னல் – 5

காலியான கோப்பையை கையில் வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் தெருவைப் பார்த்தபடி இருந்த ஆதிஷ்

“என்ன என்னும் பைக்க காணோம், இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கனுமே!” என்று புலம்பியவன் மீண்டும் வாசலை எட்டிப் பார்த்துவிட்டு கையில் இருந்த வாட்ச்சை பார்த்தவன்

“சைட் போயிட்டு அப்படியே என் பொம்மைய  பார்த்துட்டுப் போலாம்னு பார்த்தா, இவள எங்க ஆள காணோம்” என்று தலையை பிடித்துக்கொண்டு நின்றவனை சந்தேகமாகப் பார்த்த வாணி

“என்ன ஆதி இங்க ஏன் நின்னுட்டு இருக்க?” என்ற சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பியவன் அவன் அம்மாவைப் பார்த்து நிதானித்தவனாக

“அது ம்மா…. சும்மா தான், உள்ள புழுக்கமா இருக்கா அதான் இங்க காத்து வாங்கலாம்னு…” என்றவனை ஒருமாதிரிப் பார்த்துவர்

“ஏசி ரூம் புழுக்கமா இருக்கு, இங்க மரமே இல்லாத வெட்டவெளியில காத்து நல்லா வருதா இவனுக்கு?” என்று நினைத்தவர் அவன் கையில் இருந்த கோப்பையைப் பார்த்துவிட்டு

“சரிடா ஆதி…. அம்மா போட்ட டீ எப்படி இருந்துச்சு?”

“அ…. சூப்பரா இருந்துச்சு, இந்தா… கப் குடிச்சி முடிச்சிட்டேன், ஆனா அடுத்த தடவ கொஞ்சம் சர்க்கரை மட்டும் குறைச்சுக்கோ ம்மா, நான் டயட்ல இருக்கேன்”

என்று பேசிவிட்டு உள்ளே சென்றவனை அடபாவி என்பது போலப் பார்த்தவர் சத்தமாக

 “டேய்…. நான் இன்னைக்கு டீயே போடலடா” என்று சொல்லவும், பிரேக் போட்டு நின்றவன் ஷாக் ஆகத் திரும்பிப் பார்த்து சமாளிக்கும் விதமாக

“வர வர காப்பியும் கூட டீ மாதிரி போட்டு வைக்கிற ம்மா , பாரு எனக்கு வித்தியாசமே தெரியல”

“நீ குடிச்சது காலான் சூப், காபி இல்ல” என்றுவிட்டு ஆதியையே குறு குறுவென வாணி பார்க்கவும், ஆதி அவர் இடத்திலிருந்து தப்பிக்கும் விதமாக

“நான்…. எனக்கு டைம் ஆச்சு, நான் கிளம்புறேன் ” என்றவன் பைக் கீயை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கு நிற்காமல் சென்று விடவும் , வாணி

“கண்டிப்பா ஏதோ சரியில்ல, என்னென்னு கண்டு பிடிக்கிறேன்” என்று உள்ளே அவர் சென்று விட, இங்கே பைக்கை ஓட்டிக்கொண்டு சென்ற ஆதிஷ்

“வர வர அம்மா ரொம்ப ஷார்ப் ஆகிட்டே வராங்க, கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்” என்று யோசித்தவன், தெருவில் அவன் பொம்மை வருகிறாளா என்று பார்த்தபடியே வந்தான்

அப்போது தான் தூரத்தில் ரூத்  நடந்து வருவதைப் பார்த்து மகிழ்ந்தவனாக அவள் அருகே செல்ல, ரூத்தோ இவனை கவனிக்காமல் திரும்பிப் பார்த்தபடி வருவதைப் பார்த்துவிட்டு, அவள் கவனத்தைத் திருப்ப ஹாரனை அழுத்தினான்

அந்தச் சத்தம் கேட்டு ரூத் தொப் என்று கீழே விழுந்துவிட,

 “ஹாரன் தான அடிச்சோம், ஏதோ இடிச்ச மாதிரி கீழ விழுந்துட்டா” என்று பதறியவன் வண்டியை நிறுத்திவிட்டு அவள் அருகே சென்றான்

கீழே விழுந்த ரூத்தின் கால் நன்றாக வலிக்க, காலைப் பிடித்தபடி தெருவில் அமர்ந்து அழுகத் தொடங்கியவளை

“ஏ… ரூத், என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற?” என்று ஒரு ஆணின் குரலில் கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தவள்

அங்கு நிற்பவன் யார் என்று தெரியாவிட்டாலும், அவளை அறியாமல் பதில் சொல்லத் தொடங்கினாள்.

“கால் வலிக்குது…” என்று தேம்பியவளை,

“முதல்ல எழுந்திரி வா” என்று கைபிடித்துத் தூக்கிவிட்டவன், கீழே விழுந்து கிடந்த நோட்டை எடுத்து கையில் வைத்தான்.

“என்ன ஆச்சு? ஏன் இப்படி கீழே விழுந்து கிடக்கிற?”

