நேரம் யாருக்கும் காத்திராமல் செல்ல, ஆதவன் தன் வேலையை செய்ய ஆயத்தமாகிட்டேன் என்பது போல் தன் செங்கதிர்களை பரப்ப ஆரம்பித்தான்.சைந்து தோளை யாரோ பிடித்து உளுக்க, அதை தட்டி விட்டவள் “இன்னும் பத்து நிமிஷம் பாவி ப்ளீஸ்…”என்று சொல்லி தூங்க, “வீட்டுக்கு போற ஐடியா இருக்கா இல்லையா…”என்ற ஆண் குரலில் அடித்து பிடித்து எழுந்தவள் அப்போதுதான் சுற்று புறத்தை உணர்ந்தாள்.
உடனே வேகமாக எழுந்தவள் தன் எதிரில் நின்றிருந்தவனை அப்போதுதான் நன்றாக பார்த்தாள்.இருட்டில் சரியாக தெரியாத அவன் முகத்தை இப்போதுதான் நன்றாக பார்த்தாள். ‘என்ன….’என்பது போல் அவன் கண்களால் கேட்க, அவளோ “ஹா….”என்று அதிர்ந்தவள், ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்து பின் என்ன பேசுவது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருக்க, அவள் நிலையை புரிந்து கொண்டவன் “வா போலாம். எனக்கு லேட் ஆகுது”என்று நடக்க துவங்க அவளும் அவன் பின்னோடு சென்றாள்.
சூர்யா அவன் வண்டி இருக்கும் இடத்திற்கு வந்தவன் சைந்தவியை வண்டியில் அமர சொல்லி மெயின் ரோட்டின் அருகில் வர, அவன் போனில் நோடிபிகேசன் சத்தம் வந்தது. போனில் டவர் கிடைக்கிறது என்பதை அறிந்து கொண்டவன், ஓரமாக தன் வண்டியை நிறுத்திவிட்டு, கால் டேக்சியை அழைத்தவன் தாங்கள் இருக்கும் லோகேசனை ஷேர் செய்ய பத்து நிமிடத்தில் கார் அங்கு வந்தது.
சைந்தவியை பார்த்த சூர்யா “கார்ல நீ போ எனக்கு வேலை இருக்கு”என்று சொன்னவனை நன்றியாக பார்த்த சைந்தவி “ரொம்ப…. ரொம்ப நன்றிங்க”என்று சொல்ல, அதற்கு “ம்ம்ம்….”என்று மட்டும் சொன்னவன் அவன் வீடு நோக்கி செல்ல துவங்கினான்.
சைந்தவி ஆணவன் பெயர் கூட தெரிந்து கொள்ளாமல்,அவன் அணிந்திருந்த சட்டையுடன் அவர்கள் வீட்டை நோக்கி காரில் சென்றாள்.
நேராக வீட்டிற்கு வந்த சூர்யாவிற்கு டெல்லியில் மீட்டிங் இருப்பதாக தகவல் வர, தாயை காணாமல் தேடியவன் பின் ஒன்பது மணி பிளைட்டை பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் போனில் சொல்லி கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டான்.
சைந்து வீட்டில் அனைவரும் இரவு முழுவதும் தூங்கவில்லை. வாசலில் கார் வந்து நிற்கவும் வேகமாக வெளியே சென்ற பவி பார்த்தது யாரோ ஒரு ஆடவனின் சட்டையை போட்டு கொண்டு சோர்ந்து போய் வந்த சைந்தவியைதான். அவள் அருகில் சென்றவள் “சைந்து……”என்று கதறலோடு அணைத்து கொண்டாள்.
பவி வெளியே செல்லவுமே குமாரும் வேகமாக வெளியில் வந்தார்.அங்கு மகள் இருக்கும் நிலையை கண்டு அதிர்ந்து போன குமார்,பின் தெருவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “பவி போதும் அக்காவை உள்ள கூட்டிட்டு வா”என்று சொன்னவர் கார்க்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றார்.
மஞ்சு உள்ளே மகளை அணைத்து கொண்டு அழ, இரவு நடந்த நிகழ்வை நினைத்து உடல் நடுங்கிய சைந்துவும் அழுதாள். ராதிகாதான் அவர்களை சமாதானப்படுத்தினார்.
