட, சாக்லேட் வரவு நின்று கார்டு மட்டும் வரத் தொடங்கியது.

இப்படியே பைனல் இயர் எக்ஸாமும் நெருங்கியது. அனைவரும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்த நேரம்.

அன்று இரவு மணி பத்தைத் தாண்டிச் சென்றும் தூங்காமல் த்ரூவும் மதிவும் படித்துக் கொண்டிருந்தனர்.

த்ரூவ் டேபிளில் உட்கார்ந்து படித்து கோண்டிருந்தான், மதி அவன் பெட்டில் கால் மீது கால் போட்டபடி  படித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாது, அவன் பொம்மாயியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். அவளிடம் எப்படி இவன் மனதை வெளிப்படுத்த…

இவன் காதலைச் சொன்னால் ஏற்பாலா இல்லை வேண்டாம் என்று சொல்லி விடுவாளா? அவளுடன் இந்த ஒரு வருடம் நன்றாகப் பழகியிருந்தாலும், இவன் காதலை இது வரை பேச்சில் கூடக் காட்டியது இல்லை.

எப்போதும் ஒரு வித விளையாட்டுத்தனமாகப் பேசியே பழகியவனுக்கு, சுட்டுப் போட்டும் ரொமான்ஸ் வரவில்லை.

இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் கிளம்பி அவரவர் ஊரைப் பார்த்துச் சென்று விடுவார்கள். அதற்குள் அன்வீதாவிடம் எப்படியும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தவனாக,

“பிரனாவ்….” என்று அழைக்க, இவன் பக்கம் திரும்பிய த்ரூவ்.

“சொல்லுடா, ஏதாவது டவுட்டா இல்ல நோட்ஸ் வேணுமா?”

“அதெல்லாம் இல்ல, அன்வீதா கிட்ட என் லவ்வைச் சொல்லலாம்னு இருக்கேன்.”

“இப்போ எக்ஸாம் டைம்ல சொல்லப் போறியா டா?”

“ஒன்ஸ் எக்ஸாம்ஸ் ஓவர் ஆச்சினா, இவள எப்படி டா பாக்க?”

“அன இப்போ சொன்னா ரெண்டு பேரும் டிஸ்டர்ப் ஆவிங்களே.”

“அப்போ என்னதான்டா பண்ண?”

“ம்ம்ம்… பேசாம பைனல் எக்ஸாம் முடிஞ்சதும் சொல்லு.”

“பைனல் எக்ஸாம் அப்போவா…?” என்று யோசித்தவன், “சரி ஓகே…” என்று தலையசைத்து ஏதோ யோசிக்க, அதே நேரம்,

“ட்ரூ……ட்ரூ……” என்ற குறட்டைச் சத்தத்தில் கவனம் கலைந்து இருவரும் பார்க்க, சரண் தான் வாயில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.

“டேய் மதி, யாருடா இவன்? உன் சுப்பினி சப்பினி கூட படிக்க நோட்ஸ் வாங்கிட்டுப் போயிருக்காங்க டா, அன இவன பாரு இன்னைக்கும் தூங்குறான்.

இவன் காலேஜுக்குப் படிக்க வந்தானா இல்ல தூங்க வந்தானா டா?” என்று த்ரூவே எரிச்சலாக அவனைப் பார்க்க,

“உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா பிரனாவ், இவன் இவ்ளோ தூங்குறானே எத்தன அரியர் வச்சிருப்பான்னு ஒரு ஆர்வத்துல அவன் டிபார்ட்மென்ட் போய் கேட்டா, ஆல் கிளியர் ஸ்டூடண்ட் இவன்,  ஓரளவு நல்லாவே படிப்பான்னு சொல்றாங்க.”

“ஒரு அரியர் கூட வைக்கலயா?” என்று த்ரூவ் அவனைச் சந்தேகமாகப் பார்க்க, மதி,

“எங்க அம்மா, நல்லா தூங்குனா நல்லா படிப்பாங்கன்னு சொல்லி கேட்டிருக்கேன். அன அதை இவன் மூலமா இன்னைக்கு தான் பாக்குறன் டா ”

“என்னமோ படிச்சா சரி “

என்று இருவரும் மீண்டும் படிக்க தொடங்கினன்.

அதன் பின் ஒவ்வொரு  எஸ்ஸாமும் முடிந்து இறுதிப் பரீட்சையும் வந்தது.

அன்று காலை மதி கையில் ஒரு சிறு பரிசுப் பெட்டியை வைத்துக்கொண்டு அதைப்பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தான் த்ருவ்.

“என்னடா அது கிப்ட்? யாருக்கு?”

“வேற யாருக்குடா என் போம்மாயிக்கு தான்! இன்னைக்கு எஸ்ஸாம் முடிஞ்சதும் சொல்லிடப் போறேன்டா.”

