பால் மற்றும் காலை சமையலுக்கு தேவையான பொருட்களுடன் வீட்டிற்குள் நுழைகிறார் ரத்தினமாயி நம் நாயகியின் நாயகி…அமைதியாக இருக்கும் வீடு சற்றே இதம் அளிக்க காலை வேலைகளை துவங்குகிறார்…”அம்மா இன்னைக்கு சீக்கிரமா ஆபிஸ்ல இருக்கனும்னு சார் நேத்தே சொன்னாரு மா நீங்க ரெடியா கிளம்பலாமா”…”ம் ரெடிமா போகலாம் இன்னைக்கு அண்ணனுக்கு பிடிச்ச புளி சாதம் செஞ்சேன் அத வழியில அண்ணன் வீட்டுல குடுத்துட்டு போறேன்னு அப்பா சீக்கிரம் கிளம்பிட்டாறு” என்று சொன்ன அம்மாவை கசந்த முறுவலுடன் ஏறிட்டாள் யாழ்நிலா…அவர் மௌனமாக வண்டியை நோக்கி செல்ல இவளும் ஒரு பெருமூச்சுடன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்…
யாழ்நிலா அப்பாவின் தீவிர தமிழ் பற்றின் வெளிப்பாடே இந்த பெயர்..பெயருக்கேற்ப நிலவை போன்ற அழகுடனும் யாழை போன்ற இனிமையுடனும் இருப்பவள்..மாநிறத்தில் நீளமான திருத்தமான முக அமைப்பை கொண்ட பெண்…அதிலும் அவள் முக்கு மிக அழகாக செதுக்கி வைத்தது போல் இருக்கும் அதில் ஒரு வெள்ளை கல் மூக்குத்தி போட வேண்டும் என்பது அவளின் அம்மாவின் நீண்ட நாள் ஆசை…அப்பா அம்மா என்றால் உயிர் அவர்கள் சொல்லை தாண்டி யோசிக்க தெரியாது..அவர்களுடனே இருக்க வேண்டும் என்பதற்காகவே வெளியூருக்கு வேலைக்கு செல்லாமல் மிக சொற்ப சம்பளத்திற்கு உள்ளூரிலியே வேலை செய்கிறாள்…
அம்மாவை அவர் வேலை செய்யும் இடத்தில் இறக்கிவிட்டு விட்டு செல்லும் யாழ்நிலா மனம் முழுவதும் பல பல எண்ணங்களும் யோசனைகளும் உலவி வர கையோ தினம் செல்லும் பாதையில் தானாக சென்று நின்ற இடம் அவள் அலுவலகம் …அதன் பின் நினைவுகளை கலைந்து வரிசை கட்டிய வேலைகளை கவனித்து நிமிர்கையில் “கோபிசெட்டிபாளையம் அன்ட் கவுந்தபாடி பைல் பிளான் எஸ்டிமேசன் முடிச்சுட்டு பிரிண்ட்க்கு அனுப்பி கொரியர் பண்ணிருங்க மா நான் டீச்சர் காலனி சைட்கு கிளம்பறேன்”என்று ஓனர் சொல்லி சென்றவற்றை முடித்து வீடு வர 7 மணி ஆகி விட்டது…
ஓய்வு கேட்ட உடலை சரிகட்ட கிச்சனுக்குள் நுழைய பின்னாடியே அவளின் அப்பாவின் குரல்” சாமி பாத்திரம் தேச்சி அரிசி ஊர வச்சிட்டேன் நீ டீ குடிச்சுட்டு சாப்பாடு வைச்சுரு நான் அரிசி வாங்கிட்டு அம்மாவ கூட்டிட்டு வந்துறேன் அப்புறம் பைல பலகாரம் இருக்கும் டீக்கு எடுத்துகோ” என்று சொல்லி சென்ற தந்தையை கனிவுடன் கவனிக்க மிக ஓய்ந்த தோற்றம் ஆனாலும் ஓய்வின்றி உழைப்பவரை எண்ணி பெருமூச்சி விட்டபடியே சென்றாள்…மிக சராசரியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் யாழ் நிலா …பிள்ளைகளை தாண்டிராத உலகம் அவர்களுடையது…சிறு வயது முதலே கஷ்டங்களை கண்டதால் வயதுக்கு மீறிய பொறுப்புணர்வு மிக்க பெண்…
