னல்6

நிவேதனை அடித்து அவனை பத்திரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு திரும்பியவளை தான் ஆபிஸே அ… என்று பார்த்து கொண்டிருந்தது.

எப்போதும் முகத்தை விறைப்பாக வைத்திருப்பவள் யாரிடமும் நட்பாகப் பழகும் ரகம் கொண்டவள் இல்லை. அதனாலேயே அனைவரும் அவளிடம் சகஜமாகப் பேசவே யோசித்து நிற்பார்கள்.

இப்படி தனியாக இருப்பவள் வேலை என்று வந்தாள் போதும் சரியாக அனைத்தயும் சொன்ன நேரத்திற்கு செய்து முடித்து விடுவாள்.

அந்த அலுவலகத்தில் ஐந்து வருடமாகப் பணிபுரிவதால் யார் இடம் எந்த வேலையை கொடுக்க வேண்டும், யாரிடம் எப்படி அணுக வேண்டும், யாருக்கு என்ன தேவை என்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பாள்.

அப்படி இருந்ததால் தான் கம்பெனியை எம்டி இல்லாமலேயே பல மாதங்கள் தனியாக சமாளித்து வந்தாள். அலுவலகத்தில் வேலைக்கு மட்டும் இல்லை, பாதுகாப்பிற்கும் இவளைத் தான் நாடி செல்வார்கள்.

மற்ற விஷயத்திற்கு உதவி என்று கேட்டால், முறைப்பவள் வேலை இடத்தில் நடக்கும் பாலியல் தொல்லைக்குக் கேட்காமலேயே முன் வந்து உதவிக்கு நிற்பாள்.

இவள் இருக்கும் இடத்தில் இன்று அளவில் பல பிஸிகல் ஆராஸ்மெண்ட்  இருந்து பெண்களை மட்டும் இல்லை பல ஆண்களையும் காப்பாற்றி வைத்திருக்கும் பெருமை முற்றும் ஸ்டெல்லாவே சேரும்.

த்ரூவிற்கு ஸ்டெல்லா பக்கம் மனம் சாய இதுவும் ஒரு காரணமே. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண் முன் காட்டும் இவள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றால் தான் அதிசயம்.

இவற்றை எல்லாம் நினைத்து அவளை அணுஅணுவாக ரசித்த த்ரூவ், டேபிளில் இருந்த பெல்லை அமுக்க, தருண் புயல் என ஓடி வந்து நின்றான். வந்து நின்றவனைப் பார்க்காது அவன் கையில் இருந்த போனில் ஏதோ மெசேஜ் போட்டபடி,

“தருண், ஸ்டெல்லா ஆபிஸ்க்கு போயிட்டு வந்துறலாம் வாங்க” என்று அழைத்தவனைத் திகைத்து போய் பார்த்தவன், நேரத்தைப் பார்க்க அது ஏழு என்று காட்டி நின்றது.

“இந்த நேரம் டிராஃபிக்கில் மாட்டுனா கிழிஞ்சிருமே கதை” என்று யோசனையாக நின்றவனை குறளை சிரிமி  அழைத்தவன்.

கண்களால் என்ன என்று கேட்டு அவனைப் பார்க்கவும், “அது சார் டைம் சேவன் ஆச்சி, இப்போ அங்க போய் என்ன பண்ண சார்…..?” என்று இழுத்தவனை, சேரில்  சாய்ந்தபடி பார்த்து அமர்ந்தவன்.

“எல்லாம் எப்படி வேலை பாக்குறாங்கன்னு பார்க்கப் போறேன். ஏன் தருண், நான் சொல்ற வேலைக்கு எல்லாம் ரீசன் சொன்னா தான் அப்ரூவ் பண்ணுவிங்கலா?” என்று நக்கலாக கேட்டவை பார்த்து கைகளை ஆட்டி மறுத்தவன்

“அய்யோ சார் அப்படி இல்ல, சும்மா கேட்டேன்” என்றதும் அவனை முறைத்தபடி எழுந்தவன், அவன் போனை எடுத்து அதைப்பார்த்தபடி,

“சீக்கிரம் வாங்க தருண், ஸ்டெல்லா வெயிட்டிங்”

என்று கதவு பக்கம் போனவனை ஒன்றும் செய்ய முடியாது, தருண் பின்னே சென்றான். அங்கே வாசலில் ஆதிஷ் கையில் ஃபைல்லோடு நிற்பதை பார்த்த த்ரூவ்.

“இங்க என்ன பண்ற?” என்று வினவவும் ஆதிஷ்,

“ஃபைல் சப்மிட் பண்ண வந்தேன் சார், பில்டிங் ரீகான்ஸ்ட்ரக்ஷன் ஐடியா ரெடி பண்ண சொன்னீங்கல சார்?”

