“அவனுங்கள இழுக்காம உனக்கு நாள் முடியாதடா,” என்றதற்குத் தோள்களை உலுக்கிய த்ரூவ்.
“டோன்ட் நோ, எனக்கு உன்ன மாதிரி அவனுங்கள அக்சப்ட் பண்ண முடியல.”
“அப்படியே சார் நான் பண்றத பாத்துட்டு அப்படியே என்ன ஏத்துகிட்ட மாதிரி பேசாத பக்கி . உன்ன நான் மெயிடன் பண்றதுக்கு என்னலாம் தியாகம் பண்றேன்னு எனக்குத் தானடா தெரியும்.”
“அப்படியா சார், அப்படி எனக்காக என்ன தியாகம் பண்ணிடிங்க?” என்று இடுப்பில் கை வைத்து நின்றவன் பக்கம் திரும்பிய மதி.
“டெய்லி ஒரு பக்கெட்னு இருந்தவன் இப்போ ஒரு சிகரெட்டுக்கு வந்திருக்கன்.
அடிக்கடி காலேஜ் கட் அடிச்ச நான் இப்போ காலேஜே கதின்னு இருக்கேன். ஏன், குடிக்கிறது கூட எப்பவாதுன்னு மாறிட்டேன் தான?”
“இதை விடப் பெரிய தியாகம் என்ன தெராயுமா?”
“என்ன…?”
“அரியரோட தான் காலேஜ் முடிப்பேன்னு போட்டிருந்த சபதத்தை விட்டுட்டு, அரியரே இல்லாம இப்போ மூணாவது வருஷம் கால் எடுத்து வச்சிருக்கான் யாருக்காக?”
“ஏன், எனக்காகன்னு சொல்லப் போறியாடா?”
“பின்ன இல்லன்னு வேற சொல்லுவியாடா?”
“போன வருஷம் ரிசல்ட் வந்து அடுத்த நாள் உங்க அம்மா காலேஜுக்கு வந்து உன்ன ஓட விட்டு அடிச்சதுக்காகன்னு தான நான் நினைச்சேன்.”
“டேய் டேய்… பப்ளிக்ல கம்பெனி சீக்ரெட்டைச் சொல்லாதடா, பொண்ணுங்களாம் பார்க்குறாங்க,”
என்று மதி பார்த்து வெட்கப்பட்ட திசையை நோக்கித் த்ரூவ் பார்க்க, அங்கே மூன்று பாட்டிகள் இவர்களைப் பார்த்து ஏதோ பேசி சிரிப்பதைக் கண்டவன்.
“அவங்க பாட்டியா இருந்தாலும் பொண்ணுங்க தானடா, வாட் ய க்யூட் பாட்டீஸ்…”
என்று பறக்கும் முத்தத்தை அவர்களுக்கு இவன் கொடுக்க, தலையில் அடித்துக்கொண்ட த்ரூவ் அவனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அன்று ரூமில் மதி வந்து பேசியதில் இருந்து இவர்களது நட்பு தொடங்க ஆரம்பித்தது. எப்போதும் வினோ மற்றும் சரத் உடன் திரியும் மதி, அவர்களுடன் த்ரூவையும் அழைத்துக்கொண்டு சென்று விடுவான்.
முதலில் தடுமாறிய த்ரூவ், பின் மதியின் கல கல பேச்சில் அவனுடன் ஒன்றிப் போய்விட்டான். பூவுடன் சேர்ந்து நாறும் மணக்குமாம் அது போல, த்ரூவுடன் சேர்ந்த மதி அவனுக்காக அவனின் பல தவறுகளை மாற்றத் தொடங்கினான்.
அது நாள் பாதித்தது வினோ மற்றும் சரத் தான்; எப்போதும் மூவரும் ஒன்றாகத் திரிவது என்று போய், இப்போதெல்லாம் இருவரும் வேறாகச் சுற்றுகிறார்கள்.
மூவரும் என்றாள், பாதி காசை மதி கெடுப்பான்; ஆனால் இப்போது முழுதும் இவர்களே என்ற நிலையில்.
இவர்களுக்கு வீட்டில் இருந்து வரும் பணம் பாதி மாதம் வரை கூடப் பற்றாமல் போக, அனைத்துக் கோபமும் த்ரூவ் பக்கம் தான் திரும்பியது.
அதைப்பற்றி எதுவும் கவலை இன்றி மிகச் சந்தோஷமாகவே பெங்களூரைச் சுற்றித் திரிந்தனர் மதி மற்றும் த்ரூவ்.
இப்படி இருக்க மூன்றாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாகக் கால் எடுத்து வைத்திருந்தனர். அப்போது இவர்களைத் தேடி வந்து அறிமுகம் ஆனவள் தான் அன்வீதா;
அவர்கள் பேச்சின் டாப்பர், நன்றாகப் படிக்கும் பெண் என்ற அளவு மட்டும் இவர்களுக்குத் தெரியும்.
ஒரு நாள் கிளாஸ் முடிந்து மதி மற்றும் த்ரூவ் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு வந்த அன்வீதா,
“ஹாய்! மதி… ஹாய்! த்ரூவ்…” என்று வந்து நின்றவளை இருவரும் ஒன்றும் புரியாது பார்த்துக்கொண்டனர்.
அன்வீதா பக் என்று சிரித்துவிடவும் இருவரும் அவளைத் தான் ஸ்லோ மோஷனில் திரும்பிப் பார்த்தனர்.
