அத்தியாயம்-18

சைந்தவி சிரிப்போடு மாடிப்படியில் குதித்து இறங்கி ஓடி வர,அவளைக் கண்டு ஆச்சரியமானார் ராதிகா. “என்னம்மா இப்படி சிரிச்சிட்டு வர,அவன் கோபத்தை பார்த்து, உன்னை என்ன பண்ணுவானோ ஏது பண்ணுவானோனு பயந்துட்டு இருந்தேன். நீ என்னன்னா…”என்று இழுத்தவரை கெத்தாக பார்த்தவள் “நாங்கல்லாம் மதங்கொண்ட யானையவே மாங்குயிலே பூங்குயிலேனு ஆட வைக்கிறவங்க அத்தை.உங்க மகன்லாம் எனக்கு ஜூஜூபி” என்று சொல்ல, அவளை சந்தேகமாக பார்த்தார் ராதிகா.

சைந்து “என்ன சைட் அடிச்சது போதும் வாங்க போய் மஞ்சுகிட்ட ஊரு கதை கேட்டுட்டு வரலாம்”என்று இழுத்து சென்றாள்.

நேரம் அப்படியே செல்ல இரவு உணவை மஞ்சு குமார் ராதிகா என அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். தாயின் முகம் சரியில்லை என்பதை கவனித்த சைந்து “ஏன்ம்மா ஒரு மாதிரி இருக்கீங்க. எனக்கு ஒன்னும் இல்லம்மா,அதான் சரியான நேரத்துல அவர் வந்து காப்பாத்திட்டாருல்ல”என்று சொல்ல,

மஞ்சு சலனமான முகத்துடன் “என்னமோ இன்னைக்கு காலைல இருந்தே மனசு சரியில்லடா.ஒரு மாதிரியாவே இருக்கு. அதுக்கேத்த மாதிரி உனக்கு ஒரு பெரிய ஆபத்து வந்துடுச்சு.இப்போ பவிய நினைச்சா இன்னும் கவலையா இருக்கு.யாரும் இல்லாம தனியா என்னன்னு சமாளிக்கறாளோ தெரியல,போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறா”என்றவர் புலம்ப சைந்துவுக்கும் பக்கென்றிருந்தது.உடனே அவள் கணவனை பார்க்க அவன் கண்களை மூடி திறந்து தான் பார்த்துக் கொள்வதாக சொன்னவன் “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.நான் என் பிரண்டுக்கு போன் பண்ணி பவித்ரா இருக்க வீட்டுக்கு போய் பார்க்க சொல்றேன்”என்று விட்டு எழுந்து சென்றான்.

சூர்யா சாப்பிட்டுவிட்டு போனை எடுத்து கொண்டு நண்பனிடம் பேச சென்றான். பத்து நிமிடம் கடந்து வந்தவன் “மஞ்சுவிடம் பிரண்டு வேலையா இருக்கானாம். இன்னும் வீட்டுக்கு போகலையாம். பவித்ராவ பார்த்துட்டு அப்புறம் வீட்டுக்கு போறேன்னு சொல்றான். ஒன்னும் கவலைப்படாதீங்க” என்று சொல்ல மஞ்சு கவலைபோகவில்லையென்றாலும் சம்மதமாக தலையாட்டி வைத்தார்.ஆனாலும் அவர் மனம் ஏனோ அடித்துக் கொண்டே தான் இருந்தது.

இரவு உணவு முடித்து அனைவரும் உறங்க சென்றுவிட,சைந்துவோ ‘ம்ம்…ஈவ்னிங் எப்படியோ அந்த போலீஸ்கார சமாளிச்சாச்சு. இப்போ என்ன செய்ய போறாருனு தெரியலையே’என்று எண்ணியவாறு ஹாலையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். அவளை நக்கலாக பார்த்து சிரித்த ராதிகா “என்னம்மா மருமகளே சொம்பு தேடிட்டு இருக்கியா”என்று கேட்க,அவளோ அவரை புரியாமல் பார்த்து “என்ன சொம்பு அத்தை”என்க, அவரோ “இல்ல மாங்குயிலே….பூங்குயிலே….. ஆட சொம்பு வேணுமானு கேட்டேன்” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, அவரை கோபம் போல் பார்த்தவள் “என்ன ஜோக்கா. சிரிப்பே வரல.காலைல சிரிக்கிறேன். என்ன மகன பெத்து வச்சிருக்கீங்க.யாருக்கும் அடங்காம,இப்படியா பையன வளர்க்கறது.ஒரு பச்ச பிள்ளைய என்னமா டார்ச்சர் பண்றாரு.ஏன் போன?எதுக்கு போன?என்னத்துக்கு போன? எப்போ போன?என்ன யோசனைல போனன்னு?ஒரு இறுபத்து நாலு வயசு சின்ன பிள்ளைகிட்ட எத்தனை கேள்வி கேட்கறாரு. கேள்வி கேட்கறது ஈஸி பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?ஒரு தடவை பதில் சொல்ற இடத்துல இருந்தாதான் அந்த கஷ்டம் தெரியும்.எனக்கு தெரியாது.வாங்க வந்து உங்க மகன்கிட்ட என்னன்னு கேளுங்க”.