“ஓ… சரி, அதை அங்க வச்சிரு, மார்னிங் அதை செக் பண்ணிட்டு சொல்றேன்” என்று அவனை கடந்து இரண்டு அடி வைத்தவன் ஏதோ தோன்றவும்,

“நோ, அதை என்கிட்டயே தா, நான் போற வழியில செக் பண்றேன்”

என்று ஃபைலை வாங்கி விறுவிறுவென அவன் சென்று விடவும், அங்கேயே யோசனையாக நின்ற ஆதிஷ் பின் தலையை உலுக்கி கொண்டு

“ச்சா…. அப்படிலாம் இருக்காது” என்று அவன் இடம் சென்றான்.

சென்றவன் நேரத்தைப் பார்த்துவிட்டு, கையில் ஸ்டேரப்  அருந்த ரூத்தின் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,

“சார் ஸ்டெல்லா ஆபிஸ் போயிட்டாருன்னா கண்டிப்பா அவ வீட்டுக்கு வர லேட் ஆகும், சோ அந்த கேப்ல நம்ம போய் ரூத்தப் பார்த்துட்டு வந்துருவோம்”

என்று எண்ணியவன், வேகமாக கிளம்பி வீட்டுக்குச் சென்றவன், பைக்கை வெளியில் நிறுத்திவிட்டு யோசித்தபடியே நின்றான்

“எப்படி இவள வெளிய வரவைக்கலாம்? கதவைத் தட்டி வாட்ச் தர மாதிரி போவோமா?” என்று யோசித்தவன் பின் தலையை அசைத்து,

“ச்ச… பாட்டி இருப்பாங்களே” என்று யோசித்தபடியே இருந்தவனின் காதில் அவன் பாட்டியின் குரல் கேட்க,

“என்ன பாட்டி குரல் நம்ம வீட்டுல இருந்து கேக்குது?” என்றபடி உள்ளே எட்டிப் பார்க்க, அங்கே பாட்டி டிவியை பார்த்தபடி

“லூசு கிறிக்கி, அதான் அவ கேட்டவன்னு தெரியுதுல, தெரிஞ்சும் அவ கூட தான் போவா” என்று திட்டியபடி இருக்க,

“ஐ சூப்பர், பாட்டி இங்கயா இருக்காங்க!” என்று மகிழ்ந்தவன், அடுத்த நிமிடம் எதைப்பற்றியும் யோசிக்காமல் பக்கத்து வீட்டின் முன் நின்று கதவைத் தட்டிக் கொண்டு இருந்தான்.

உள்ளே பாட்டி ரூத்தின் காலைத் தடவிவிட்டதில், நன்றாக ஹாலிலேயே படுத்து உறங்கிவிட்டாள். பாட்டியும் அவள் தூங்கட்டும் என்று அவர் வீட்டுக்குச் சென்று சீரியல் பார்க்கச் சென்றுவிட்டார்.

இது தெரியாது ஆதிஷ் கதவைத் தட்ட, உள்ளே களைப்பில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தவள்.

“ப்ச்… பாட்டி சாவி…. தான் இருக்குல, தொறந்திட்டு வாங்க”

என்று தூக்கத்தில் கத்த, அது எங்கே வெளியில் நின்றவனுக்குக் கேட்டிருக்கும்? அவன் பாட்டுக்குத் தட்டிக்கொண்டே இருக்க, கடுப்பானவள்.

தூக்கத்தில் தட்டு தடுமாறி எழுந்து நின்றவள், அரைக்கண் போட்டபடி நடந்து சென்று கதவைத் திறந்தாள்.

கதவைத் திறந்து வந்த ரூத்தை அகலக் கண்களை விரித்துப் பார்த்தவன்,

“என்னடி இப்படி வந்து நிக்கிற?”

என்று வாய்விட்டே கேட்டுவிட்டான். பின்ன டாப் மட்டும் அணிந்து  கீழே கால்சட்டை இன்றித் தூண்டுடன் வந்து நிற்பவளைப் பார்த்தாள், வேறு என்ன சொல்ல.

ஆதிஷின் திகைத்த குரலில் தூக்கம் தெளிந்தவள், அவனைப் பார்த்து அதிர்ந்து பின் அவளையும் குனிந்து பார்த்துவிட்டு, பட் என்று கதவை அடைத்தவள்.

“லூசு லூசு….” என்று அவள் தலையில் அடித்துக்கொண்டு, பின் லேசாகக் கதவைத் திறந்து

“போயிடாதிங்க, ஒரு ஃபைவ் மினிட்ஸ்” என்று சொல்லி மீண்டும் கதவை சாத்தியவள். மின்னல் வேகத்தில் ஹாலுக்குச் சென்று வேகமாக அவள் கால் சட்டையை அணிந்தவள்.

அறைக்குச் சென்று கண்ணாடியில் முகத்தை ஒரு முறை திருப்பிப் பார்த்துவிட்டு வெளியே ஓடி வந்து கதவை நோக்கிச் சென்றவள், திடீரென்று நினைவு வந்தவளாக மீண்டும் ஹாலுக்கு  சென்று அங்கிருந்த அவளின் போனை எடுத்து, ஸ்டெல்லா இருக்கும் இடத்தை உறுதி செய்தவள். மீண்டும் ஓடி வந்து கதவைத் திறந்தாள்.