ஆனாலும் அவளும் குழந்தையாக மாறும் தருணங்களும் உண்டு அவை அவள் நண்பர்களால் மட்டுமே சாத்தியப்பட கூடிய தருணங்கள்…இப்பொழுது கூட ஓய்வாக அமர எங்கிருந்தோ ஒரு இன்னிசை “அடிடா அவன உதடா அவனா “என்ற ரிங்டோன் கேட்டு சிரிப்புடனே அட்டன் செய்ய அந்தபுறம் கேட்ட செய்தியில் பல்லை கடித்து கொண்டே வண்டியை எடுத்தாள் …அவளின் நேரம் டிராபிக்ல் மாட்டி கொள்ள அவளின் பிபி அளவு எகிறி கொண்டிருந்தது.. வேறு வழியில்லாமல் தன்னை சுற்றிலும் பார்வையை ஓட்ட அருகிலிருந்த ஜாக்குவாரை கண்டு கண்கள் விரிய மகிழ்ச்சியாக பார்க்க காரினுள் இருந்தவனோ இவளை எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தான்…
அவன் வீரேந்தர சிங் ரகுபதி பஞ்சாபின் விரல் விட்டு எண்ண கூடிய கோடிஸ்வரர்களில் ஒருவன்…வீரேந்தர சிங் ரகுபதி என்ற பேருக்கு ஏற்றதுபோல் வீரமிக்க விவேகம் கொண்ட ஆண்மகன்..அவனை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே இந்த பாடல் தான் தோன்றும்..,
“இந்த சாலையில் போகின்ற மீசை வைத்த பையன் அவன் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே”
நிஜமாலுமே ஆறடி உயரத்தில் பஞ்சாபின் கோதுமை நிறத்தில் அழகிய மீசையுடன் அடர்த்தியான கேசத்துடன் பார்க்க பார்க்க பேரழகன்..ஆனா என்ன எஃபி ஸ்டேட்டஸ் என்னவோ ஸ்டில் சிங்கிள் தான்..கமிட்டட் ஆகாமல் இருக்க பெரிய காரணம் ஒன்றும் இல்லை சாருக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி..
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இருவருக்குமே ஒருவருக்கு ஒருவரை தெரியாது…அவள் பார்த்து மகிழ்ந்தது என்னவோ அவன் காரை தான்..ஆம் கட்டிடங்கள் மேல் மட்டும் அல்ல கார்களின் மேலும் அவளுக்கு ஆர்வம் அதிகம் அதிலும் ஜாக்குவார் என்றால் கொள்ளை பிரியம் இப்பொழுது கூட சுற்றுப்புறத்தை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்…”வாவ் ஜாக்குவார்…நம்ம தலைவன பாத்த மட்டும் எப்படி தான் நம்ம மூட் மாறுதோ..லவ் யூ தலைவா..உம்மா” என்று ஒரு பறக்கும் முத்தத்தை வேறு காருக்கு கொடுக்க அவளுக்கு எங்கே தெரிய போகிறது காருக்குள் இருப்பவன் இவள் செய்யும் சேட்டைகளை கவனித்து கொண்டிருப்பான் என..வீரேந்தரோ சற்று முன் நடந்து முடிந்த பிஸினஸ் மீட் பற்றி யோசித்து கொண்டே அந்த எரிச்சலான மனநிலையில் வெளியே கவனத்தை ஓட்ட அப்பொழுது தான் யாழ் நிலாவை கண்டான்..