“ஓ… குட் டா, ஆல் தி பெஸ்ட்,” என்று சிரித்துப்பேசிக் கொண்டே இருவரும் சென்றார்கள்.

இதுவே இவர்களின் கடைசி சிரித்த உரையாடல் என்று அறியாது, இருவரும் அவரவருக்கு என்று போடப்பட்டிருந்த ஹாலுக்குச் சென்றனர்.

த்ருவ் சீக்கிரமாகவே எஸ்ஸாமை முடித்தவன், தாகமாக இருந்ததால் கேட்டீன் நோக்கி குளிர்பானம் ஏதேனும் வாங்கி குடிக்கலாம் என்று யோசித்தபடி நகர்ந்து சென்றான்.

எப்படியிருந்தாலும் மதி அன்வீதாவிடம் காதல் சொல்லச் சென்று விடுவான், அதுவரை தாகத்துடன் ஏன் இருக்க வேண்டும் என்று சென்றுவிட்டான்.

கேட்டினிற்கு நடந்து சென்றிருந்தவனுக்கு அன்வீத்தா குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

“பிரனாவ், வெயிட் டா…” என்று கத்திக்கொண்டு ஓடி வந்தவளைப் புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவன்.

“அன்வீ…? எஸ்ஸாம் முடிச்சிட்டியா?” என்று ஆச்சரியமாகத் த்ருவ் கேட்க,

“ம்ம்ம்… லாஸ்ட் எஸ்ஸாம் சால….சுலபம் டா!”

“ஓ… நைஸ்! அப்புறம் மதி உன் கிட்ட பேசணும்னு சொன்னா, அவன பாத்தியா”

“மதி… நாட் பினிஷ்டு டா  அவன் வரதுக்குள்ள நான் உன் கிட்ட கொஞ்சம்…. பேசணும் பிரனாவ்.”

“என் கிட்டையா? சரி என்னன்னு சொல்லு அன்வீ.”

“இயர் நோ, அங்க போலாம்,” என்று மரத்தடியில் அவனை அழைத்துச் சென்றவள்.

“அது மதி, நீ என்ன மேரேஜ் பண்ணிக்கிறியா?” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தவன்.

“ஏ… அன்வீ, என்ன பேசுற? டோன்ட் ப்ளே லைக் திஸ் ம்மா!”

“ஏ… நான் விளையாட்டுக்குச் சொல்லல, ரியலா தான் கேக்குறேன், நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?”

என்று கேட்டு நின்றவளைப் புருவத்தை உயர்த்தியபடி பார்த்தவன்.

“அன்வீ, டூ யூ லவ் மீ?” என்றதற்கு கண்களை உருட்டி யோசித்தவள், “நோ…” என்று மறுப்பாகத் தலையசைக்கவும், இவனுக்கு மூச்சே வந்தது.

“தென் கல்யாணம் பண்ணிக்கச் சொல்ற? என்ன யோசிக்கிற அன்வீ?”

“இல்ல மதி, எனக்கு உன் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா லைஃப் சூப்பரா இருக்கும்னு தோணுச்சு, அதான் கேட்டேன்.”

“யாரும்மா நீ இப்படி பேசுற இந்த மேட்டர் மதிக்கு தெரிஞ்சி போச்சி. என் நன்பன் பாவம் “ என்று நினைக்க

“டோன்ட் வொர்ரி, உடனே மேரேஜ் பண்ணிக்கச் சொல்லல. ஒரு டூ இயர் கழிச்சு பண்ணிக்கலாம், இப்போ வீட்டுல சொல்லி பெர்மிஷன் மட்டும் கேட்டு வச்சுக்கலாம்.”

“லூசா அன்வீ நீ! லவ் இல்லாம எப்படி கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொல்ற?”

“இப்போதான லவ் இல்ல, டூ இயர் பேசும்போது வந்திர போது,” என்று தோள்களைக் குழுக்கியவளை  தலையில் கை வைத்து பார்த்தவன்.

“இதோ பாரு ம்மா, உனக்கு கல்யாணம்னா எப்படின்னு எனக்குத் தெரியல. பட் நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்ல, இன்கேஸ் ஃபியூச்சர்ல பண்ணணும்னு யோசிச்சாலும், நான் லவ் பண்ற பொண்ணு இல்ல என்ன லவ் பண்ற பொண்ண தான் பண்ணிப்பேன்.”

என்றதை கேட்டு அங்கும் இங்கும் நடந்தபடி யோசித்தவள் மீண்டும் த்ருவ் முன் நின்று,

“நாம வேணா ட்ரை பண்ணிப் பார்க்கலாமே த்ருவ், உனக்கு என் மேல லவ் வருதான்னு!”

