பைக்கில் சென்றவனை சிறிது நேரம் நின்று பார்த்தவள், மெல்ல கேட்டை திறந்து கொண்டு உள்ளே செவிற்றை பிடித்துக் கொண்டு செல்ல,

“அச்சோ…. ரூத்து…. உனக்கு என்ன ஆச்சு? கால்ல என்னடி? ஏன் இப்படி நிக்கிற?”

 என்றவாறு மணியம்மா அவளைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளவும், அவரை அணைத்துக் கொண்ட ரூத்,

கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு, “அது கல்லுல கால் வச்சி விழுந்துட்டேன் பாட்டி, அதுல சுளுக்கு பிடிச்சிருச்சு” என்று அழும் குறளில் பேசவும், மணியம்மா

“தரைய பார்த்து நடக்கனும், அத விட்டுட்டு பறகட்டி பார்த்துட்டே வந்தா இப்படி தான் ஆகும். அப்படி எங்க கண்ண வச்சிட்டு வந்த?”

“ரோட்ல வச்சே எல்லாத்தையும் கேப்பியா பாட்டி? கால் வலிக்குது”

“அச்சோ, அம்புட்டு வலியா வலிக்குது? வா… உள்ளே போவோம்” என்று இருவருமாக உள்ளே சென்று சோபாவில் அமர,

“ஆமா…, எனக்கு அடிப்பட்டது உனக்கு எப்படி தெரியும்?”

“அதுவா, எங்க வீட்டுப் பரட்டை சொல்லிட்டு போச்சி” என்றதும் பக் என்று சிரித்த ரூத்,

“எதுக்கு உன் பேரனை இப்படி கூப்பிடுறன்னு இப்போ தான புரியுது பாட்டி” என்று நினைத்து கொள்ளவும் அவள் சிரிப்பை பார்த்த மணியம்மா

“என்னடி சிரிக்கிற? வலி போயிடுச்சா என்ன?” என்று காலைத் தொடவும், வலியில் கத்திய ரூத்,

“மெல்ல பாட்டி, வலிக்கிது”

“சரி, கத்தாத, சில்லாட்டா மெல்ல தடவி விடுறேன். அப்பறம் நம்ம சாந்தியோட புருஷன் உன்ன பஸ்ல பார்த்தாரமே, உன் வண்டிக்கு என்ன ஆச்சு? பஸ்லயா வந்த?”

“அப்போ அந்த தாத்தா சாந்தி பாட்டி ஹஸ்பண்டா?” என்று எண்ணியபடி இருக்க, அவள் கையில் அடிபோட்ட மணியம்மா,

“எண்ணத்தை யோசிக்கிற சில்லாட்டா? உன் வண்டி எங்க?”

“வண்டியா..? அது ரீபேர் ஆகிடுச்சு, கடையில விட்டு வந்திருக்கேன்”

“ரீபேர்னா ஆட்டோல வர வேண்டியது தானடி, எதுக்கு பஸ்ல வந்த? ஸ்டெல்லாக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுது, பேய் ஆட்டாம் அடிடுவா டி”

“அதெல்லாம் தெரியாம நான் பார்த்துப்பேன் பாட்டி”

“என்னமோ ரெண்டு பேரும் சண்டை போடாம இருந்தா சரி” என்றவர் தைலம் போட்டு ரூத்தின் காலை நீவி விட்டபடி அடுத்த வீட்டு கதை பேசத் தொடங்கினார்.

அதற்கு ரூத் ஊம் கொட்டியபடி இருந்தாளும், அவள் நினைவுகள் எதுவும் அங்கு இல்லை. மாலை ஆதிஷை பார்த்த நிகழ்வை தலைக்குள் ஓட்டியபடி இருந்தவள்.

“அய்ய…, என்ன ரூத் இப்படி பண்ணி வச்சிருக்க! அந்த பையன் முன்னாடி இப்படி பயந்து ஓரே அசிங்கமா போச்சே…” என்று தலையில் தட்டியவள், அவன் உருவத்தை கண் முன் வரவைத்து சுற்றி சுற்றி பார்த்தாள்.

“ம்…. பக்கத்து வீட்டுல இப்படி ஒருத்தன் இருக்குறது இத்தனை நாள் எப்படிப் பார்க்காம மிஸ் பண்ணோம்?” என்று யோசனையில் இருந்தாள் ரூத்.