ராதிகா, “எதே நான் கேட்கணுமா.எனக்கு தெரியாதுப்பா.நீயாச்சு உன் புருஷன் ஆச்சு. நான் தூங்க போறேன்”என்று விட்டு அவர் சென்றுவிட,சைந்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

பின் ‘சரி எப்படியா இருந்தாலும் போய் தானே ஆகணும்…போவோம்.என்ன பண்ணிடுவாரு…. ஒரு அளவுக்கு மேல போச்சு…. சாஷ்டாங்கமா கால்ல விழுந்தற வேண்டியதுதான் பாப்போம்”என்று மனதில் சொல்லி கொண்டவள் மெதுவாக அவர்கள் அறைக்கு சென்றாள்.

அறை முன் போய் நின்றவள் கதவை மெதுவாக திறந்து உள்ளே எட்டி பார்க்க, அறை முழுவதும் இருட்டாக இருந்தது.’எங்க அந்த மீசக்காரர காணோம்’என்றவாறு பார்வையை சூழலவிட்டவளுக்கு அவன் பால்கனி பக்கம் நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

‘இந்த மனுஷனுக்கு மட்டும் எவன்தான் போன் பண்ணுவான்னு தெரியல, எப்போ பாரு போன் கூடயே குடும்பம் நடத்திட்டு இருக்காரு. எப்படியோ நம்ம தப்பிச்சா போதும். அவரு பேசி முடிச்சுட்டு வர்றதுக்குள்ள நாம போய் படுத்து தூங்கிடலாம்’என்று நினைத்தவள்,குடுகுடு என்று ஓடி சென்று போர்வையை தலைவரை இழுத்து மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள்.

சற்று நேரம் கழிந்து ஏதோ ஒரு உணர்வு தூண்ட தூக்கம் கலைந்தவள், கண்களை தேய்த்து கொண்டு பார்க்க பால்கனி கதவை சாற்றிவிட்டு ஒரு உருவம் வந்து கொண்டிருந்தது.அந்த உருவத்தை பார்த்து விழி விரித்தவள் அதிர்ச்சியாக,அவளை நோக்கி தான் அந்த உருவம் வந்தது.’அதே உருவம்’என்றவள் நினைத்து கொண்டிருக்க,அவள் அருகில் வந்த அந்த உருவம், அவளுக்கு இரு பக்கமும் கைகளை ஊன்றி,தன் எடை அவள் மீது படுக்க, அவளுக்கு பயத்தில் மூச்சடைத்தது.

“ஹேய் முயல்குட்டி எதுக்குடி முட்ட கண்ண உருட்டி இப்படி பாக்குற”என்று கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்பது போல் தலையாசைத்தாள், அவளை நம்பாமல் பார்த்த சூர்யா “ஒழுங்கா சொல்லு நேத்தும் இப்படிதான் பார்த்த”என்று சொல்ல,

‘ஹையோ சைந்து உன்னோட கனவ அவருகிட்ட சொன்னா மானமே போய்டும்.எதாவது சொல்லி சமாளிடி’என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் “அ…அ…. அதுங்க போலிஸ்கார் உங்களை பார்க்க போலிஸ்கார் மாதிரியே இருந்துச்சு அதான்…”என்று இழுக்க, அவனோ அவளை முறைத்து “போலீஸ்காரன் போலீஸ் மாதிரி இல்லாம திருடன் மாதிரியா இருப்பேன்.உண்மைய சொல்லு”என்று கடுப்படிக்க,

“ஹி…. ஹி…ஹி.. நீங்க ராதி அத்த மகன் மாதிரியே இருக்கீங்க”என்று உளற அதில் காண்டாகி போனவன் ஊன்றிய கைகளை எடுத்து அவள் மேலேயே பொத்தென்று விழுந்தான்.