அதை கேட்டு எரிச்சல் அடைந்த த்ருவ், முகத்தை அழுத்தித் துடைத்துத் தன் கோபத்தைக் குறைத்தவன்.

“நான் உன்னப் பார்க்கிற கண்ணோட்டம் வேற அன்வீ. இந்த வாழ்க்கையில என்னைக்கும் நான் உன்னப் பார்க்கிற பார்வை காதலா மாறாது அன்வீ, புரிஞ்சிக்கோ” என்று உறுதியாகப் பேசியவனை கேட்டு அன்வீதாவும் தலை அசைத்தபடி, சிறுது நேரம் மௌனமாக நின்றவள்.

“ஓகே டா, இட்ஸ் ஓகே. சரி, நான் பேசுனத வச்சிட்டு என்ன அவய்ட் பண்ணாத. எனக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் லாம் இல்ல, நீ என் லைஃப் பார்ட்னரா வந்தா லைஃப் ஸ்மூத்தா போகும்னு தோணுச்சு, அதான் கேட்டேன்” என்று உதட்டைப் பிதுக்கியவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

அன்வீதா சென்ற பிறகே த்ருவ் நிம்மதியாக மூச்சை விட்டவன்,

“நான் இதை எதிர்பாக்கவே இல்லையே. ஜூஸ் குடிக்க வந்த இடத்துல இப்படி ஒரு பிரச்சனையா ஓ காட்” என்று புலம்பிக்கொண்டே கேன்டீன் சென்று

அங்கு ஒரு ஜூஸை வாங்கி குடிக்கத் தொடங்க, தூரத்தில் மதி வருவது தெரிந்தது.

ஏதோ ஒரு மாதிரி சோர்வாக வந்தவளைப் பார்த்த த்ருவ்,

“இந்த பொண்ண மதி பேசணும்னு சொல்றான்னு தான அனுப்பி வச்சேன், இவன பாக்காமலேயே போயிட்டாளா?”

என்று யோசித்தபடி மதி அருகே சென்றவன், “மதி, இந்த டா ஜூஸ் குடி” என்று பாட்டிலை நீட்டினான்.

அவன் அதை அவன் கையைத் தட்டிவிட்டு மறுத்தவன், த்ரூவையே உற்றுப் பார்த்து கொண்டு

“அன்விய பார்த்தியா…” என்று கேட்டவனின் குரலில் இருந்த கடுமையை புரிந்து கொள்ளாத த்ருவ்.

“இப்போ பார்த்தேன்னு சொன்னா என்ன பேசுனன்னு கேட்பான், இவன் மூஞ்சும் சரியில்ல. சோ இப்போ அவ கல்யாணம் பண்ணிக்க கேட்டத சொன்னா பையன் டென்ஷன் ஆகி அவ வீட்டுக்கு போய் கேலாட்டா பண்ணாலும் பண்ணுவான், சொ வேனா,” என்று யோசித்தவன்.

“இல்லையே நான் அவள பாக்கலையே, ஏன்டா என்ன ஆச்சு? ஏன் மூஞ்சை இப்படி வச்சிட்டு இருக்க?” என்று பேசியவனைப் பார்த்தவன் பதில் சொல்லாமல் இருக்க த்ருவ்.

“ப்ச் மதி, என்ன ஆச்சு? மூட் அப்சட்டா? சரி விடுடா…” என்று அவன் தோளில் கை போட்டு,

“ஒருவேளை அன்வீ ரிஜெக்ட் பண்ணிட்டாளா என்ன? அதான் இப்படி சோகமா இருக்கானோ?” என்று யோசித்தவன், அவனைச் சமாதானம் செய்ய வாயைத் திறந்தது தான் தப்பாகப் போனது.

“விடு மதி, அவ உனக்கு செட் ஆக மாட்டா. உனக்காக உனக்கு ஏத்த பொண்ணு வருவாடா…” என்றவனைத் தலை திருப்பிப் பார்த்தவன், அடுத்து விடப் போகும் வார்த்தையை நினைத்து வெகு நாள் வருந்தப் போவது தெரியாமல் விட்டுவிட்டான்.

“எல்லாரும் உன் குடும்பம் மாதிரி இருப்பாங்கன்னு நினைக்காத டா. ஒருத்தி இல்லனா இன்னொருத்தினு நீங்க போற மாதிரி என்ன நினைச்சியா டா?”

அவ்வளவுதான், சோளி முடிஞ்சது.

நட்போ, காதலோ, உறவோ – கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது. விசமாய் விழுந்த வார்த்தைக்கு வீரியம் பெரிது. அதுவும் உயிராக நினைத்தவர்களிடம் இருந்து வரும் இழிவான சொற்கள் கொடிய நஞ்சை விடக் கொடியவை.