அதைப் பார்த்து மகிழ்ந்தவளாக, “தேங்க்யூ! நீங்களே எடுத்துட்டு வந்துட்டீங்க, நான் எப்படி இதை உங்க கிட்ட கேட்டு வாங்கலாம்னு முழிச்சிட்டு இருந்தேன்!”
என்று அதை வாங்கியவள், அதில் புதிதாக ஸ்ட்ராப் மாற்றப்பட்டிருப்பதை பார்த்துவிட்டு அவனை கேள்வியாகப் பார்க்க,
“நான் தான் மாத்தின ஸ்ட்ராப், அறுந்து போய் இருந்துச்சு, அதான்!”
“ஓ… ஓகே ஓகே, தேங்க்ஸ்!” என்று வாங்கி அதை டேபிளில் வைத்தவள், “நல்ல வேலை, நான் தப்பிச்சேன், அக்காவ எப்படி சமாளிக்கன்னு முழிச்சிட்டு இருந்தேன்!”
“ஏன் இத்தனை பயம்? பக்கத்துல தான என் வீடு, வந்து கேட்டுருக்கலாமே!” என்றதற்கு அமைதியாக முழித்து நின்றவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“சரி, அது கஷ்டமான விஷயம்னா ஒரு கால் பண்ணிருக்கலாமே!”
“கால்ல? என் கிட்ட தான் உங்க நம்பர் இல்லையே!”
“என்னது நம்பர் இல்லையா? எத்தனை வாட்டி பாட்டி என் போன்ல இருந்து உங்களுக்கு கால் பண்ணிருக்காங்க?”
“அது… அது பாட்டி, நிறைய நம்பர்ல இருந்து கால் பண்ணிருக்காங்க, அதான் அத்தனை நம்பர் எதுக்குன்னு சேவ் பண்ணல!”
“வீட்டுல இருந்த அத்தனை பேர் போன்ல இருந்தும் கால் பண்ணியிருப்பாங்க போலயே! சரி விடு, எண் போன் நம்பர்ல ஜீரோ த்ரீன்னு முடிஞ்சிருக்கும், பாரு, டூ டேஸ் முன்னாடி கூட உனக்கு கால் பண்ணியிருந்தாங்க, ஏதாவது தேவைனா கால் பண்ணு, ஓகே!”
என்று எழுந்தவன், “நைஸ் காபி ரூத்!” என்று சிரித்தபடி கிளம்பிவிட, ரூத்தும் அவனை கைஆட்டி வழி அனுப்பி வைத்தாள்.
உள்ளே ஹாலில் மலர்ந்த முகத்துடன் ஓடி வந்து அமர்ந்து முதல் வேலையாக போனில் ஆதிஷின் நம்பரை கண்டுபிடித்து அதை ‘ஆதி’ என்ற பெயரில் சேவ் செய்து வைத்தாள்.
இவ்வாறு செய்த ரூத்தின் மனதில் ஆதிஷ் மீது கண்டதும் காதல் என்று சொல்ல முடியாது, அது ஒரு வகை எதிர்பாலின ஈர்ப்பு என்று சொல்லலாம்.
முதல் முறை ஒரு ஆணிடம் நன்றாக பேசியதின் மகிழ்ச்சி அவ்வளவுதான், பாவம் இது தெரியாது. ‘ஆதிஷ் ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்’ என்று துள்ளிக்கொண்டு சென்றான்.
இங்கு இப்படி என்றாள், அங்கே அலுவலகத்தில் ஸ்டெல்லா முன்பு அமர்ந்த த்ரூவ் அவளையே வைத்த கண் வாங்காது பார்த்திருக்க, பதிலுக்கு ஸ்டெல்லாவும் நீங்களே ஆரம்பிங்க என்பது போல கைகட்டி அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
இவர்கள் இருவரையும் வேகு நேரம் தருண் மாறி மாறி பார்த்தவன், ‘சங்கீத ஸ்வரங்கள்னு விடிய விடிய பாட்டு தான் பாடணும் போலயே’ என்று முழித்துக் கொண்டு இருக்க,
சற்று நேரத்தில் பெருமை இளந்த ஸ்டெல்லா, “சொல்லுங்க சார், இந்த நைட் இங்க வந்திருக்கீங்கனா எனி எமர்ஜென்சி?”
என்ற ஸ்டெல்லா பேச்சில் கனவில் இருந்து கலைந்தவன், ‘ம்க்கும்…’ என்று குறளை சிரிமி நிமிர்ந்து அமர்ந்தவன்.
“எமர்ஜென்ஸி தான் ஸ்டெல்லா, டுடே நிவேதன் உங்கள பாக்க வந்தான் போல.”