இங்கு கையில் வாட்ச்சை வைத்துப் பார்த்தபடி, அவன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் ஆதிஷ்.

“நம்மள போய் யாருன்னு கேக்குற அளவுக்கா உன் மனசுல நான் பதிஞ்சி இருக்கேன்ல பொம்ம? என்ன உனக்கு ஞாபகம் இல்லையா டி?

ம்ஹூம்…. இது சரிவராது. இப்படி நம்ம தூரத்துல இருந்து பார்த்துட்டே இருந்தா அவளுக்கு நம்மள எப்படித் தெரியும்? அதான் பெரிய பொண்ணா ஆகிட்டா தான, இதுக்கு அப்புறம் என்ன? இனி தள்ளி நிக்கப் போறது இல்ல.”

என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக, அந்த வாட்ச்சை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

இங்கு ஒருவன் தன் தங்கையின் மனதை வெல்ல முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியாது; ஸ்டெல்லா அலுவலகத்தில் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

காலை மீட்டிங், த்ரூவுடன் சைட் விசிட், பின் அலுவலகம் வந்து அடுத்து ஒரு மீட்டிங் என்று அன்று முழுக்க நிற்க நேரம் இன்றி அலைந்து கலைத்து போயிருந்தவள் முன் வந்து அமர்ந்தான் நிவேதன்.

அதில் கடுப்பான ஸ்டூல்லா

“இவனுக்கு இங்க வர வேற நாளே கிடைக்கலையா? இன்னைக்கு பார்த்துதான் நீ வரணுமாடா மாடு? உன் மண்டையில வழுக்கை வில, நீ போற வண்டி பஞ்சர் ஆகி நடு ரோட்ல நிக்க…”

என்று மனதில் கண்ட மேனிக்குத் திட்டிய ஸ்டெல்லாவின் முகமோ, அன்னை திரஷாவுக்கே டப் கொடுக்கும் அளவு அமைதியாக இருந்தது. அதே அமைதியோடு

“சொல்லுங்க சார், இப்படி திடீர்னு வந்திருக்கீங்க?” அவள் அமைதியில் எரிச்சலான நிவேதன்

“எதுவுமே தெரியாத மாதிரி எப்படி இப்படிப் பேசுற ஸ்டெல்லா?”

“நீங்க எதுன்னு சொல்லாம எனக்கு எப்படி சார் தெரியும்?” என்று பேசியவளைக் கண்கள் சிவக்கப் பார்த்தவன்.

“எங்க கம்பெனியோட கான்ட்ராக்ட் (Contract) கண்டினியூ பண்ண விருப்பம் இல்லைன்னு மெயில் வந்திருக்கு ஸ்டெல்லா.”

“ஓ… அது விஷயமா நீங்க பேசணும்னா த்ரூவ் சார் கிட்ட தான் பேசணும். நான் வேணா மீட்டிங் அரேஞ்ச் பண்ணவா சார்?”

“உன் மீட்டிங்கத் தூக்கி ஷிட்ல போடு!” என்று கத்தியபடி எழுந்து நின்றவன்.

“இரண்டு நாளா அவர மீட் பண்ணத்தான் டாக் மாதிரி வெயிட் பண்ணிட்டு இருக்கேன். என்னப் பார்க்க வரச் சொல்லிட்டு உங்க சார் வரவே மாட்டிக்கிறார்.”

“சூப்பர், இரண்டு நாளா இவன வச்சு செஞ்சிருப்பாரு போலயே!” என்று முனங்கியவள்.

“சார் பிஸியா இருந்துருப்பாங்க, நீங்க வேணா…” என்று பேச வந்தவளை தடுத்தவன்

“நீ சொல்ற சமாதானத்த நான் கேட்க வரல ஸ்டெல்லா. இப்போ எனக்கு இங்க உங்க சாரை நான் பார்க்கணும்,” என்று சேரில் நிவேதன் அமர்ந்து கொண்டான்.

“ஐயோ, பிசாசு விடாது போலயே…” என்று மைண்ட் வாய்ஸில் புலம்பியவள்.

“த்ரூவ் சார்ர எதுக்கு நீங்க பார்க்கணும்? அவர் தான் தெளிவா மெயில்ல சொல்லியிருக்காரே.”