ராதிகா,“மஞ்சு அவளைவிடு. முதல்ல போய் குளிச்சுட்டு டிரஸ் மாத்திட்டு வரட்டும். அப்புறம் என்ன ஆச்சு, என்ன ஏதுன்னு விசாரிக்கலாம். நீ போய் மூஞ்ச கழுவி அவளுக்கு சாப்பிட எதாவதுபண்ணு”
மஞ்சு, “ஆமா ராதி நீ சொல்றதும் சரிதான். போ சைந்து போய் குளிச்சுட்டு வா”என்று அனுப்பி வைத்தவர், கிச்சன் நோக்கி சென்றார்.
சைந்து அவள் அறைக்கு சென்றவள் குளித்து தலையை துவட்டி கொண்டே வெளியில் வர, அவளை அணைத்து கொண்டாள் பவி.
“என்ன பவி பயந்துட்டியா?”என்று அவள் முதுகை ஆறுதலாக தடவியவாறு கேட்க, அவளோ அக்காவை இறுக்கி பிடித்து தன் பயத்தை வெளிப்படுத்தினாள். பின் அவளிடம் இருந்து விலகியவள் “என்ன ஆச்சுக்கா?”என்று கேட்க, உண்மையை சொன்னால் தங்கை வருத்தப்படுவாள் என்று நினைத்து மறைக்க நினைத்தாலும், அவளது பாதுகாப்பு முக்கியம் என்பதால் அவளிடம் நடந்த அனைத்தையும் சொல்லி “பவி ப்ளீஸ் நீ இனிமே எப்போவும் கவனமா இரு. நேத்து ஏதோ அந்த மனுஷன் வந்ததால நான் உன் முன்னாடி இப்படி நிக்கறேன். இல்லைனா என்ன ஆகி இருக்கும். அதுக்குதான் சொன்னேன் பெரிய ஆளுங்ககிட்ட எல்லாம் பிரச்சனை வச்சுக்காதன்னு”என்று சொல்ல, பவி குற்ற உணர்ச்சியில் துடித்து போனாள்.
“சாரிக்கா. என்னாலதான் நீ பிரச்சனைல மாட்டிகிட்ட. ஆனா…. நான் வீண் வம்பு எதுக்கும் போகலக்கா.அவங்க எல்லாம் காலேஜ் வாசல்ல ட்ரக் விக்கறாங்க. இதனால ஸ்டூடன்ட்ஸ் லைப் வீணாகுதேன்னுதான் அவங்களைப்பத்தின டாக்குமெண்ட்ஸ் எழுதினேன். ஆனா…. இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல”என்று தலை குனிந்தவாறு சொல்ல, அவள் தலையில் கை வைத்த சைந்து “சரி விடு முடிஞ்சதை இனி பேச வேண்டாம்”என்று சொல்லும்போதே மஞ்சு அவர்களை சாப்பிட அழைக்க இருவரும் கீழே சென்றனர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் ஹாலில் அமர, சற்று நேரம் அமைதியாக இருந்தது அந்த வீடு. பின் சைந்தவியே இரவு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சொல்லாமல் கடத்தி கொண்டு போய் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்கள் என்றும் அப்போது ஒருவன் வந்து தன்னை காப்பாற்றியது. பின் இரவு வழி தெரியாமல் அங்கேயே இருந்தது. காலையில் கேப் பிடித்து அனுப்பியது என்று அனைத்தையும் சொல்ல, மஞ்சு, குமார் இருவரும் மகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை எண்ணி கலங்கி போயினர்.
ராதிகா சைந்துவிடம் அந்த பையன் பெயர் என்ன? எங்க இருக்காராம்? என்னபண்ராராம்?என்று அடுத்தடுத்து கேட்க, அவளோ திரு திருவென விழித்தவள் பின் “எனக்கு எதுவுமே தெரியல ஆண்டி.அவரு எதுவும் பேசல. நானும் கேட்கல”என்க, மஞ்சுவோ கோபமாக “ஒரு நன்றியாவது சொன்னியா இல்லையா? என்ன பொண்ணு நீ. உன் உசுரையே காப்பாத்தி இருக்காரு அவர் பேர் ஊராவது கேட்டு வரமாட்ட”என்று கேட்க,
சைந்துவோ ‘ம்கூம்…. அந்த மனுஷன் வாய திறந்தாலே முத்து கீழ விழுந்துடும் போல அமைதியா இருந்தாரு. இதுல நான் எங்க பேரு, ஊரு எல்லாம் கேட்க’என்று நினைத்து கொண்டாள்.