மூச்சு வாங்க “ஹூ… ஹூ… வாங்க…” என்று உள்ளே அழைத்து அமர வைத்தவளை பார்த்து சிரித்தவன்

“அட ரூத், பொறுமையா போய் முதல்ல தண்ணி குடி.”

“இல்ல, பரவாயில்லை இருக்கட்டும், நீங்க உட்காருங்க”

என்று உட்கார வைத்தவள், அடுத்து என்ன செய்ய என்று யோசித்து நின்றவளுக்கு, சீரியலில் விருந்தாளிக்கு ஹீரோயின் ஜூஸ் கொடுப்பது நினைவுக்கு வர,

“இதோ ஒரு நிமிஷம்” என்றுவிட்டு உள்ளே சென்று ஜூஸைத் தேடியவள், கண்ணுக்கு காலி பாட்டிலே தட்டுப் பட்டது.

“ப்ச், என்ன எதுவுமே இல்லை, இப்போ என்ன பண்ண?”, என்று யோசித்தவள் அங்கு சமையல் அறையில் சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தாள்.

பாத்திரத்தில் சூடு பண்ணப்பட்ட பால் இருக்க, அதைச் சூடு செய்தவள் அருகில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து

“சூப்பர் நைஸ் காம்பினேஷன்” என்றுவிட்டு, இரண்டு டம்பளரில் காப்பி போட்டு எடுத்துக்கொண்டு சென்று டேபிளில் வைத்துவிட்டு மீண்டும் சமையல் அறைக்குள் ஓடியவளை,

“இவ என்ன பண்றா?” என்றபடி எட்டிப் பார்த்தவன், அவள் கையில் பிஸ்கட்டுடன் வருவதைப் பார்த்துவிட்டு சிரித்தவன்.

“காபிலாம் எதுக்கு ரூத்? உங்களுக்கே கால்ல அடி பட்டிருக்கு”

என்று சொன்னவனுக்கு அப்போதுதான் அது நினைவு வர,

“கால் அடி பரவாயில்லையா?” என்று அவள் காலைப் பார்க்க, ரூத் காலைச் சுழற்றி காட்டி

“ம்ம்ம் இப்போ ஓகே, வலியே தெரியல, பாட்டி தடவி விட்டதுல வலி போயிருச்சு” என்று சிரித்து நின்றவளை, அவனும் மலர்ந்த சிரிப்புடன் பார்த்திருந்தான்.

ஆதிஷின் சிரிப்பைப் பார்த்தவள், “சொல்லுங்க, அதிசயமா இங்க எங்க வீட்டு பக்கம் வந்திருக்கிங்க”

என்று சிரித்தபடி அவன் எதிரில் அமர்ந்தவலுக்கே ஆச்சரியம் தான், எப்படி இத்தனை இலகுவாக அவன் முன்னே இவளால் பேச முடிகிறது என்று.

புதிதாக யாரைப் பார்த்தாலும் உடனே பேச வராது, திக்கித் தடுமாறி சொதப்பி விடுவாள், அனால்  இன்று நன்றாக இவனிடம் பேசவும் தலையைத் குனிந்து,

“இது எப்படி நம்மால முடியுது?” என்று யோசனையாக இவள் இருக்க, ஆதிஷ் அவள் யோசனையை கலைக்கும் விதமாக,

“என்ன கேள்வி கேட்டுட்டு என்ன யோசனை ரூத்?”

“அது ஒன்னும் இல்ல, சும்மா தான்….” என்றவளுக்கு அப்போதுதான் அவனின் உரிமையான அழைப்பு அவள் மூளைக்கு எட்ட,

“ஏன்….? என் கிட்ட இப்படி பேசுறீங்க?” என்று மொட்டையாகப் பேசியவளை புரியாமல் பார்த்தவன்,

“என்ன பேசுறீங்கனா புரியல ரூத்!”

“தோ, இப்படி சாதரனமா பேரைச் சொல்லி கூப்பிடுறீங்களே!”

“ஓ… அதுவா, அது தான வருது ரூத், உன்னப் பார்த்ததும் அப்படி தான் கூப்பிட வருது, நான் என்ன பண்ண?”,

என்று தோள்களை உலுக்கியவனிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் முழித்து நின்றவளை, கடித்து உண்ண வேண்டும் என்று பற பறக்கும் மனதை அடக்கத் தெரியாது.

காப்பியை கையில் எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினான்.

ஆதிஷ் நடக்கவும், ரூத்தும் எழுந்து நிற்க, அவள் நிற்பதைப் பார்த்தவன் அவன் பையில் இருந்த வாட்சை எடுத்து நீட்டினான்.