“எஸ், வந்து என்ன பாத்துட்டு இப்போ ஆஸ்பிட்டல்ல இருக்கான்.”
“எஸ்… ஐ நோ ஸ்டெல்லா, இப்போ அவன என்ன பண்ண போறீங்க? அவன நல்ல அடிச்சிருக்கீங்க, அது அவன் வாங்க வேண்டிய அடியா இருந்தாலும் இப்போ அவன் கம்ப்ளைன்ட் கொடுத்தா என்ன பண்ண போறீங்க எனி ஐடியா?”
என்றதற்கு அவளின் போனை எடுத்து அவன் முன்னே வைத்து ஒரு கணொளியை போட்டு காட்டினாள் ஸ்டெல்லா.
அதில் நிவேதன் அவன் அலுவலகத்தில் பெண்களிடம் அத்துமீறும் வீடியோ ஓட, அதில் இருந்த பெண்களின் முகத்தை மட்டும் மறைத்திருந்தவள் அவனின் முகத்தை நன்றாக சூம் செய்து காட்டியிருந்தாள்.
“இந்த வீடியோ வச்சு அவன் பேர்ல கம்ப்ளைன்ட் கோர்த்துட்டேன் இன்னேரம் போலீஸ் ஆக்க்ஷன் எடுக்க ஆரம்பிச்சிருப்பாங்க சார். சோ இப்போ அவன் என் மேல தர கம்ப்ளைன்ட் செல்லாது.”
“நைஸ் மூவ் ஸ்டெல்லா, அனா நான் உங்க கிட்ட இன்னும் நிறையா எதிர்பார்த்தேனே.”
“என்னும்னா இந்த மாதிரியா?” என்று லைவ் நியூஸை போனில் ஓட விட்டு காட்ட, அதில் நிவேதனின் மனைவி அவனை விவாகரத்து செய்ய போவதாக பேட்டி கொடுத்து கொண்டு இருந்தாள்.
அதை பார்த்தவன் சத்தமாக சிரித்தபடி அவள் தலையில் கைவைத்து ஆட்டி, “தட்ஸ் மை கேர்ள்” என்று எழுந்தவன்,
“இதை நேர்ல நீ சொல்ல கேக்கணும் தான் வந்தேன் ஸ்டெல்லா. பட் கேர்ஃபுல் ஸ்டெல்லா, ஈஸ் க்ருமினல்”
என்று விட்டு சென்றவனை கண் இமைக்காமல் பார்த்தவள், அவள் தலையில் கைவைத்து தொட்டு பார்த்துவிட்டு
தலையை வேகமாக ஆட்டி, “நோ ஸ்டெல்லா, எதுவும் யோசிக்காத” என்றபடி வீட்டுக்கு செல்ல புறப்பட்டாள்.
இங்கு மிக மகிழ்ச்சியாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த த்ரூவின் பர்சனல் மொபைல் அடித்து கொண்டே இருக்கவும், அதை எடுத்து பார்த்தவன் சலித்தபடி ஆன் செய்து காதில் வைத்தான்.
மறுபுறம் இருந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் சரமாரியாக வந்து விழ, அவை அனைத்தையும் கைகளை இறுக மூடிக்கொண்டு கேட்டு முடித்தவன்.
“எந்த பார்ல இருக்க?” என்று கேட்டுவிட்டு போனை வைத்தான்.
என்று அவனை அனுப்பிவிட்டு, போனில் சொன்ன இடத்திற்கு அத்தனை வேகமாக இறுகிய முகத்துடன் சென்றான்.
பார் அருகில் சென்றதும் த்ரூவ் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன் காதில் ஏதோ ஒரு ஆங்கிலப் பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டு இருக்க, ஒரு புறம் பதின் பருவம் ஆண், பெண் என்று வித்தியாசம் இன்றி ஒரு கூட்டம் ஆடிக் கொண்டிருக்க.
மற்றொரு கூட்டம் போதையின் பிடியில் என்ன செய்கிறோம் என்று உணர்வு இன்றி வாழ்க்கையை அந்த மதுவிற்குச் சமர்ப்பித்துக்கொண்டிருந்தனர்.
இவற்றை எல்லாம் கோபமான முகத்துடன் பார்த்தவன், அவன் இங்கு வரக் காரணமானவனைத் தேடியப் படி மேலும் உள்ளே சென்றான்.
அங்கே ஒரு டேபிளில் கலர் கலர் கோப்பைகள் மத்தியில், டேபிளில் தலை கவிழ்ந்து இருக்க, கைகளை காற்றில் அலைய விட்டபடி ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான்மதி.