“அது திடீர்னு சத்தமா பைக் சத்தம் கேட்டதுனால தான் விழுந்துட்டேன்.”

“ஹாரன் சத்தத்துக்கெல்லாம் பயப்படுவியா நீ?”

“அட அதுக்கு இல்ல, என்ன ஒரு தாத்தா பாலோவ் பண்ணிட்டு வந்தாரு” என்றதை கேட்டவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி

“என்ன சொல்ற?”

“ஆமா அங்க பாருங்க” என்று திரும்பி காட்ட, அவள் காட்டிய திசையில் ஒரு வயதானவர் நடக்க சிரமப்பட்டு, அதே சமயம் வேகமாக நடந்து வருவது தெரிந்தது.

“இதோ பாருங்க, இப்போ கூட என்ன பிடிக்கத்தான் அவ்வளவு வேகமா வராரு.”

ரூத் சொன்னதைக் கேட்டு நொந்து போன ஆதிஷ்,

“அவர் நடந்து வர ஸ்பீட்ல உன்ன தொறத்துறாரு! சூப்பர், அவர் யாருன்னு உனக்குத் தெரியலையா?”

“ம்ஹூம்… பஸ்ல தான் பார்த்தேன், பக்கத்துல உட்கார்ந்துட்டு என்னையே அடிக்கடி பார்த்துட்டு இருந்தாரு.”

“தெரிஞ்ச போண்ணுண்ணு பார்த்திருப்பார்”

 என்று இவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த தாத்தா இவர்களுக்கு அருகில் நெருங்கி வர, ரூத் அவரைப் பார்த்து பயந்து போய் ஆதிஷின் பின்னால் மறைந்தாள்.

“அட நீ ஒருத்தி, மறையாத, முன்ன வா” என்று அவளைப் பிடித்து இழுத்து அருகில் நிற்க வைத்தவன்.

“அப்பறம் தாத்தா எங்க இந்த பக்கம்? எங்க போய்டு வறிங்க? எங்க பாட்டிய காணோம்?” என்று அவருடன் பேசத் தோடங்கியவனை அதிர்ச்சியுடன் ரூத் பார்க்க,

அவளின் அதிர்ச்சியான பார்வையில் மயங்கி, அவள் பக்கம் திரும்பிய  கண்களைத் தடுத்துக் கட்டுப்படுத்தியபடி நின்றவன்.

“என்ன தாத்தா மூச்சு இப்படி வாங்குது? தண்ணி வாங்கி தரட்டா?” என்று பேச முடியாமல் மூச்சிரைக்க மூச்சுவிட்டவரைப் பார்த்து இவன் கேட்க, அதற்கு அவர்,

“அது வந்து ஆதி… இந்த புள்ள இருக்காளே, அவ பஸ்ல இந்த வாட்ச்சை விட்டுட்டு வந்துட்டான்னு கொடுக்க கொண்டு பின்னாடியே வந்தேனா…, அன இந்தப் புள்ளையப் பிடிக்க முடியலடா…” என்றவாறு ரூத்தின் வாட்ச்சை நீட்ட, அதை கையில் வாங்கிய ஆதிஷ்,

“அவ வேகமா போனா கூப்பிட்டு நிக்கச் சொல்ல வேண்டியதுதானே தாத்தா? அதை விட்டுட்டு இந்த வயசுல இவ்வளவு வேகம் தேவையா?”

“அட நீ வேற ஆதி! எனக்கு இந்த புள்ள பேரு சரியா ஞாபகம் வரல. பஸ்லயே பேசலாம்னு பார்த்தேன், இந்த புள்ள நிமிருவேனான்னு இருந்துச்சி.

சரி கத்தலாம்னு பார்த்தா தொண்டை புடிச்சிக்கிச்சு. அதான் கையை ஆட்டி நிக்கச் சொன்னேன், அன இந்த புள்ள பாத்துட்டு பயந்து நிக்காம ஓடுது!”

என்று இருவரும் பேசியதை புரியாத மொழியின் படத்தை பார்ப்பது போல பார்த்து வைத்தவள்.

“யாரு இந்த தாத்தா? நம்ம வாட்ச்ச கொடுக்கத்தான் இப்படித் தொறத்திட்டு வந்தாரா இவரு” என்று யோசனையில் இவள் மூழ்கி நிற்க, அந்த பெரியவர் இவள் பக்கம் திரும்பி

“உன் பேரு என்ன புள்ள?” என்ற அவர் குரலில் திடுக்கிட்டு பயந்தவளாக, கைகளை பிசைந்தபடி ஆதிஷ் அருகே ஒட்டி நின்றவள்.

“ரூத் தாத்தா” என்றதும் அவர்

“ரூத்தா? அதான் யோசிச்சேன், சரியா நினைவு வரல. சரி, இனிமே யாராவது கை காட்டி நிக்கச் சொன்னா பயப்படாம முதல்ல என்னென்னனு பாரு” என்று அறிவுரை சொல்லிவிட்டு அவர் நடந்து சென்றுவிட,

செல்லும் அவரைத்தான் ஏதோ யோசித்தபடி பார்த்திருந்தாள் ரூத்.