முதலில் எரிச்சலாக பார்த்தவனின் பார்வையில் சற்றே சுவாரஸ்யம் கூடியது என்னவே உண்மை… காரணம் அவள் அணிந்திருந்த உடை ஒரு டிராக் பேண்ட்டும் தொளதொளவென இருந்த பார்பி பொம்மை டிசர்ட்டையும் பார்த்தவன் “ என்ன டிரஸ் இது இதோட எப்படி வெளிய போவா” என்று பார்த்துக் கொண்டிருந்தான்…அவன் பார்த்து பழகிய பெண்கள் யாரும் வீட்டில் கூட இப்படி உடை அணிந்து பார்ததில்லை…இத்தனைக்கும் வீரேந்தரின் மிக முக்கிய கொள்கைகளில் ஒன்று வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களும் மிக முக்கியமானவை தேவையற்ற சிந்தனைகளை கொண்டு அவற்றை வீணாக்க கூடாது என்பது தான் அப்படி பட்டவனையே சில நொடிகள் என்னென்னமோ சிந்திக்க வைத்து விட்டால் நம் யாழ்…தன் யோசனைகள் செல்லும் திசையை பார்த்து “என்னடா இது நம்ம என்ன தேவையில்லாம இவ டிரஸ் பத்தி எல்லாம் யோசிச்சிட்டு இருக்கோம் என எண்ணியவன் வேறுபறம் பார்வை திருப்பி கொள்ள கண்கள் ஏனோ மீண்டும் அவளை தான் தேடின…அப்பொழுது தான் அவள் காரை கொஞ்சிக் கொண்டிருந்தது… திடீரென அவள் முத்தமிட அவன் உலகம் சில நொடிகள் நின்றது என்னவோ உண்மை ”யார்ரா இந்த பொண்ணு என்ன இப்படி பண்ணிட்டு இருக்கா” என எரிச்சலாக யோசித்து கொண்டிருந்தாலும் அவன் கண்கள் என்னவோ அவள் குவிந்த உதடுகளிலேயே நின்று விட்டது…சரியாக அப்பொழுது சிக்னல் விழ வாகனங்கள் ஒவ்வொன்றாக நகர அவளும் அந்த காரை ஒரு முறை ஏக்கமாக பார்த்து விட்டு வேகமாக ஒரு கிளை பாதையில் திரும்பி சென்று விட்டாள்..இங்கு வீரேந்தரோ அந்த நிகழ்வில் இருந்து வெளியேறவே சில பல நிமிடங்கள் ஆனது…தெளிந்தவுடன் முதலில் தோன்றியது என்னவோ “ச்சீசீ இவ என்ன இப்படி இருக்கா யாருனே தெரியாதவனுக்கு முத்தம் கொடுக்கறா தப்பான பொண்ணு போல” என இவனே தப்பு தப்பாக யோசித்து தேவையில்லாமல் அவள் மேல் கோபத்தை வளர்த்து கொண்டான்..
அங்கு நிலாவோ போனில் சொன்ன இடத்திற்கு சென்று பார்க்க அங்கு டிராபிக் போலிஸ் அருகில் நின்ற காரில் இருந்தவர்களை கண்டு கோபத்துடனே சென்றாள்…ஒருவன் காரின் பின் இருக்கையில் தலையை பிடித்தபடி அமர்ந்திருக்க மற்றொருவன் காரில் சாய்ந்தபடி கீழே அமர்ந்து கண்ணை மூடி பாட்டு பாடி கொண்டிருந்தான் இல்ல இல்ல கத்திகிட்டு இருந்தானு சொல்லனும்..இவள் வந்ததை கூட இருவரும் கவனிக்கவில்லை சில நொடிகள் பார்த்திருந்தவள் கீழே அமர்ந்திருந்தவனின் காலை மிதிக்க அவனோ” அய்ய்யோ மச்சான் என் கால்ல எவனோ வண்டிய விட்டான் போலடா அய்யோ எங்க அம்மா அப்பவே சொல்லுச்சு உன் கூட சேர வேணாம்னு இப்போ பாரு என் காலு போனது தான் மிச்சம்” என கத்திக் கொண்டிருக்க..அந்த சத்தத்தில் கண் விழித்த மற்றொருவன் அப்பொழுது தான் நிழாவை கவனித்தான்.. அவன் சசிதரன் கத்திக் கொண்டிருப்பவனோ பாலாஜி இருவரும் சிவில் இன்ஜினியராக ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்கிறார்கள் நிலாவின் மிக நெருங்கிய தோழமைகள்..