குமார் மகள் தலையை வாஞ்சையாக தடவியவர் “போடா போய் இனி ரெஸ்ட் எடு”என்க, சம்மதமாக தலையசைத்தவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
பவி அக்காவுடன் அறைக்கு சென்றாலும் மனதில் மிகுந்த யோசனையில் இருந்தாள். தங்கையின் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு “என்ன பவி? பயங்கர யோசனை”என்றவள் கேட்க,
யார் இந்த வேலையை செய்தார்கள் என்று புரிந்து, அடுத்து அவர்களை எப்படி அவர்களுக்கு பதிலடி கொடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தாள். அவள் அருகில் வந்த சைந்து தான் சொன்ன விஷயத்தால்தான் தங்கை முகம் வாடி இருக்கிறாள் போல என்று வருந்தியவள் “என்ன பவி இன்னும் என்ன யோசனை”என்று ஆதரவாக கேட்க, தன் மன ஓட்டத்தை அக்கா அறியாமல் மறைத்தவள் பேச்சை மாற்றும் பொருட்டு “அது வேற ஒன்னும் இல்ல சைந்து. ஒரு ஹீரோ வந்து உன்னை காப்பாத்தினாருனு சொன்னியே. அவர் ஆள் ரொம்ப மொக்கையா இருந்தாரோ…. அதனாலதான் அவர் பேர் கூட கேட்டுக்காம வந்துட்டியா”என்று விளையாட்டாக கேட்க, அவளை போலியாக முறைத்தவள் “என்னடி கிண்டலா….”என்க,
“பின்ன என்ன சைந்து.ஒரு நைட் புல்லா கூட இருந்துருக்காருன்னு சொல்ற, ஆனா பேரு…ஊரு எதுவும் கேட்கலனு சொல்ற. நான் என்ன நினைக்க”என்றாள். தங்கையின் சேட்டை புரிந்த சைந்துவோ வேண்டுமென்றே “போடி லூசு. ஆளு பார்க்க தெறி படத்துல இருக்க விஜயகுமார் மாதிரி இருப்பாரு.ஹைட்டும் வெயிட்டும் அப்படிதான் இருந்துச்சு ஆனா…. அதிகம் பேசமாட்டாரு போல. கடைசியா கேப்ல ஏறிட்டு தேங்க்ஸ் சொல்றேன். ம்ம்ம் னு சொல்லிட்டு போய்ட்டாரு. ஆனா ஒன்னுடி அந்த மனுஷனுக்கு வாக்கப்பட போற பொண்ண நினைச்சா கவலையாதான் இருக்கு. அவ தொண்டை தண்ணி வத்த நூறு வார்த்தை பேசுனா. அந்த மனுஷன் கேசுவலா ம்ம்ம் னு சொல்லிட்டு போய்டுவாரு”என்று சொல்ல, சகோதரிகள் இருவரும் யார் என்றே தெரியாதவனைப்பற்றி சற்று நேரம் பேசினர். பின் அப்படியே பேச்சு திசை மாற,நடந்த சம்பவங்களை மறந்து இருவரும் பேசி சிரிக்க ஆரம்பித்தனர்.
மகள்கள் அறையில் இருந்து வந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு பெற்றோர் இருவருக்கும் கண்களில் நீர் துளிர்த்தது. ராதிகா அவர் வீட்டுக்கு சென்றுவிட, இன்னும் யார் யாருக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று சந்தோஷமாக பேச துவங்கினர்.
திருமணத்திற்கு நான்கு நாட்களே என்ற நிலையில் அவர்கள் வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
அந்த வீட்டின் மகிழ்ச்சி நிலைக்குமா, இல்லை எதாவது பிரச்சனை வருமா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.
அணைப்பாள்…….