“ஐயோ அம்மா….”என்று அலற, அவனோ “ஏன்டி போலி டாக்டரே நான் எங்க அம்மா மாதிரி இல்லைனாதான் நீ ஆச்சர்யப்படணும், அவங்கள மாதிரி இருக்கறதுல என்ன பிரச்சனை உண்மைய சொல்லு”என்றவன் சொல்ல, மீண்டும் ஏதோ சொல்ல வந்தவள் இதழில் கை வைத்தவன் “உண்மைய மட்டும் சொல்லணும் இல்ல எங்க கடிப்பேன்னு எனக்கே தெரியாது”என்று மிரட்ட, வேறு வழி இல்ல, நாம சொல்லிதான் ஆகணும் போல, என்று நினைத்தவள் முகத்தை சுருக்கி கொண்டு தான் கண்ட கனவை சொல்ல,வாய்விட்டு சிரித்தவன் “அடிப்பாவி உனக்கு இந்த மாதிரி கனவு எல்லாம் வந்திருக்கா.சரி சரி வந்தேன் கடிச்சேன்.அப்புறம் என்ன பண்ணுனேன் சொல்லு” என்று ஆர்வமாக அவள் இடையில் விரல்களால் கோலம் போட்டு கொண்டே கேட்க,

கணவனின் கையை தட்டிவிட்டவள்,”வேற எல்லாம் ஒன்னும் இல்ல கடிக்கவும் வழியில் கத்திட்டு எந்திரிச்சு உட்கார்ந்துட்டேன்.அப்புறம் பவி என்னை திட்டுனா அவ்வளவுதான்”என்று சொல்ல,

“அவ்வளவுதானா வேற எதுவும் பண்ணலையா”என்று ஏமாற்றமான குரலில் கேட்க,

சைந்து, “போலிஸ்கார் இது உங்களுக்கே ஓவரா இல்ல.அது என்னோட கனவு நான் அலோவ் பண்றது மட்டும்தான் நடக்கும்”என்று வாயைவிட, அவளை கிண்டலாக பார்த்தவன் “அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி என்னை கிஸ் பண்ண மட்டும் அலோவ் பண்ணுவியா”என்று கேட்டடான். அதில் திரு திருவென விழித்தவள் என்ன சொல்வது என்று புரியாமல் இருக்க அந்த கருவிழி அசைவில் மயங்கியவன் “ஹேய் முயல்குட்டி கனவுல பண்ணாமவிட்டத இப்போ பண்ணவா”என்றவாறு அவளுள் மூழ்க, அதில் முதலில் திணறி பின் வெட்கம் கொண்டு அவனை தடுக்க முனைய, அவனோ அவள் தடுப்பை ஈஸியாக சமாளிக்க,அவளும் அதற்கு மேல் தடுக்காமல் அவன் செயலுக்கு இசைந்து கொடுக்கதுவங்கினாள்.

ஆணவனின் தேடல் பெண்ணினுள் முழுமை பெற, இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து போயினர்.

அடுத்த நாள் காலை அழகாக புலர அவரவர் வேலையை தடையில்லாமல் செய்ய ஆரம்பித்தனர். சைந்து பிராக்டிஸ் ஒரு மாதத்தில் முடிய இருக்க, அதே ஹாஸ்பிடலில் வேலைக்கும் சேர்ந்து விடுவதாக சூர்யாவிடம் சொல்ல,அவனும் உன் விருப்பம் என்றுவிட்டான்.

அதே நேரம் காஷ்மீரில் பவி முகம் சிவக்க அழுது ஓய்ந்து போய் இருந்தாள். அடுத்து…. என்று யோசிக்கவே அவளுக்கு பயமாக இருந்தது.வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஊருக்கு கிளம்பிவிடலாமா என்றவள் யோசித்து கொண்டு இருக்கும்போது அவள் இருக்கும் வீட்டின் கதவு தட்டப்பட்டது. அதில் அதிர்ந்து போனவள் முகம் எப்போவும் இல்லாத அளவு பீதியில் இருந்தது.