“அது ஒரு மெயிலுன்னு அத பத்தி நீ பேசுற. ப்ரோப்பரா  ஏன் கான்ட்ராக்ட் கண்டினியூ பண்ணலன்னு கேட்டா ….என்ன சொல்லியிருக்கான் தெரியுமா அவன்?

நிவேதன்னு பேரு வச்சிருக்கவுங்க கூடலாம் பிஸ்னஸ் பண்ண முடியாதுன்னு சொல்லிருக்கான். இவனுக்காக என் பேரையா மாத்திட்டு வர முடியும்.”

என்றவனைப் பார்த்து பரிதாபம் வருவதற்குப் பதிலாக சிரிப்பு வர அதைக்கட்டுப்படுத்திய ஸ்டெல்லா.

“பாவம், மனுஷன் பேரு மாத்துற அளவு யோசிச்சிருப்பார் போல” என நினைத்தவள்

“இதோ பாருங்க சார், கான்ட்ராக்ட் டைமிங் முடிஞ்சதும் அதை கண்டினியூ பண்றதும் பண்ணாததும் எங்க சார் இஷ்டம் தான். ரீஷன் கூடுத்து தான் கான்ட்ராக்ட்டை பிரேக் பண்ணணும் நீங்க எங்கயும் மென்ஷன் பண்ணி இருக்கல சார்.

இருந்தும் எங்க சார் உங்களுக்கு ரீஷனோட ரிஜெக்ஷன் மெயில் போட்டு ப்ரோப்பரா இன்பார்ம் பண்ணியிருக்காரு” என்று பேசியவளை நன்றாக முறைத்தவன்.

“ரூல்ஸ் பேசுற என் கிட்டயே, அதுவும்…. என் ரேஞ்சல பாதி கூட இல்லாத நீ….. இவ்ளோ நக்கலா பேசுற?” என்றபடி ஸ்டெல்லாவை கேவலமாக ஒரு பார்வை பார்க்க, அதில் பிடித்திருந்த பொருமையை காற்றில் விட்டவள்

“உன்ன…. நீ முதல்ல என் மேல கை வச்சப்பவே நல்லா கொடுக்க வேண்டியத கொடுத்திருந்தா இப்படிப் பேசிருப்பியா…”

என்றபடி எழுந்து நிவேதன் அருகில் வரவும், ஒன்றும் புரியாமல் எழுந்து நின்ற நிவேதன்.

“என்ன, என்ன ஸ்டெல்லா என்ன பேசுற? என்ன கொடுத்திருப்ப?”

என்றவனின் முகம் பயத்தில் மாறவும், அதை ரசித்துப்பார்த்தபடி அவன் முன்னே இருந்த டேபிளில் சாய்ந்து நின்ற ஸ்டெல்லா.

“உன்ன அப்பறமா வச்சி செய்யலாம்னு பாத்தா ஆடு தான வந்து தலைய நீட்டும் போது வேணான்னு எப்படி சொல்ல “ என்று கைகளில் சுடக்கு எடுத்தவள்

“நான் என்ன கொடுத்துருப்பண்ணு கெஸ் பண்ணு பாப்போம்”

என்று சிரித்தவளின் சிரிப்பில் பயந்த நிவேதன்; இது வரை பார்த்த ஸ்டெல்லா இவள் இல்லை, முகத்தில் சிரிப்பு இருந்தும் அந்த சிரிப்பு ஏதோ ஒரு வித குளிரைத் தர,

“அது… அது நான் கிளம்புறேன் ஸ்டெல்லா, நான் த்ரூவ் கிட்டயே பேசிக்கிறேன்” என்று செல்லப் போனவனைச் சட்டையைப் பிடித்து இழுத்தவள்.

ஓங்கி ஒரு உதை; அதில் உயிர் போகும் வலி கண்ட நிவேதன் “அம்மா…..” என்று கத்தியபடி கீழே மடங்கி விழுந்தான்.

“உன் கீழே வேலை பார்த்தா ‘டேக் இட் ஃபார் கிராண்டட்’னு எடுத்துப்பியாடா? சரி வயசானவன்னு போனா போதுன்னு விட்டா உன் ஸ்டாஃப் மேலயே கை வச்சிருக்க, ராஸ்கல்…” என்று மீண்டும் அவனை ஓங்கி உதைத்தவள்.