ரூத் ஏதோ யோசனையாக நிற்பதை பார்த்த ஆதிஷ்,

“அந்த தாத்தாவ யாருன்னு உனக்குத் தெரியாதா ரூத்?”

என்றவன் குரலில் கலைந்த ரூத், அப்போதுதான் தான் அவன் அருகில் நெருங்கி நிற்பதை உணர்ந்து நகர்ந்து நின்று அவனை முழுதாகப் பார்த்தாள்.

“யார் இவரு? நம்ம பேரு எப்படி இவருக்குத் தெரியும்?”

என்று அடுத்த யோசனைக்கு அவள் தாவிக் விட, ஆதிஷ் அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்துவிட்டுத் திகைத்தவனாக,

“ரூத், உனக்கு என்ன அடையாளம் தெரியலையா?” என்று நெஞ்சில் கை வைத்து நின்றவனை மேலும் குழப்பமான முகத்துடன் பார்த்தவள்.

“ஏன் இத்தன ஷாக்? ஒருவேளை ஸ்டெல்லாவிற்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ? அச்சோ! யாருன்னு தெரியலையே, இப்போ என்ன பண்ண? பேசாம சும்மா சிரிச்சி சமாளிப்போம்” என்று யோசித்தவளாக,

ஈ… என்று இளித்தபடி தலையை நாலாபுறமும் ஆட்டி வைக்க, அவளின் தலை ஆட்டலை வைத்து அவளை கண்டு கொண்ட ஆதிஷ்,

“அடிப்பாவி! ஒருத்தன் நேரம் காலம் இல்லாம அந்த டெரர் ஸ்டெல்லாவ மீறி தினமும் உன் கண்ணில படுற மாதிரி நின்னா, யாருன்னு கேட்டு நிக்கிறா!” என்று நோந்தவனாக,

“சீரியஸா? என்ன யாருன்னு தெரியலையா ரூத்?”

என்று முகத்தை பாவமாக வைத்து நின்றவனைப் பார்க்க கஷ்டமாக இருக்க, ரூத்.

“சாரிங்க, எனக்கு உங்க ஃபேஸ் நினைவு இல்லை, ஆனா யாருன்னு சொன்னா ஞாபகம் வந்திரும்ங்க” என்று சோகமாக முகத்தை வைத்து பேசியவளைப் பார்த்து பெருமூச்சி விட்டவன்.

“மணியம்மா பாட்டி தெரியுமா?”

“ஆ… எங்க பாட்டிய உங்களுக்குத் தெரியுமா? அவங்க சொந்தக்காரங்களா நீங்க?”

“ம்க்கும்… சுத்தம்! எப்போ இருந்து எங்க பாட்டி பக்கத்து வீட்டுக்குத் தத்து போனாங்கன்னு தெரியலையே” என்று முனங்கியவன்,

“அவங்க செந்தம்ல இல்லனா அவங்க ஓரிஜினல் பேரன் நான் தான்” என்றவனை வாயைப் பிளந்து பார்த்தவள்.

“நீங்களா அந்த பரட்டை பேரன்?” என்று அதிர்ந்தவளை

“அடிங்கு யாரை பரட்டைன்னு சொல்ற?”

என்று ஆதிஷ் அருகில் வரவும், பயந்த ரூத் கண்களை இறுக மூடி பயந்தவளாக,

“அய்யோ…. சாரி..சாரி…. நான் இல்ல பாட்டி தான், உங்கள அப்படி சொல்லுவாங்க”

என்று நடுங்கியவள் மெல்லக் கண்களைத் திறந்து பார்க்க, தலைமுடியைக் கோதியபடி அவளைப் பார்த்து முறைத்து நின்றவனை ஒரு நிமிடம் அசையாது பார்த்தவள், சட்டென்று தலையைத் திருப்பித் கொண்டு

“அது பாட்டி அப்படி தான் சொல்லி பேசுவாங்க, சாரி அன்ட் தேங்க்ஸ்” என்றுவிட்டு, ரூத் கால்களைத் தாங்கித் தாங்கி நடக்கவும், அவள் அருகே பைக்குடன் வந்த ஆதிஷ்

“பைக்ல ஏறு, நான் ட்ராப் பண்றேன்” எனவும்

“இல்ல பறவாளா, நான் நடந்து….” என்று பேச வந்தவளை தடுத்து

“ப்ச் சொல்றன்ல, ஏறு! கால் சுளுக்கு பிடிச்சிருக்கும் போல, இந்த கால் வச்சிட்டு எப்படி நடப்ப?”

“அது…. வந்து…”

“ஏறுன்னு சொன்னேன் ரூத்” என்றவனின் குரலில், பைக்கில் ஏறிவிட, அவளை அவள் வீட்டு முன் வந்து இறக்கி விட்டுச் சென்று விட்டான்.