அவன் நிலையைப் பார்த்து கோபம் கொண்டவன், அவன் அருகில் சென்று அவனை இழுத்து எழுப்பி ஒழுங்காக அமர வைக்க,
“ஏ… யார்… யார் டா… என் மேல கை வைக்கிற?” என்றபடி அவன் முகத்தை உற்று நோக்கியவன்,
“டேய் பிரானாவ்…. நீயா? வந்திட்டியாடா யூ டெவில்… என்ன… என்ன இப்படி புலம்ப வச்சிட்டல!” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவன், அவன் மேலேயே சாய்ந்தபடி,
“அவ் டேர் யூ… யாரை கேட்டு டா அந்த டென்டர்ல இருந்து வெளிய வந்த? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்பைலாம் வச்சி உன்ன தோக்க அடிக்க அமண்ட் செட் பண்ணா, நீ வேணாம்னு போயிட்ட!” என்று புலம்பியவன் அவன் மீதே சாய்ந்து படுத்துவிட்டான்.
அதில் பெருமூச்சை ஒன்று இழுத்து விட்டவன், அவனை கைதாங்கலாகத் தூக்கிக்கொண்டு அவன் காரின் பின்னே ஏற்ற முயல, மதி,
“நோ நோ நோ… நான் எப்பவும் பிரண்ட்ல தான் இருப்பேன், பேக் எனக்கு பிடிக்காதுடா பிரானாவ்!”
“இந்ந வெங்காயத்துக்கெல்லாம் குறை இல்ல” என்று முனகியவன், முன்னே அவனை அமர வைத்து சீட் பெல்ட்டைப் போட்டுவிடவும்,
“டேய் பிரானாவ்…, நீ என்னும் அந்த பெர்ஃப்யூம் தான் யூஸ் பண்றியா டா?” என்று நுகர்ந்து பார்த்தவனை விட்டுத் தள்ளி நின்றவன்.
தலையில் கைவைத்து நொந்துகொண்டவனாக
“இவன் வாய்ல இருந்து இத கேக்கவா இந்த பெர்ஃயூம் யூஸ் பண்ற ச்சா “ என்று புலம்பி விட்டு காரில் ஏறி கார் ஓட்டத் தொடங்கினான்.
செல்லும் வழி எல்லாம் ஏதோ புலம்பிக் கொண்டே வந்த மதி, ஓர் இடத்தில் பிரானவை தட்டி ஏதோ சைகை காட்டவும், அதை புரிந்து கொண்டவன் வேகமாக காரை ஓரம் நிறுத்தி அவன் பக்கம் கதவைத் திறந்து விடவும், அவன் வாந்தி எடுக்கச் சரியாக இருந்தது.
மதி வாந்தி எடுத்து முடித்ததும் அவனுக்குப் பருகத் தண்ணீர் கொடுத்து, அவன் சட்டையில் பட்டிருந்த வற்றைச் சுத்தம் செய்து மீண்டும் காரை ஓட்டத் தொடங்கினான்.
சிறுது நேரத்தில் கார் ஓர் பங்களா முன் நிற்கவும், அதை எட்டிப் பார்த்த மதி, “ஓ… நோ… பிரானாவ்… இப்போ நான் அம்மா அப்பா கூட இல்ல, தனியா தான் இருக்கேன்” என்று கத்தியவனைக் கண்டு கொள்ளாது இறங்கியவன்.
அங்கு நின்றிருந்த டிரைவரை அழைத்து அட்ரஸைக் கூறியவன்,
“அங்க ஒன் நட் சிக்ஸ் வீட்டுல கொண்டு இவன விட்டுட்டு, கார் எடுத்துட்டு உங்க வீட்டுக்கு போய்டுங்க, மார்னிங் வந்தா போதும், அண்ட் சாவி” என்று சொல்லிவிட்டு, மதி புறம் வந்து அவன் பாக்கெட்டில் இருந்த கீயை எடுக்கவும்
“ம்கும்… ம்கும்…கூசுதுடா பிரனாவ்….. அமா…. என் அப்பார்ட்மெண்ட் அட்ரஸ் உனக்கு எப்படி தெரியும் “ என்று உளறியவனை கண்டு கோள்ளாது சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு,
“பாத்து பொறுமையா போங்க, ஃபாஸ்ட் டிரைவிங் வேணாம், ரீச் ஆயிட்டு கால் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குள் செல்லப் போனவனை
“பிரானாவ், ரொம்ப பசிக்குதுடா…” என்ற மதியின் சத்தம் செல்ல விடாமல் தடுத்தது.