இவளை பார்த்தவன் அருகிலிருந்த பாலாவின் தலையில் தட்ட அதில் கண் விழித்தவன் நிலாவை கண்டு “ யம்மா யாழு வந்திட்டியா பாரு எவனோ என் கால்ல வண்டிய விட்டு ஒடச்சிட்டான் இனிமே நான் எப்படிமா நடப்பேன்” என என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுபானு சொல்லும் ஜனகராஜ் போல் ஆரம்பிக்க…நிலாவோ அவன் கழுத்தை லேசாக நெரித்துக்கொண்டே “ஏண்டா எருமை கத்திர நான் தான் உன் கால மிதிச்சேன் அதுக்கே கால் உடஞ்ச மாதிரி பில்டப் குடுத்த உன்ன கொன்ருவேன் பார்த்துக்க வாய மூடு ஸ்ஸ்ஸ்” என மிரட்ட அவனோ வாயில் விரல் வைத்தபடி அவளை பார்த்து தலை ஆட்டிக் கொண்டிருந்தான்…
அப்பொழுது அங்கு வந்த டிராபிக் போலிஸ் இவளை பார்த்து “ யாருமா நீ இங்க என்ன பண்ற”..,“ சார் இவங்க என்னோட ப்ரண்ட்ஸ் அதுதான் என்னாச்சினு பார்த்து கூட்டிட்டு போலாம்னு வந்தேன் சார் ” என சொல்ல..,இவர்கள் மூவரையும் ஒருமாதிரி பார்த்தவர் “இவனுங்க பண்ண வேலைக்கு சும்மா விட முடியாதுமா ஸ்டேஷன்ல வச்சா தான் அடங்குவானுங்க நீ கிளம்புமா நாங்க பாத்துக்குறோம்” என சொல்லி நகர பார்க்க நிலாவோ அவர் பின்னாடி கெஞ்சி கொண்டே சென்றால் “ப்ளிஸ் சார் ப்ளிஸ் சார் ” என செல்ல சசியோ அவள் கையை நகர விடாமல் பிடித்திருந்தான்… “என்னடி பண்ற, நீ ஏன் கெஞ்சிற ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பு நாங்க பாத்துக்கறோம்” என ருத்ரமூர்த்தியாய் கடிய அவளோ “ ஏண்டா எருமைகளா சும்மாவே இருக்க மாட்டிங்களா தேவையில்லாம பிரச்சன பண்ணிட்டு இப்ப என்னையும் கேக்க வேணாமானு சொல்றிங்க என்னாங்கடா நினைச்சுட்டு இருங்கீங்கா” என வரிந்துகட்டி கொண்டு கிளம்ப.. இவர்களை பார்த்த போலிஸ்காரர் என்ன நினைத்தாரோ “நாளைக்கு வண்டியை ஸ்டேஷன்ல வந்து எடுத்துக்கோங்க இப்ப கிளம்புங்க” என்று சொல்லி வண்டியை எடுத்துக்கொண்டு சென்று விட இவர்கள் மூவரும் நடு தெருவில் நின்றனர்..
“ கடவுளே ஏண்டா இப்படி பண்றீங்க இன்னும் கொஞ்சம் கேட்டிருந்த அவர் வண்டிய விட்டு இருப்பார் இப்ப எல்லாம் போச்சு” என அமர.., சசியோ “ அதுக்கு உன்ன கெஞ்ச விட்டு எங்கள வேடிக்க பாக்க சொல்றிய வண்டி போனா போகுது நீ கிளம்பு போகலாம்”…, “அதான நானே வாங்க பழகலாம்னு சொல்ற சாலமன் பாப்பையா மாறி அந்த போலிஸ் எங்க நம்மள போலிஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போயிருவாறுனு பயந்துட்டேன் இதுல இவ வேற கிளம்ப போலாம்” என பாலாவும் புலம்ப மூவரும் ஒரு வழியாக வீட்டை நோக்கி சென்றனர்…இதுதான் இவர்கள் நட்பு இவர்களுக்கு என்றால் எதையும் யோசிக்காமல் செய்வாள் நிலா…அதே போல் தான் அவர்களும் எந்த இடத்திலும் நிலாவின் மரியாதையையும் கன்னியத்தையும் விட்டு தர மாட்டார்கள்… பொருத்திருந்து பார்ப்போம் இவர்களைபோல் இவர்கள் வாழ்க்கை துணையும் இந்த நட்பை இதே இயல்புடன் ஏற்றுக் கொள்கிறார்களா என…