“என்னைக்கோ உன்ன முடிக்க வேண்டியது இன்னைக்கு தான் எவிடன்ஸோட கைல உன் லீலை வீடியோ கிடைச்சிது. சரி லீகல்லா மூவ் பண்ணுவோம்னு இருந்தா கேவலமாவா பாக்குற…

இனிமே உன் பொண்டாட்டி மேல நீ கை வைக்கக் கூட நீ யோசிக்கணும் டா. அப்படி மீறி நீ வைக்க நினைச்சாலும் அது உன்னால முடியப் போறதும் இல்ல”

என்று அவன் கீழே வலியால் துடிப்பதைப் பார்த்து சிரித்தபடி இவள் நிற்பதை யார் பார்த்தாலும் பயந்து தான் போவார்கள்.

அப்படி இருக்க இவளின் சிரிப்பை ரசித்து ருசித்து பருகப் ஒருவன் பார்க்கிறான் என்றாள் அது த்ரூவ் ஆக மட்டும் தான் இருக்கும்.

நிவேதன் ஆபிஸ்க்கு வருவது தெரிந்து, சிசிடிவி மூலம் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தவன், ஸ்டெல்லாவின் செயலில் புன்னகைத்தபடி அவள் சிரித்த முகத்தைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்க,

இவற்றை பார்த்த தருண் “நம்ம ஸ்டெல்லாவா இது? என்ன….அடி மேம் கிட்ட உஷாரா தான் இருக்கணும் போல” என்று எண்ணியபடி த்ரூவின் பக்கம் திரும்பியவன்,

“ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது” என்று பாட்டுப் பாடியவன், த்ரூவ் அதை கேட்டுத் திரும்பும் முன் அங்கிருந்து ஓடியிருந்தான்.

த்ரூவின் அறையில் இருந்து ஓடி வந்தவனைப் பார்த்த மேகா,

“என்ன தருண் சார் கூட ரேஸா?”

“ அட நீ வேற! நம்ம ஸ்டெல்லா அடிக்கிற அடிய பாத்து பயந்து வந்திருக்கேன் “

“என்னது மேம் அடிச்சாங்கள”

“அமா மேகா அவுங்க நிவேதன் சார அடிச்ச அடி இருக்கே அப்பா….”

“என்னது மேம்மா, இங்க வந்திருக்காங்களா?”

“இல்ல மேகா, அவங்க ஆபீஸ்ல தான் அடிச்சாங்க,” என்று நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி முடிக்கவும், அதை கேட்ட மேகா வாயைப் பிளந்து நிற்க, தருண்,

“ஸ்டெல்லா கிட்ட இனி பார்த்து தான் நடந்துக்கணும் மேகா.” என்று பயந்தவனை

“இல்ல இல்ல  இன்னையில இருந்து மேம் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்,” என்று சொன்னவளை,

“என்னடி சொல்ற?” என்பது போல தருண் பார்த்து நிற்கவும்,

“இவங்கள மாதிரி தைரியமா எல்லா பொண்ணுங்களும் இருந்தா, எந்தப் தப்பு பன்ற ஆம்பளைக்கு பொண்ணு மேல கை வைக்கத் தைரியம் வரும்.”

“ஏ… மேகா, ஏன் இப்படி பேசுற?”

“வேற எப்படிப் பேச? அந்த ஆளுக்குக் கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு. அந்த குடும்பத்தைப் பாக்குறத விட்டுட்டு பொண்ணுங்க கேக்குதா?”

“அதுக்கு போலீஸ் கிட்ட போக வேண்டியது தான! அத விட்டிட்டு இப்படி அடிப்பாங்கல? நாளைக்கு இவன் ஏதாவது பண்ணி வச்சிட்டா?”

“இப்படிச் சொல்லிச் சொல்லி தான் பல தப்பு பண்ற அம்பலைங்க தப்பிச்சுப் போறீங்க,” என்று கோபமாகப் பேசிய மேகனாவை,

“ஏய், ஏன் இவ்வளவு எமோஷன் மேகா? ரிலாக்ஸ்! நான் தோணுனதச் சொன்னேன்,”

என்று அவளைச் சமாதானம் செய்யவே வெகு நேரம் ஆகிப் போனது தருணுக்கு.