அவர்கள் பார்வையில் “ ஓ… சாரி காய்ஸ். இட்ஸ் மை மிஸ்டேக். ஐ பார்கட் யூ காய்ஸ் டோன்ட் நோ தெலுங்கு “
“ எஸ் எஸ் வீ டோன்ட் நோ தெலுங்கு பட் வீ வாச் தெலுங்கு மூவி சாங் “ என்று ஒளறிய மதியை அடக்கி அமர வைத்த த்ரூவ்,
“டேய் என்னடா விட்டா பேசிட்டே போற, மொதல்ல அந்தப் பொண்ணு சொல்ல வந்ததக் கேட்போம் “ என்று அன்வீதாவைப் பார்க்கவும் அவள் சிரித்த முகத்துடன்,
“ யூ காய்ஸ் ஆர் சோ பன்னி ஐ லைக் யுவர் பிரண்ஷிப் “ என்றதற்கு இருவரும் அழகாகச் சிரிக்கவும்.
“ ஐ ஆல்சோ வாண்ட் டு ஜாயின் யுவர் பிரண்ஷிப் “
“ என்னது, எங்க கூட பிரண்ஷிப்பா அது ரொம்பக் கஷ்டம் அச்சே “
“ எந்துக்கு….” என்று பேச வந்தவள் நாக்கை கடித்துக்கொண்டு “ வெய் இட்ஸ் டிபிகல்ட் “
“ நீ இப்படி தெலுங்கு பொம்மாயியா பேசுனா? நாங்க எப்படி உன் கூடப் பேசுறது? சோ எங்க கூட சேரனும்னா ஒரு கண்டிஷன் இருக்கு “ என்ற மதியை இவள் என்ன என்பது போலப் பார்க்கவும்,
“ முதல்ல எங்ககிட்ட நீ தமிழ் பேசக் கத்துக்கணும் “
“ பட்…” என்று ஏதோ பேச வந்தவளைக் கை நீட்டித் தடுத்தவன்
“ நான் இன்னும் பேசியே முடிக்கல “ என்றவன், த்ரூவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ நான் சொன்ன மாதிரி நீ எங்ககிட்ட தமிழ்ல பேசக் கத்துக்கணும், அதே மாதிரி நாங்க ரெண்டு பேரும் உன் கிட்ட தெலுங்குல பேசக் கத்துப்போம் “ என்று பேசிய மதியை அதிர்ச்சியுடன் பார்த்த த்ரூவ்,
“ டேய் நான் எப்போ தொலுங்க கத்துக்கணும்னு சொன்னேன்? இந்த ஆட்டத்துக்கு நான் வரல, எனக்கு இங்கிலீஷ் அன்டு தமிழ் போதும் “
என்று கதறிய த்ரூவை பிடித்து இழுத்துத் தெலுங்கில் பேச வைத்தே விட்டான் மதி.
இப்படித்தான் இவர்களுடன் அன்வீதாவும் வந்து சேர்ந்தாள்.
இப்படி மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அங்கு நல்ல நட்பு மலர்ந்தது; ஆனால் அதில் மதிக்கு மட்டும் நாளுக்கு நாள் அவளின் நட்பு என்பது நட்பைத் தாண்டி காதலாக உறுவாகத் தொடங்கியது.
அந்த காதலை த்ரூவ் இடம் சொல்ல எண்ணி இரவு ரூம்மில் படித்து கோண்டிருந்த த்ரூவை
“பிரனாவ்…. பிரனாவ்…. டேய்….” என்று கத்தியவனை வாயில் கை வைத்து
“ஹூ…. சரண் தூங்குறான் டா“
“நீ என்னுமாடா நான் கத்தினா அவன் முழிச்சிடுவான்னு நினைச்சிட்டு இருக்க?”
என்றபடி அவன் பக்கம் திரும்ப, அவன் எப்போதும் போல போர்வையை இழுத்து போத்திக்கொண்டு தூங்கி கொண்டிருந்தான்.
இரண்டாம் ஆண்டு பாதியிலயே மதி எப்படியோ போராடி த்ரூவ் ரூம்மிற்கே மாறியிருந்தான். அன்றிலிருந்து இவனையும் தான் கவனித்து வருகிறான்.
ஒரு முறை படுத்து தூங்கும் சரண், அந்த ரூம்மில் என்ன நடந்தாலும் நடுவில் முழிப்பதே இல்லை.
“இவன் மூஞ்ச கூட நான் வந்ததுல இருந்து சரியா பார்த்தது இல்லடா. நம்ம ரூமுக்கு கிளாஸ் முடிஞ்சு வர்றதுக்கு முன்னாடி தூங்க ஆரம்பிக்கிறவன், காலையில நம்ம கிளம்புற வரைக்கும் முழிக்க மாட்டிக்கிறான். “
“சரி, இவன் முழிக்க மாட்டான் தான் அன பக்கத்துல யாரும் தூங்க வேண்டாமா டா?”
“யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தான் உன்ன மொதல்ல மெதுவா கூப்பிட்டேன்“
“சரி வந்துட்டேன், என்னன்னு சொல்லு“
“அது அன்வீ இருக்காளடா…”
“அவளுக்கு இப்போ என்னடா?“
“அது நான் அவள லவ் பண்றேன் டா“ என்று வெட்கப்பட்டவனை ஒரு மாதிரி பார்த்த த்ரூவ்.